சூரா 77: அனுப்பப்படுகின்றவர்கள் (அல்-முர்ஸலாத்)

[77:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[77:1] தொடர்ந்து அனுப்பப்படுகின்ற (வானவர்கள்).
[77:2] காற்றை ஓட்டுவதற்காக.
[77:3] மேகங்களைக் கலக்குவதற்காக.
[77:4] வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக.
[77:5] தூதுச் செய்திகளை ஒப்படைப்பதற்காக.
[77:6] நற்செய்திகளை, அவ்வண்ணமே எச்சரிக்கை களை.
[77:7] வாக்களிக்கப்பட்டவை நிகழ்ந்தேறும்.
[77:8] இவ்விதமாக, நட்சத்திரங்கள் அணைக்கப்படும் பொழுது.
[77:9] வானமானது திறந்து விடப்படுகின்றது.
[77:10] மலைகள் வெடித்துச் சிதறச் செய்யப் படுகின்றன.
[77:11] தூதர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
[77:12] அதுதான் நிர்ணயிக்கப்பட்ட நாளாகும்.
[77:13] தீர்மானத்தின் நாள்.
[77:14] எத்தகையதொரு தீர்மானத்தின் நாள்!
[77:15] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:16] முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்தி ருக்கவில்லையா?
[77:17] பின்னர் நாம் மற்றவர்களை அவர்களைப் பின் தொடரச் செய்யவில்லையா?
[77:18] இதுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வது.
[77:19] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:20] தாழ்ந்ததொரு திரவத்திலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?*

அடிகுறிப்பு:
*77:20-23 கூ.று. சாட்லரின் லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி என்ற புத்தகத்தில் உள்ளபடி (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 88): “ பொதுவாக ஒரு முழு வளர்ச்சியடைந்த கருவிற்குரிய கர்ப்ப கால அளவு கருத்தரித்த பின்னர் 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் ஆகும்”. 266 மற்றும் 38 ஆகிய இரண்டும் 19ன் பெருக்குத் தொகைகளாகும் (பின் இணைப்பு1).
[77:21] பின்னர் நாம் அதனை நன்கு பாதுகாக்கப்பட்ட தொரு பெட்டகத்தில் வைத்தோம்.

அடிகுறிப்பு:
*77:20-23 கூ.று. சாட்லரின் லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி என்ற புத்தகத்தில் உள்ளபடி (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 88): “ பொதுவாக ஒரு முழு வளர்ச்சியடைந்த கருவிற்குரிய கர்ப்ப கால அளவு கருத்தரித்த பின்னர் 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் ஆகும்”. 266 மற்றும் 38 ஆகிய இரண்டும் 19ன் பெருக்குத் தொகைகளாகும் (பின் இணைப்பு1).
[77:22] குறிப்பிட்டதொரு காலத்திற்கு.

அடிகுறிப்பு:
*77:20-23 கூ.று. சாட்லரின் லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி என்ற புத்தகத்தில் உள்ளபடி (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 88): “ பொதுவாக ஒரு முழு வளர்ச்சியடைந்த கருவிற்குரிய கர்ப்ப கால அளவு கருத்தரித்த பின்னர் 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் ஆகும்”. 266 மற்றும் 38 ஆகிய இரண்டும் 19ன் பெருக்குத் தொகைகளாகும் (பின் இணைப்பு1).
[77:23] மிகச்சரியாக நாம் அதனை அளவிட்டோம்.* வடிவமைப்பவர்களில் நாமே மிகச்சிறந்தவர் களாவோம்.

அடிகுறிப்பு:
*77:20-23 கூ.று. சாட்லரின் லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி என்ற புத்தகத்தில் உள்ளபடி (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 88): “ பொதுவாக ஒரு முழு வளர்ச்சியடைந்த கருவிற்குரிய கர்ப்ப கால அளவு கருத்தரித்த பின்னர் 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் ஆகும்”. 266 மற்றும் 38 ஆகிய இரண்டும் 19ன் பெருக்குத் தொகைகளாகும் (பின் இணைப்பு1).
[77:24] ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:25] இந்தப் பூமியை ஒரு தங்குமிடமாக நாம் ஆக்க வில்லையா?
[77:26] வாழ்பவர்களுக்கும் மற்றும் மரணித்தவர்களுக்கும்?
[77:27] உயர்ந்த மலைகளை அதன் மீது நாம் அமைத் தோம், மேலும் அருந்துவதற்காக உங்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்கினோம்.
[77:28] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:29] நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்தவற்றை நோக்கிச் செல்லுங்கள்.
[77:30] மூன்று வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட தோர் நிழலை நோக்கிச் செல்லுங்கள்.
[77:31] ஆயினும், அது குளிர்ச்சியையோ, அன்றி வெப்பத்திலிருந்து பாதுகாப்பையோ அளிக் காது.
[77:32] மாளிகைகளைப் போன்ற பெரிய அளவு தீப்பொறிகளை அது எறியும்.
[77:33] ஒட்டகங்களின் நிறத்தைப் போன்ற மஞ்சள் வண்ணத்தில்.
[77:34] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:35] அதுதான் அவர்கள் பேசாதிருக்கும் நாளாகும்.
[77:36] அன்றி மன்னிப்புக் கோருவதற்கும் அவர்கள் அனுமதியளிக்கப்பட மாட்டார்கள்.
[77:37] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:38] இதுதான் தீர்மானத்தின் நாளாகும். நாம் உங்களையும் மேலும் முந்திய தலைமுறை யினர்களையும் ஒன்று கூட்டியுள்ளோம்.
[77:39] உங்களிடம் சூழ்ச்சிகள் ஏதேனும் இருக்கு மாயின், தயங்காமல் சென்று சூழ்ச்சி செய்யுங் கள்.
[77:40] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:41] நன்னெறியாளர்கள் நிழலையும் மற்றும் ஊற்றுக் களையும் மகிழ்வுடன் அனுபவிப்பார்கள்.
[77:42] மேலும் அவர்கள் விரும்புகின்ற பழங்களை.
[77:43] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதி பலனாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள், மேலும் பருகுங்கள்.
[77:44] நற்குணங்களையுடையவர்களுக்கு இவ்வித மாகவே நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[77:45] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:46] தற்காலிகமாக உண்ணுங்கள் மேலும் சுகமனுபவியுங்கள்; நீங்கள் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.
[77:47] ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:48] “குனிந்து வழிபடுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வழிபடு பவதில்லை.
[77:49] ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
[77:50] இதனை விடுத்து, வேறு எந்த ஹதீஸை, அவர்கள் ஆதரிக்கின்றனர்?