சூரா 74: மறைக்கப்பட்ட இரகசியம் (அல்-முத்தஸ்ஸிர்)

[74:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[74:1] மறைக்கப்பட்ட இரகசியமே*.

அடிகுறிப்பு:
*74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் அச்சுறுத்துகின்ற 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406 = 19 ஒ 74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).
[74:2] வெளியில் வந்து எச்சரிக்கை செய்வாயாக.
[74:3] உன்னுடைய இரட்சகரை மேன்மைப்படுத்து வாயாக.
[74:4] உன்னுடைய ஆடையைத் தூய்மைப்படுத்து வாயாக.*

அடிகுறிப்பு:
*74:4 குர்ஆன்தான் இந்த இரகசியக் குறியீட்டைத் தன்னகத்தே கொண்ட ஆடையாக உள்ளது. இது 9:128-9 ஐ நீக்குவதைக் குறிக்கின்றது.
[74:5] தவறானவற்றைக் கைவிட்டு விடுவாயாக.
[74:6] உன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடை வாயாக.
[74:7] உறுதிப்பாட்டுடன் உன்னுடைய இரட்சகரை நினைவு கூர்வாயாக.
[74:8] பின்னர், கொம்பு ஊதப்படும் பொழுது.
[74:9] அது ஒரு சிரமமான நாளாக இருக்கும்.
[74:10] நம்ப மறுப்பவர்களுக்கு, எளிதானதல்ல.
[74:11] தனிநபராக நான் படைத்த ஒருவன் மீது நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கின்றேன்.
[74:12] ஏராளமான பணத்தை அவனுக்கு நான் வழங்கினேன்.
[74:13] காண்பதற்குப் பிள்ளைகளையும்.
[74:14] ஒவ்வொன்றையும் அவனுக்கு நான் இலகுவாக்கினேன்.
[74:15] இருப்பினும், அதிகம் பெறுவதற்கு அவன் பேராசைப்படுகின்றான்.
[74:16] இந்தச் சான்றுகளை ஏற்றுக் கொள்ள அவன் பிடிவாதமாக மறுத்தான்.
[74:17] அதிகரித்தவாறே அவனை நான் தண்டிப்பேன்.
[74:18] ஏனெனில் அவன் சிந்தித்தான், பின்னர் தீர்மானித்தான்.
[74:19] அவன் தீர்மானித்தது துக்ககரமானது.
[74:20] அவன் தீர்மானித்தது உண்மையில் துக்க கரமானது.
[74:21] அவன் நோக்கினான்.
[74:22] அவன் முகம்சுளித்தான் மேலும் முனங் கினான்.
[74:23] பின்னர் அவன் ஆணவத்துடன் திரும்பிச் சென்றான்.
[74:24] அவன் கூறினான், “இது திறமையான மாயாஜாலமே அன்றி வேறில்லை!”
[74:25] “இது மனிதனால் செய்யப்பட்டது”.
[74:26] நான் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கு வேன்.
[74:27] எத்தகைய தண்டனை!
[74:28] முழுமையானது மேலும் விசாலமானது.
[74:29] மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.
குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்
[74:30] அதன் மீது பத்தொன்பது உள்ளது*.

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[74:31] நரகத்தின் பாதுகாவலர்களாக இருப்பதற்காக வானவர்களை நாம் நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணை (19) நிர்ணயித்தோம். (1) நம்ப மறுப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் மற்றும் யூதர்களையும் (இது ஓர் இறைவேதம் தான் என்று) நம்பச் செய்வதற்காக, (3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தே கத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்கு வதற்காக, மேலும் (5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத் தைத் தாங்கியிருப்பவர்களையும், மேலும் நம்ப மறுப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள், “கடவுள் இந்த உருவகத்தின் மூலம் என்ன கூற நாடுகின்றார்?” என்று கூறுவார்கள். கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்கான தொரு நினைவூட்டலாகும்.

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[74:32] நிச்சயமாக, சந்திரனின் மீது (நான் ஆணையிடு கின்றேன்).

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[74:33] மேலும் இரவானது அது கடந்து செல்கின்ற போது.

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[74:34] மேலும் காலையானது அது பிரகாசிக்கின்ற போது.

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் அற்புதங்களில் ஒன்று
[74:35] இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்*.

அடிகுறிப்பு:
*74:30-35 “மாபெரும் அற்புதங்களில் ஒன்று” என்கின்ற இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[74:36] மனித இனத்திற்கோர் எச்சரிக்கை.
[74:37] உங்களில் முன்செல்லவோ அல்லது பின்செல்ல வோ விரும்புபவர்களுக்காக.
[74:38] ஒவ்வொரு ஆன்மாவும் அதன் பாவங்களால் பொறியில் அகப்பட்டுக் கொள்கின்றது.
[74:39] சரியானதன் மீது இருப்பவர்களைத் தவிர.
[74:40] சுவனத்தில் இருக்கும் சமயத்தில், அவர்கள் கேட்பார்கள்.
[74:41] குற்றவாளிகளைப் பற்றி.
[74:42] “இந்தத் தண்டனைக்கு உங்களைக் கொண்டு வந்தது எது?”
[74:43] அவர்கள் கூறுவார்கள், “நாங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வில்லை.
[74:44] “நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
[74:45] “மூடத்தனமான தவறுகள் செய்பவர்களுடன் சேர்ந்து நாங்கள் மூடத்தனமான தவறுகள் செய்தோம்.
[74:46] “தீர்ப்பு நாளின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுத்தோம்.
[74:47] “கட்டாயமாக நேரிடக் கூடியது எங்களிடம் வந்து விட்ட இப்பொழுது வரை.”
[74:48] பரிந்துரையாளர்களின் பரிந்துரை ஒருபோதும் அவர்களுக்கு உதவாது.
[74:49] ஏன் அவர்கள் இந்த நினைவூட்டலின் பால் இவ்வளவு வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கின்றனர்?
[74:50] வரிக்குதிரைகளைப் போல் ஓடிக் கொண்டு.
[74:51] சிங்கத்திடமிருந்து விரண்டோடுகின்றவைகள்!
[74:52] அவர்களில் ஒவ்வொருவனும் தனிப்பட்ட முறை யில் இந்த வேதத்தைப் பெற விரும்பு கின்றானா?
[74:53] உண்மையில், அவர்கள் மறுவுலகத்தை அஞ்சுவதில்லை.
[74:54] உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
[74:55] கவனத்தில் எடுத்துக் கொள்ள விரும்புபவர் களுக்காக.
[74:56] கடவுள்-ன் நாட்டத்திற்கெதிராக அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள இயலாது. அவர்தான் நன்னெறியின் மூலாதாரமாவார்; அவர்தான் மன்னிப்பின் மூலாதாரமாவார்.