சூரா 90: நகரம் (அல்-பலத்)

[90:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[90:1] இந்த நகரத்தின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.
[90:2] நீர் வசிக்கின்ற அந்நகரம்.
[90:3] பெற்றெடுப்பவர்கள் மற்றும் பெறப்பட்டவர்கள்.
[90:4] (தன்னை மீட்டுக் கொள்வதற்கு) மிகவும் கடினமாக உழைப்பதற்காக மனிதனை நாம் படைத்தோம்.*

அடிகுறிப்பு:
*90:4 நம்முடைய படைப்பிற்குப் பின்னாலுள்ள நோக்கத்திற்கு அறிமுகவுரையையும் பின் இணைப்பு 7ஐயும் பார்க்கவும்.
[90:5] கணக்குக் கொடுக்க அவனை எப்பொழுதும் எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?
[90:6] அவன், “மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!” என்றுபெருமை யடித்துக் கொள்கின்றான்.
[90:7] எவரும் அவனைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானா?
[90:8] இரு கண்களை நாம் அவனுக்குத் தரவில் லையா?
[90:9] ஒரு நாக்கு மற்றும் இரு உதடுகளை?
[90:10] இரண்டு பாதைகளை நாம் அவனுக்குக் காட்டவில்லையா?
[90:11] கடினமான பாதையை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
[90:12] எது கடினமான பாதை?
[90:13] அடிமைகளை விடுவித்தல்.
[90:14] கஷ்ட காலத்தின் போதும், உணவளித்தல்.
[90:15] உறவினர்களான அநாதைகள்.
[90:16] அல்லது தேவையுடையவர்களான ஏழைகள்.
[90:17] அத்துடன் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராகவும், மேலும் ஒருவர் மற்றவரிடம் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும், மேலும் ஒருவர் மற்றவரிடம் கனிவுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும் இருத்தல்.
[90:18] இவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியடைந்து விட்டனர்.
[90:19] நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் துன்பத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.
[90:20] அவர்கள் நரக நெருப்பில் அடைக்கப் படுவார்கள்.