சூரா 6: கால்நடை (அல்-அன்‘ஆம்)

[6:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[6:1]புகழ் அனைத்தும், வானங்கள் மற்றும் பூமியை படைத்தவரும், மேலும் இருளையும், ஒளியை யும் உண்டாக்கியவருமான கடவுள்-க்கே உரியது. இருப்பினும் தங்களுடைய இரட் சகரை நம்ப மறுப்பவர்கள் தொடர்ந்து விலகிச் செல்கின்றனர்.
[6:2]அவர்தான், உங்களை களிமண்ணில் இருந்து படைத்து பின்னர் உங்கள் ஆயுட்காலத்தை முன்னரே நிர்ணயித்தார், அந்த ஆயுட்காலம் அவருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சந்தேகப்படுகின்றீர்கள்.
[6:3]வானங்கள் மற்றும் பூமியில் அவர்தான் ஒரே கடவுள். உங்களுடைய இரகசியங்களையும், உங்கள் பிரகடனங்களையும் அவர் அறிகின் றார், மேலும் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார்.
[6:4]அவர்களுக்கு, எந்தவிதமான சான்று அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வந்தாலும் ஒரு பொருட்டல்ல, அதைவிட்டும் அவர்கள் வெறுப்பில் திரும்பி விடுகின்றார்கள்.
[6:5]சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் அதைப் புறக்கணித்ததனால், அவர்களுடைய கவனமின்மையின் விளைவுகளுக்கு, அவர்கள் உள்ளானார்கள்.
[6:6]அவர்களுக்கு முன்பு, எத்தனை தலை முறையினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? உங்களுக்கு செய்ததை விட அதிகமாக அவர்களுக்குச் செய்து, பூமியில் நாம் அவர்களை நிலைப்படுத்தினோம், மேலும் நாம் அருட்கொடைகளை அவர்கள் மீது தாராளமாகப் பொழிந்தோம். மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளை அவர்களுக்குக் கொடுத்தோம். அதன்பின்னர் அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களை அழித்தோம், மேலும் அவர் களுடைய இடத்தில் வேறு தலைமுறையினரை அவர்களுக்குப் பதிலாக நாம் அமர்த்தினோம்.
[6:7]நாம் அவர்களுக்குக் கண்களால் காணக் கூடிய, காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இறக்கி அனுப்பியிருந்தாலும், மேலும் அதை அவர்கள் தங்களுடைய கரங்களால் தொட்டு உணர்ந்தாலும், நம்பமறுத்தவர்கள் “இது திறமையான மாயாஜாலமே தவிர வேறில்லை” என்று கூறியிருப்பார்கள்.
[6:8]அவர்கள் “ அவருடன் ஒரு வானவர் மட்டும் கீழே வர முடிந்திருந்தால்!” என்றும் கூறினார்கள். நாம் ஒரு வானவரை அனுப்பியிருந்தால், சகல விஷயமும் முடிந்து போயிருக்கும், மேலும் அவர்களுக்கு சிறிதளவும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்காது.
சோதனைக்கான தேவைகள்
[6:9]நாம் ஒரு வானவரை அனுப்பி இருந்தாலும், அவரையும் ஒரு மனித உருவத்திலேயே அனுப்பி இருப்போம். மேலும் நாம் அவர்களை, இப்பொழுது எப்படி குழம்பிய நிலையில் இருக்கின்றார்களோ, அதே போன்ற குழம்பிய நிலையிலேயே அப்பொழுதும் அவர்களை வைத்திருந்திருப்போம்.
[6:10]உங்களுக்கு முன்னர் வந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டார்கள். எவர்கள் அவர்களைப் பரிகாசம் செய்தார்களோ, அவர்கள் கேலி செய்து கொண்டிருந்ததின் விளைவுகளை அனுபவித் தார்கள்.
[6:11]“பூமியில் சுற்றித்திரிந்து, ஏற்க மறுத்தவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக.
[6:12]“வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எவருக்குரியது?” என்று கூறுவீராக, “கடவுள்-க்கு” என்று கூறுவீராக. அவர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். அவர் உறுதியாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார், அது தவிர்க்க இயலாதது. நம்ப மறுப்பவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களை நஷ்டப் படுத்திக்கொண்டவர்கள் ஆவர்.
[6:13]இரவிலும், பகலிலும், வசிக்கின்ற அனைத்தும் அவருக்கே உரியது, அவர் செவியேற்பவர், அறிந்தவர்.
[6:14]“வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய வராகவும் மேலும் உணவளிக்கக் கூடிய வராகவும், ஆனால், உணவு அளிக்கப் படாதவராகவும் இருக்கக்கூடிய கடவுள்-ஐத்தவிர, மற்றொன்றை நான் இரட்சகராகவும், எஜமானராகவும் ஏற்றுக்கொள் வேனா?” என்று கூறுவீராக. “நான் மிகவும் அர்ப்பணிப்புடைய அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென்றும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.
[6:15]“நான் எனது இரட்சகருக்குக் கீழ்படியவில்லை யென்றால், மகத்தான அந்நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.
[6:16]“அந்த நாளில் எவரொருவர் (தண்டனை யிலிருந்து) விடுவிக்கப்படுகின்றாரோ, அவர் அவருடைய கருணையை அடைந்துவிட்டார். மேலும் இதுதான் மகத்தான மாபெரும் வெற்றி”.
கடவுள் தான் மகிழ்ச்சியைத்தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்
[6:17]கடவுள் துன்பத்தைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அதை விடுவிக்க அவரைத்தவிர வேறு எவராலும் இயலாது. மேலும் அவர் ஒரு அருட்கொடையைக் கொண்டு உங்களைத் தீண்டினால், அவர் சர்வசக்தியுடையவர்.
[6:18]அவர், அவருடைய படைப்புகளின் மீது மேலான அதிகாரம் கொண்டவர். அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
குர்ஆன், முழுக்குர்ஆன், மேலும் குர்ஆனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை
[6:19]“யாருடைய சாட்சியம் மிகப்பெரியது?” என்று கூறுவீராக. “கடவுள்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன்* உங்களுக்கும் மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும் உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார். உண்மையில், கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வங்கள்* இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி கூறமாட்டேன், ஒரே ஒரு தெய்வம் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை கைவிட்டுவிட்டேன்” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*6:19 இந்த வசனம் மார்க்க வழிகாட்டுதலுக்கு குர்ஆன் மட்டுமே ஒரே மூல ஆதாரம் என்று பிரகடனப்படுத்துகின்றது. எவர்கள் இதோடு கூடுதலாக (வேதம் வழங்கப்பட்டவர் மீது இட்டுகட்டப்பட்டுள்ள பொய்களான) ஹதீஸ்கள் & சுன்னத்து -கள் போன்றவற்றையும் மூல ஆதாரங்கள் என்று பின்பற்றினால் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்று வரையறுக்கின்றது.
[6:20]எவர்களுக்கு, நாம் வேதத்தை கொடுத்திருக் கின்றோமோ அவர்கள் இதை தங்களுடைய சொந்த குழந்தைகளை அறிந்து கொள்வது போல் அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தான் தங்கள் ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவர்.
[6:21]கடவுள்-ஐ பற்றிப் பொய் சொல்பவன் அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்ப வனைக் காட்டிலும் மிகத்தீயவன் யார்? வரம்பு மீறுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை மறுக்கின்றனர்
[6:22]நாம், அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டும் அந்தநாளில், “ நீங்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களிடம் நாம் கேட்போம்.
[6:23]அவர்களுடைய விபரீதமான பதில்,” எங்கள் இரட்சகராகிய கடவுள்-ன் மீது ஆணையாக நாங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக* ஒரு போதும் இருந்ததில்லை” என்பதாகத்தான் இருக்கும்.

அடிகுறிப்பு:
*6:23 இப்போதும் எப்போதும், இணைத்தெய்வ வழிபடு செய்பவர்கள், தாங்கள் இணைத்தெய்வ வழிபடு செய்பவர்கள் என்பதை கடுமையாக மறுப்பார்கள்.
[6:24]அவர்கள் எவ்வாறு தங்களிடமே பொய் கூறிக்கொண்டார்கள் என்பதையும் மேலும் எவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த இணைத் தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விட்டன என்பதையும் கவனியுங்கள்.
[6:25]அவர்களில் சிலர், நீர் கூறுவதை கேட்கின்றனர், ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதை விட்டும் தடுப்பதற்காக, அவர்களுடைய இதயங்களில் திரைகளையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்துகின்றோம். இதனால், எந்தவிதமான சான்றை அவர்கள் கண்டாலும் ஒரு பொருட்டல்ல, அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது, இவ்வாறாக, அவர்கள் விவாதிப் பதற்காக உங்களிடம் வரும்போது அந்த நம்பமறுத்தவர்கள், “இவை கடந்த காலத்தின் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றார்கள்.
[6:26]அவர்கள், இதை (குர்ஆனை) விட்டும் தொலை வில் இருப்பதைப் போல் மற்றவர்களையும் இதைவிட்டும் விரட்டுகின்றார்கள், மேலும் இவ்வாறாக, அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின் றார்கள்.
[6:27]அவர்கள் நரக நெருப்பைக் காணும் போது, நீங்கள் மட்டும் அவர்களைப் பார்க்க முடியுமே யானால்! அப்போது அவர்கள், “ எங்களுக்கு கேடுதான், ஐயோ, நாங்கள் திரும்பிச் சென்று எங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறுக்காதிருந்து, நம்பிக்கையாளர்களோடு சேர விரும்புகின்றோம்” என்று கூறுவார்கள்.
[6:28]உண்மை நிலவரமாக, (அவர்கள் இவ்வாறு கூறுவது ஏனெனில்) அவர்களுடைய இரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் திரும்பிச் சென்றாலும் மிகச் சரியாக இதே குற்றங்களையே,* அவர்கள் செய்வார்கள். அவர்கள் பொய்யர்கள்.

அடிகுறிப்பு:
* 6:28 இது ஏனெனில், நாம் நம்முடைய உலக பரிமாணத்திற்குள் நுழைந்தவுடன், ஆன்மாக்களின் உலகத்தில் நம்மால் பார்க்க முடிந்த கடவுள் மற்றும் அவருடைய வானவர்கள், மேலும் சுவனம் மற்றும் நரகம் இவை அனைத்தையும் முற்றிலும் தெரியாதவர்களாக ஆகிவிடுவோம். இவ்விதமாக குற்றவாளிகள் நிலையான அந்தப்பரிமாணத்தைப் பார்த்ததற்குப் பிறகும் கூட அவர்களுடைய நடத்தையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
[6:29]அவர்கள் (ஆழ்மனதிற்குள்), “நாம் இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்வோம், மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படமாட்டோம்” என்று கூறுகின்றனர்.
[6:30]அவர்கள், தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் நிற்பதை மட்டும் நீங்கள் பார்க்க முடியுமேயானால்! “ இது சத்தியம் அல்லவா?” என்று அவர் கேட்பார் “ எங்கள் இரட்சகர் மீது ஆணையாக, ஆம்” என்று அவர்கள் கூறுவார்கள், “உங்களுடைய நம்பிக்கையின்மையினால் நீங்கள் தண்டனைக்குள்ளாகி விட்டீர்கள்” என்று அவர் கூறுவார்.
[6:31]அந்த நேரம் திடீரென அவர்களிடம் வரும்வரை கடவுள்-ஐச் சந்திப்பதை நம்ப மறுத்துவிட்டு, அதன்பிறகு “ நாங்கள் எங்கள் வாழ்க்கையை இந்த பூமியில் வீணாக்கியதற்கு ஆழ்ந்த வருத்தம் அடைகின்றோம்” என்று கூறுபவர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே. அவர்கள் தங்களுடைய முதுகுகளில் தங்களுடைய பாவங்களின் சுமைகளைச் சுமப்பார்கள், எத்தகையதொரு துன்பகரமான சுமை!
நமது முன்னுரிமைகளை மாற்றி அமைத்தல்
[6:32]இந்த உலகத்தின் வாழ்க்கை மாயை மற்றும் வீண்பகட்டு தவிர வேறில்லை. அதே சமயம் மறுவுலகின் வீடோ, நன்னெறியாளர் களுக்கு மிகமிகச் சிறந்தது. உங்களுக்கு புரிய வில்லையா?!
[6:33]அவர்களுடைய கூற்றுக்களால் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மறுத்தது உம்மை அல்ல, அந்த தீயவர்கள் அவமதித்தது கடவுள்-உடைய வெளிப்பாடுகளை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[6:34]உமக்கு முன்னர் இருந்த தூதர்களும் மறுக்கப் பட்டனர், மேலும் அவர்கள் மறுப்பை எதிர் கொள்ளும்போது, உறுதியோடு விடாமுயற்சி யுடன் இருந்தார்கள். நம்முடைய வெற்றி அவர் களிடம் வரும் வரை அவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். ஒருபோதும் மாறாத கடவுள்- உடைய வழிமுறை இத்தகையதே. இவ்வாறு என்னுடைய தூதர்களின் சரித்திரம் உங்களுக்கு முன்னுதாரணங்களாக அமைந் துள்ளன.
[6:35]அவர்களுடைய மறுப்பு உங்களுக்குப் பெரிதாகத் தோன்றுமானால், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் பூமிக்கடியில் ஒரு சுரங்கத் தைத் தோண்டினாலும் அல்லது ஒரு ஏணி யைக் கொண்டு வானத்தில் ஏறினாலும், மேலும் அவர்களுக்காக ஓர் அற்புதத்தை உருவாக்கினாலும் (அவர்கள் அப்பொழுதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்). கடவுள் நாடி இருந்தால், அவர் அவர்களை ஒட்டு மொத்தமாக வழி நடத்தியிருக்க இயலும். ஆகையால், அறிவில்லாதவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்.
[6:36]எவர்கள் கவனமாக கேட்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பதில் அளிப்பார்கள். கடவுள் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு வார்; அவர்கள் இறுதியாக அவரிடமே திரும்பு வார்கள்.
[6:37]“ஒரு குறிப்பிட்ட அத்தாட்சி மட்டும் அவருக்கு அவருடைய இரட்சகரிடமிருந்து வந்தி ருந்தால்!” என்று அவர்கள் கூறினார்கள். “ஓர் அத்தாட்சியைக் கீழே அனுப்ப கடவுள் ஆற்றல் உடையவர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்று கூறுவீராக.
பிராணிகளும், பறவைகளும் அடிபணியும் படைப்பினங்கள்*
[6:38]பூமியின் மேலுள்ள எல்லா படைப்புகளும், மேலும் இறக்கைகளைக் கொண்டு பறக்கும் எல்லாப் பறவைகளும் உங்களைப்போன்ற சமூகங்களே. இந்தப் புத்தகத்தில்** நாம் எதையும் விட்டுவிடவில்லை. இந்த படைப்பினங்கள் அனைத்தும், அவற்றின் இரட்சகரிடத்தில் ஒன்று கூட்டப்படும்.

அடிகுறிப்பு:
* 6:38 அசலானபாவத்தைச் செய்து விட்ட பின்னர் வருந்தித்திருந்துவதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்ட படைப்பினங்களில் பிராணிகளும் இருந்தன. (அறிமுகவுரையைப் பார்க்கவும்) ** 6:38 மறுவுலகில் நம்முடைய நிரந்தரமான வாழ்க்கை சம்பந்தமான எல்லா செய்திகளும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. கடவுளின் உறுதி மிக்க வாக்கான “ இந்த புத்தகத்தில் நாம் எதையும் விட்டு விடவில்லை” என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள். மேற்கூறப்பட்ட இந்த கூற்றின், மற்றும் இது போன்ற மற்ற கூற்றுகளின் முக்கியத்துவமும், இவை ஒவ்வொன்றும் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டதாக உள்ளது என்ற உண்மையின் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றது. (பின் இணைப்பு 19)
வெற்றி கொள்ளும் குர்ஆனின் அற்புதம்
[6:39]நம்முடைய சான்றுகளை மறுப்பவர்கள் முழு இருட்டில் உள்ள செவிடர்களும், ஊமைகளும், ஆவார்கள். கடவுள் தான் நாடுவோரை வழி கேட்டிற்கு அனுப்புகின்றார், மேலும் தான் நாடுவோரை நேரான பாதையில் அழைத்துச் செல்கின்றார்.
[6:40]“கடவுள்-ன் தண்டனை உங்களுக்கு வந்துவிட்டாலோ அல்லது அந்தநேரம் வந்து விட்டாலோ: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐத் தவிர மற்றவரிடம் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்களா?” என்று கூறுவீராக.
[6:41]உண்மை இதுதான்: அவரிடம் மட்டுமே நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்பீர்கள், மேலும் பதில ளிக்க அவர் நாடினால் உங்களுடைய பிரார் தனைக்கு அவர் பதிலளிக்கின்றார். அப்போது நீங்கள் உங்களுடைய இணைகளை மறந்து விடுகின்றீர்கள்.
[6:42]உங்களுக்கு முந்தைய சமூகங்களுக்கு நாம் (தூதர்களை) அனுப்பினோம், மேலும் அவர்கள் இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை நாம் துன்பம் மற்றும் பெருங்கஷ்டம் மூலமாக சோதனையில் ஆழ்த்தினோம்.
[6:43]நம்முடைய சோதனை அவர்களை வருத்திய போது அவர்கள் மட்டும் இறைஞ்சிப் பிரார்த் தித்திருந்தால்! மாறாக, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும் சாத்தான் அவர்களுடைய செயல்களை, அவர் களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கி விட்டான்.
வழிமுறை
[6:44]இவ்வாறாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியை, அவர்கள் புறக்கணிக்கும் போது, நாம் அவர்களுக்காக அனைத்தின் வாயில் களையும் திறந்துவிடுகின்றோம். பின்னர் அவர்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் அவர்களைத் திடீரெனத் தண்டிக்கின்றோம்; அவர்கள் முற்றிலுமாக அதிர்ச்சி அடைந் தவர்களாக ஆகின்றனர்.

அடிகுறிப்பு:
*6:44 குற்றவாளிகள் ஜன்னலுக்கு வெளியே எறியப்படுவதற்கு முன்னதாக, அவர்கள் மேல் தளத்தின் உச்சிக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.
[6:45]தீயவர்கள் இவ்விதமாக அழிக்கப்படுகின்றனர். புகழ் அனைத்தும், பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே உரியது.
கடவுள் மட்டுமே வழிபடத் தகுதியானவர்
[6:46]“கடவுள் உங்களுடைய செவிப்புலனையும், உங்களுடைய பார்வைப்புலனையும் எடுத்து விட்டால், மேலும் உங்களுடைய மனங்களில் முத்திரையிட்டுவிட்டால் என்ன செய்வீர்கள், கடவுள்-ஐத் தவிர, வேறு எந்த தெய்வம் இவற்றை உங்களுக்கு திரும்ப தர இயலும்?” என்று கூறுவீராக. வெளிப்பாடுகளை எவ்வாறு நாம் விளக்குகின்றோம் என்பதையும், மேலும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!
[6:47]“கடவுள்-ன் தண்டனை உங்களிடத்தில் திடீரெனவோ அல்லது ஒரு அறிவிப்பிற்கு பிறகோ வந்தால் என்ன செய்வீர்கள், அழிவிற்குள்ளாவோர் தீயவர்கள் தான் அல்லவா?” என்று கூறுவீராக.
தூதர்களின் பங்கு
[6:48]நற்செய்திகளை அறிவிப்பவர்களாகவும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை, எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.
[6:49]நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர் களைப் பொறுத்தவரை அவர்களுடைய தீய குணங்களுக்காக அவர்கள் தண்டனை க்குள்ளாகின்றார்கள்.
[6:50]“கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் பெற்றிருக்கின்றேன் என்று உங்களிடம் நான் கூறமாட்டேன். அன்றி எதிர்காலம் பற்றியும் எனக்குத் தெரியாது. அன்றி நான் ஒரு வானவர் என்றும் நான் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. “குருடரும், பார்வை உள்ளவரும் சமமா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கூறுவீராக.
[6:51]மேலும் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் ஒன்று கூட்டப்படுவோம் என்பதில் பயபக்தியுடன் இருப்பவர்களுக்கு இதைக் (குர்ஆன்) கொண்டு உபதேசிப்பீராக - அவர்களுக்கு அவரைத்தவிர ஒரு இரட்சகரோ, எஜமானரோ அல்லது ஒரு பரிந்து பேசுபவரோ யாருமில்லை - அதனால் அவர்கள் மீட்சியை அடையலாம்.
[6:52]மேலும் எவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் பகலிலும், இரவிலும் இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும், தங்களை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அவர்களை வெளி யேற்றாதீர்கள். அவர்களுடைய கேள்விக் கணக்கிற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல, உங்களுடைய கேள்விக்கணக்கிற்கு அவர்கள் பொறுப்பாளி அல்ல. நீங்கள் அவர்களை வெளியேற்றினால் நீங்கள் ஒரு வரம்பு மீறியவராகிவிடுவீர்கள்.
[6:53]“நம்மிடையே கடவுள்-ஆல் அருள்பாலிக்கப் பட்ட மக்கள் இவர்கள்தானா?” என்று அவர் கள் (பரிகாசமாக) கூறும்படி செய்து மக்களில் ஒருவருக்கொருவரை நாம் இவ்வாறு சோதிப் போம். நன்றியுடையவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிந்தவர் அல்லவா?
[6:54]நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் உம்மிடம் வரும்போது நீங்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூறவேண்டும். உங்களுடைய இரட்சகர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். இவ்விதமாக, உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு வரம்புமீறல் செய்துவிட்டு, அதன்பிறகு வருந்தித்திருந்தி மேலும் சீர்த்திருத்திக் கொண்டால், பின்னர் அவர் மன்னிக்கின்றவர், மிக்க கருணையாளர்.
[6:55]நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம். மேலும் தீயவர்களின் வழிகளை சுட்டிக்காட்டுகின்றோம்.
[6:56]“கடவுள்-ஐத் தவிர எதனை நீங்கள் வழிபடுகின்றீர்களோ, அதனை வழிபடுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக. “உங்களுடைய அபிப்பிராயங் களை நான் பின்பற்றமாட்டேன் அவ்வாறு செய்தால் நான் வழிகேட்டிற்கு சென்று விடுவேன், மேலும் வழிநடத்தப்படாமல் விட்டுவிடப்படுவேன்” என்று கூறுவீராக.
[6:57]“நான், என்னுடைய இரட்சகரிடமிருந்து உறுதியான சான்றினை பெற்றிருக்கின்றேன், நீங்களோ அதை ஏற்கமறுத்து விட்டீர்கள். நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையை, நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை, தீர்ப்பளித்தல் கடவுள்-க்கு மட்டுமே உரியது. அவர் உண்மையை விவரிக்கின்றார், மேலும் அவர் தான் சிறந்த நீதிபதி” என்று கூறுவீராக.
[6:58]“நீங்கள், கொண்டுவரும்படி என்னிடம் சவால் விடும் அந்த தண்டனையின் மீது நான் அதிகாரம் பெற்றிருப்பேனேயானால் எல்லா விஷயமும் எப்போதோ முடிந்துவிட்டிருக்கும். தீயவர்கள் யார் என்பதை கடவுள் மிக நன்றாக அறிவார்” என்று கூறுவீராக.
சர்வ வல்லமையுடையவரான கடவுள்
[6:59]எல்லா இரகசியங்களின் சாவிகளும் அவரிடமே உள்ளன; அவற்றை அவரைத்தவிர வேறெ வரும் அறியமாட்டார்கள். நிலத்தின் மீதும், மேலும் கடலுக்குள்ளும் உள்ள அனைத்தையும் அவர் அறிகின்றார். அவர் அறியாமல் ஓர் இலை கூட உதிர்வதில்லை. மேலும் மண்ணின் ஆழத்தில் ஒரு தானியமும் இல்லை. மேலும் ஈரமானதோ அல்லது உலர்ந்ததோ அனைத்தும் ஓர் ஆழ்ந்த பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை.
ஒவ்வொரு நாளும் மரணமும் மீண்டும் உயிர் பெறலும்
[6:60]அவர்தான் இரவு நேரங்களில் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார். மேலும் பகல் நேரங்களில் உங்களுடைய மிகச் சிறிய செயல்களையும் கூட அறிகின்றார். உங்களு டைய ஆயுட்காலம் நிறைவடையும் வரை ஒவ்வொரு காலையிலும் அவர் உங்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார், அதன் பிறகு நீங்கள் இறுதியாக அவரிடமே திரும்புவீர்கள். பின்னர் நீங்கள் செய்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.

அடிகுறிப்பு:
*6:60 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் நேரடியாக ஆதாமும் அவருடைய மனைவியும் முன்பு வாழ்ந்த அதே சுவனத்திற்குச் சென்று விடுவார்கள். நன்னெறியற்றவர்கள் மரணித்து, மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாள் வரை நீடித்து இருக்கும் ஒரு தீய கனவை அனுபவிப்பார்கள் (2:154, 3:169, 8:24, 16:32, 22:58, 36:26-27, 40:46, 44 : 56 மேலும் பின் இணைப்பு 17 ஆகியவற்றைப் பார்க்கவும்).
[6:61]அவருடைய படைப்புகள் மீது அவர் மேலான அதிகாரம் உடையவர், மேலும் அவர் உங்களைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிக்கின்றார். உங்களில் எவருக்கெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அந்த மரண வேளை வருகின்றதோ அப்போது, நம்முடைய தூதர்கள் தாமதிக்காது அவரை மரணிக்கச் செய்கின்றார்கள்.
[6:62]அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், மேலும் எஜமானரு மாகிய கடவுள்-இடம் திரும்பி விடுவார்கள். நிச்சயமாக, அவர்தான் இறுதியான நீதிபதி, அவர் மிகமிகச் சரியாகக் கணக்கிடுபவர்.
[6:63]“நிலத்திலோ அல்லது கடலிலோ உள்ள இருள் களில் இருந்து யாரால் உங்களைக் காப்பாற்ற இயலும்?” என்று கூறுவீராக. “அவர் எங்களை இம்முறை காப்பாற்றினால், நாங்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்று அவரிடம் உரத்த சத்தத்துடனும் இரகசியமாகவும் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள்.
[6:64]“கடவுள் இம்முறையும், அதே போல் மற்ற நேரங் களிலும் உங்களைக் காப்பாற்றவே செய்கின் றார். அதன் பிறகும் நீங்கள் அவருக்கு இணைகளை ஏற்படுத்தவே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[6:65]“உங்களுக்கு மேலிருந்தும் அல்லது உங்களு டைய பாதங்களுக்கு கீழிருந்தும் தண்டனையை உங்கள் மீது பொழிய நிச்சயமாக அவர் ஆற்றல் உடையவர். அல்லது உங்களைப் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து மேலும் ஒருவர் மற்றவருடைய கொடுங்கோன்மையை அனுபவிக்கும்படி செய்ய அவரால் இயலும். அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக நாம், எவ்வாறு வெளிப்பாடுகளை விளக்குகின்றோம் என்பதை கவனிப்பீராக,” என்று கூறுவீராக.
[6:66]இது உண்மையாக இருந்தபோதிலும், உங்களு டைய மக்கள் இதை ஏற்க மறுத்து விட்டார்கள். “நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல” என்று கூறுவீராக.
[6:67]இதிலுள்ள ஒவ்வொரு முன் அறிவிப்பும் நடந்தே தீரும், மேலும் நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்.
கடவுளின் வார்த்தைக்கு மரியாதை
[6:68]நம்முடைய வெளிப்பாடுகளைப் பரிகாசம் செய் பவர்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் வேறொரு விஷயத்தில் மூழ்கும் வரை அவர்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களை மறக்கும்படிச் செய்து விட்டால், அதன்பிறகு உங்களுக்கு நினைவு வந்தவுடன் இத்தகைய தீய மக்களுடன் அமர்ந்திருக்காதீர்கள்.
[6:69]அந்த மக்களின் பேச்சுக்களுக்கு நன்னெறி யாளர்கள் பொறுப்பல்ல, ஆனால் அவர்களுக்கு நினைவூட்ட இது உதவலாம்; ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்படலாம்.
[6:70]இவ்வுலக வாழ்க்கையில் தங்களை முற்றிலும் இணைத்துக் கொண்டு, தங்களுடைய மார்க்கத் தை வீணாகவும், அதை ஒரு சமூக விழா போலவும் எடுத்துக் கொண்டவர்களை நீங்கள் புறக் கணித்து விடுங்கள். ஓர் ஆன்மா அதனுடைய பாவமான சம்பாத்தியங்களின் விளைவுகளை அனுபவிக்கா மலிருக்கும் பொருட்டு, இதைக் (குர் ஆன்) கொண்டு நினைவூட்டவும். அதற்கு கடவுள்-ஐத் தவிர ஓர் இரட்சகரோ மேலும் எஜமானரோ ஒரு பரிந்து பேசுபவரோ கிடையாது. அது எந்த விதமான பிணைத் தொகையை கொடுக்க முடிந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. அவை சம்பாதித்த தீய செயல்களின் விளைவுகளை அவை அனுபவிக்கும்: அவை நரக பானங்களுக்கும் மேலும் அவைகளின் நம்பிக்கையின்மையின் காரணமாக வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டன.
[6:71]“கடவுள் எங்களை வழி நடத்தியதன் பிறகு, எங்களுடைய குதிகால்களைக் கொண்டு திரும்பியவர்களாக, கடவுள்-ஐத் தவிர எங்களுக்கு நன்மையோ அல்லது எங்களுக்கு தீங்கோ செய்வதற்கு ஆற்றல் பெற்றிராதவையிடம் நாங்கள் இறைஞ்சிப் பிரார்த்திப்போமா? அவ்வாறெனில், எங்களோடு சரியான பாதையில் இருங்கள் என்று அவர்களுடைய நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், சாத்தானால் வசப்படுத்தப்பட்டு மேலும் முற்றிலும் குழம்பிய வர்களாக விடப்பட்டவர்களோடு நாங்கள் சேர்ந்துவிடுவோம்” என்று கூறுவீராக. “கடவுள்-உடைய வழிகாட்டுதலே சரியான வழிகாட்டு தலாகும். நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளோம்” என்று கூறுவீராக.
[6:72]“இன்னும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடியுங்கள், மேலும் அவரிடம் பயபக்தியோடிருங்கள் - அவருக்கு முன்னால் தான் (கணக்கு வழக்கிற்காக) நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.”
[6:73]அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் படைத்தவர். அவர், “ஆகுக,” என்று கூறும் போதெல்லாம் அது ஆகிவிடும். அவருடைய வார்த்தைகள் பரிபூரணமான சத்தியம் ஆகும். கொம்பு ஊதப்படும் அந்த நாளில், அனைத்து ஆட்சி அதிகாரங்களும் அவருக்கு உரியது. இரகசியங்களையும் மேலும் பிரகடனங்களையும் அறிந்தவர், அவர்தான் ஞானம் மிக்கவர், நன்கறிந்தவர்.
இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களுடன் ஆப்ரஹாம் வாதம் செய்கின்றார்
[6:74]ஆப்ரஹாம் அவருடைய தந்தை ஆஜரிடம் “எப்படி நீங்கள் சிலைகளை தெய்வங்களாக வழிபட இயலும்? உங்களையும், உங்களுடைய மக்களையும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்களாகவே நான் காண்கின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[6:75]நாம் ஆப்ரஹாமிற்கு வானங்கள் மற்றும் பூமியின் அதிசயங்களைக் காட்டினோம், மேலும் அவருக்கு உறுதிப்பாட்டைக் கொண்டு அருள் புரிந்தோம்:
[6:76]இரவு வீழ்ந்த போது, அவர் ஒரு பிரகாசிக்கும் கிரகத்தைக் கண்டார். “ இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்” என்று கூறினார். அது மறைந்த போது, “மறைந்து போகும் (தெய்வங்களை) நான் நேசிக்க மாட்டேன்” என்று கூறினார்.
[6:77]சந்திரன் உதயமாவதை அவர் கண்ட போது, “இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்!” என்று கூறினார். அது மறைந்த போது, “என்னு டைய இரட்சகர் என்னை வழி நடத்தாதவரை நான் வழி தவறியவர்களோடு தான் இருப்பேன்” என்று கூறினார்.
[6:78]சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது, “இது தான் என்னுடைய இரட்சகராக இருக்க வேண்டும். இது மிகப்பெரியது” என்று கூறினார். ஆனால் அது அஸ்தமித்த போது அவர் கூறினார், “என்னுடைய மக்களே, உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை நான் பகிரங்கமாக கண்டனம் செய்கின்றேன்.
[6:79]“வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய அந்த ஒருவருக்கே நான் என்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன்; நான் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்க மாட்டேன்.”
[6:80]அவருடைய மக்கள் அவரிடம் தர்க்கம் செய் தனர். அவர் கூறினார், “கடவுள் என்னை வழி நடத்தியதன் பின்னர். அவரைப்பற்றி என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? நீங்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங்களிடம் எனக்கு பயம் இல்லை. என்னுடைய இரட்சகர் நாடாதவரை எனக்கு எதுவும் நேராது. என் இரட்சகருடைய பேரறிவு எல்லா பொருட்களையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
[6:81]“உங்களுடைய இணைத் தெய்வங்களுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்? உங்களுக்கு உதவுவதற்கு முற்றிலும் சக்தியற்ற இணைத் தெய்வங்களை கடவுள்-க்கு பதிலாக வழிபடு பவர்களாக நீங்கள் இருப்பதால், நீங்கள் தான் பயப்பட வேண்டும். நீங்கள் அறிவீர்களானால், எந்தத் தரப்பு பாதுகாப்பிற்கு மிகவும் தகுதியானது?”
நம்பிக்கையாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு
[6:82]எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் தங்களுடைய நம்பிக்கையை, இணைத்தெய்வ வழிபாட்டைக் கொண்டு களங்கப்படுத்தாமலிருக்கின்றார் களோ அவர்கள் முழுமையான பாதுகாப்பிற்குத் தகுதியாகி விட்டார்கள், மேலும் அவர்கள் தான் உண்மையாகவே வழி நடத்தப்பட்டவர்கள்.
[6:83]எதனைக் கொண்டு நாம் ஆப்ரஹாமிற்கு அவருடைய சமூகத்தாருக்கெதிராக ஆதர வளித்தோமோ அந்த நம்முடைய வாதம் இவ்விதமாகவே இருந்தது. நாம் நாடும் எவர்களையும் உன்னதமான அந்தஸ்து களுக்கு நாம் உயர்த்துகின்றோம். உங்களு டைய இரட்சகர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:84]மேலும் நாம் அவருக்கு ஐசக் மற்றும் ஜேக்கப்பை அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நாம் வழி நடத்தினோம். அதே போல் அதற்கு முன்பு நாம் நோவாவை வழி நடத்தினோம், மேலும் அவருடைய சந்ததியரில் டேவிட், ஸாலமன், ஜோப், ஜோஸஃப், மோஸஸ் மற்றும் ஆரோன் ஆகியோரையும் (நாம் வழி நடத்தினோம்). இவ்வாறு நன்னெறியாளர் களுக்கு நாம் வெகுமதி அளிக்கின்றோம்.
[6:85]இன்னும், ஜக்கரியா, ஜான், இயேசு மற்றும் எலியாஸ், இவர்கள் அனைவரும் நன்னெறி யாளர்களாக இருந்தார்கள்.
[6:86]மேலும் இஸ்மவேல், எலீசா, ஜோனா மற்றும் லோத், இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் எல்லா மக்களுக்கும் மேலாக கௌரவித்தோம்.
[6:87]அவர்களுடைய மூதாதையர்களில், அவர் களுடைய சந்ததியர்களில், மேலும் அவர் களுடைய உடன் பிறப்புகளில் பலரை நாம் தேர்ந்தெடுத்தோம், மேலும் அவர்களை நேரான பாதையில் நாம் வழி நடத்தினோம்.
[6:88]இதுதான் கடவுள்-உடைய வழிகாட்டுதல், இதைக்கொண்டு தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோரை அவர் வழி நடத்துகின்றார். அவர்களில் எவராவது இணைவழிபாட்டில் விழுந்துவிட்டிருந்தால், அவர்கள் காரியங்கள் பயனற்றதாகியிருக்கும்.
[6:89]நாம் வேதத்தையும், ஞானத்தையும் மேலும் வேதத்தின் தூதுத்துவத்தையும் கொடுத்தது அவர்களுக்குத்தான். இந்த மக்கள் நம்ப மறுத்தால், நாம் அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை அவர்களுக்குப் பதிலாக அமர்த்துவோம், மேலும் அந்த புதிய மக்கள் நம்ப மறுப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
[6:90]இவர்கள் தான் கடவுள்-ஆல் வழி நடத்தப்பட்டவர்கள். நீங்கள் அவர்களுடைய அடிச்சுவட்டில் வழி நடத்தப்பட வேண்டும். “நான் இதற்காக உங்களிடம் எந்தக் கூலியும் கேட்க மாட்டேன். இது எல்லா மக்களுக்கு மான ஒரு செய்தியே அன்றி வேறில்லை” என்று கூறுவீராக.
உலகத்திற்குக் கடவுளின் செய்திகள்
[6:91]கடவுள்-ஐ அவர்கள் எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு, ஒருபோதும் மதிக்க வில்லை. அதனால் அவர்கள், “ கடவுள் எந்த மனிதருக்கும் எதையும் வெளிப்படுத்த மாட்டார்.” என்று கூறினார்கள். “ அவ்வாறா யின் மக்களுக்கு ஒளியும் வழிகாட்டுதலும் உடைய மோஸஸ் கொண்டு வந்த வேதத்தை வெளிப்படுத்தியது யார்?” என்று கூறுவீராக. நீங்கள் அதைப் பிரகடனப்படுத்துவதற்காகக் காகிதத்தில் எழுதிக் கொள்கின்றீர்கள், அதேசமயம் அவற்றில் பெரும் பகுதியை மறைக்கின்றீர்கள். நீங்கள் ஒருபோதும் அறிந்திராதது உங்களுக்கு கற்பிக்கப்பட்டது - உங்களுக்கும் உங்களுடையபெற்றோருக்கும். “கடவுள் (தான் இதை வெளிப்படுத்தினார்)” என்று கூறுவீராக, பின்னர் அவர்களை அவர் களுடைய கவனமின்மையில், விளையாடியவர் களாக இருக்க விட்டுவிடுவீராக.
[6:92]மிக முக்கியமான சமூகத்தையும்* மேலும் அதைச் சுற்றியுள்ள அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டு, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகின்ற இதுவும், நாம் வெளிப்படுத்தியுள்ள ஒரு புனிதமான வேதமே ஆகும். எவர்கள் மறுவுலகை நம்புகின்றார்களோ அவர்கள் இதை (வேதத்தை) நம்புவார்கள், மேலும் தொடர்பு தொழுகை களையும் (ஸலாத்) கடைபிடிப்பார்கள்.

அடிகுறிப்பு:
*6:92 இன்றைய மிக முக்கியமான சமூகம் அமெரிக்கா ஆகும். அங்கு கடவுளின் செய்தி திரும்பவும் அதன் தூய்மையான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டபோது, மக்காதான் மிக முக்கியமான சமூகமாக இருந்தது.
போலித்தூதர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள்
[6:93]பொய்களை கற்பனை செய்து, மேலும் அவை களை கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றவன், அல்லது எத்தகைய தெய்வீக உள்ளுணர்வும் அவனுக்கு கொடுக்கப்படாமல் இருக்கும்போது “நான் தெய்வீக உள்ளுணர்வைப் பெற்றிருக் கின்றேன்”, என்று கூறுபவன், அல்லது “கடவுள்-உடைய வெளிப்பாடுகளைப் போலவே என்னாலும் எழுத இயலும்” என்று கூறுபவனை விட மிகப்பெரிய பாவி யார்? அந்த வரம்பு மீறியவர்களை மரணத்தருவாயில் நீங்கள் காணமுடியுமேயானால்! வானவர்கள் அவர்களுடைய கரங்களை இவர்களை நோக்கி, “உங்கள் ஆன்மாக்களை, வெளி யேற்றுங்கள் எனக் கூறிவயவர்களாக நீட்டு வார்கள். இன்றைய தினம், கடவுள்-ஐப் பற்றி உண்மையல்லாததை கூறியதற்காகவும், மேலும் அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் மிகவும் ஆணவம் கொண்டு இருந்ததற்காகவும் ஓர் இழிவான தண்டனைக் குள்ளாகிவிட்டீர்கள்.
[6:94]“நாம் உங்களுக்கு வழங்கியவற்றைப் பின்னால் விட்டு விட்டு, முதன் முறையாக நாம் உங்களை எவ்வாறு படைத்தோமோ, அவ்வாறே தனித்தவர்களாக நம்மிடம் நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள். பரிந்துரை செய்வார்கள் என்றும் மேலும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள், என்றும் உரிமை கொண்டாடி நீங்கள் வழிபட்ட இணைத்தெய்வங்களை நாம் உங்களோடு பார்க்கவில்லை. உங்களுக் கிடையில் இருந்த அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. நீங்கள் ஏற்படுத்திய அந்த இணைத்தெய்வங்கள் உங்களைக் கைவிட்டு விட்டன.”
கடவுளின் மாட்சிமை
[6:95]கடவுள் தான், தானியங்கள் மற்றும் விதை களை வெடித்து முளைக்கச் செய்கின்றார். அவர் இறந்தவைகளில் இருந்து உயிர் உள்ள வைகளையும், மேலும் உயிர் உள்ளவைகளில் இருந்து இறந்தவைகளையும் உண்டாக்கு கின்றார். இவ்விதமானவரே கடவுள்; எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்!
[6:96]வைகறைப் பொழுது வெடிக்கும் பொழுது, அவர் காலைப்பொழுதை வெளியாக்குகின்றார். அவர் இரவை அமைதியானதாக ஆக்கினார், மேலும் அவர் சூரியனையும், சந்திரனையும் கணக்கிடப்பயன்படும் சாதனங்களாக்கினார். சர்வ வல்லமையுடைய, எல்லாம் அறிந்தவரின் திட்டம் இத்தகையதே.
[6:97]மேலும் தரையின் மீதும் கடலின் மீதும், இருள்களின் போது உங்களுக்கு வழிகாட்ட நட்சத்திரங்களை அவர்தான் ஏற்படுத்தினார். அறியக்கூடிய மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றோம்.
[6:98]அவர் உங்களை ஒரு மனிதரில் இருந்து துவக்கினார். மேலும் உங்களுடைய பாதை யையும், அப்படியே உங்களுடைய இறுதி விதியையும் தீர்மானித்தார். புரிந்து கொள்ளும் மக்களுக்கு நாம் இவ்வாறு வெளிப்பாடு களைத் தெளிவாக்குகின்றோம்.
[6:99]அவர்தான் வானத்திலிருந்து தண்ணீரை இறக்குகின்றார், அதன் மூலம் நாம் எல்லா வகையான தாவரங்களையும் உற்பத்தி செய்கின்றோம். பசுமையான பொருட்களி லிருந்து அதிக எண்ணிக்கையில் பல்வகைத் தானியங்களை, தொங்கும் குலைகளைக் கொண்ட கிளையில்லாத மரங்களை, மேலும் திராட்சை, ஒலிவம், மற்றும் மாதுளைத் தோட்டங்களை; ஒரே மாதிரியானதாயினும், மாறுபட்ட பழங்களை நாம் உற்பத்தி செய்கின் றோம். அவற்றின் பழங்களை, அவைகள் வளர்ந்து பழமாகும் போது கவனியுங்கள். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை அத்தாட்சிகளாகும்.
[6:100]இருப்பினும், அவர்கள் கடவுள்-உடன் ஜின்களையும் இணைத்தெய்வங்களாக அமைத்துக்கொள்கின்றனர். ஆயினும் அவற்றையும் அவரே படைத்துள்ளார். எந்த அறிவும் இல்லாது அவர்கள், அவருக்கு மகன்களையும், மகள்களையும் கூட இட்டுக்கட்டுகின்றார்கள். அவரே போற்று தலுக்குரியவர். அவர்கள் இவ்வாறு கூறுவதை விட்டும், அவர் மிக மிக உயர்ந்தவர்.
[6:101]வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவர். அவருக்கு ஒருபோதும் ஒரு ஜோடிஇல்லாத போது எப்படி அவர் ஒரு மகனைப் பெற்றிருக்க இயலும்? அவர் எல்லாப் பொருட்களையும் படைத்தார், மேலும் அவர் எல்லாப் பொருட்களையும் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.
கடவுள்
[6:102]உங்களுடைய இரட்சகராகிய கடவுள் இத்தகையவர், அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, அனைத்துப் பொருட்களின் படைப் பாளர். நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். அனைத்துப் பொருட்களும் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
[6:103]பார்வைகள் அவரைச் சூழ்ந்து கொள்ள இயலாது, ஆனால் அவர், எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்திருக்கின்றார். அவர் இரக்க முள்ளவர், நன்கறிந்தவர்.
[6:104]உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஞானஉபதேசங்கள் வந்துள்ளன. பார்க்க முடிந்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள், தங்களுடைய சொந்த நன்மைக்கே அதைச் செய்கின்றார்கள். மேலும் எவர்கள் குருடர் களாக மாறி விடுகின்றார்களோ, அவர்களு டைய சொந்த கேட்டிற்கே அதைச் செய்கின்றார் கள். நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல.
[6:105]நீர் அறிவைப் பெற்றிருக்கின்றீர் என்பதை நிரூபிப்பதற்கும், மேலும் அறியக்கூடிய மக்களுக்கு அவற்றை விளக்குவதற்கும் நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை தெளிவுபடுத்து கின்றோம்.
[6:106]உம்முடைய இரட்சகரிடமிருந்து உமக்கு என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதைப்பின்பற்று வீராக, அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை, மேலும் இணைத்தெய்வங்களை வழிபடுபவர் களைப் புறக்கணித்து விடுவீராக.
[6:107]கடவுள் நாடி இருந்தால், அவர்கள், இணைத் தெய்வங்களை வழிபட்டிருக்கமாட்டார்கள். நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக நியமிக்கவில்லை, அன்றியும் நீர் அவர்களுக்கு பரிந்து பேசுபவரும் அல்ல.
[6:108]அறியாமையினால் அவர்கள் கடவுள்-ஐ நிந்திக்காமலும், சபிக்காமலும் இருக்கும் பொருட்டு, கடவுள்-க்கு இணையாக, அவர்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங் களைச் சபிக்காதீர்கள். ஒவ்வொரு பிரிவினரின் செயல்களை அவர்களுடைய கண்களுக்கு நாம் அலங்காரமாக்கியுள்ளோம். இறுதியாக அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர்கள் திரும்புவார்கள், அவர் அதன்பிறகு அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.
[6:109]ஓர் அற்புதம் அவர்களிடம் வந்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வதாக கடவுள் மீது பயபக்தியுடன் சத்தியம் செய்தார்கள். “அற்புதங்கள் கடவுள்- இடமிருந்து மட்டுமே வருகின்றன” என்று கூறுவீராக. நீங்கள் முற்றிலும் அறிந்திருப்பது போல், ஓர் அற்புதம் அவர்களிடம் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து நம்ப மறுப்பவர்களாக இருப்பார்கள்.
[6:110]நாம் அவர்களுடைய மனங்களையும் மேலும் அவர்களுடைய இதயங்களையும் கட்டுப் படுத்துகின்றோம். இவ்வாறாக, நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றுஅவர்கள் தீர்மானித்து விட்டதால், நாம் அவர்களை அவர்களுடைய வரம்பு மீறல்களில் முட்டாள்தனமாகப் பெருந் தவறுகள் செய்பவர்களாக விட்டு விட்டோம்.
அவர்களுடைய சுயமான தீர்மானத்தின் விளைவு
[6:111]நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கி அனுப்பியிருந்தாலும்; இறந்தவர்கள் அவர்களிடம் பேசியிருந்தாலும்; நாம் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்களுக்கு முன்னால் ஒன்று கூட்டியிருந் தாலும்; கடவுள் நாடினாலன்றி அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்.
ஹதீஸ் & சுன்னத்; வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்டவை
[6:112]நாம் ஒவ்வொரு வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளையும் - மனிதர்களில் மற்றும் ஜின்களில் உள்ள சாத்தான்களை-ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளால் ஊக்கம் அளித்துக் கொள்ள அனுமதித்தோம். உங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களையும், அவர்கள் இட்டுக் கட்டியவற்றையும் புறக்கணித்து விடு வீராக.
முக்கியமான சோதனை
[6:113]இது மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களின் மனங்கள் இத்தகைய இட்டுக்கட்டல் களில் கவனம் செலுத்தி மேலும் அவைகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இவ்விதமாக அவர்களு டைய உண்மையான திடநம்பிக்கைகளை* வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.

அடிகுறிப்பு:
*6:113 நாம் உண்மையில் மறுவுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா, அல்லது வெறும் உதட்டளவில் செயல்படுகின்றோமா என்பதை நமக்குக் கூறும் அளவு கோல்களைக் குர்ஆன் வழங்குகின்றது. இந்த மிக முக்கியமான அளவு கோல்கள் இங்கும், மேலும் 17:45-46 மற்றும் 39:45 ஆகியவற்றிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
குர்ஆன்: முழுவதும் விவரிக்கப்பட்டது
[6:114]அவர் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப் பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது, கடவுள் -ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக நான் தேடுவேனா?* வேதத்தைப் பெற்றவர்கள் இது உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் வெளிப் படுத்தப்பட்டது என்பதை அறிந்துக் கொள்வார்கள். நீர் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.

அடிகுறிப்பு:
*6:113-115 குர் ஆனைத் தவிர வேறு ஆதாரங்களை பின்பற்றுவது குர்ஆனின் மீதுள்ள நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும்.பின் இணைப்பு -18.
[6:115]உங்கள் இரட்சகருடைய வார்த்தை சத்தியத் தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது.* அவருடைய வார்த்தைகளை, எதுவும் மாற்ற இயலாது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

அடிகுறிப்பு:
*6:113-115 குர் ஆனைத் தவிர வேறு ஆதாரங்களை பின்பற்றுவது குர்ஆனின் மீதுள்ள நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகும்.பின் இணைப்பு -18.
[6:116]பூமியிலுள்ள பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மைக் கடவுள்- உடைய பாதையை விட்டும் திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றார்கள்; அவர்கள் அனுமானம் மட்டுமே செய்கின்றார்கள்.
[6:117]உம்முடைய இரட்சகர் அவருடைய பாதையை விட்டும் வழிதவறி போய்விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிகின்றார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிகின்றார்.
[6:118]நீங்கள் அவருடைய வெளிப்பாடுகளின் மீது உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர் களானால், எதன் மீது கடவுள்-உடைய பெயர் உச்சரிக்கப்பட்டதோ அதிலிருந்து உண்ண வேண்டும்.
கடவுளை நினைவு கூர சந்தர்ப்பம்: நீங்கள் உண்பதற்கு முன்பு கடவுளின் பெயரைக் கூறுங்கள்
[6:119]எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட்டதோ, அதிலிருந்து நீங்கள் ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும்? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டால் அன்றி, உங்களுக்குத் தடுக்கப்பட்டதை, அவர் உங் களுக்கு விவரித்திருக்கின்றார். உண்மையில், பெரும் பாலான மக்கள் அறிவில்லாமல் அவர்களுடைய சுயஅபிப்ராயங்களைக் கொண்டு மற்றவர்களை தவறான வழியில் நடத்துகின்றார்கள். வரம்பு மீறுகின்றவர்களை உங்களுடைய இரட்சகர் முழுமையாக அறிகின்றார்.
[6:120]வெளிப்படையான பாவங்களையும் அதேபோல் மறைவானவற்றையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எவர்கள் பாவங்களை சம்பாதித் தார்களோ அவர்கள் நிச்சயமாக அவர்களுடைய வரம்பு மீறல்களுக்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.
[6:121]எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட வில்லையோ அதிலிருந்து உண்ணாதீர்கள், ஏனெனில் அது ஒரு அருவருக்கத்தக்க பழக்க மாகும். சாத்தான்கள் அவர்களுடைய கூட்டாளி களை உங்களோடு விவாதிக்கும்படித்தூண்டு வார்கள்; நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால், நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆகி விடுவீர்கள்*.

அடிகுறிப்பு:
*6:121 கடவுள்- ஐத் தவிர மற்றவர்கள் ஏற்படுத்திய உணவு சம்பந்தமான தடைகள் இணைத்தெய்வ வழிபாட்டின் அடையாளமாகும்.
[6:122]மரணித்தவனாக இருந்து, மேலும் நம்மால் உயிர் கொடுக்கப்பட்டு மேலும் அவனுக்கு மக்களிடையே நடமாடும் சக்தியைத்தரும் ஒளி வழங்கப்பட்ட ஒருவன், தன்னால் ஒரு போதும் வெளியேற இயலாதவாறு முற்றிலும் இருளில் இருக்கும் ஒருவனுக்கு ஒப்பாவானா? நம்ப மறுப்பவர்களின் காரியங்கள் இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.
[6:123]ஒவ்வொரு சமூகத்தின் முக்கியமான குற்றவாளிகளையும் நாம் சூழ்ச்சியும் சதியும் செய்ய அனுமதிக்கின்றோம். ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு எதிராகவே சூழ்ச்சியும் சதியும் செய்கின்றார்கள்.
கடவுளுடைய ஞானத்தைக் கேள்வி கேட்பது
[6:124] ஒரு பலமான சான்று அவர்களிடம் வரும்போது அவர்கள், “கடவுள் - உடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது, எங்களுக்கு கொடுக்கப் படாத வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்!” என்று கூறுகின்றார்கள். அவருடைய செய்தியை அறிவிக்க சிறந்த தகுதியுடையவர் யார் என்பது கடவுள்-க்குத் துல்லியமாக தெரியும்.* இது போன்ற குற்றவாளிகள், அவர்களுடைய தீய சதிச்செயல்களின் விளைவுகளாக கடவுள்-இடத்தில் சிறுமையையும், மேலும் பயங்கரமான தண்டனையையும் அனுபவிப்பார்கள்.

அடிகுறிப்பு:
*6:124 பொறாமையும், அகந்தையும் மனிதனுடைய பண்புகளாகும். அவை கடவுளுடைய தூதர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய ஞானத்தை கேள்வி கேட்கும்படி சிலரைத் தூண்டுகின்றது. சீர்கெட்ட முஸ்லிம் அறிஞர்கள் இதே போன்ற கூற்றுக்களைக், கடவுளின் உடன்படிக்கை தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் கணிதக் குறியீடு பற்றியும் கூறினார்கள்.
குர்ஆனிய அறிவு மனிதர்களின் முன்னேற்றத்தை விட வெகு தூரம் முன்னால் இருக்கின்றது
[6:125]கடவுள் எவரையெல்லாம் வழி நடத்த நாடுகின்றாரோ, அவருடைய நெஞ்சத்தை அடிபணிதலின்பால் விசாலமாகத் திறக்கும்படி அவர் செய்கின்றார். மேலும் அவர், எவரையெல்லாம் வழிகேட்டிற்கு அனுப்ப நாடுகின்றாரோ அவருடைய நெஞ்சத்தை, வானத்தை நோக்கி ஏறுபவனுடையதைப் போன்று சகிப்புத் தன்மையற்றதாகவும், குறுகலானதாகவும் ஆக்கி விடுகின்றார். * கடவுள் நம்ப மறுப்பவர்கள் மீது இவ்வாறு ஒரு சாபத்தை ஏற்படுத்துகின்றார்.

அடிகுறிப்பு:
*6:125 வானத்தை நோக்கிச் செல்லச் செல்ல, பிராணவாயுவின் விகிதம் குறைந்துக் கொண்டே போகும், மேலும் நாம் சுவாசிக்கக் கஷ்டப்படுவோம் என்பதை, குர்ஆன் வெளியாகி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் அறிந்து கொண்டோம்.
[6:126]இதுதான் உங்களுடைய இரட்சகரை அடைய நேரான பாதையாகும். கவனிக்கக்கூடிய மக்களுக்கு நாம் வெளிப்பாடுகளை விளக்கி யுள்ளோம்.
[6:127]அவர்கள் தங்களுடைய இரட்சகரிடத்தில் அமைதியான வசிப்பிடத்திற்கு தகுதி பெற்று விட்டார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக, அவர்தான் அவர்களுடைய இரட்சகரும் எஜமானரும் ஆக இருக்கின்றார்.
[6:128]அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்த நாள் வரும் போது, ஜின்களே, மனிதர்களில் பெரும்பாலானவர்களை நீங்கள் உங்களுக்கென எடுத்துக் கொண்டீர்கள் (என்று கூறுவார்). அவர்களுடைய மனிதக் கூட்டாளிகள், “எங்களுடைய இரட்சகரே நீர் எங்களுக்குத் தந்த ஆயுட்காலத் தவணையை நாங்கள் வீணாக்கும் வரை, நாங்கள் ஒருவர் மற்றவருடைய துணையில் சுகம் அனுபவித்தோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்களுடைய விதியாகும்” என்று அவர் கூறுவார். கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உங்களுடைய இரட்சகர் ஞானமிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:129]இவ்வாறு நாம் தீயவர்களை அவர்களுடைய வரம்புமீறல்களுக்குத் தண்டனையாக ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக இணைப்போம்.
[6:130]ஜின்களே, மனிதர்களே, உங்களில் இருந்து, என்னுடைய வெளிப்பாடுகளை எடுத்துக் கூறி, மேலும் இந்த நாளின் சந்திப்பை பற்றி எச்சரிக்கை செய்த தூதர்களை நீங்கள் பெறவில்லையா? “ எங்களுக்கெதிரான சாட்சி யாக நாங்களே இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் முற்றிலும் உலக வாழ்க்கையால் ஆக்ரமிக்கப்பட்டவர் களாக இருந்தார்கள், மேலும் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் என்று அவர்களுக்கெதிராக அவர்களே சாட்சி கூறுவார்கள்.
[6:131]இது உங்களுடைய இரட்சகர், எந்த ஒரு சமூத்தையும் அதன் மக்கள் அறியாதவர்களாக இருக்கும்போது, அநீதமாக ஒரு போதும் அழிப்பதில்லை, என்பதை காட்டுவதற்காகவே ஆகும்.
[6:132]ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல் களுக்குத் தகுந்த அந்தஸ்தை அடைவார்கள். அவர்கள் செய்யும் எதையும் உங்களுடைய இரட்சகர் ஒரு போதும் அறியாதவர் அல்ல.
[6:133]உங்களுடைய இரட்சகர்தான் செல்வந்தர்; அனைத்துக் கருணையும் கொண்டவர் அவர் நாடினால், எவ்வாறு மற்ற மக்களின் சந்ததியர் களாக உங்களை உருவாக்கினாரோ, அதே போல் உங்களை நீக்கிவிட்டு உங்களுடைய இடத்தில், அவர் நாடுவோரை உங்களுக்குப் பதிலாக வைக்க அவரால் இயலும்.
[6:134]உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்தே தீரும், அதை நீங்கள் ஒருபோதும் தவிர்த்து விட முடியாது.
[6:135]“என்னுடைய மக்களே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள், மேலும் எனக்குச் சிறந்ததை நான் செய்வேன். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நீங்கள் நிச்சயமாக கண்டுகொள்வீர்கள்” என்று கூறுவீராக. நிச்சயமாக, தீயவர்கள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்.
கடவுளின் வாழ்வாதாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல்
[6:136]அவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களான விளைச்சல்கள் மற்றும் கால்நடைகள் ஆகிய வற்றிலிருந்தும் ஒரு பங்கை தங்களுடைய தகுதிக்கு ஏற்ப, “இந்தப் பங்கு கடவுள்-க்கு உரியது”, “மேலும் இந்தப்பங்கு எங்கள் இணைத் தெய்வங்களுக்கு உரியது”, என்று கூறியவர் களாக ஒதுக்கியும் வைக்கின்றனர், ஆயினும், அவர்களுடைய இணைத் தெய்வங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்கு ஒருபோதும் கடவுள்-ஐ அடைவதில்லை, அதேசமயம் கடவுள்-க்கு என அவர்களால் ஒதுக்கப்பட்ட பங்கு தவறாமல் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கே சென்றது. அவர் களுடைய தீர்ப்பு உண்மையில் இழிவானதாகும்.
[6:137]இவ்வாறு இணைத் தெய்வங்களை வழிபடு பவர்கள், அவர்களுடைய சொந்தக் குழந்தைகளையே* கொல்லும் அளவிற்கு அவர்களுடைய இணைத் தெய்வங்களால் ஏமாற்றப் பட்டனர். உண்மையில், அவர்களுடைய இணைத் தெய்வங்கள் பெரும் வேதனையை அவர்களின் மீது சுமத்துகின்றன, மேலும் அவர்களுடைய மார்க்கத்தில் அவர்களைக் குழப்பிவிடுகின்றன. கடவுள் நாடியிருந்தால், அவர் கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். அவர் களையும், அவர்களுடைய இட்டுக் கட்டல்களையும் நீங்கள் அலட்சியம் செய்து விட வேண்டும்.

அடிகுறிப்பு:
*6:137 விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டதற்காக, 1978ல் சவூதி அரேபிய இளவரசி சிரச்சேதம் செய்யப்பட்ட, உலகளவில் வெறுக்கத்தக்க அந்த சம்பவம் ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். கடவுள்-ன் சட்டம் விபச்சாரத்திற்கான தண்டனையாக சவுக்கடியையே நிர்ணயம் செய்கின்றது, சிரச்சேதம் செய்வதை அல்ல. (24 :1-2 ) அதே சமயம் இணைத்தெய்வங்களை வழிபடுவோரின் சட்டங்களோ சிரச்தேசம் செய்வதைக் கட்டாயமாக்குகின்றது. 42:21ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள படி, பாரம்பர்யத்தைப் பின்பற்றுபவர்கள் கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்படாத ஒரு மார்க்கத்தையே பின்பற்றுகின்றனர்.
மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் கண்டனம் செய்யப்படுகின்றது
[6:138]அவர்கள், “இவை தடுக்கப்பட்டுள்ள கால் நடைகளும், விளைச்சல்களும் ஆகும், எங்களுடைய அனுமதியைப் பெற்றவர்களைத் தவிர வேறெவரும் அவற்றிலிருந்து உண்ணக்கூடாது,” என்று கூறினார்கள், இவ்வாறு அவர்கள் உரிமை கோரினார்கள். குறிப்பிட்ட கால்நடைகளின் மீது சவாரி செய்வதையும் அவர்கள் தடை செய்தனர். அவர்கள் சாப்பிட்ட கால்நடைகளைக்கூட அவற்றைப் பலியிடும் போது அவர்கள் கடவுள்-ன் பெயரை ஒரு போதும் உச்சரித்ததில்லை. இத்தகையவை அவர் மேல் இட்டுக்கட்டப்பட்டப் புதுமைகள் ஆகும். அவர்களுடையப் புதுமைகளுக்காக அவர் நிச்சயம் அவர்களைப் பழிவாங்குபவர்.
[6:139]அவர்கள், “ இந்த கால்நடைகளின் வயிறுகளில் உள்ளவை எங்களில் உள்ள ஆடவர்களுக்கெனத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டவை, மேலும் எங்கள் மனைவியருக்குத் தடுக்கப்பட்டவை” என்றும் கூட கூறினார்கள். ஆனால் அது செத்துப் பிறந்திருந்தால் அவர்களுடைய மனைவியரை அதில் பங்கு கொள்ள அனுமதிக்கின்றனர். அவர்களுடையப் புதுமைகளுக்காக, அவர்களை அவர் நிச்சயம் பழி வாங்குவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:140]தங்களுடைய அறிவுக் குறைபாட்டின் காரணமாக, தங்களுடைய குழந்தைகளை முட்டாள்தனமாக கொலை செய்த, மேலும் கடவுள் அவர்களுக்காக வழங்கியவற்றைத் தடைசெய்த, மேலும் கடவுள் மேல் இட்டுக் கட்டப்பட்ட புதுமைகளை பின்பற்றிய இவர்கள் தான் உண்மையில் நஷ்டவாளிகள். அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டனர்; அவர்கள் வழிநடத்தப் பட்டவர்களல்ல.
“அறுவடை செய்யும் நாளினில்” ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்*
[6:141]பந்தல்களில் படரவிடப்பட்டதும், படரவிடப் படாததுமான தோட்டங்களையும், மேலும் பேரீத்த மரங்களையும், மேலும் வெவ்வேறு சுவைகளை யுடைய விளைச்சல்களையும், மேலும் ஒலிவத் தையும், மேலும் மாதுளையையும், ஒரே மாதிரியானவை களாக இருந்த போதிலும் வெவ்வேறானவைகளான கனிகளையும் நிர்மானித்தவர் அவரே ஆவார். அவற்றின் கனிகளிலிருந்து உண்ணுங்கள், மேலும் கொடுக்கப்படவேண்டிய தர்மத்தை அறுவடை நாளின் போதே கொடுத்து விடுங்கள்,* மேலும் எதனையும் வீணாக்காதீர்கள். வீணாக்குபவர் களை அவர் நேசிப்பதில்லை.

அடிகுறிப்பு:
*6:141 ஜகாத் தர்மம் மிக முக்கியமானது, எந்த அளவிற்கெனில், மிக்க கருணையாளர், அதனைக் கொடுப்பவர்களுக்கென்று தன் கருணையை வரையறுத்துள்ளார் (7:156). ஆயினும், சீர் கெட்டுப்போன முஸ்லிம்கள் இந்த மிக முக்கியமான கட்டளையைத் தவற விட்டு விட்டனர்; அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஜகாத்தைக் கொடுக்கின்றனர். “நாம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நாள்” அன்றே ஜகாத் கொடுக்கப்பட்டு விட வேண்டும் என்பதை நாம் இங்கே காண்கின்றோம்.ஆப்ரஹாம் மூலம் நமக்கு வந்துள்ள விகிதம், நமது நிகர வருமானத்தில் 2.5% ஆகும்.
[6:142]சில கால்நடைகளைக் கொண்டு உங்களுடைய போக்குவரத்துத் தேவைகளும் அதேபோல் படுக்கை சாதனங்களின் தேவைகளும் நிறைவு செய்யப்படு கின்றன. உங்களுக்குரிய கடவுள்-ன் வாழ் வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் சாத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; அவன் உங்களுக்கு மிகத் தீவிரமான விரோதி யாவான்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உணவுத்தடைகள் கண்டனம் செய்யப்படுகின்றது
[6:143] எட்டு வகைக் கால் நடைகள்: செம்மறியாட்டின் இரு வகைகள் மற்றும் வெள்ளாட்டின் இருவகை கள் குறித்து, “இரு ஆணாடுகளையோ, அல்லது இரு பெட்டைகளையோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளாரா? நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறுவீராக.
[6:144]இரு வகையான ஒட்டகங்கள் மற்றும் இரு வகையான கால்நடைகள் குறித்து, இரு ஆண்களையோ அல்லது இரு பெட்டைகளை யோ அல்லது இரு பெட்டைகளின் கர்ப்பங் களில் உள்ளவற்றையோ அவர் தடுத்துள்ளா ரா? இத்தகைய தடைகளை உங்களுக்கு கடவுள் விதித்த போது நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? இத்தகைய பொய்களைக் கண்டு பிடித்தவர்களையும் அதனை கடவுள் மேல் இட்டுக்கட்டியவர்களையும் விட மிகத் தீயவர்கள் யார்? அவர்கள் இவ்வாறு அறிவில்லாது மக்களைத் தவறாக வழி நடத்து கின்றனர். கடவுள் இத்தகைய தீயவர்களை வழி நடத்துவதில்லை” என்று கூறுவீராக.
உணவுத் தடைகள் இவை மட்டுமே
[6:145]“எனக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில் எந்த ஒரு உணவும் உண்ணக்கூடிய எவருக்கும் இவற்றைத் தவிர தடைசெய்யப்பட்டதாக நான் காணவில்லை, (1) இறந்தவற்றின் இறைச்சி (2) ஓடுகின்ற இரத்தம், (3) பன்றிகளின் இறைச்சி,* ஏனெனில் அது அசுத்தமாக இருப்பதால் மேலும் (4) கடவுள் அல்லாத மற்றவர்களுக்கு இறை நிந்தனையாக அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சி,” என்று கூறுவீராக. வேண்டுமென்றோ அல்லது கெட்ட எண்ணத் துடனோ இல்லாத நிலையில் ஒருவர் (இவற்றை உண்பதற்கு) நிர்பந்திக்கப்பட்டால், பின்னர் உங்களுடைய இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அடிகுறிப்பு:
*6:145-146 நான்கு வகையான பிராணிகளின் பலன்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது : தானாகச் செத்த பிராணிகள், ஓடுகின்ற இரத்தம், (இறைச்சியோடு ஒட்டிக் கொண்டிருப்பது அல்ல) பன்றிகளின் இறைச்சி, அவற்றைப் படைத்தவருக்கு அல்லாமல் மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகள். இத்தகைய தடைகள் மிகவும் திட்டவட்டமானது என்பதை வசனம் 146 நமக்கு தெரிவிக்கின்றது. கடவுள் நாடியிருந்தால் “இறைச்சியையோ” அல்லது “கொழுப்பையோ” அல்லது “இவ்விரண்டையுமோ” தடை செய்திருப்பார்.
[6:146]நாம் யூதர்களாக இருப்பவர்களுக்கு பிளவு படாத குளம்புகளுடைய பிராணிகளை தடை செய்தோம்: மேலும் கால்நடைகள் மற்றும் செம்மறியாட்டினுடைய கொழுப்பை நாம் தடை செய்தோம். அவற்றின் முதுகுகளின் மேலுள்ள வை அல்லது உள்ளுறுப்புகளில் உள்ளவை அல்லது எலும்புகளோடு கலந்திருப்பவை தவிர, அது அவர்களுடைய வரம்புமீறல்களுக்கான தண்டனையாக இருந்தது, மேலும் நாம் உண்மையே கூறுகின்றோம்.

அடிகுறிப்பு:
*6:145-146 நான்கு வகையான பிராணிகளின் பலன்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது : தானாகச் செத்த பிராணிகள், ஓடுகின்ற இரத்தம், (இறைச்சியோடு ஒட்டிக் கொண்டிருப்பது அல்ல) பன்றிகளின் இறைச்சி, அவற்றைப் படைத்தவருக்கு அல்லாமல் மற்றவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகள். இத்தகைய தடைகள் மிகவும் திட்டவட்டமானது என்பதை வசனம் 146 நமக்கு தெரிவிக்கின்றது. கடவுள் நாடியிருந்தால் “இறைச்சியையோ” அல்லது “கொழுப்பையோ” அல்லது “இவ்விரண்டையுமோ” தடை செய்திருப்பார்.
[6:147]அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், பின்னர் “உங்களுடைய இரட்சகர் எல்லையற்ற கரு ணையை உடையவராகயிருக்கின்றார்,ஆனால் அவருடைய தண்டனை தீயவர்களுக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது” என்று கூறுவீராக.
[6:148]இணைத்தெய்வங்களை வழிபடுபவர்கள் “கடவுள் நாடியிருந்தால் நாங்களோ, எங்கள் பெற்றோர்களோ இணைத் தெய்வங்களின் வழிபாட்டை அனுஷ்டித்திருக்க மாட்டோம், மேலும் எந்த ஒன்றையும் நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றார் கள். இவ்விதமாகவே அவர்களுக்கு முன் னிருந்தவர்களும், நம்முடைய தண்டனைக்கு அவர்கள் உள்ளாகும் வரை, நம்பமறுத்தனர். “நீங்கள் எங்களுக்கு காட்டக் கூடிய நிரூபிக்கப் பட்ட அறிவாதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா? நீங்கள் பின்பற்றுவது கற்பனைகளைத் தவிர வேறொன்றுமில்லை, நீங்கள் ஊகிக்க மட்டுமே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
மிகவும் சக்தி வாய்ந்த வாதம்
[6:149]“கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த வாதத்தைத் தன் வசம் வைத்திருக்கின்றார், அவர் நாடினால் உங்கள் அனைவரையும் அவரால் வழி நடத்த இயலும்,” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*6:149 குர்ஆனுடைய கணிதக் குறியீடு, இது உலகத்திற்கு கடவுளுடைய செய்தியாகும் என்பதற்கு தெளிவாகப் புரியக் கூடிய, முற்றிலும் மறுக்கவே முடியாத சான்றாக உள்ளது. இந்த அசாதாரணமான அற்புத நிகழ்வை வியந்து பாராட்டி பின்னர் சிரம் பணிந்து விழுந்து மேலும் வெற்றிகொள்ளக் கூடிய இந்த அற்புதத்தை ஏற்றுக் கொள்வதை விட்டும் எந்தவாசகரையும் தடுக்க, ஒரு தெய்வீகத்தடையால் மட்டுமே இயலும் (17:45-46, 18:57, 56:79 மற்றும் பின் இணைப்பு ஒன்றைப் பார்க்கவும்).
[6:150]“கடவுள் இதையோ அல்லது அதையோ தடை செய்திருக்கின்றார் என சாட்சியம் அளிக்கக் கூடிய உங்களுடைய சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் சாட்சியம் அளித்தால், அவர்களுடன் சாட்சியம் அளிக்காதீர்கள், அன்றியும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களுடைய, மேலும் மறுவுலகை நம்பமறுப்பவர்களுடைய மேலும் தங்களுடைய இரட்சகரிடமிருந்து விலகி வழி தவறியவர்களுடைய அபிப்ராயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.
முக்கியக் கட்டளைகள்
[6:151]“வாருங்கள், உங்களுடைய இரட்சகர் உண்மையாகவே உங்களுக்குத் தடை செய்திருப்பவற்றை நான் உங்களுக்குக் கூறுகின்றேன் : அவருடன் இணைத்தெய்வங் களை நீங்கள் ஏற்படுத்தக் கூடாது. உங்களு டைய பெற்றோர்களை நீங்கள் கண்ணியப் படுத்தவேண்டும். வறுமைக்கு அஞ்சி உங்களு டைய குழந்தைகளை நீங்கள் கொலை செய்யக் கூடாது-நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் வழங்குகின்றோம். வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் பாவங்களை நீங்கள் செய்யக்கூடாது. நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி-நீங்கள் கொலை செய்யக்கூடாது- கடவுள் உயிரைப் புனிதமாக்கியுள்ளார். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகள் ஆகும்” என்று கூறுவீராக.
கூடுதலான கட்டளைகள்
[6:152]அநாதைகளின் பணத்தை அவர்கள் முதிர்ச்சி அடையும் வரையில், நன்னெறிமிக்க முறை யிலன்றி நீங்கள் தொடக்கூடாது. நீங்கள் வியாபாரம் செய்யும்போது, நியாயத்தோடு முழு எடையையும், முழு அளவையும் நீங்கள் கொடுக்க வேண்டும். எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் சக்திக்கு மேல் நாம் சுமத்துவ தில்லை. உங்களுடைய உறவினர்களுக்கு எதிரானாலும் கூட, நீங்கள் சாட்சி சொல்லும் போது முற்றிலும் நீதத்தோடு நீங்கள் இருக்க வேண்டும். கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:153]இது என்னுடைய பாதையாகும் - நேரான ஒன்று. நீங்கள் இதனை பின்பற்ற வேண்டும், மேலும் அவருடைய பாதையிலிருந்து உங்களை அவை திருப்பிவிடாதிருக்கும் பொருட்டு, மற்ற பாதைகள் எதனையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் காப்பாற்றப்படும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகளாக இருக்கின்றன.
[6:154]மேலும் தங்களுடைய இரட்சகரின் சந்திப்பின் மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளும் பொருட்டு சிறந்த கட்டளைகளோடு, முழுமையாகவும் மேலும் அனைத்தையும் விவரிக்கக் கூடியதாகவும், மேலும் வழிகாட்டக் கூடியதாகவும், கருணையாகவும் உள்ள வேதத்தை மோஸஸிற்கு நாம் கொடுத்தோம்.
[6:155]நாம் வெளிப்படுத்தியுள்ள இதுவும் பாக்கியமிக்கதொரு வேதமாகும்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் இதனை பின்பற்றி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்த வேண்டும்.
[6:156]“இப்பொழுது, எங்களுக்கு முன்னிருந்த இரு கூட்டத்தாருக்குதான் வேதம் இறக்கப்பட்டது, மேலும் அவற்றின் உபதேசங்களை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்,” என்று இனிமேலும் நீங்கள் கூற முடியாது.
கணிதம்: இறுதிச் சான்று
[6:157]அன்றியும், “எங்களுக்கும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களை விடவும் நாங்கள் சிறப்பாக வழி நடத்தப்பட்டிருப்போம்,” எனவும் உங்களால் கூற முடியாது. ஒரு வழிகாட்டியாகவும், மேலும் ஒரு கருணை யாகவும், ஒரு நிரூபிக்கப்பட்ட வேதம் உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இப்பொழுது வந்துள்ளது. இப்பொழுது கடவுள் - இடமிருந்துள்ள இந்த சான்றுகளை நிராகரிப்பவனையும், மேலும் இவற்றை அலட்சியம் செய்பவனையும் விட மிகத் தீயவன் யார்? நம்முடைய சான்றுகளை அலட்சியம் செய்பவர்களை, அவர்களுடைய கவனக்குறை விற்காக மிக மோசமான தண்டனைக்கு நாம் உட்படுத்துவோம்.

அடிகுறிப்பு:
* 6:157 இவ்வசனத்தின் எண் (157) மற்றும் இக்குறியீட்டை வெளிப்படுத்திய ரஷாத் கலீஃபாவின் எழுத்தெண் மதிப்பு (1230) ஆகியவற்றின் கூட்டுத்தொகை 1387 அல்லது (19ஓ73) என கிடைக்கப்பெறும் இந்த உண்மையின் மூலம் குர் ஆனின் கணிதக் குறியீட்டின் பங்கு நமக்குத் தெளிவாகின்றது.
சோதனைக்கான தேவைகள்
[6:158]அவர்களிடம் வானவர்களோ அல்லது உம்முடைய இரட்சகரோ அல்லது உம்முடைய இரட்சகரின் சில நேரடி வெளிப்பாடுகளோ வருவதற்காக அவர்கள் காத்திருக்கின்ற னரா? இது நிகழும் நாளில், அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி அதன் மூலம் நம்பிக்கையின் பலன்களை அறுவடை செய்து கொள்ளாத எந்த ஓர் ஆன்மாவும் அப்போது நம்பிக்கை கொள்வதன் மூலம் பலன் அடைய முடியாது.* “காத்துக்கொண்டிருங்கள்; நாங்களும் காத் திருக்கின்றோம்” என்று கூறுவீராக

அடிகுறிப்பு:
* 6:158 நம்பிக்கை கொண்ட பின்னர், ஆன்மா, கடவுளால் விதிக்கப்பட்ட வழிபாட்டு அனுஷ்டானங்களின் மூலம் தன்னை வளர்த்து விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் சம்பந்தமாக பிரிவுகள் கண்டனம்செய்யப்படுகின்றது
[6:159]எவர்கள் தங்களையே பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கின்றனரோ அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய தீர்ப்பு கடவுள்-இடம் இருக்கின்றது, பின்னர் அவர் கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார்.
[6:160]எவரேனும் நன்னெறியானதொரு காரியம் செய்தால் பத்திற்கான வெகுமதியை பெறுகின்றார், மேலும் ஒருவர் ஒரு பாவம் செய்தால் அந்த பாவத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்கப் படுகின்றார். ஒருவரும் சிறிதளவும் அநீதியை அனுபவிக்க மாட்டார்கள்.
[6:161]“என்னுடைய இரட்சகர் என்னை நேரான பாதையில் வழி நடத்தியிருக்கின்றார். ஆப்ரஹாமுடைய சரியான மார்க்கம், ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடுபவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.
[6:162]கூறுவீராக, “என்னுடைய தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), என்னுடைய வழிபாட்டு முறைகள், என்னுடைய வாழ்வு மற்றும் என்னுடைய மரணம், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றது.
[6:163]“அவருக்குப் பங்குதாரர்கள் இல்லை. நான் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று கட்டளை யிடப்பட்டுள்ளது இதுவே ஆகும், மேலும் அடிபணிவதில் நான் முதன்மையாக இருக்கின்றேன்.”
[6:164]“எல்லாவற்றிற்கும் இரட்சகராக அவர் இருக்கும் போது, கடவுள் அல்லாத மற்றவற்றை இரட்சகராக நான் தேடுவேனா? எந்ததொரு ஆன்மாவும் அதன் சொந்த செயல் களிலிருந்தே தவிர வேறு பலனடையாது, மேலும் ஒருவரின் சுமைகளை மற்றெவரும் சுமக்க மாட்டார்கள். இறுதியாக, நீங்கள் உங்க ளுடைய இரட்சகரிடத்திலே திரும்புவீர்கள், பின்னர் உங்களுடைய அனைத்து தர்க்கங்கள் குறித்தும் உங்களுக்கு அவர் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.
[6:165]அவர் தான் உங்களை பூமியின் வாரிசுதாரர் களாக ஆக்கினார், மேலும் அவர் உங்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றிற்கு இணங்க உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை மற்றவர்களுக்கு மேலாக அந்தஸ்தில் அவர் உயர்த்தினார். நிச்சயமாக, உங்களுடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் திறன் வாய்ந்தவர், மேலும் அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.