சூரா 97: சான்று (அல்-பய்யினஹ்)

[97:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[97:1] விதியின் இரவில்* இதனை நாம் வெளிப் படுத்தினோம்.

அடிகுறிப்பு:
*97:1 ஹி.மு.13 (ஹிஜ்ரத்திற்கு முன்னர்), ரமலானின் 27வது இரவு அன்று இக்குர்ஆன் முஹம்மதின் ஆன்மாவிற்குள் வைக்கப்பட்டது. இத்துடன் 17:1, 44:3, 53:1-18, மற்றும் பின் இணைப்பு 28 ஐயும் பார்க்கவும்.
[97:2] விதியின் இரவானது எவ்வளவு அச்சுறுத்து கின்றதாக இருக்கின்றது!
[97:3] விதியின் இரவானது ஓராயிரம் மாதங்களை விடவும் மேலானதாக இருக்கின்றது.
[97:4] வானவர்களும், பரிசுத்த ஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அதனில் இறங்கி வருகின்றனர்.
[97:5] விடியற்காலையின் வருகை வரை அது அமைதி மயமானதாக இருக்கின்றது.