சூரா 63: நயவஞ்சகர்கள் (அல்-முனாஃபிகூன்)

[63:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[63:1] நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் பொழுது அவர்கள், “நீர் கடவுள்-ன் தூதர்தான் என நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம்”* என்று கூறுகின்றனர். நீர் அவருடைய தூதராக இருக்கின்றீர் என்பதைக் கடவுள் அறிவார், மேலும் இந்நயவஞ்சகர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர் என்று கடவுள் சாட்சியம் கூறுகின்றார்.

அடிகுறிப்பு:
*63:1, 3:18ல் கூறப்பட்டுள்ளபடி கடவுள் மட்டுமே ஒரே தெய்வமாக இருக்கின்றார் என்று சாட்சியம் கூறுவதே, “இஸ்லாத்தின் முதல் தூண்” ஆகும். ஆனால் சீர்கெட்டுப்போன “முஸ்லிம்” அறிஞர்கள் “முஹம்மது கடவுளின் தூதராவார்” என்பதைச் சேர்த்துக் கொள்கின்றனர், மேலும் இது அநேகக் கட்டளைகளை மீறுகின்றது (2:285ஐ பார்க்கவும்). குர்ஆனில் வசனம் 63:1 இந்த ஒரு இடத்தில் மட்டுமே, இத்தகையதொரு வாசகம் கூறப்படுகின்றது. நயவஞ்சகர்கள் மட்டுமே இத்தகைய தொரு வாசகத்தைக் கூறுகின்றனர்.
[63:2] வெளிப்படையான தங்களுடைய விசுவாசம் எனும் வெளிவேஷத்தின் கீழ், அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து மக்களை விரட்டு கின்றனர். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானதாகும்.
[63:3] இது ஏனெனில், அவர்கள் நம்பிக்கை கொண் டனர், பின்னர் நம்ப மறுத்து விட்டனர். ஆகையால், அவர்களுடைய மனங்கள் தடுக்கப்பட்டு விட்டன; அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
எதிர்ப்பை வரவேற்கும் அவர்களுடைய தோற்றம்
[63:4] அவர்களை நீர் காணும் பொழுது, அவர்களுடைய தோற்றங்களால் நீர் கவரப்படக் கூடும். மேலும் அவர்கள் பேசும் பொழுது, அவர்களுடைய சொல்வன்மையை நீர் கவனத்துடன் செவியேற்கக் கூடும். அவர்கள் நிற்கின்ற மரக் கட்டைகளைப் போன்றவர்கள். ஒவ்வொரு அழைப்பும் அவர்க ளுக்கு எதிரான நோக்கத்தில் உள்ளதென்றே அவர்கள் நினைக்கின்றனர். இவர்கள்தான் மெய்யான விரோதிகள் ஆவர்; அவர்களைக் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பீராக. கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார்; அவர்கள் விலகிச் சென்று விட்டனர்.
[63:5] “வாருங்கள், கடவுள்-ன் தூதர் உங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்ய ட்டும்”, என அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் பரிகாசமாகத் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர், மேலும் அவர்கள் மற்றவர்களை விரட்டுவதையும் மேலும் ஆணவத்துடன் நடந்து கொள்வதையும் நீர் காண்பீர்.
பரிந்துரை எனும் கட்டுக்கதை உடைத்தெறியப் படுகின்றது*
[63:6] அவர்களுடைய பாவமன்னிப்பிற்காக நீர் பிரார்த்தித்தாலும், அல்லது அவர்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்திக்கா விட்டாலும், அவர்களுக்கு அது சமமேயாகும்; கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.

அடிகுறிப்பு:
*63:6 இக்கட்டுக்கதையின் காரணமாகவே பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவர்களை இணைத் தெய்வ வழிபாடு செய்கின்றனர் (பின் இணைப்பு 8).
[63:7] “கடவுள்-ன் தூதரைப் பின்பற்றியவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காதீர்கள், ஒரு வேளை அவர்கள் அவரைக் கைவிட்டு விடக்கூடும்!,” என்று கூறுபவர்கள் தான் அவர்கள். ஆயினும், வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்களைக் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார், ஆனால் இந்நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.
[63:8] அவர்கள், “நகருக்குள் நாம் திரும்பிச் சென்றால், அங்குள்ள சக்தி வாய்ந்தவர்கள் பலஹீனர்களை வெளியேற்றி விடுவார்கள் (மேலும் நாம் மோசம் போய் விடுவோம்)” என்று கூறுகின்றனர். கண்ணியம் அனைத்தும் கடவுள்-க்கும் அவரு டைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்குமே உரியது (என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்). ஆயினும் இந்நயவஞ்சகர்கள் அறிந்து கொள்வதில்லை.
[63:9] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய பணத் தாலும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளாலும் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். இவ்வாறு செய்பவர்கள் நஷ்டவாளிகள்ஆவார்கள்.
[63:10] மரணம் உங்களிடம் வருவதற்கு முன்னர், உங்களுக்குரிய நம்முடைய வாழ்வாதாரங் களிலிருந்து நீங்கள் கொடுக்க வேண்டும், பின்னர் நீங்கள், “என் இரட்சகரே, சிறியதொரு காலம் மட்டும் இதனை நீர் தாமதப்படுத்தினால்! அப்போது நான் தர்மம் செய்பவனாகி, மேலும் நன்னெறியாளர்களுடன் சேர்ந்து கொள்வேன்!” என்று கூறுவீர்கள்.
[63:11] எந்த ஆன்மாவிற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள மரணத்தின் நேரத்தைக் கடவுள் ஒரு போதும் தாமதப்படுத்துவதில்லை. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந் தவராக இருக்கின்றார்.