சூரா 81: சுருட்டுதல் (அல்-தக்வீர்)

[81:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[81:1] சூரியன் சுருட்டப்படும் பொழுது.
[81:2] நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன.
[81:3] மலைகள் துடைத்தெடுக்கப்படுகின்றன.
[81:4] இனப்பெருக்கம் நிறுத்தப்படுகின்றது.
[81:5] மிருகங்கள் வரவழைக்கப்படுகின்றன.
[81:6] பெருங்கடல்கள் தீப்பற்றி எரியச் செய்யப் படுகின்றன.
[81:7] ஆன்மாக்கள் தங்களுடைய உடல்களுக்குள் மீண்டும் வைக்கப்படுகின்றன.
[81:8] உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படுகின்றது:
[81:9] எந்தக் குற்றத்திற்காக அவள் கொலை செய்யப்பட்டாள்?
[81:10] பதிவேடுகள் தெரியப்படுத்தப்படுகின்றன.
[81:11] வானம் அகற்றப்படுகின்றது.
[81:12] நரகம் பற்ற வைக்கப்படுகின்றது.
[81:13] சுவனம் முன்னால் கொண்டுவரப்படுகின்றது.
[81:14] ஒவ்வொரு ஆன்மாவும் அது கொண்டு வந்த ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும்.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்
[81:15] நட்சத்திர மண்டலங்களின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.
[81:16] மிகச்சரியாக அவற்றின் சுற்றுப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
[81:17] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.
[81:18] மேலும் காலைப் பொழுது அது மூச்சு விடும் பொழுது.
[81:19] இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றா கும்*.

அடிகுறிப்பு:
*81:19 இந்த சூராவின் எண்ணுடன், வசன எண்ணையும், “ரஷாத்” என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (505), “கலீஃபா” என்பதன் மதிப்பையும் (725) நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது 1330, 19ஒ70 ஆகும். இத்தூதர் ரஷாத் கலீஃபாதான் என்பதற்குக் குர்ஆனியக் கணிதச் சான்றினை இது வழங்குகின்றது.
[81:20] அரியாசனத்தைக் கொண்டிருப்பவரால் அங்கீ கரிக்கப்பட்டவர், முற்றிலும் ஆதரவளிக்கப் பட்டவர்.
[81:21] அவர் கீழ்ப்படியவும் மேலும் நம்பிக்கை கொள்ளப்படவும் வேண்டும்.
[81:22] உங்களுடைய தோழர் (ரஷாத்) புத்தி சுவாதீனமில்லாதவர் அல்ல.
[81:23] உயர்ந்த தொடுவானத்தில் அவர் அவரைக் கண்டார்*.

அடிகுறிப்பு:
*81:23 பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி உயர்ந்த தொடுவானத்திற்கு ரஷாத் கலீஃபா வரவழைக்கப்பட்டார்.
[81:24] அவர் எந்தச் செய்தியையும் தடுத்து நிறுத்திக் கொள்ளவில்லை.
[81:25] இது விலக்கி வைக்கப்பட்ட சாத்தானின் பேச்சு அல்ல.
[81:26] பின் இப்போது, நீங்கள் எங்கு செல்வீர்கள்?
[81:27] இது மக்கள் அனைவருக்குமான ஒரு தூதுச் செய்தியாகும்.
[81:28] நேராகச் செல்ல விரும்புபவர்களுக்காக.
[81:29] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது, பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ன் நாட்டத்திற்கேற்பவே உள்ளது.