சூரா 92: இரவு (அல்-லைல்)

[92:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[92:1] மூடிக்கொள்கின்ற இரவின் மீது சத்தியமாக.
[92:2] வெளிப்படுகின்ற பகல்.
[92:3] மேலும் ஆணினம் மற்றும் பெண்ணினத்தைப் படைத்தவரான அவர்.
[92:4] உங்களுடைய காரியங்கள் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.
[92:5] தர்மம் கொடுத்து மேலும் நன்னெறியைப் பராமரிப்பவரைப் பொறுத்த வரை.
[92:6] மேலும் வேதத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பவரை.
[92:7] நாம் அவரை மகிழ்ச்சியின் பால் செலுத்துவோம்.
[92:8] ஆனால் தான் செல்வந்தனாக இருந்த போதிலும், எவன் கஞ்சத்தனமாக இருக் கின்றானோ.
[92:9] மேலும் வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றானோ.
[92:10] அவனை நாம் துன்பத்தின் பால் செலுத்துவோம்.
[92:11] அவன் விழும்பொழுது அவனுடைய பணம் அவனுக்கு உதவி செய்ய இயலாது.
[92:12] வழிகாட்டலை நாமே வழங்குகின்றோம்.
[92:13] மறுவுலகையும், அவ்வண்ணமே இந்த வாழ்வையும் நாமே கட்டுப்படுத்துகின்றோம்.
[92:14] கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பைப் பற்றி நான் உங்களை எச்சரித்து விட்டேன்.
[92:15] தீயவனைத் தவிர வேறெவரும் அதில் எரிய மாட்டார்.
[92:16] நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விடுகின்றவன்.
[92:17] நன்னெறியாளர் அதனைத் தவிர்த்துக் கொள்பவராக இருப்பார்.
[92:18] தன்னுடைய செல்வத்திலிருந்து தர்மம் கொடுப்பவர்.
[92:19] பிரதிபலனாக எந்த ஒன்றையும் தேடாதவர்.
[92:20] மிகவும் உயர்ந்தவரான, தன்னுடைய இரட்சகரை மட்டும் தேடுபவர்.
[92:21] நிச்சயமாக அவர் மீட்சியை அடைந்து விடுவார்.