சூரா 95: அத்தி (அல்-தீன்)

[95:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[95:1] அத்தி மற்றும் ஒலிவத்தின் மீது சத்தியமாக.

அடிகுறிப்பு:
*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.
[95:2] சினாய் மலை.

[95:3] மேலும் கண்ணியப்படுத்தப்பட்ட இந்த (மக்கா)* நகரம்.

அடிகுறிப்பு:
*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.
[95:4] மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.
[95:5] பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.
[95:6] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.
[95:7] இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
[95:8] ஞானமுடையவர்கள் அனைவரிலும், மிகுந்த ஞானமுடையவர் கடவுள் அல்லவா?