சூரா 93: முற்பகல் (அல்-துஹா)

[93:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[93:1] முற்பகலின் மீது சத்தியமாக.
[93:2] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.
[93:3] உம்முடைய இரட்சகர் ஒருபோதும் உம்மைக் கைவிட்டு விடவில்லை, அன்றி அவர் மறந்து விடவுமில்லை.
[93:4] முந்திய (வாழ்வான) இதனை விடவும் மறுவுலகமானது உமக்கு மிகவும் மேலானதாக உள்ளது.
[93:5] மேலும் உம்முடைய இரட்சகர் உமக்குப் போது மான அளவு தருவார்; நீர் திருப்தியடைந்தவராக இருப்பீர்.
[93:6] அவர் உம்மை அநாதையானவராக கண்டு மேலும் உமக்கொரு வீட்டை அவர் தரவில்லையா?
[93:7] அவர் உம்மை வழிதவறியவராக கண்டார், மேலும் உம்மை வழிநடத்தினார்.
[93:8] அவர் உம்மை ஏழையாக கண்டார், மேலும் உம்மைச் செல்வந்தராக்கினார்.
[93:9] ஆகையால், அநாதையை நீர் கைவிட்டு விட வேண்டாம்.
[93:10] அன்றி யாசிப்பவரை நீர் கடிந்துரைக்கவும் வேண்டாம்.
[93:11] உம்மீது உம்முடைய இரட்சகர் வழங்கிய அருட்கொடைகளை நீர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.