சூரா 73: அங்கி அணிந்தவர் (அல்-முஸ்ஸம்மில்)

[73:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[73:1] அங்கி அணிந்தவரே.
[73:2] அரிதாகவே தவிர, இரவுப் பொழுதுகளில் தியானிப்பீராக.
[73:3] அதன் பாதி, அல்லது சற்றுக் குறைவாக.
[73:4] அல்லது சற்று அதிகமாக. மேலும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை இக்குர்ஆனைப் படிப்பீராக.
[73:5] நாம் உமக்கு ஒரு கனமான தூதுச் செய்தியைத் தருவோம்.
[73:6] இரவினில் தியானிப்பதானது அதிக நற்பலன ளிப்பது, மேலும் மிகவும் நன்னெறியானது.
[73:7] மற்ற விஷயங்களுக்கு பகற்பொழுதில் உமக்கு ஏராளமான நேரம் உள்ளது.
[73:8] எப்பொழுதும் அவருக்கு அருகிலும் மேலும் மிக அருகிலும் வருவதற்காக, உம்முடைய இரட்ச கரின் பெயரை நீர் நினைவு கூர வேண்டும்.
[73:9] கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
[73:10] மேலும் அவர்களுடைய கூற்றுக்களை எதிர் கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர் ந்து இருப்பீராக, மேலும் ஓர் அழகிய முறையில் அவர்களை அலட்சியம் செய்து விடுவீராக.
[73:11] தாராளமாக அருள்பாலிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக் கை எடுத்துக் கொள்கின்றேன். அவர்களு க்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.
[73:12] கடுமையான தண்டனைகளும் மற்றும் நரகமும் நம்மிடம் உள்ளன.
[73:13] கடினமாகவே விழுங்க முடிகின்ற உணவும், மற்றும் வலிநிறைந்த தண்டனையும்.
[73:14] பூமியும், மலைகளும் அதிரும் பொழுது, அந்நாள் வரும், மேலும் மலைகள் எடையற்றதோர் குவிய லாகி விடும்.
[73:15] ஃபேரோவிற்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் நாம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்.
[73:16] ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத் தான், மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.
[73:17] நீங்கள் நம்ப மறுத்தால், குழந்தைகளையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கி விடு கின்ற அளவிற்கு மிகப் பயங்கரமானதொரு நாளை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக் கொள்ள இயலும்?
[73:18] அதன் இடத்திலிருந்து வானம் தகர்ந்து விடும். அவருடைய வாக்குறுதி உண்மையானதாகும்.
[73:19] இது ஒரு நினைவூட்டலாகும்; எவரெல்லாம் நாடுகின்றாரோ, அவர் தன் இரட்சகரின் பால் தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
[73:20] இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எப்பொ ழுதும் உங்களால் இதனைச் செய்ய இயலாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களை மன்னித்து விட்டார். அதற்குப் பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்ற வரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாண த்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டுக் கொண் டிருக்கக் கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆன்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுள்-இடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காக கடவுள்-இடம் இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.