சூரா 61: அணிவகுப்பு (அல்-ஸஃப்)

[61:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[61:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[61:2] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் செய்யா தவற்றை ஏன் நீங்கள் கூறுகின்றீர்கள்?
[61:3] நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது கடவுள்-ன் பார்வையில் மிகவும் வெறுப்பிற்குரியதாகும்.
[61:4] ஒரு சுவற்றின் செங்கற்களைப் போல, ஓர் அணி வகுப்பில் ஒன்றிணைந்து அவர் நிமித்தமாகச் சண்டையிடுபவர்களைக் கடவுள் நேசிக் கின்றார்.
[61:5] மோஸஸ் தன் சமூகத்தாரிடம்,“என் சமூகத்தாரே, நான் உங்களுக்குக் கடவுள்-ன் தூதராக இருக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருந்த போதிலும், ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர்கள்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் பாதை விலகிச் சென்ற போது, கடவுள் அவர்களுடைய இதயங்களைத் திசை திருப்பி விட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்து வதில்லை.
இயேசுவிற்குப் பின்னர் தூதர்
[61:6] மேரியின் மகனான, இயேசு, “இஸ்ரவேலின் சந்ததியினரே, தோராவை உறுதிப்படுத்து கின்றவராகவும், மேலும் எனக்குப் பின்னர் வர இருக்கின்ற இன்னும் அதிகம் பாராட்டப்பட்ட தாக இருக்கும் (அஹ்மத்) என்ற பெயருடைய ஒரு தூதரைக் குறித்த நற்செய்தியைக் கொண்டு வந்திருப்பவருமாகிய நான், உங்களுக்குக் கடவுள்-ன் தூதர் ஆவேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. பின்னர், தெளிவான சான்றுகளை அவர்களிடம் அவர் காட்டிய போது, அவர்கள், “இது ஆழ்ந்த மாயாஜாலமாகும்” என்று கூறினார்கள்.
[61:7] அடிபணிதலின் பால் அழைக்கப்பட்டவனாக அவன் இருக்கின்ற நிலையில், கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? பாவி களான மக்களைக் கடவுள் வழி நடத்து வதில்லை.
[61:8] கடவுள்-ன் ஒளியைத் தங்களுடைய வாய் களைக் கொண்டு அணைத்து விட அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நம்ப மறுப்பவர்கள் வெறுத்த போதிலும், தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதில் கடவுள் உறுதியுடனிருக் கின்றார்.
மாபெரும் முன்னறிவிப்பு
[61:9] வழிகாட்டலுடனும் மேலும் சத்திய மார்க்கத் துடனும் அவர் தன்னுடைய தூதரை* அனுப்பியுள்ளார், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கச் செய்வார்.

அடிகுறிப்பு:
*61:9 இந்தத் தூதரின் குறிப்பிட்ட பெயர் கணித ரீதியில் எழுதிக் காட்டப்பட்டுள்ளது (பின் இணைப்பு 2).
மிகச்சிறந்த பேரம்
[61:10] நம்பிக்கை கொண்டோரே, வலிநிறைந்த தண்டனையிலிருந்து உங்களைக் காக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் தெரிவிக்கின்றேன்.
[61:11] கடவுள் மற்றும் அவருடைய தூதரின் மீது நம்பிக்கை கொண்டு மேலும் உங்களுடைய பணம் மற்றும் உங்கள் வாழ்வுகளைக் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுங்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகச்சிறந்த பேரமாகும்.
[61:12] இதற்குப் பிரதிபலனாக, அவர் உங்களுடைய பாவங்களை மன்னிக்கின்றார், மேலும் ஏதேன் தோட்டங்களில் அழகிய மாளிகைகளுடன், ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிக்கின்றார். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[61:13] கூடுதலாக, நீங்கள் உண்மையாகவே விரும்பக் கூடிய ஒன்றும் உங்களுக்குக் கிடைக்கும்; கடவுள்-இடமிருந்து ஆதரவு மற்றும் உத்தரவாதமான வெற்றி. நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி அளிப்பீராக.
[61:14] நம்பிக்கை கொண்டோரே, மேரியின் மகன், இயேசுவின் சீடர்களைப் போல, கடவுள்-ன் ஆதரவாளர்களாக இருங்கள். “கடவுள்-ன் பால் என்னுடைய ஆதரவாளர்களாக இருப் பவர்கள் யார்?”, என்று அவர்களிடம் அவர் கூறிய பொழுது, அவர்கள், “நாங்கள் கடவுள்-ன் ஆதரவாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள். இவ்விதமாக, இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு கூட்டம் நம்பிக்கை கொண்டது, மேலும் மற்றொரு கூட்டம் நம்ப மறுத்தது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய விரோதிக்கெதிராக, அவர்கள் வெற்றி பெறுகின்ற வரைக்கும் நாம் உதவி செய்தோம்.