சூரா 98: சான்று (அல்-பய்யினஹ்)

[98:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[98:1] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத்த வர்களும், அவ்வண்ணமே இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், சான்று அவர்க ளுக்குத் தரப்பட்டிருந்த போதிலும், தங்க ளுடைய வழிகளையே வலியுறுத்துகின்றனர் .*

அடிகுறிப்பு:
*98:1-2 இச்சான்றானது குர்ஆனின் கணிதக்குறியீடேயாகும் ( பின் இணைப்பு1 ) மேலும் இத்தூதர் ரஷாத் கலீஃபாவேயாவார். இந்த சூரா எண்ணுடன் (98), வசன எண்ணைக் கூட்டி (2), ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண்மதிப்பையும் (1230) கூட்டினால் அவற்றின் கூட்டுத்தொகை 1330 (19ஒ70), 81:19ல் உள்ளதைப்போல் அதே கூட்டுத்தொகை (பின் இணைப்பு 2).
[98:2] கடவுள்-இடமிருந்து ஒரு தூதர், புனிதமான போதனைகளை அவர்களுக்கு ஓதிக்காட்டு கின்றார்.*

அடிகுறிப்பு:
*98:1-2 இச்சான்றானது குர்ஆனின் கணிதக்குறியீடேயாகும் ( பின் இணைப்பு1 ) மேலும் இத்தூதர் ரஷாத் கலீஃபாவேயாவார். இந்த சூரா எண்ணுடன் (98), வசன எண்ணைக் கூட்டி (2), ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண்மதிப்பையும் (1230) கூட்டினால் அவற்றின் கூட்டுத்தொகை 1330 (19ஒ70), 81:19ல் உள்ளதைப்போல் அதே கூட்டுத்தொகை (பின் இணைப்பு 2).
[98:3] அவற்றில் மதிப்புமிக்க படிப்பினைகள் உள்ளன.
[98:4] உண்மையில், வேதத்தைப் பெற்றவர்கள் சான்றானது அவர்களுக்குத் தரப்படுகின்ற வரையில் தர்க்கித்துக் கொள்ளவில்லை.
[98:5] அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதெல்லாம், மார்க்கத்தைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு, கடவுள்-ஐ வழிபடவேண்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. பூரணமான மார்க்கம் இத்தகை யதேயாகும்.
[98:6] வேதத்தையுடைய மக்களில் நம்பமறுத் தவர்களும், மற்றும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களும், ஜஹன்ன நெருப்பின் தண்ட னைக்கு என்றென்றும் உள்ளாகி விட்டனர். அவர்கள்தான் மோசமான படைப்பினங்கள் ஆவர்.
[98:7] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்கள்தான் மிகச் சிறந்த படைப்பினங்கள் ஆவர்.
[98:8] அவர்களுடைய இரட்சகரிடம் அவர்களுடைய வெகுமதியானது ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட ஏதேனின் தோட்டங்கள் ஆகும், அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தியடைந்தனர். தங்களுடைய இரட்சகரிடம் பயபக்தியோடிருப்போருக்கான வெகுமதி இத்தகையதேயாகும்.