சூரா 85: பால்வீதி மண்டலங்கள் (அல்-புரூஜ்)

[85:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[85:1] ஆகாயம் மற்றும் அதன் பால்வீதி மண்டலங்கள்.
[85:2] வாக்களிக்கப்பட்டுள்ள அந்நாள்.
[85:3] சாட்சியும் மேலும் சாட்சி சொல்லப்படுவதும்.
[85:4] நதி ஓடும் பள்ளத்தாக்கின் மக்களுக்குக் கேடுதான்.
[85:5] கொழுந்து விட்டெரியும் ஒரு நெருப்பை அவர்கள் மூட்டினர்.
[85:6] பின்னர் அதனைச் சுற்றிலும் அவர்கள் அமர்ந்து கொண்டனர்.
[85:7] நம்பிக்கையாளர்கள் எரிவதை பார்ப்பதற்காக.
[85:8] சர்வ வல்லமையுடையவரும், புகழுக்குரிய வருமான கடவுள் மீது நம்பிக்கை கொண்டனர் என்பதைத் தவிர, வேறு காரணம் எதற்காகவும் அவர்களை அவர்கள் வெறுக்கவில்லை.
[85:9] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. மேலும் கடவுள் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாகின்றார்.
[85:10] நிச்சயமாக, நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை வன்கொடுமை செய்து, பின்னர் வருந்தித்திருந்த தவறிவிட்டவர்கள், ஜஹன்னாவின் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்; எரிதலின் தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[85:11] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டனர். இதுவே மகத்தான மாபெரும் வெற்றி யாகும்.
[85:12] உண்மையில், உம்முடைய இரட்சகரின் அடி கடுமையானதாகும்.
[85:13] அவர் தான் துவக்குகின்றவர் மேலும் அதனை மீண்டும் செய்கின்றவர்.
[85:14] மேலும் அவர்தான் மன்னிக்கின்றவர், மிகுந்த கனிவுடையவர்.
[85:15] மேன்மை பொருந்திய அரியாசனத்தைக் கொண்டவர்.
[85:16] தான் நாடுகின்ற எதனையும் செய்கின்றவர்.
[85:17] சேனைகளின் சரித்திரத்தை நீர் கவனித்தீரா?
[85:18] ஃபேரோ மற்றும் தமூதுடையவை?
[85:19] நம்ப மறுப்பவர்கள் ஏற்க மறுத்தலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
[85:20] கடவுள் அவர்களை முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[85:21] உண்மையில், இது மகத்தானதொரு குர்ஆன் ஆகும்.
[85:22] பாதுகாக்கப்பட்டதொரு மூலப்பலகையில்.