சூரா 66: தடை செய்தல் (அல்-தஹ்ரீம்)

[66:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[66:1] வேதம் வழங்கப்பட்டவரே, உமக்கு அனுமதிக்கப் பட்டதாகக் கடவுள் ஆக்கியவற்றை நீர் ஏன் தடை செய்கின்றீர், வெறுமனே உம்முடைய மனைவி யரைத் திருப்திப்படுத்துவதற்காகவா? கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.*

அடிகுறிப்பு:
*66:1 உலகெங்கிலுமுள்ள முஹம்மதியர்கள், முஹம்மது தவறிழைக்காதவராக இருந்தார் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர் தவறிழைக்கக் கூடிய ஒரு மனிதராகவே இருந்தார் என்பதை இந்த வசனம் நமக்குப் போதிக்கின்றது (18:110, 33:37, 40:66, 80:1).
[66:2] உங்களுடைய பிரமாணங்களுடன் தொடர்புடைய சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் எல்லாம் அறிந்தவர், ஞானம்மிக்கவர்.
[66:3] வேதம் வழங்கப்பட்டவர் தன்னுடைய மனைவி யரில் சிலரை குறிப்பிட்டதொரு வாக்குமூலத்தைக் கொண்டு நம்பிக்கை கொண்டார், பின்னர் அவர்களில் ஒருவர் அதனைப் பரப்பி விட்டார், மேலும் கடவுள் அதனைப்பற்றி, அவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் பின்னர், தன் மனைவியிடம், அவ்விவகாரத்தின் பகுதியைக் கூறினார், பகுதியை அலட்சியம் செய்து விட்டார். அவர் அவரிடம், “இதனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டார் அவர், “எல்லாம் அறிந்தவர், மிகவும் நன்கறிந்தவரால் நான் தகவல் தெரிவிக்கப் பட்டேன்” என்று கூறினார்.
[66:4] நீங்கள் இருவரும் கடவுள்-இடம் வருந்தித் திருந்துவீர்களாயின் அப்போது உங்கள் இதயங்கள் கவனத்தில் கொண்டிருக்கும். ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒன்று சேர்ந்து கொண்டால், பின்னர் கடவுள் அவருடைய தோழராக இருக்கின்றார், மேலும் கப்ரியேலும் மற்றும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களும் அவ்வாறே இருக்கின்றனர். அத்துடன், வானவர்கள் அவருடைய உதவியாளர்களாக இருக்கின்றனர்.
[66:5] அவர் உங்களை விவாகரத்துச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த, அடிபணிந்தவர்களான (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்களான (முஃமின்கள்), கீழ்ப்படிபவர்களான, வருந்தித் திருந்துபவர்களான, வழிபடுபவர்களான, பக்தியுடையவர்களான, முன்னரே திருமண மானவர்களான அல்லது கன்னிப் பெண்களான மற்ற மனைவியரை உங்களுடைய இடத்தில் அவருடைய இரட்சகர் மாற்றியமைத்து விடுவார்.
[66:6] நம்பிக்கை கொண்டோரே, உங்களையும் மேலும் உங்களுடைய குடும்பத்தாரையும், மனிதர் களையும் மற்றும் பாறைகளையும் எரிபொருளாகக் கொண்டிருக்கின்ற அந்நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். கடவுள்-ன் உத்தரவை ஒரு போதும் மீறாத, கண்டிப்பான மற்றும் வலிமை மிக்க வானவர்கள் அதற்குக்காவலாக இருக்கின்றனர்; செய்யுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை எதுவாயினும் அவர்கள் செய்வார்கள்.
[66:7] நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களே, இன்றைய தினம் மன்னிப்புக் கோராதீர்கள். நீங்கள் செய் தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்.
நம்பிக்கையாளர்கள் வருந்தித்திருந்துகின்றனர்
[66:8] நம்பிக்கை கொண்டோரே, உறுதி மிக்கதொரு வருந்தித்திருந்துதலாக, நீங்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும். உங்களுடைய இரட்சகர் பின்னர் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார். அந்நாளில், கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும் மற்றும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றி விட மாட்டார். அவர்களுடைய ஒளியானது அவர்களு க்கு முன்புறமும் மேலும் அவர்களுடைய வலப் புறமும் ஒளிரும். அவர்கள், “ எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப் படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக, நீர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றீர்” என்று கூறுவார்கள்.
[66:9] வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்களிடம் கண்டிப் புடன் இருப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னாவாகும், மேலும் துன்பகரமானதொரு விதியுமாகும்.
பரிந்துரையெனும் கட்டுக்கதை உடைத்தெறியப்படுகின்றது
[66:10] நம்பமறுத்தவர்களுக்குரிய உதாரணங்களாக நோவாவின் மனைவியையும் மற்றும் லோத்தின் மனைவியையும் கடவுள் எடுத்துரைக்கின்றார். நன்னெறியாளர்களான நம்முடைய அடியார் களில் இருவருக்கு அவர்கள் மணமுடிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவர்களு க்குத் துரோகம் புரிந்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள்-க்கெதிராக அவர்களால் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட இயல வில்லை. அவர்கள் இருவரிடமும், “நரக நெருப்பில், அதற்குத் தகுதியானவர்களுடன் சேர்ந்து நுழையுங்கள்” என்று கூறப்பட்டது.
நம்பிக்கையாளர்களுக்கு உதாரணங்கள் ஃபேரோவின் மனைவி
[66:11] மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் உதாரணமாக ஃபேரோவின் மனைவியைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர், “ என் இரட்சகரே, சுவனத்தில் உம்மிடம் எனக்கென ஓர் இல்லத்தைக் கட்டுவீராக, மேலும் ஃபேரோ மற்றும் அவனது செயல்களிலிருந்து என்னைக் காப்பீராக; வரம்பு மீறுகின்ற மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.
மேரி
[66:12] அத்துடன், இம்ரானின் சந்ததியான மேரி. அவர் தன் கற்பைக் காத்துக்கொண்டார், பின்னர் நாம் நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் ஊதினோம். அவர் தன் இரட்சகரின் வார்த்தை கள் மற்றும் அவருடைய வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டார்; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.