சூரா 94: கோபத்தைத் தணித்தல் (அல்-ஷ்ரஹ்)

[94:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[94:1] உம்முடைய கோபத்தை நாம் தணிக்க வில்லையா?
[94:2] உம்முடைய (பாவங்களின்) சுமையின் பாரத்தை நாம் இறக்கி வைக்கவில்லையா?
[94:3] அது உம்முடைய முதுகில் பாரமாக இருந்த ஒன்று.
[94:4] கண்ணியமானதொரு அந்தஸ்த்திற்கு உம்மை நாம் உயர்த்தினோம்.
[94:5] சிரமத்துடன் இலாபம் உள்ளது.
[94:6] உண்மையில், சிரமத்துடன் இலாபம் உள்ளது.
[94:7] இயலும் பொழுதெல்லாம் நீர் பாடுபடவேண்டும்.
[94:8] உம்முடைய இரட்சகரை மட்டும் தேடியவராக.