சூரா 83: ஏமாற்றுபவர்கள் (அல்-முதஃபிஃபீன்)

[83:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[83:1] ஏமாற்றுபவர்களுக்குக் கேடுதான்.
[83:2] அவர்கள் மக்களிடமிருந்து பெறும்பொழுது முழு அளவையும் உரிமையுடன் கேட்கின்றனர்.
[83:3] ஆனால் அவர்களுக்கு அளவுகளையோ அல்லது எடைகளையோ தரும்பொழுது, அவர்கள் ஏமாற்றுகின்றனர்.
[83:4] தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?
[83:5] பயங்கரமானதொரு நாளன்று?
[83:6] அதுதான் மனிதர்கள் அனைவரும் பிரபஞ் சத்தின் இரட்சகரின் முன்னால் நிற்கப் போகின்ற நாளாகும்.
எண்ணியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்கள்
[83:7] உண்மையில், தீயவர்களின் புத்தகமானது, ஸிஜ்ஜீனில் இருக்கின்றது.
[83:8] ஸிஜ்ஜீன் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
[83:9] எண்ணியலின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதொரு புத்தகம்.
[83:10] ஏற்றுகொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[83:11] அவர்கள் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
[83:12] வரம்பு மீறுகின்றவன், பாவகரமானவன் தவிர எவரொருவரும் அதனை நம்ப மறுக்கமாட்டார்.
[83:13] நம்முடைய வெளிப்பாடுகள் அவனிடம் ஓதிக் காட்டப்படுகின்றபொழுது, அவன்,“கடந்த காலக் கட்டுக்கதைகள்!” என்று கூறுகின் றான்.
[83:14] உண்மையில், அவர்களுடைய பாவங்களால் அவர்களுடைய இதயங்கள் மூடப்பட்டதாகி விட்டன.
[83:15] உண்மையில், அந்நாளில், அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.
[83:16] பின்னர் அவர்கள் நரகத்திற்குள் எறியப் படுவார்கள்.
[83:17] அவர்களிடம், “இதுதான் நீங்கள் மறுத்துக் கொண்டிருந்தது” என்று கூறப்படும்.
[83:18] உண்மையில், நன்னெறியாளர்களின் புத்தக மானது ‘இல்லிய்யீனில் இருக்கும்.
[83:19] ‘இல்லிய்யீன் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
[83:20] எண்ணியலின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதொரு புத்தகம்.
[83:21] எனக்கு நெருக்கமானவர்களால் பார்க்கப்பட இருப்பது.
[83:22] நன்னெறியாளர்கள் பேரானந்தத்திற்குத் தகுதி யடைந்து விட்டனர்.
[83:23] ஆடம்பரமான இருக்கைகளின் மீது அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
[83:24] பேரானந்தத்தின் சந்தோஷத்தை அவர் களுடைய முகங்களில் நீர் அடையாளம் காண்பீர்.
[83:25] அவர்களுடைய பானங்கள் அமிர்தத்தால் மணமூட்டப்பட்டிருக்கும்.
[83:26] அதன் மணம் கஸ்தூரியைப் போன்றது. போட்டியாளர்கள் போட்டியிட வேண்டியது இதற்குத்தான்.
[83:27] அதனுள் கலக்கப்பட்டிருப்பவை சிறப்பான தனிச்சுவைகளாகும்.
[83:28] எனக்கு நெருக்கமானவர்களுக்கெனத் தனி யாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஓர் ஊற்றி லிருந்து.
[83:29] தீயவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தனர்.
[83:30] அவர்கள் அவர்களைக் கடந்து சென்ற பொழுது, அவர்கள் ஏளனம் செய்பவர்களாக இருந்தனர்.
[83:31] அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் ஒன்று சேர்ந்துகொண்ட பொழுதெல்லாம், அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக இருந்தனர்.
[83:32] அவர்கள் அவர்களைக் கண்ட பொழு தெல்லாம், அவர்கள் கூறினார்கள், “இந்தக் கூட்டத்தினர் வெகு தூரம் வழிகேட்டில் இருக்கின்றனர்!
[83:33] “(கண்ணுக்குத் தெரியாத) காவலர்கள் என்கின்ற எத்தகைய விஷயமும் அவர்களுக்கு இல்லை.”
[83:34] இன்றைய தினம், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பமறுத்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.
[83:35] ஆடம்பரமான இருக்கைகளின் மீது அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
[83:36] மிகவும் நிச்சயமாக, நம்ப மறுப்பவர்கள் அவர்கள் செய்தவற்றிற்காகவே திருப்பிக் கொடுக்கப் படுகின்றனர்.