சூரா 65: விவாகரத்து (அல்-தலாக்)

[65:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[65:1] வேதம் வழங்கப்பட்டவரே, மனிதர்களாகிய நீங்கள் பெண்களை விவாகரத்து செய்யும் போது, விவாகரத்திற்குரியதோர் இடைக்காலத் தவணை பூர்த்தியாகி விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அத்தகையதோர் இடைக்காலத் தவணையை மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.* நீங்கள் உங்கள் இரட்சகரான கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அவர்களு டைய வீடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி விடாதீர்கள், மேலும் அவர்கள் விபச்சாரம் செய்ததாக நிரூபிக்கப்பட்டாலே அன்றி, அவர் களாகவே வெளியேறி விடுவதற்காக அவர்களை நிர்ப்பந்தித்து, வாழ்க்கையை அவர்களுக்குத் துன்பகரமானதாக ஆக்கிவிடவும் வேண்டாம். இவை கடவுள்-ன் விதிமுறைகளாகும். எவரொ ருவர் கடவுள்-உடைய விதிமுறைகளின் வரம்பு களை மீறுகின்றாரோ, அவர் தனக்கெதிராகவே ஓர் அநீதம் புரிந்து கொள்கின்றார். நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்; இதிலிருந்து ஏதேனும் நல்லது வெளிவரக் கடவுள் நாடுவதாய் இருக்கக் கூடும்.

அடிகுறிப்பு:
*65:1 மறுமணத்திற்குத் தகுதியாகும் முன்னர் , விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணிற்குரிய இடைக்காலத் தவணையானது மூன்று மாதவிடாய்க் காலங்கள் காத்திருப்பதாகும். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண் கர்ப்பவதியாக இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது (2:228).
[65:2] இடைக்காலத் தவணை பூர்த்தியடைந்தவுடன், நியாயமாக அவர்களுடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளலாம், அல்லது நியாயமாக முழுவதும் பிரிந்து சென்று விடலாம். கடவுள்-ன் முன்பு விவாகரத்திற்குச் சாட்சியாக நீங்கள் இரு நீதமான சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது, கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு விவரமாக விளக்குவதற்காகவேயாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு வெளியேறுகின்ற ஒரு வழியை அவர் உருவாக்குவார்.
[65:3] மேலும் அவர் ஒருபோதும் எதிர்பாராப் புறத்தி லிருந்து அவருக்கு வழங்குவார். எவரொருவர் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றாரோ, அவருக்கு அவர் போதுமானவர். கடவுள்-ன் கட்டளைகள் நிறைவேற்றப்படும். ஒவ்வொன்றிற்கும் அதன் விதியைக் கடவுள் விதித்திருக்கின்றார்.
[65:4] இறுதி மாதவிடாயை அடைந்து விட்டபெண் களைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அவர்களுடைய இடைக் காலத் தவணை மூன்று மாதங்களாக இருத்தல் வேண்டும். மாதவிடாய் வராமல், அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று தெரிய வரும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரசவிப்பதுடன் அவர்களுடைய இடைக்காலத் தவணை முடிவடைகின்றது. எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு அவர் ஒவ்வொன்றையும் எளிதாக்கு கின்றார்.
[65:5] இது, அவர் உங்களுக்கு இறக்கியனுப்புகின்ற கடவுள்-ன் கட்டளையாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்கின்றார், மேலும் தாராளமாக அவருக்கு வெகுமதியளிக்கின்றார்.
[65:6] உங்களுடன் அவர்கள் வசித்து வந்த அதே வீட்டில் அவர்கள் வசிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும் அவர்களாகவே வெளியேறி விடும்படி வாழ்க்கையை அவர்களுக்கு மிகவும் துன்பகர மானதாக ஆக்கி விடாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும். அக்குழந்தைக்கு அவர்கள் பாலூட்டினால், அவர்களுடைய இந்தப் பணிக்கென நீங்கள் ஊதியமளிக்க வேண்டும். உங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் மனவேற்றுமை கொண்டால், குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக மற்றொரு பெண்ணை நீங்கள் பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.
[65:7] செல்வந்தரான கணவர் தன்னுடைய வருவாய்க் கேற்ப ஆதரவு வழங்க வேண்டும், மேலும் ஏழ்மையானவர் கடவுள் அவருக்கு அளித்த வருவாய்க்கேற்ப வழங்கிட வேண்டும். கடவுள் எந்த ஆன்மாவின் மீதும், அவர் அதற்கு கொடுத்திருப்பதைவிடவும் அதிகமாக சுமத்துவ தில்லை. கஷ்டத்திற்குப் பின்னர் எளிதானதை கடவுள் வழங்குவார்.
[65:8] பல சமூகம் அதனுடைய இரட்சகரின் கட்டளை களுக்கெதிராகவும் மேலும் அவருடைய தூதர் களுக்கெதிராகவும் கலகம் செய்தன. அதன் விளைவாக, கண்டிப்புடன் அவர்களை நாம் பொறுப்பாக்கிப்பிடித்தோம், மேலும் பயங்கரமான தொரு கைம்மாறால் அவர்களைப் பழி தீர்த்தோம்.
[65:9] அவர்களுடைய தீர்மானங்களின் விளைவுகளால் அவர்கள் துன்பப்பட்டார்கள்; ஆழ்ந்ததொரு நஷ்டம்.
[65:10] கடுமையான தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகை யால், அறிவுத்திறன் உடைய நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச்செய்தியை* இறக்கி அனுப்பி இருக்கின்றார்-

அடிகுறிப்பு:
*65:10-11 தெளிவாக, இங்கே “தூதர்” என்பது குர்ஆன்தான். வசனம் 10, “ ஒரு தூதுச் செய்தியை இறக்கி அனுப்புவதைப்” பற்றிப் பேசுகின்றது, மேலும் 65:11ல் இது குர்ஆனைத்தான் தூதராகச் சுட்டிக் காட்டுகின்றது (பின் இணைப்பு 20).
[65:11] ஒரு தூதர்* நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்கள் புரிவோரை இருளி லிருந்து வெளியேற்றி ஒளிக்குள் வழி நடத்து வதற்காக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை, தெளிவாக உங்களுக்கு ஓதிக் காட்டுகின்றவர். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவரை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் அனுமதிப்பார்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் தாராளமாக அவருக்கு வெகுமதியளிப்பார்.

அடிகுறிப்பு:
*65:11 65:10-11க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
ஏழு பிரபஞ்சங்களும் ஏழு பூமிகளும்*
[65:12] கடவுள் ஏழு பிரபஞ்சங்களையும் மேலும் அதே எண்ணிக்கையிலான பூமிகளையும் படைத்தார். அவற்றிற்கிடையே கட்டளைகள் பாய்ந்து செல்கின்றன . இது, கடவுள் சர்வ சக்தியுடை யவர் என்பதையும், மேலும் கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவேயாகும்.

அடிகுறிப்பு:
*65:12 நம்முடைய பூமியைப் போன்ற வேறு ஆறு கிரகங்களைக் கடவுள் படைத்துள்ள போதிலும், நம்முடைய கிரகத்தில் மட்டுமே ஜீவராசிகள் உள்ளன. இவ்விதமாக, இக்கிரகத்தின் மீது அதன் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மட்டுமே உயிர்கள் “பரிணாமம்” அடைந்து விடவில்லை என்று பரிணாமவாதிகளுக்கு தீர்ப்பு நாளன்று எடுத்துக்காட்டப்படும்.