சூரா 76: மனிதர் (அல்-இன்ஸான்)

[76:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[76:1] மனிதன் குறிப்பிடப்படுவதற்கு என எந்த ஒன்றுமாக இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது என்பது ஓர் உண்மை இல்லையா?
[76:2] அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவரின், ஒரு திரவக் கலவை யிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். இவ்விதமாக, அவனை நாம் செவியேற்கக் கூடிய ஒருவனாகவும் மேலும் பார்க்கக் கூடிய ஒருவனாகவும் ஆக்கினோம்.
[76:3] இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டி னோம், பின்னர், அவன் நன்றியுடைய வனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.
[76:4] நம்ப மறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், விலங்குகளையும், மேலும் கொழுந்து விட்டெரி கின்ற ஒரு நரகத்தையும் நாம் தயார் செய்திருக் கின்றோம்.
[76:5] நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப் பட்ட கிண்ணங்களிலிருந்து அவர்கள் அருந்து வார்கள்.
[76:6] கடவுள்-ன் அடியார்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஊற்று; அவர்கள் நாடியவாறு அது பொங்கி எழும்.
[76:7] அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனர், மேலும் மிகவும் அதிகக் கடினமான அந்த ஒரு நாளை அஞ்சுகின்றனர்.
[76:8] அவர்கள் தங்களுக்குப் பிரியமான உணவை ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், மேலும் சிறைப்பிடிக்கப்பட்டோருக்கும் நன்கொடை அளிக்கின்றனர்.
[76:9] “கடவுள்-க்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கைம்மாறையோ, அல்லது நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
[76:10] “எங்கள் இரட்சகரிடமிருந்து துன்பம் மற்றும் தொந்தரவு நிறைந்த அந்த நாளை நாங்கள் பயப்படுகின்றோம்.”
[76:11] அதன் விளைவாக, அந்த நாளின் தீங்குகளி லிருந்து கடவுள் அவர்களைப் பாதுகாக் கின்றார், மேலும் இன்பம் மற்றும் திருப்தியைக் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக் கின்றார்.
[76:12] அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக சுவனம் மற்றும் பட்டாடைகளைக் கொண்டு அவர் களுக்கு வெகுமதியளிக்கின்றார்.
[76:13] அங்கே அவர்கள் ஆடம்பரமான இருக்கை களின் மீது பொழுது போக்குவார்கள். அவர்கள் சூரியனின் வெப்பத்தையோ, அன்றி எந்த குளிரையோ அனுபவிக்க மாட்டார்கள்.
[76:14] நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.
[76:15] ஒளி ஊடுருவுகின்ற வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்களில் அவர்கள் பானங்கள் பரிமாறப்படுகின்றனர்.
[76:16] வெள்ளியில் செய்யப்பட்ட போதிலும், ஒளி ஊடுருவுகின்ற கோப்பைகள்; இவை அனைத்திற்கும் மிகச் சரியாகத் தகுதி பெற்று விட்டனர்.
[76:17] மதுரமான சுவையூட்டப்பட்ட பானங்களை அவர்கள் மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.
[76:18] அங்கே “ஸல்ஸபீல்” என்று அறியப்பட்ட ஓர் ஊற்றிலிருந்து.
[76:19] என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களை நீங்கள் காணும் போது, சிதறிய முத்துக்களைப் போல் அவர்கள் தோன்றுவார்கள்.
[76:20] நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத் தையும், மேலும் அற்புதமானதொரு சாம்ராஜ்யத் தையுமே நீங்கள் காண்பீர்கள்.
[76:21] அவர்கள் மீது பச்சை மென்பட்டு, மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும், மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர் களுடைய இரட்சகர் தூய்மையான பானங் களை அவர்களுக்கு வழங்குவார்.
[76:22] இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங் களுடைய முயற்சிகள் பாராட்டப்பட்டவையாக உள்ளன.
[76:23] இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வெளிப் படுத்தியுள்ளோம்; நம்மிடமிருந்து தனிச்சிறப் பானதொரு வெளிப்பாடு.
[76:24] உம்முடைய இரட்சகரின் கட்டளைகளை உறுதிப்பாட்டுடன் நீர் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களில் உள்ள பாவம் நிறைந்த நம்பமறுப்பவன் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
[76:25] மேலும் பகலும் இரவும் உம்முடைய இரட்சகரின் பெயரை நினைவு கூர்வீராக.
[76:26] இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம்பணிந்து வீழ்வீராக, மேலும் பல இரவினில் நீண்டநேரம் அவரைத் துதிப்பீராக.
[76:27] இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கிவிட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற-கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.
[76:28] நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர் களை நிலைநிறுத்தினோம், மேலும் எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றியமைத்து விட நம்மால் இயலும்.
[76:29] இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன்னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
[76:30] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுள்ளவர்.
[76:31] தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர் அனுமதிக் கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத் தவரை, வலி நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார்.