சூரா 8: போரில் கைப்பற்றிய பொருட்கள் (அல்-அன்ஃபால்)

[8:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[8:1]போரில் கைப்பற்றிய பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள் “போரில் கைப்பற்றிய பொருட்கள் கடவுள்-க் கும் மேலும் தூதருக்கும் உரியதாகும்,” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவும், நன்னெறியாளர்களாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்ளவும் வேண்டும், மேலும் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-க்கும் அவருடைய தூதருக் கும் கீழ்ப்படிய வேண்டும்.
உண்மையான நம்பிக்கையாளர்கள்
[8:2]உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென் றால், கடவுள் என்று கூறப்படும் போது அவர் களுடைய இதயங்கள் நடுங்கிவிடும், மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும் போது, அவர்களுடைய விசுவாசம் வலுப்படும், மேலும் தங்கள் இரட்சகர் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வார்கள்.
[8:3]அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம்முடைய வாழ்வாதாரங்களிலிருந்துஅவர்கள் தானம் வழங்குவார்கள்.
[8:4]இத்தகையவர்கள் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடத்தில் உயர்ந்த அந்தஸ்தையும், இன்னும் மன்னிப்பையும், மேலும் ஒரு தாராள மான வாழ்வாதாரத்தையும் அடைவார்கள்.
பலஹீனமான நம்பிக்கையாளர்கள்
[8:5]ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்கு, உமது வீட்டை விட்டு நீர் வெளிக் கிளம்ப வேண்டும் என உம் இரட்சகர் நாடிய போது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்கள் என்று இனங்காட்டப் பட்டார்கள்.
[8:6]அவர்களிடம் அனைத்தும் விளக்கப்பட்டுவிட்ட பின்னரும் சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதாடினார்கள். நிச்சயமான மரணத்தின்பால் அவர்கள் செலுத்தப்படுவது போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள்.
[8:7]ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது உங்களுக்கு வெற்றியைக் கடவுள் வாக்களித்திருந்ததை நினைவு கூருங்கள், ஆனால் நீங்கள் அப் போதும் பலஹீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். கடவுள்-ன் திட்ட மோ, சத்தியத்தை தன் வார்த்தைகளால் நிலை நாட்டி, நம்ப மறுப்பவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக இருந்தது.
[8:8]ஏனெனில் தீமை புரிபவர்கள் வெறுத்த போதிலும், சத்தியம் வெல்ல வேண்டும் என்றும், பொய்மை மறைய வேண்டும் என்றும் அவர் விதித்திருந்தார்.
கண்ணுக்குத் தெரியாத கடவுளின் படையினர்
[8:9]இவ்வாறாக, உங்களுடைய இரட்சகரிடம் காப் பாற்ற வருமாறு நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்த போது, அவர் உங்களுக்கு: “தொடர்ச்சியாக வரும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி உத்திரவாதமளிக்கப்படுகின்றது
[8:10]இந்நற்செய்தியை உங்கள் இதயங்களை வலுப் படுத்துவதற்காக கடவுள் வழங்கினார். வெற்றி கடவுள் இடமிருந்து மட்டுமே வருகின் றது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:11]அமைதி மிக்க தூக்கம் உங்களை ஆட்கொள்ளச் செய்ததன் மூலம் உங்களை அவர் அமை திப்படுத்தினார், மேலும் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தினார். சாத்தானின் சாபத்தி லிருந்து அவர் உங்களைக் காப்பாற்றி, உங்கள் இதயங்களை மீண்டும் உறுதி செய்து உங்கள் நிலைகளை பலப்படுத்தினார்.
சரித்திரத்திலிருந்து படிப்பினைகள்
[8:12]உம் இரட்சகர் வானவர்களுக்கு: “நான் உங்களுடன் இருக்கின்றேன்; ஆகவே நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்களில் திகிலை நான் எறிவேன். நீங்கள் அவர்களின் கழுத்துக்களின் மேல் தாக்குவீர்களாக, மேலும் ஒவ்வொரு விரலையும் கூடத் தாக்குவீர்களாக” என்று உள்ளுணர்வளித்ததை நினைவு கூர் வீராக.

அடிகுறிப்பு:
*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.
[8:13]கடவுள்-உடனும் அவருடைய தூதருடனும் சண்டையிட்டதால், நியாயமாக அவர்கள் உள்ளானது இதற்குத்தான். ஏனெனில் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் எதிராக சண்டையிடுபவர்களுக்கு கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும்.

அடிகுறிப்பு:
*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.
[8:14]இது நம்ப மறுப்பவர்களைத் தண்டிக்கவே யாகும்; அவர்கள் நரகின் தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள்.

அடிகுறிப்பு:
*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.
[8:15]நம்பிக்கை கொண்டோரே, உங்களுக்கு எதிராக ஆயத்தமான நம்ப மறுப்பவர்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிட்டால் புறங்காட்டி ஓடி விடாதீர்கள்.

அடிகுறிப்பு:
*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.
[8:16]எவரேனும் அந்நாளில் ஒரு யுத்தத் திட்டத்தை செயலாக்குவதற்கோ, அல்லது தன் பிரிவினருடன் சேர்ந்து கொள்வதற்கோ தவிர புறங்காட்டுவாரேயானால், அவர் கடவுள்-ன் கடுங்கோபத்திற்குள்ளாகிவிட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமாகும்; எத்தகைய ஒரு துன்பகரமான விதி!

அடிகுறிப்பு:
*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.
அனைத்தையும் செய்வது கடவுள் தான்
[8:17]அவர்களைக் கொன்றது நீங்கள் அல்ல; கடவுள் தான் அவர்களைக் கொன்றார். நீங்கள் எறிந்த போது, எறிந்தது நீங்கள் அல்ல; கடவுள்-தான் எறிந்தார். ஆயினும், இவ்விதமாக அவர், நம்பிக்கையாளர்கள் ஏராளமான வரவுகளைச் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின் றார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

அடிகுறிப்பு:
*8:17 கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கை என்பது, அவருடைய தன்மைகளின் மீது நம்பிக்கை கொள்வதை அவசியமாக்குகின்றது, அவர்தான் அனைத்தையும் செய்கின்றார் என்பது அதில் ஒன்றாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளாமல், நம்பிக்கை என்பது இல்லை (23:84-90). தீமையான விஷயங்களுக்கு நாமே உள்ளாகிக் கொள்கின்றோம், மேலும் கடவுளின் சட்டங்களுக்கு ஏற்ப, அவை சாத்தானால் நிறைவேற்றப்படுகின்றன (4:78-79, 42:30)
[8:18]கூடுதலாக, கடவுள் இவ்வாறு நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகளைப் பயனற்றதாக்கு கின்றார்.
[8:19](நம்ப மறுப்பவர்களே) வெற்றியை நீங்கள் தேடினீர்கள், மேலும் வெற்றியும் வரத்தான் செய்தது; அது நம்பிக்கையாளர்களுக்கு உரியதாயிருந்தது. (வலுச்சண்டை) செய்வதி லிருந்து நீங்கள் விலகியிருந்தால் அது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருந் திருக்கும், ஆனால் நீங்கள் திரும்புவீர் களாயின், நாமும் அவ்வாறே செய்வோம். உங்களது படைகள், அது எவ்வளவு பெரிய தாயிருந்தாலும், ஒரு போதும் உங்களுக்கு உதவிடாது. ஏனெனில் நம்பிக்கையாளர்களின் பக்கம் கடவுள் இருக்கின்றார்.
[8:20]நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும் நீங்கள் செவியேற்கும் போதே அவரைப் புறக்கணிக்காதீர்கள்.
நம்ப மறுப்பவர்கள் தடுக்கப்பட்டு விடுகின்றனர்
[8:21]செவியேற்காமல் அவர்கள் இருக்கும் போதே, “நாங்கள் செவியேற்றோம்,” என்று கூறுபவர் கள் போன்று நீங்களும் இருக்காதீர்கள்.
[8:22]கடவுள்-ன் பார்வையில் மிகமோசமான படைப்பினங்கள், புரிந்துகொள்ளாத செவிடர் களும், ஊமையர்களுமே ஆகும்.
[8:23]அவர்களிடத்தில் ஏதேனும் நல்லதை கடவுள் அறிந்திருப்பாரானால், அவர்களை அவர் செவி யேற்பவர்களாக ஆக்கியிருப்பார். அவர்களை அவர் செவியேற்பவர்களாக ஆக்கியிருந் தாலும் கூட, அவர்கள் அப்பொழுதும் வெறுப்புக் கொண்டு திரும்பியிருப்பார்கள்.
நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை
[8:24]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் -க்கும், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன்* பால் தூதர் அழைக்கும் போது அவருக்கும் பதிலளிக்க வேண்டும். கடவுள் உங்கள் இதயங்களை விடவும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கின்றார் என்பதையும், அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அடிகுறிப்பு:
*8:24 பின் இணைப்பு 17 ஐ பார்க்கவும். நன்னெறியாளர்கள் தங்கள் உடம்பை விட்டு வெளியேறும் போது, நேராக அவர்கள் சுவனம் செல்கின்றனர்.
[8:25]உங்களில்* உள்ள தீயவர்களுக்கு மட்டும்தான் என்று வரையறுக்கப்படாமல் இருக்கக் கூடிய தண்டனை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கடவுள்-ன் தண்டனை கடுமையானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அடிகுறிப்பு:
*8:25 உதாரணத்திற்கு ஓரினப்புணர்ச்சிக்கு இடமளிக்கின்ற ஒரு சமூகம் பூகம்பத்தால் தாக்குறலாம்.
நம்பிக்கையாளர்களுக்கு கடவுள் ஆதரவளிக்கின்றார்
[8:26]நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, நீங்கள் சிலராகவும் மேலும் அடக்கு முறை செய்யப்பட்டவர்களாகவும், மக்கள் உங்களை பிடுங்கிச் சென்றுவிடுவார்கள் என்று அஞ்சியவர்களாகவும் இருந்ததையும் மேலும் அவர் உங்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதையும், அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவளித்ததையும், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.
[8:27]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருப்பதால், கடவுள்-ஐயும் தூதரையும் வஞ்சித்து விடாதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்போரை வஞ்சித்து விடாதீர்கள்.
செல்வமும், குழந்தைகளும் சோதனைகள்
[8:28]உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் ஒரு சோதனை என்பதையும், மேலும் ஒரு மாபெரும் வெகுமதியினை கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[8:29]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருந்தால், அவர் உங்களுக்குத் தெளிவு படுத்துவார், உங்களுடைய பாவங் களைத் தள்ளுபடி செய்வார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைத் தன் வசம் வைத்திருக்கின்றார்.
கடவுள் தன் தூதரைப் பாதுகாக்கின்றார்
[8:30]நம்ப மறுப்பவர்கள் உம்மைச் செயலிழக்கச் செய்வதற்கு, அல்லது உம்மைக் கொல்வதற்கு, அல்லது உம்மை நாட்டை விட்டு வெளியேற்று வதற்கு சதியும், சூழ்ச்சியும் செய்கின்றார்கள். ஆயினும், அவர்கள் சதியும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுள்-ம் அவ்வாறே செய் கின்றார். கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.

அடிகுறிப்பு:
*8:30 அரேபியாவின் பலம் வாய்ந்த குலத்திலிருந்து முஹம்மதைக் கடவுள் தன்னுடைய இறுதி வேதம் வழங்கப்பட்டவராகத் தேர்ந்தெடுத்தார்.குலச்சட்டங்களும், பழக்கவழக்கங்களும் தான் முஹம்மதைக் கொன்று விடுவதிலிருந்து-கடவுள் அனுமதியால்-நம்ப மறுப்பவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தது. அது போலவே, மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து தன்னுடைய உடன்படிக்கைத்தூதரை, அங்கிருந்தால் கொல்லப்பட்டிருப்பார் என்ற நிலையில், கடவுளின் தூதுச் செய்தி பூலோகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விரைந்து பரவ இயலும் வண்ணம் ரு.ளு.ஹ. நோக்கி வரச் செய்தது கடவுளின் நாட்டமே ஆகும். இது கணித ரீதியில் உறுதி செய்யப்படுகின்றது. இந்த சூரா & வசன எண் = 8+ 30=38=19ஓ2
[8:31]நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும்போது, அவர்கள், “நாங்கள் கேட்டுக் கொண்டோம். நாங்கள் விரும்பி யிருந்தால், நாங்களும் இதே விஷயங்களைக் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலக் கட்டுக் கதைகளே தவிர அதிகமாக எதுவு மில்லை!” என்று கூறுகின்றார்கள்.
[8:32]அவர்கள் மேலும், “எங்கள் தெய்வமே, இது உண்மையில் உம்மிடம் இருந்து வந்த சத்தியம் தான் என்றால், பின்னர் எங்கள் மீது விண்ணி லிருந்து பாறைகளைப் பொழிவீராக, அல்லது எங்கள் மேல் ஒரு வலி மிகுந்த தண்டனையை ஊற்றுவீராக என்றும் கூறினார்கள்.
[8:33]ஆயினும், அவர்கள் மத்தியில் நீர் இருக்கும் போது கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை; அவர்கள் மன்னிப்புத் தேடிக் கொண் டிருக்கும் நிலையில் கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை.
[8:34]புனித மஸ்ஜிதின் பொறுப்பாளர்களாக அவர்கள் இல்லாத போதும், அதை விட்டும் மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருப் பதனால், கடவுள்-ன் தண்டனைக்கு அவர்கள் தகுதியானவர்களாகிவிட்டார்கள் அல்லவா? நன்னெறியாளர்களே அதன் உண்மையான பொறுப்பாளர்கள் ஆவார்கள், ஆனால் அவர் களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
குர்ஆனுக்கு முன்னரே தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) வழக்கில் இருந்து வந்தது
[8:35](கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை. ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.

அடிகுறிப்பு:
*8:35 இஸ்லாத்தின் மார்க்கச் செயல்பாடுகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே நமக்கு வந்தது; குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டப் போது, “அடிபணிதலின்” எல்லாச் சடங்குகளும் ஏற்கனவே வழக்கில் இருந்து வந்தன (21:73, 22:78).
கடவுளுடன் சண்டையிடுவதற்காக தங்கள் செல்வத்தைச் செலவிடுவது
[8:36]நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய பணத்தை கடவுள்-ன் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அதுவே அவர்களுக்குத் துக்கமும், குற்றவுணர்வால் எற்படும் வருத்தமும் ஆக மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் நம்ப மறுப்பவர்கள் அனைவரும் நரகத்தில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

அடிகுறிப்பு:
*8:36 கடவுள்-ஐயும் அவரது அற்புதத்தையும் எதிர்த்துப் போரிடுவதற்காகவே, சவுதி அரேபியாவில் உள்ள இணைத்தெய்வ வழிபாடு செய்யும் சீர்கெட்ட இஸ்லாத்தின் தலைவர்கள், வருடந்தோறும் பெருந்தொகையினை ஒதுக்குகின்றனர். உதாரணமாக, புகழ்பெற்ற லெபனீய பதிப்பகமான “தார் அல் இல்ம்லில் மலாயீன்” (இலட்சக்கணக்கானோருக்கு அறிவு) 1983- மார்ச்சில் “குர்ஆனின் அற்புதம்” என்கிற அரபி மொழிபெயர்ப்பை வெளியிட்டது. சவுதிகள் அனைத்துப் பிரதிகளையும் விலைக்கு வாங்கி அவற்றை அழித்து விட்டனர்.
[8:37]கடவுள் நல்லதிலிருந்து கெட்டதைச் சலித் தெடுப்பார், பின்னர் கெட்டதை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றையும் ஒரே அடுக்காக்கி, பின்னர் அதனை நரகில் எறிவார். இத்தகையவர்கள் தான் நஷ்டமடைந்தவர்கள்.
[8:38]நம்ப மறுத்தவர்களிடம்: அவர்கள் நிறுத்தி விடுவார்களானால், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களைப் போல் இருந்த அவர்களுக்கு முந்தியவர்களுக்கு நேர்ந்த கதியைப் போன்றே அவர்களுக்கும் நேரிடும் என்று கூறுவீராக.
[8:39]அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கும், மேலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்த உங்களுடைய மார்க்கத்தை செயல்படுத்து வதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டை செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருந்தால், பின்னர் அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[8:40]அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் தான் உங்களுடைய இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; சிறந்த இரட்சகரும், எஜமானரும், சிறந்த ஆதரவாளருமாவார்.
[8:41]போரில் கைப்பற்றிய பொருட்கள் ஏதேனும் உங்களுக்கு இலாபமாகக் கிடைத்தால் உறவி னர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைக ளுக்கும், பயணத்தில் உள்ள அந்நியர்க்கும், கொடுக்கப்படுவதற்காக ஐந்தில் ஒரு பாகம் கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் சென்றிட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் மீதும் மேலும் இருபடையினர் மோதிக்கொண்ட தினமான, தீர்மானத்தின் நாளின் போது நம்முடைய அடியாருக்கு நாம் வெளிப்படுத்தியதன் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பின் இதனை நீங்கள் செய்துவிடுவீர்கள். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
கடவுள் ஒவ்வொன்றையும்கட்டுப்படுத்துகின்றார் மேலும் நம்பிக்கையாளர்களுக்காகத் திட்டமிடுகின்றார்
[8:42]பள்ளத்தாக்கின் இந்தப் புறத்தில் நீங்கள் இருந்த அதே சமயம், மற்றொரு புறத்தில் அவர்கள் இருந்ததை நினைவு கூர்வீராக, அப்போது அவர்களுடைய வாகனக் கூட்டம் தாழ்வான தரைப்பகுதியை நோக்கி நகர வேண்டியிருந்தது. இந்த வழியில் நீங்கள் அதனைத் திட்டமிட்டிருந் தீர்களானால், உங்களால் அதனைச் செய்திருக்க முடியாது. ஆனால் அழிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக அழிக்கப்படுவதற்கும், காப் பாற்றப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக காப் பாற்றப்படுவதற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயத்தைக் கடவுள் நிகழ்த்த இருந்தார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[8:43](முஹம்மதே) உம்முடைய கனவில் அவர்களை, எண்ணிக்கையில் குறைவாகத் தெரியும்படி கடவுள் செய்தார். அவர்களை அதிக எண்ணிக் கையில் தெரியும் படி அவர் செய்திருந்தால், நீங்கள் தோல்வியடைந்திருப்பீர்கள், மேலும் உங்களுக் குள் நீங்கள் தர்க்கம் புரிந்து கொண்டிருந் திருப்பீர்கள். ஆனால் கடவுள் இந்நிலைமையைப் பாதுகாத்தார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களையும் அறிகின்றவர்.
[8:44]மேலும் அந்நேரம் வந்து அவர்களை நீங்கள் சந்தித்த போது, உங்களுடைய கண்களுக்கு அவர்களைக் குறைவாகத் தெரியும்படி அவர் செய்தார், மேலும் அதேபோல் அவர்களுடைய கண்களுக்கு உங்களைக் குறைவாகத் தெரியும் படியும் செய்தார். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கடவுள் நிறைவேற்ற நாடினார். தீர்மானங்கள் அனைத்தும் கடவுள்-ஆல் செய்யப்படுகின்றன.
[8:45]நம்பிக்கை கொண்டோரே, ஒரு படையினை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். மேலும் கடவுள்-ஐ அதிகமதிகம் நினைவு கூர்ந்திட வேண்டும்.
[8:46]நீங்கள் கடவுள்-க்கும் மேலும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய பலத்தைச் சிதறடித்து விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கம் செய்யாமல் இருக்க வேண்டும். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.
[8:47]கடவுள்-ன் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து உண்மையில் மற்றவர்களை பின்வாங்கச் செய்தவர்களாக, காட்டிக் கொள்வதற்காக மட்டுமே விருப்பமின்றி தங்களுடைய வீடுகளைத் துறந்து வந்தவர்கள் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முழுவதும் அறிகின்றார்.
கண்ணுக்குத் தெரியாத கடவுளுடைய படையினரை சாத்தான் காண்கின்றான்
[8:48]சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர் களுடைய கண்களுக்கு அழகாக ஆக்கிவிட்டான், மேலும், “இன்றைக்கு உங்களை எந்த மனிதர் களாலும் தோற்கடித்து விட முடியாது,” மேலும் “உங்களுடன் நானும் சேர்ந்து போரிடுகின்றேன்,” என்று கூறினான். ஆனால் இருபடையினரும் ஒருவரையொருவர் எதிர் கொண்டவுடன், “நான் உங்களைக் கைவிடுகின்றேன் நீங்கள் பார்க்காத வற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுள்-க்கு பயப்படுகின்றேன். கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டக் கூடியது” என்று கூறியவாறு தன் குதிகால்களால் திரும்பி ஓடி விட்டான்.
[8:49]நயவஞ்சகர்களும், தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்களும், “ இம் மக்கள் தங்கள் மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டனர்” என்று கூறினார்கள். ஆயினும், கடவுள்-இடம் ஒருவர் பொறுப்பை ஒப்படைத்தால், பின்னர் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:50]வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் போது மட்டும் நம்ப மறுப்பவர்களை உங்களால் பார்க்க முடிந்தால் அவர்கள் முகங்களிலும், அவர்களது பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்: “நரகின் தண்டனை யைச் சுவையுங்கள்.
[8:51]“இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பியவற்றின் பின் விளைவுகள் ஆகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒரு போதும் அநீதியானவர் அல்ல”.
[8:52]இது ஃபேரோவின் சமூகத்தவருக்கும், மேலும் அவர்களுக்கு முன்பு நம்ப மறுத்தவர்களுக்கும் நேர்ந்த அதே கதியைப் போன்றதேயாகும். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் கடவுள் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி மிக்கவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானது.
தண்டனை: பாவத்தின் விளைவு
[8:53]தங்களுக்குத் தாங்களே மாற்றிக் கொண்டு விட முடிவெடுத்தாலன்றி, எந்த மக்களுக்கும் தான் அருளிய ஓர் அருட்கொடையினை கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[8:54]இத்தகைய நிலைதான் ஃபேரோவின் சமூகத் தவரிடமும், மேலும் அவர்களுக்கு முன்பிருந்த மற்றவர்களிடமும் இருந்தது. முதலில் அவர்கள் தங்கள் இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித் தோம். ஃபேரோவின் சமூகத்தினரை மூழ்கடித் தோம்; தீயவர்கள் தொடர்ந்து தண்டிக்கப் பட்டே வருகின்றனர்.
[8:55]கடவுள்-ன் பார்வையில் மிக மோசமான படைப்பினங்கள் நம்ப மறுத்தவர்கள் தான். அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.
[8:56]நீர் அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்கின்றீர், ஆனால் அவர்களோ ஒவ் வொரு தடவையும் தங்களின் உடன்படிக்கை களை மீறுகின்றார்கள்; அவர்கள் நன்னெறி யாளர்கள் அல்ல.
[8:57]ஆகையால், போரில் அவர்களை நீர் எதிர் கொண்டால், அவர்களுக்குப் பின்னால் வரக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஓர் உதாரணமாக அவர்களை நீர் அமைத்திட வேண்டும். அதனால் அவர்கள் கவனத்தில் கொள்ளக் கூடும்.
[8:58]மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீர் வஞ்சிக்கப் படும் போது, அதே விதத்தில் நீர் அவர்களுக் கெதிராக ஒன்று திரள வேண்டும். துரோக மிழைப்பவர்களை கடவுள் விரும்புவதில்லை.
[8:59]நம்ப மறுப்பவர்கள் அப்படியே சென்று தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொள்ள வேண் டாம், அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது,
நீங்கள் தயாராக இருக்க வேண்டும்: ஒரு தெய்வீகக்கட்டளை
[8:60]அவர்களுக்கெதிராக உங்களால் சேர்க்க முடிந்த பலம் அனைத்தையும் மேலும் உங்களால் ஒன்றுதிரட்ட முடிந்த போர்த்தளவாடங்களையும் நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும், அதைக் கொண்டு கடவுள்-ன் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், இன்னும் நீங்கள் அறியாத மற்றவர்களையும் நீங்கள் பயமுறுத்த இயலும். கடவுள் அவர்களை அறிகின்றார். கடவுள்-ன் பாதையில் நீங்கள் செலவழிக்கும் எதுவாயினும், சிறிதும் அநீதியின்றி தாராளமாக உங்களிடம் திருப்பித் தரப்படும்.
[8:61]அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சம்புகுந்தால் நீங்களும் அவ்வாறே செய்திட வேண்டும், மேலும் கடவுள்-இடம் உங்களுடைய பொறுப்பை வைக்க வேண்டும். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
நம்பிக்கையாளர்களுக்கு கடவுள் போதுமானவர்
[8:62]அவர்கள் உம்மை ஏமாற்றக் கருதினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவராக இருப்பார். அவர் தனது ஆதரவைக் கொண் டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உமக்கு உதவி புரிவார்.
[8:63](நம்பிக்கையாளர்களின்) இதயங்களை அவர் இணக்கமாக்கி வைத்தார். பூமியில் உள்ள அனைத்து செல்வத்தையும் நீர் செலவிட்டிருந் தாலும், அவர்களுடைய இதயங்களை நீர் இணக்கப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தினார். அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:64]வேதம் வழங்கப்பட்டவரே, கடவுள் மற்றும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள் உமக்கு போதுமானவர்கள்.
[8:65]வேதம் வழங்கப்பட்டவரே, நம்பிக்கையாளர்கள் போரிடுவதற்கு நீர் உபதேசிக்க வேண்டும். உறுதியுடையோராய் இருபது பேர் உங்களில் இருந்தால் அவர்கள் இருநூறு பேரை தோற்கடிக்க இயலும். மேலும் உங்களில் உள்ள ஒரு நூறு பேர் நம்பிக்கை கொள்ள மறுத்த ஓர் ஆயிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே அதற்கு காரணமாகும்.
[8:66]இப்போது (புதியவர்கள் அதிகமானோர் உம்முடன் சேர்ந்திருப்பதால்) கடவுள் அதை உமக்கு எளிதாக ஆக்கியுள்ளார், ஏனெனில் முன்னர் இருந்த அதே பலத்துடன் இப்போது நீங்கள் இல்லையென்பது அவருக்குத் தெரியும். இனிமேல், உறுதியுடையவர்களான ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு பேரைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களின் ஓர் ஆயிரம் பேர் கடவுள் அனுமதியால் இரண்டா யிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.
[8:67]வேதம் வழங்கப்பட்டவர் எவரும் அவர் போரில் பங்கெடுத்தால் அன்றி கைதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. மக்களாகிய நீங்கள் இவ்வுலகின் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகின் வாழ்வை ஆதரிக்கின்றார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:68]கடவுள்-இடமிருந்து முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒரு தீர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால், நீங்கள் எதனை எடுத்துக் கொண்டீர்களோ, அதன் பொருட்டு ஒரு பயங்கரமான தண்டனை யை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.
[8:69]ஆகையால், போரில் கைப்பற்றிய பொருட்களி லிருந்து நீங்கள் சம்பாதித்ததில் அனுமதிக்கப் பட்டதும் மேலும் நல்லதுமானதை உண்ணுங் கள், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள் ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[8:70]வேதம் வழங்கப்பட்டவரே, உம்கைவசம் உள்ள போர்க்கைதிகளிடம், “ உங்கள் இதயங்களில் நல்லது எதையும், கடவுள் அறிந்திருந்தால் நீங்கள் இழந்து விட்ட எதையும் விட சிறந்ததை அவர் உங்களுக்குக் கொடுத்திருப்பார், மேலும் உங்களை மன்னித்துமிருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று சொல்வீராக.
[8:71]மேலும் அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால், அவர்கள் ஏற்கனவே கடவுள்-ஐ வஞ்சித் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[8:72]நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக தங்களுடைய செல்வத்தையும் மற்றும் தங்களு டைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபட்டார் களோ அவர்களும், அதே சமயம் அவர்களை உபசரித்து மேலும் அவர்களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவும் தந்தார்களே அவர்களும் தான் ஒருவர் மற்றவருக்கு கூட்டாளிகளாக இருக்கின்றனர். நம்பிக்கை கொண்டிருந்து, ஆனால் உங்களுடன் ஊர் துறந்து வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஊர் துறக்காதவரை, அவர்களுக்கு ஆதரவு எதையும் அளிக்கும் கடமை உங்களுக்கு இல்லை. ஆயினும், மார்க்கச் சகோதரர்கள் என்ற முறையில், உங்களது உதவி அவர்களுக்கு தேவைப் பட்டால், நீங்கள் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சமூகத்திற்கு எதிராகத் தவிர அவர்களுக்கு நீங்கள் உதவி செய்திட வேண்டும். நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[8:73]நம்ப மறுத்தவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் ஆவார்கள். இந்த கட்டளைகளை நீங்கள் கடைபிடிக்கவில்லையானால், பூமியில் குழப்பமும், பயங்கரமான சீர்கேடும் ஏற்பட்டு விடும்.
[8:74]நம்பிக்கை கொண்டு மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக பாடுபட்டவர்கள், அது போல் அவர்களை உபசரித்து மேலும் அவர் களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், இவர்கள் தான் உண்மை யான நம்பிக்கையாளர்கள். அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதொரு வெகுமதிக்கும் தகுதியடைந்து விட்டார்கள்.
[8:75]அதன் பின்னர் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றும் ஊர் துறந்தவர்கள், மேலும் உங்களுடன் பாடுபட்டவர்கள், இவர்களும் உங்களைச் சார்ந் தவர்களே. ஒருவருக்கொருவர் உறவினராக உள்ளவர்கள் கடவுள்-ன் கட்டளைகளுக்கு இணங்க ஒருவர் மற்றவருக்கு முதலில் ஆதரவு அளித்திட வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.