சூரா 99: நடுக்கம் (அல்-ஜல்ஜலஹ்)

[99:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[99:1] பூமி கடுமையாக நடுங்கச் செய்யப்படும் பொழுது.
[99:2] மேலும் பூமி தன் சுமைகளை வெளித்தள்ளி விடும் பொழுது.
[99:3] மனிதன்: “என்ன நடக்கின்றது?” என்று ஆச்சரியப்படுவான்.
[99:4] அந்நாளில், அது தன் செய்திகளைக் கூறும்.
[99:5] உம்முடைய இரட்சகர் அதற்குக் கட்டளை யிட்டபடி.
[99:6] அந்நாளில், மனிதர்கள் அவர்களுடைய செயல்கள் காட்டப்படுவதற்காக, ஒவ்வொரு திசையிலிருந்தும் வெளிவருவார்கள்.
[99:7] எவரேனும் ஓர் அணுவின் எடையளவு நல்லது செய்தாலும் அதனைக் காண்பார்.
[99:8] மேலும் எவரேனும் ஓர் அணுவின் எடையளவு தீமை செய்தாலும் அதனைக் காண்பார்.