[1:1] In the name of GOD, Most Gracious, Most Merciful.*
Footnote
**1:1 The first verse in the Quran represents the foundation upon which a superhuman 19-based mathematical miracle is built. This important statement consists of 19 Arabic letters, and every word in it occurs in the whole Quran in multiples of 19 (see Appendices 1 & 29 for the details).
*1:1-7 Sura 1 is Gods gift to us to establish contact with Him through the daily Contact Prayers. This fact is supported by an earth-shattering, simple-to-understand-but-impossible-to-imitate mathematical composition that challenges the greatest mathematicians on earth, and stumps them; it is far beyond human capabilities:
(1) The sura number, followed by the numbers of verses, next to each other, give 1 1 2 3 4 5 6 7. This number is a multiple of 19.
(2) If we substitute the number of letters per verse in place of verse numbers, we get 1 19 17 12 11 19 18 43. This number is also a multiple of 19.
(3) If we insert the total gematrical value of every verse, we get 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009. This number is a multiple of 19.
Verse No. |
No. of Letters |
Gematrical Value |
1 |
19 |
786 |
2 |
17 |
581 |
3 |
12 |
618 |
4 |
11 |
241 |
5 |
19 |
836 |
6 |
18 |
1072 |
7 |
43 |
6009 |
Totals |
139 |
10143 |
(4) The number shown above includes all parameters of Sura 1, and consists of 38 digits (19x2).
(5) It is noteworthy that this 38-digit number is still divisible by 19 when we write its components backwards, from right to left as practiced by the Arabs. Thus, 6009 43 1072 18 836 19 241 11 618 12 581 17 786 19 1 is also a multiple of 19.
(6) The mathematical representations mentioned above participate in numerous extraordinary mathematical phenomena to confirm all details of the five daily Contact Prayers (Appendix 15).
|
[1:1] கடவுள்-ன் பெயரால்*, மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
Footnote
சூரா 1க்குரிய அடிக்குறிப்புகள்
"*1:1 குர்ஆனின் முதல் வசனம் 19ன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள மனித சக்திக்கு அப்பாற்பட்ட கணித அற்புதத்தின் அஸ்திவாரத்தைப் பிரதிபலிக்கின்றது. இந்த முக்கியமான கூற்று 19 அரபி எழுத்துக்களை கொண்டிருக்கின்றது, மேலும் இதில் காணப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் முழுக்குர்ஆனிலும் 19ன் பெருக்குத் தொகைகளிலேயே உள்ளன. (விபரங்களுக்கு பின் இணைப்புகள் 1 மற்றும் 29ஐப் பார்க்கவும்)
*1:1-7 அன்றாடத் தொடர்புத் தொழுகைகளின் மூலம் கடவுளுடனான தொடர்பை நிலைப்படுத்திக் கொள்வதற்கு கடவுள் நமக்கு அளித்திருக்கின்ற பரிசாக சூரா1 உள்ளது. இவ்வுண்மை உலகின் மாபெரும் கணித வல்லுநர்களுக்கு சவால் விடுகின்ற மேலும் அவர்களைத் திகைப்படையச்செய்கின்ற, மற்றும் உலகை கலங்கடிக்கடிக்கின்ற, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய, ஆனால் போலியாகத் தயாரிக்க இயலாத கணிதரீதியிலான கட்டமைப்பின் மூலம் ஆதரவளிக்கப்பட்டதாக உள்ளது. இது மனிதத் திறமைகளுக்கெல்லாம் மிகவும் அப்பாற்ப்பட்டதாக உள்ளது:
(1) இந்த சூரா எண்ணையும், அதைத் தொடர்ந்து, வசனங்களின் எண்களையும் அருகருகே அமைத்தால் 1 1 2 3 4 5 6 7 என்ற எண்ணைப் பெறுவோம். இவ்வெண் 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
(2) ஒவ்வொரு வசன எண்ணிற்கும் பதிலாக, அவ்வசனத்தில் இடம் பெறும் எழுத்துக்களின் எண்ணிக்கையை நாம் அமைத்தால் 1 19 17 12 11 19 18 43 என்ற எண்ணை நாம் பெறுவோம். இவ்வெண்ணும் 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
(3) ஒவ்வொரு வசனத்தின் எழுத்தெண் மதிப்பின் கூட்டுத் தொகையை நாம் இடையிடையில் எழுதினால் நமக்குக் கிடைப்பது, 1 19 786 17 581 12 0618 11 241 19 836 18 1072 43 6009. இவ்வெண் 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
வசன எண் |
எழுத்துக்களின் எண்ணிக்கை |
எழுத்தெண் மதிப்பு |
1 |
19 |
786 |
2 |
17 |
581 |
3 |
12 |
618 |
4 |
11 |
241 |
5 |
19 |
836 |
6 |
18 |
1072 |
7 |
43 |
6009 |
மொத்தம் |
10143 |
(4) மேலே காட்டப்பட்டுள்ள எண்ணானது, சூரா 1ன் அனைத்து வழியலகுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது, மேலும் 38 (19x2) இலக்கங்களைக் கொண்டிருக்கின்றது.
(5) 38 இலக்கங்களைக் கொண்ட இந்த எண்ணை அரேபியர்களின் வழக்கப்படி வலமிருந்து இடமாக எழுதினால், அப்போதும் 19ன் பெருக்குத் தொகையாகவே இருப்பது கவனிக்கத்தக்கதாகும். இவ்விதமாக, 6009 43 1072 18 836 19 241 11 618 12 581 17 786 191 என்கிற இந்தஎண்ணும் 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும்.
(6) மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணிதரீதியிலான அறிவிப்புகள், தினசரி ஐந்து வேளை தொடர்பு தொழுகைகளின் அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்துவதற்காக, எண்ணற்ற அசாதாரணமான கணிதரீதியிலான அற்புதங்களில் பங்கெடுக்கின்றன (பின் இணைப்பு 15).
(7) பிரமிக்கச் செய்யும் ஏராளமான அற்புதங்கள் பின் இணைப்பு 1ல் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக, வாசகருக்கு தொடக்கத்திலெயே இது உலகத்திற்கான கடவுளின் செய்திதான் என்பதற்கு கண் கூடான சான்றுகள் தரப்படுகின்றன."
|
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ [1:1]
|
[1:2] Praise be to GOD, Lord of the universe.
|
[1:2] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்
|
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ [1:2]
|
[1:3] Most Gracious, Most Merciful.
|
[1:3] மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
|
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ [1:3]
|
[1:4] Master of the Day of Judgment.
|
[1:4] தீர்ப்பு நாளின் அதிபதி
|
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ [1:4]
|
[1:5] You alone we worship; You alone we ask for help.
|
[1:5] உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கேட்கின்றோம்
|
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ [1:5]
|
[1:6] Guide us in the right path;
|
[1:6] சரியான பாதையின் மீது எங்களை வழி நடத்துவீராக;
|
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ [1:6]
|
[1:7] the path of those whom You blessed; not of those who have deserved wrath, nor of the strayers.
|
[1:7] நீர் எவர்களுக்கு அருள்பாலித்தீரோ அவர்களுடைய பாதை; எவர்கள் கடும்கோபத்திற்குத் தகுதியடைந்து விட்டார்களோ அவர்களுடையதல்ல, அன்றி வழி தவறியவர்களுடையதுமல்ல
|
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ [1:7]
|