சூரா 78: அந்த நிகழ்வு (அல்-நபஅ’)

[78:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[78:1] அவர்கள் கேள்வி கேட்பது என்ன?
[78:2] மகத்தான அந்நிகழ்வு.
[78:3] அவர்களால் அது தர்க்கித்துக் கொண்டிருக்கப் படுவது.
[78:4] உண்மையில், அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[78:5] மிகவும் நிச்சயமாக, அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[78:6] இந்தப் பூமியை வசிக்கத்தக்கதாக நாம் ஆக்கவில்லையா?
[78:7] மேலும் மலைகளை நிலைப்படுத்துபவை களாக?
[78:8] உங்களை நாம் (ஒருவருக்கு மற்றொருவரை) ஜோடிகளாகப் படைத்தோம்.
[78:9] நீங்கள் ஓய்வெடுப்பதற்காகத் தூக்கத்தை நாம் படைத்தோம்.
[78:10] இரவை ஒரு மறைப்பாக நாம் ஆக்கினோம்.
[78:11] மேலும் பகலை வாழ்வாதாரங்களைத் தேடு வதற்காக.
[78:12] உங்களுக்கு மேலே ஏழு பிரபஞ்சங்களை நாம் நிர்மாணித்தோம்.
[78:13] பிரகாசமானதொரு விளக்கை நாம் படைத் தோம்.
[78:14] மேகங்களிலிருந்து ஊற்றப்படுகின்ற தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[78:15] அதனைக் கொண்டு தானியங்களையும் தாவரங்களையும் விளைவிப்பதற்காக.
[78:16] மேலும் பல்வேறு பழத்தோட்டங்களையும்.
[78:17] தீர்மானத்தின் நாளானது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
[78:18] அந்நாளில் கொம்பு ஊதப்படும், மேலும் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
[78:19] வானமானது வாசல்களைப் போல் திறக்கப் படும்.
[78:20] மலைகளை அவை ஒரு கானலாக இருந்ததைப் போல, அகற்றப்பட்டு விடும்.
[78:21] ஜஹன்னா தவிர்த்து விட இயலாதது.
[78:22] வரம்பு மீறுபவர்களுக்கு; அதுதான் அவர் களுடைய தங்குமிடமாக இருக்கும்.
[78:23] யுகங்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள்.
[78:24] அவர்கள் ஒருபோதும் அதில் குளிர்ச்சியையோ அன்றி ஒரு பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.
[78:25] ஒரு தீக்கொழுந்தும், மேலும் கசப்பான உணவும் மட்டுமே.
[78:26] ஒரு நியாயமான கூலி.
[78:27] கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப்படு வோம் என அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்க வில்லை.
[78:28] மேலும் நம்முடைய அத்தாட்சிகளை முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
[78:29] ஒவ்வொன்றையும் ஒரு பதிவேட்டில் நாம் எண்ணி வைத்துள்ளோம்.
[78:30] அதன் விளைவுகளை அனுபவியுங்கள்; உங்களுக்குத் தண்டனையை நாம் அதிகரிக்க மட்டுமே செய்வோம்.
[78:31] நன்னெறியாளர்கள் ஒரு வெகுமதிக்குத் தகுதியாகி விட்டனர்.
[78:32] பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைகள்.
[78:33] அபாரமான வாழ்க்கைத் துணைகள்.
[78:34] மதுரமான பானங்கள்.
[78:35] அபத்தங்கள் எதையுமோ அல்லது பொய் களையோ அதில் அவர்கள் ஒருபோதும் செவியுற மாட்டார்கள்.
[78:36] உம்முடைய இரட்சகரிடமிருந்தொரு வெகுமதி; தாராளமானதொரு பிரதிபலன்.
[78:37] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றிற்கும் இரட்சகர். மிக்க அருளாளர். அவருடைய தீர்மானங்களை எவரொருவரும் ரத்துச் செய்து விட இயலாது.
[78:38] பரிசுத்த ஆவியும் மற்றும் வானவர்களும் ஒரு வரிசையில் நிற்கின்ற அந்நாள் வரும். மிக்க அருளாளரால் அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர எவரொருவரும் பேசமாட்டார்கள், மேலும் அவர்கள் சரியானதை மட்டுமே பேசுவார்கள்.
[78:39] தவிர்க்க இயலாத நாளானது இவ்விதமான தேயாகும். எவரெல்லாம் நாடுகின்றாரோ அவர் தன் இரட்சகரிடம் புகலிடம் எடுத்துக் கொள் ளட்டும்.
[78:40] விரைவில் நிகழவிருக்கின்றதொரு தண்டனை யைப் பற்றி நாம் உங்களுக்குப் போதுமான அளவு எச்சரித்து விட்டோம். அதுதான் ஒவ்வொருவரும் தன் கரங்கள் முற்படுத்தி அனுப்பியவை என்ன என்பதைப் பரிசீலித்து பார்த்துக் கொள்கின்ற நாளாகும், மேலும் நம்ப மறுப்பவன், “ஐயோ, நான் புழுதியாகவே இருந்திருக்க வேண்டும் என விரும்புகின் றேன்” என்று கூறுவான்.