சூரா 84: பிளவு (அல்-இன்ஷிகாக்)

[84:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[84:1] வானம் பிளந்து விடுகின்ற அந்நேரம் வரும்.
[84:2] அது தன் இரட்சகரிடம் அடிபணிந்து மேலும் காலாவதியாகி விடும்.
[84:3] பூமியானது சமப்படுத்தப்படும்.
[84:4] கக்கியவாறாக, அது தன்னுள்ளிருப்பவற்றை வெளித்தள்ளிவிடும்.
[84:5] அது தன் இரட்சகரிடம் அடிபணிந்து மேலும் காலாவதியாகி விடும்.
[84:6] மனிதர்களே, மாற்ற இயலாதவாறு நீங்கள் உங்களுடைய இரட்சகருடன் ஒரு சந்திப்பை முன்னோக்கிச் சென்று கொண்டிருக் கின்றீர்கள்.
[84:7] தன்னுடைய பதிவேட்டை தன்னுடைய வலக் கரத்தில் பெற்றுக் கொள்கின்ற ஒருவரைப் பொறுத்தவரை,
[84:8] அவருடைய கேள்விக் கணக்கு இலகுவான தாக இருக்கும்.
[84:9] அவர் சந்தோஷமாகத் தன்னுடைய சமூகத் தாரிடம் திரும்பிச் செல்வார்.
[84:10] தன்னுடைய பதிவேட்டை அவனுடைய முதுகுக்குப் பின்னால் பெற்றுக் கொள்கின்ற ஒருவனைப் பொறுத்தவரை,
[84:11] அவன் குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தில் ஆகி விடுவான்.
[84:12] மேலும் நரகத்தில் எரிவான்.
[84:13] தன்னுடைய சமூகத்தாரிடம் ஆணவத்துடன் நடந்து கொள்பவனாக அவன் இருந்தான்.
[84:14] கணக்குக் கொடுப்பதற்காக ஒருபோதும் அழைக்கப்பட மாட்டோம் என்று அவன் நினைத்தான்.
[84:15] ஆம், உண்மையில், அவனுடைய இரட்சகர் அவனைப் பார்ப்பவராக இருந்தார்.
[84:16] ரோஜா வண்ண அந்திப் பொழுதின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.
[84:17] மேலும் இரவின் மீது அது பரவும் போது.
[84:18] மேலும் நிலவின் மீதும் மேலும் அதன் நிலைகள் மீதும்.
[84:19] ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நீங்கள் நகர்வீர்கள்.
[84:20] ஏன் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை?
[84:21] மேலும் அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப் பட்டால், அவர்கள் சிரம் பணிந்து வீழ்வதில்லை.
[84:22] இது ஏனெனில் நம்பிக்கை கொள்ள மறுப் பவர்கள் (இக்குர்ஆனை) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
[84:23] அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[84:24] வலி நிறைந்த தண்டனையை அவர்களுக்கு வாக்களிப்பீராக.
[84:25] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்களைப் பொறுத்த வரை, நன்கு தகுதியானதொரு பிரதிபலனை அவர்கள் பெறுகின்றனர்.