சூரா 62: வெள்ளிக்கிழமை (அல்-ஜுமுஆ)

[62:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[62:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன; அரசர், மிகப் புனிதமானவர், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[62:2] அவர்தான் வேதம் வழங்கப்படாதவர்களுக்கு அவர்களுக்கிடையிலிருந்தே ஒரு தூதரை, தன்னுடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களைத் தூய்மைப் படுத்தவும், மேலும் வேதத்தையும் ஞானத் தையும் கற்றுக் கொடுக்கவும் அனுப்பியவர். இதற்கு முன்னர், அவர்கள் வெகு தூரம் வழிகேட்டில் சென்று விட்டிருந்தனர்.
[62:3] மேலும் அவர்களுக்குப் பின்னர் ஏராளமான தலைமுறையினருக்கும். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[62:4] தான் நாடுகின்ற எவர் மீதும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருட்கொடை இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கருணையை உடையவர்.
[62:5] தோரா கொடுக்கப்பட்டு, பின்னர் அதனை ஆதரிக்கத் தவறியவர்களுக்குரிய உதாரண மாவது மாபெரும் இலக்கிய நூல்களை சுமக் கின்ற கழுதைக்கு ஒப்பானதாகும். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்ற மக்களின் உதாரணம் உண்மையில் துக்ககரமானதாகும். தீய மக்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.
[62:6] “யூதர்களாக இருப்பவர்களே, மற்ற மக்கள் அனைவரையும் தவிர்த்து நீங்கள் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுவீர்களானால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அப்போது நீங்கள் மரணத்தை மிகவும் விரும்ப வேண் டும்!” என்று கூறுவீராக.
[62:7] அவர்கள் செய்தவற்றின் காரணத்தால், அவர் கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[62:8] “நீங்கள் தவிர்த்து விட விரும்புகின்ற அந்த மரணமானது, விரைவிலோ அல்லது தாமதமாக வோ உங்களைத் தொடர்ந்து வந்து பிடித்து விடும். பின்னர் நீங்கள் அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்த வரிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.
நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான முக்கியக் கட்டளைகள்
[62:9] நம்பிக்கை கொண்டோரே, வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், மேலும் வேலைகள் அனைத்தையும் விட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.
[62:10] தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் வெகுமதிகளைத் தேடுவதற்காக பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.
[62:11] அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த் தனையையோ, அல்லது பொழுதுபோக்கினை யோ காண நேரும்போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! “கடவுள் வசமிருப்பது பொழுது போக்கினை யோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள் தான் வழங்குபவர் களில் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.