சூரா 87: மிகவும் மேலானவர் (அல்-அஃலா)

[87:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[87:1] மிகவும் மேலானவராகிய, உம் இரட்சகரின் பெயரைத் துதிப்பீராக.
[87:2] அவர் படைக்கின்றார் மேலும் உருக்கொடுக் கின்றார்.
[87:3] அவர் வடிவமைக்கின்றார் மேலும் வழிநடத்து கின்றார்.
[87:4] அவர் மேய்ச்சல் நிலங்களை உற்பத்தி செய் கின்றார்.
[87:5] பின்னர் அதனை இலேசான வைக்கோலாக மாற்றி விடுகின்றார்.
[87:6] நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்; மறந்து விடாதீர்.
[87:7] ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற் கிணங்கவே உள்ளது; அறிவிக்கப்பட்டவற்றை யும், மேலும் மறைத்து வைக்கப்பட்டவற்றையும் அவர் அறிகின்றார்.
[87:8] மிகவும் இலகுவான பாதையில் உம்மை நாம் செலுத்துவோம்.
[87:9] ஆகையால், நீர் நினைவூட்ட வேண்டும்; ஒருவேளை அந்நினைவூட்டல் பயனளிக்கும்.
[87:10] பயபக்தியுடையவர் கவனத்தில் எடுத்துக் கொள்வார்.
[87:11] தீயவன் அதனைத் தவிர்த்து விடுவான்.
[87:12] அதன் விளைவாக, மாபெரும் நரக நெருப்பால் அவன் துன்புறுவான்.
[87:13] அதில் அவன் ஒருபோதும் சாகவும் மாட்டான், அன்றி உயிருடன் வாழவும் மாட்டான்.
[87:14] தன் ஆன்மாவை மீட்டுக் கொள்பவர்தான் உண்மையில் வெற்றி பெற்றவர் ஆவார்.
[87:15] தன்னுடைய இரட்சகரின் பெயரை நினைவில் கொள்வது மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடிப்பதன் மூலம்.
[87:16] உண்மையில், இந்த முதல் வாழ்வில் நீங்கள் மூழ்கி இருக்கின்றீர்கள்.
[87:17] மறுவுலகமானது மிகவும் மேலானதாகவும் மேலும் நிலைத்திருப்பதாகவும் இருந்த போதிலும்.
[87:18] முந்திய போதனைகளிலும் இது பதியப் பட்டுள்ளது.
[87:19] ஆப்ரஹாம் மற்றும் மோஸஸின் போதனை களில்.