சூரா 59: வெளியேற்றம் (அல்-ஹஷ்ர்)

[59:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[59:1] வானங்கள், மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக் கின்றன, மேலும் அவர் தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
நம்பிக்கையாளர்களைக் கடவுள் பாதுகாக்கின்றார்
[59:2] அவர்தான், வேதத்தையுடைய மக்களுக்கிடையில் நம்பமறுத்தவர்களை அவர்களுடைய இல்லங் களிலிருந்து ஒரு பெரிய எண்ணிக்கையிலான வெளியேற்றமாக வெளியேற்றியவர். அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள் என்று நீங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை, மேலும் அவர்கள் தங்களுடைய ஏற்பாடுகள் கடவுள்- இடமிருந்து தங்களைக் காப்பாற்றி விடுமென்று அவர்கள் நினைத்தனர். ஆனால் பின்னர் கடவுள் அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத புறத்திலிருந்து அவர்களிடம் வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். இவ்விதமாக, அவர்கள் தங்கள் சுயமான முடிவின் படியே, கூடுதலாக நம்பிக்கையாளர் களிடமிருந்து நெருக்கடியினாலும் தங்களுடைய இல்லங்களை துறந்தனர். பார்வையுடைய வர்களே, இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
[59:3] வெளியேறும்படி அவர்களைக் கடவுள் நிர்ப்பந்தித்திருக்காவிட்டால், (வெளியேறும்படி அவர்களை நிர்ப்பந்தித்ததைவிட இன்னும் மிக மோசமாக) இவ்வுலகில் அவர்களை அவர் பழிவாங்கியிருப்பார். மறுவுலகில் நரகத்தின் தண்டனைக்கென அவர்களை அவர் ஒப்படைத்து விடுவார்.
[59:4] இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்த்தனர். கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப் பவர்களுக்கு, தண்டனையை நிறைவேற்று வதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.
[59:5] ஒரு மரத்தை நீங்கள் வெட்டிவிட்டாலும், அல்லது அதன் அடித்தண்டுடன் அதனை விட்டு விட்டாலும், அது கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது. தீயவர்களை நிச்சயமாக அவர் இழிவுபடுத்துவார்.
[59:6] கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், அது உங்களுடைய போர் முயற்சியின் விளைவால் கிடைத்ததல்ல, நீங்கள் குதிரைகளிலோ அல்லது கால்களிலோ போரிட்ட போதிலும் சரியே. கடவுள் தான் அவர் நாடுகின்ற எவருக்கும் எதிராகத் தன்னுடைய தூதர்களை அனுப்புகின்றவர். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
போரில் கைப்பற்றப்படும் பொருட்கள்
[59:7] (தோற்கடிக்கப்பட்ட) சமூகங்களிடமிருந்து கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், (ஒரு தர்மம் என்ற முறையில்) கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் சென்றடைய வேண்டும். நீங்கள் அதனை உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், ஏழைகளுக்கும், மேலும் வழிப்போக் கர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வித மாக, அது உங்களுக்கிடையில் உள்ள பலம் பொருந்தியவர்களின் தனி உரிமையுடைய தாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்காது. தூதரால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம், ஆனால் எவற்றை எடுத்துக் கொள்வதிலிருந்து அவர் உங்களைத் தடுக்கின்றாரோ அவற்றை எடுத்துக் கொள்ளா தீர்கள். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். தண்டனையை நிறை வேற்றுவதில் கடவுள் கண்டிப்பானவர்.
[59:8] குடி பெயர்ந்து வந்திருக்கின்ற தேவையுடைய வர்களுக்கு (நீங்கள் கொடுக்க வேண்டும்.) கடவுள்-ன் அருளையும் மற்றும் பிரியத்தையும் தேடிய காரணத்தாலும், மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் ஆதரவளித்த காரணத்தாலும், அவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப் பட்டன. அவர்கள்தான் உண்மையாளர்கள்.
[59:9] அவர்களுக்கு முன்னரே நம்பிக்கையாளர் களாக இருந்து கொண்டு, மேலும் அவர்களுக்கு ஓர் இல்லமும், ஒரு புகலிடமும் வழங்கியவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களிடம் குடி பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கின்றனர், மேலும் அவர்களுக்கு உதவி செய்வதில் அவர்களுடைய இதயங்களில் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. உண்மையில், அவர்கள் கொடுத்து விடுபவைகளின் தேவை அவர்களுக்கே இருந்த பொழுதும், அவர்கள் தங்களுக்கும் மேலாக அவர்களுக்கு உடனடியாக முன்னுரிமை கொடுக்கின்றனர். உண்மையில், தங்களுடைய இயல்பான கஞ்சத்தனத்தை வெல்பவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
[59:10] அவர்களுக்குப் பின்னர் நம்பிக்கையாளர் களாக ஆனவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களையும் மேலும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பீராக, மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் பால் எந்த வெறுப்பும் கொண்டிருப்பதிலிருந்து எங்கள் இதயங்களைத் தடுத்து விடுவீராக. எங்கள் இரட்சகரே, நீர் இரக்கமுடையவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றீர்” என்று கூறுகின்றனர்.
[59:11] நயவஞ்சகத்தால் பீடிக்கப்பட்டவர்களை, மேலும் வேதத்தையுடைய மக்களுக்கிடையில் நம்பமறுத்தலில் உள்ள தங்களுடைய தோழர் களிடம் அவர்கள், “நீங்கள் வெளியேற்றப் பட்டால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து வெளியில் வந்து விடுவோம், மேலும் உங்களை எதிர்க்கின்றவர்கள் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் கீழ்ப்படிய மாட்டோம். எவரேனும் உங்களுடன் சண்டையிட்டால், உங்களுடைய அணியில் நாங்கள் சண்டையிடுவோம்” என்று எவ்வாறு அவர்கள் கூறினார்கள் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா. அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு கடவுள் சாட்சி கூறுகின்றார்.
[59:12] மெய்யாகவே, அவர்கள் வெளியேற்றப் பட்டிருந் தால், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வெளி யேறிச்சென்று இருக்க மாட்டார்கள், மேலும் எவரேனும் அவர்களுடன் சண்டையிட்டிருந் தால், அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித் திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித்திருந்தாலும் அவர்கள் புறங் காட்டித் திரும்பி ஓடியிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க இயலாது.
[59:13] உண்மையில், கடவுள் மீது அவர்களுடைய அச்சத்தைக் காட்டிலும், அவர்களுடைய இதயங்களில் அதிகமான அச்சத்தை நீங்கள் ஏற்படுத்துகின்றீர்கள். இது ஏனெனில், அவர்கள் கிரகித்துக்கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.
[59:14] நன்கு பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் ளோ அல்லது சுவர்களுக்குப் பின்னாலோ அவர் கள் இருந்தாலேயன்றி உங்களுடன் சண்டை யிட அவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களுக்கிடையில், அவர்களுடைய பலம் எதிர்க்க இயலாததைப் போன்று தோன்று கின்றது. அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக நீர் நினைக்கக் கூடும், ஆனால் உண்மையில் அவர்களுடைய இதயங்கள் பிரிந்திருக் கின்றன. இது ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.
[59:15] அவர்களுடைய விதி அவர்களுக்கு முன்னிருந்த அவர்களைப் போன்ற சகாக் களுடைய விதியைப் போன்றதேயாகும். அவர் களுடைய தீர்மானங்களின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[59:16] அவர்கள் சாத்தானைப் போன்றவர்கள் ஆவர்; அவன் மனிதனிடம், “நம்ப மறுத்து விடு,” என்று கூறுகின்றான், பின்னர் அவன் நம்ப மறுத்து விட்டவுடன், அவன், “நான் உன்னைக் கைவிடுகின்றேன். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ஐ நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகின்றான்.
[59:17] அவர்கள் இருவருக்கும் உரிய விதியானது நரக நெருப்பேயாகும், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக் குரிய கைம்மாறு இதுவேயாகும்.
[59:18] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்காக முற் படுத்தி அனுப்பியிருப்பது என்ன என்பதைப் பரிசீலித்துக் கொள்ளட்டும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.
[59:19] கடவுள்-ஐ மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்கள் இருக்கக் கூடாது, அதனால் அவர்கள் தங்களையே மறந்து விடுமாறு அவர் செய்து விட்டார். இவர்கள் தான் தீயவர்கள்.
[59:20] நரக நெருப்பில் வசிப்பவர்களும், மேலும் சுவன த்தில் வசிப்பவர்களும் சமமாக மாட்டார்கள்; சுவனத்தில் வசிப்பவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
குர்ஆனின் மகத்துவம்
[59:21] இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் வெளிப்படுத்தியிருப்போமாயின் கடவுள்-ன் மீதுள்ள அச்சத்தால் அது நடுநடுங்கி பொடிப் பொடியாகி இருப்பதை நீர் கண்டிருப்பீர், அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக, இத்தகைய உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
கடவுள்
[59:22] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புக்களையும் அறிந் தவர். அவர்தான் மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[59:23] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அரசர், மிகப் புனிதமானவர், அமைதியுடையவர், மிகுந்த நம்பிக்கைக் குரியவர், மேலான அதிகாரம் மிக்கவர், சர்வ வல்லமையுடையவர், மிகவும் சக்திநிறைந்தவர், மிகவும் கௌரவமானவர், கடவுள் துதிப்பிற் குரியவர்; பங்காளிகள் கொண்டிருப்பதை விடவும் மிக மேலானவர்.
[59:24] அவர்தான் ஒரே கடவுள். படைப்பாளர், ஆரம்ப கர்த்தா, வடிவமைப்பவர். மிகவும் அழகிய பெயர் கள் அவருக்கேயுரியது. வானங்கள் மற்றும் பூமி யில் உள்ள ஒவ்வொன்றும் அவரைத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.