சூரா 56: தவிர்க்க இயலாதது (அல்-வாகி‘ஆ)

[56:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[56:1] தவிர்க்க இயலாதது நிகழ்ந்தேறும் பொழுது.
[56:2] அது நிகழ்வதை எந்த ஒன்றும் தடுக்க இயலாது.
[56:3] அது சிலரைத் தாழ்த்தும், மேலும் மற்றவர்களை உயர்த்தும்.
[56:4] பூமி குலுக்கப்படும்.
[56:5] மலைகள் துடைத்தெடுக்கப்படும்.
[56:6] அவை ஒருபோதும் இருந்திராதவற்றைப் போல.
[56:7] மூன்று விதங்களில் நீங்கள் தரம் பிரிக்கப் படுவீர்கள்.
[56:8] பேரானந்தத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பேரானந்தத்தில் இருப்பார்கள்.
[56:9] பெருந்துன்பத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பெருந்துன்பத்தில் இருப்பார்கள்.
[56:10] பின்னர் அங்கே மேன்மையானவர்களில் மேன்மையானவர்களும் இருக்கின்றனர்.
[56:11] அவர்கள் தான் (கடவுளுக்கு) மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
[56:12] பேரானந்தத் தோட்டங்களில்.
[56:13] முதல் தலைமுறையினரிலிருந்து ஏராள மானவர்கள்.*

அடிகுறிப்பு:
*56:13-40 நம்பிக்கை கொண்டு கடவுளை மட்டும் வழிபடுவதன் மூலம் தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டப்படுத்திக் கொள்கின்ற மக்கள் மேலான சுவனத்திற்கு என்று விதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தூதரையும் பின்பற்றுகின்ற சமகாலத்தவர்கள், மாற்றமின்றி பரம்பரை வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மற்றும் சீர்கெட்டுப் போன மார்க்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களால் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இதனால், மேலான சுவனத்தில் ஒரு சிறப்பான இடம் அவர்களுக்குகென ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு முன்னர் மரணிக்கின்ற அனைவரும், குறைந்த பட்சம் கீழான சுவனத்திற்குச் செல்கின்றனர் (46:15).
[56:14] பிந்திய தலைமுறையினரிலிருந்து ஒரு சிலர்.
[56:15] ஆடம்பரமான இருக்கைகளில்.
[56:16] ஒவ்வொன்றையும் அனுபவித்தவாறு, அவர்கள் அருகருகில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
[56:17] அவர்களுக்குப் பணிபுரிபவர்கள் என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்களாக இருப்பார்கள்.
[56:18] கிண்ணங்கள், கூஜாக்கள் மற்றும் தூய்மை யான பானங்களுடன்.
[56:19] அவை ஒருபோதும் தீர்ந்து போகாது, அன்றி அவர்கள் சலிப்படையவும் மாட்டார்கள்.
[56:20] அவர்களுடைய விருப்பத்தின்படி தேர்ந்தெடுக் கின்ற பழங்கள்.
[56:21] அவர்கள் விரும்புகின்ற பறவைகளின் இறைச்சி.
[56:22] அழகிய ஜோடிகள்.
[56:23] பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல்.
[56:24] அவர்களுடைய செயல்களுக்குரிய வெகுமதிகள்.
[56:25] அங்கே அவர்கள் அபத்தமான எதனையுமோ, அன்றிப் பாவகரமான கூற்றுக்களையோ ஒரு போதும் செவிமடுக்க மாட்டார்கள்.
[56:26] “அமைதி, அமைதி” என்று மட்டுமே கூறப்படும்.
கீழ் சுவனம்
[56:27] வலது புறத்தவர்கள், வலது புறத்தில் இருப்பார்கள்.
[56:28] செழிப்பான பழத்தோட்டங்களில்.
[56:29] மணம் பரப்பும் பழங்கள்.
[56:30] விரிந்த நிழல்.
[56:31] அபரிமிதமான தண்ணீர்.
[56:32] ஏராளமான பழங்கள்.
[56:33] ஒருபோதும் முடிவுறாதவை; ஒருபோதும் தடுக்கப்படாதவை.
[56:34] ஆடம்பரமான இருக்கைகள்.
[56:35] அவர்களுக்காக நாம் ஜோடிகளைப் படைக்கின்றோம்.
[56:36] முன்னர் ஒரு போதும் தொடப்பட்டிராதவர்கள்.
[56:37] மிகச் சரியான பொருத்தமுடையவர்கள்.
[56:38] வலது புறத்தில் இருப்பவர்களுக்காக.
[56:39] ஆரம்பகாலத் தலைமுறையினரிலிருந்து ஏராளமானவர்கள்.
[56:40] பிந்திய தலைமுறையினரிலிருந்து ஏராள மானவர்கள்.*

அடிகுறிப்பு:
*56:40 56:13 -40க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
நரகம்
[56:41] இடது புறத்தவர்கள், இடது புறத்தில் இருப்பார்கள்.
[56:42] துன்பத்திலும் தீக்கனலிலும்.
[56:43] அவற்றின் நிழல் கூட வெப்பமானது.
[56:44] ஒருபோதும் குளுமை இராது, ஒரு போதும் தாங்க இயலாது.
[56:45] அவர்கள் செல்வந்தர்களாகவே இருந்து வந்தனர்.
[56:46] அவர்கள் மகத்தான இறை நிந்தனையில் பிடிவாதமாக இருந்தனர்.
[56:47] அவர்கள் கூறினர், “ நாம் இறந்து போய் மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படுவோமா?
[56:48] “இதில் நம்முடைய மூதாதையர்களும் உட்படு வார்களா?”
[56:49] கூறுவீராக, “ஆரம்ப காலத் தலைமுறை யினரும் பிந்திய தலைமுறையினரும்.
[56:50] “முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு நாளின் ஒரு சந்திப்பிற்கென ஒன்று கூட்டப்படுவார்கள்.
[56:51] “அதன் பின்னர், நம்ப மறுக்கின்ற வழி தவறியோரே, நீங்கள்.
[56:52] “கசப்புத்தன்மையுள்ள மரங்களிலிருந்து உண்ணுவீர்கள்.
[56:53] “அதன் மூலம் உங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வீர்கள்.
[56:54] “பின்னர் அதற்கு மேல் நரக பானங்களை அருந்துவீர்கள்.
[56:55] “பின்னர் மணல் கலந்த பானங்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்”.
[56:56] தீர்ப்பு நாளன்று அவர்களுடைய பங்கு இத்தகையதேயாகும்.
சிந்தனைகள்
[56:57] நாமே உங்களைப் படைத்திருக்கின்றோம், உங்களால் நம்பிக்கை கொள்ள மட்டும் இயன்றால்!
[56:58] நீங்கள் உண்டு பண்ணுகின்ற விந்தினை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:59] அதனை நீங்கள் படைத்தீர்களா, அல்லது நாமா?
[56:60] உங்களுக்கு மரணத்தை நாம் முன்னரே தீர்மானித்து விட்டோம். எந்த ஒன்றும் நம்மைத் தடுக்க இயலாது-
[56:61] உங்களுடைய இடத்தில் புதிய தலைமுறையினரை நாம் மாற்றியமைப் பதிலிருந்தும், மேலும் நீங்கள் அறியாதவற்றை நிலை நிறுத்துவதில் இருந்தும்.
[56:62] முதல் படைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு நினைவில்லையா?
[56:63] நீங்கள் அறுவடை செய்கின்ற பயிர்களை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:64] அதனை நீங்கள் வளர்த்தீர்களா, அல்லது நாமா?
[56:65] நாம் நாடினால், அதனைக் கூளமாக மாற்றி விட நம்மால் இயலும், பின்னர் நீங்கள் புலம்புவீர்கள்:
[56:66] “நாம் நஷ்டப்பட்டு விட்டோம்.
[56:67] “நாம் இழப்பிற்குள்ளாகி விட்டோம்.”
[56:68] நீங்கள் அருந்துகின்ற தண்ணீரை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:69] மேகங்களிலிருந்து அதனை நீங்கள் கீழே அனுப்பினீர்களா, அல்லது நாமா?
[56:70] நாம் நாடினால், அதனை உப்புச்சுவையுடைய தாக ஆக்கிவிட நம்மால் இயலும். நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
[56:71] நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:72] அதன் மரத்தை நீங்கள் துவக்கினீர்களா, அல்லது நாமா?
[56:73] அதனை ஒரு நினைவூட்டலாகவும், மேலும் உபயோகிப்பவர்களுக்கு உபயோகமானதொரு சாதனமாகவும் நாம் தந்தோம்.
[56:74] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.
உண்மையானவர்கள் மட்டுமே குர்ஆனைப் புரிந்து கொள்ள இயலும்
[56:75] நட்சத்திரங்களின் நிலைகளின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

அடிகுறிப்பு:
*56:75-76 ஏழு பிரபஞ்சங்களில் மிகச்சிறியதும் மிகவும் உள்ளார்ந்ததுமான, நம்முடைய பிரபஞ்சம், பல நூறு கோடி பால் வெளி மண்டலங்களையும், நூறு கோடி, பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையும், மற்றும் பல நூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்கக் கூடிய அளவு பரந்து விரிந்த பரப்பளவையும் கொண்டுள்ளது. இந்த எண்ணற்ற கோடானு கோடிக்கணக்கான விண்ணகப் பொருட்கள் தெய்வீகமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, மிகச் சரியாக தங்களுடைய சுற்றுப்பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. எவ்வளவு அதிகம் நாம் கற்றுக் கொள்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக இந்தப் பிரமாணம் எந்த அளவு அச்சுறுத்துகின்றதாக உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம். பின் இணைப்பு 6 ஐப் பார்க்கவும்.
[56:76] இது ஒரு பிரமாணமாகும், நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், அது அச்சுறுத்துகின்ற தாகும்.*

அடிகுறிப்பு:
*56:75-76 ஏழு பிரபஞ்சங்களில் மிகச்சிறியதும் மிகவும் உள்ளார்ந்ததுமான, நம்முடைய பிரபஞ்சம், பல நூறு கோடி பால் வெளி மண்டலங்களையும், நூறு கோடி, பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையும், மற்றும் பல நூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்கக் கூடிய அளவு பரந்து விரிந்த பரப்பளவையும் கொண்டுள்ளது. இந்த எண்ணற்ற கோடானு கோடிக்கணக்கான விண்ணகப் பொருட்கள் தெய்வீகமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, மிகச் சரியாக தங்களுடைய சுற்றுப்பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. எவ்வளவு அதிகம் நாம் கற்றுக் கொள்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக இந்தப் பிரமாணம் எந்த அளவு அச்சுறுத்துகின்றதாக உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம். பின் இணைப்பு 6 ஐப் பார்க்கவும்.
[56:77] இது கண்ணியமானதொரு குர்ஆன் ஆகும்.
[56:78] பாதுகாக்கப்பட்டதொரு புத்தகத்தில் உள்ளது.
[56:79] உண்மையானவர்களைத் தவிர எவரும் இதனைக் கிரகிக்க இயலாது.*

அடிகுறிப்பு:
*56:79 குர்ஆன் மட்டும் என்பதில் திருப்தியடையாதவர்களாக உள்ள உண்மையில்லாதவர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்வதிலிருந்து தெய்வீகமான முறையில் தடுக்கப்பட்டு விடுகின்றனர். இந்தக் கருத்து குர்ஆன் முழுவதிலும் மீண்டும் மீண்டும் உள்ளது (17:45-46, 18:57). அதன் விளைவாக, அவர்களால் இந்த வசனத்தை புரிந்து கொள்ள இயலாது. உதாரணத்திற்கு, 7:3, 17:46, 41:44 , & 56:79க்கான இந்த மொழிபெயர்ப்பை மற்ற மொழி பெயர்ப்புக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
[56:80] பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ளதொரு வெளிப்பாடு.
[56:81] இந்த விவரிப்பையா நீங்கள் புறக்கணிக் கின்றீர்கள்?
[56:82] நம்பமறுப்பதையே நீங்கள் உங்களுடைய வேலையென நீங்கள் ஆக்கிக் கொண்டு விட்டீர்களா?
[56:83] நேரம் வரும்பொழுது மேலும் அது (உங்களு டைய ஆன்மா) உங்களுடைய தொண்டையை அடையும் பொழுது-
[56:84] அப்போது நீங்கள் சுற்றுமுற்றும் நோக்குவீர்கள்.
[56:85] நீங்கள் இருப்பதை விடவும் அதற்கு நெருக்க மாக நாம் இருக்கின்றோம், ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை.
[56:86] நீங்கள் எந்தக் கணக்கும் கொடுக்க கடமைப் பட்டிருக்கவில்லை என்பது உண்மையானால்-
[56:87] ஏன் (உங்களுடைய ஆன்மாவை) நீங்கள் பழைய நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்?
[56:88] எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் இருந்தால் -
[56:89] பின்னர் சந்தோஷம், மலர்கள், மேலும் பேரானந்தத் தோட்டங்கள்.
[56:90] மேலும் வலப்புறத்தவர்களில் ஒருவராக அவர் இருந்தால்-
[56:91] வலப்புறத்தவர்களுக்குரிய பங்கு அமைதியே ஆகும்.
[56:92] ஆனால் நம்ப மறுப்பவர்களில், வழிதவறியவர் களில் ஒருவனாக அவன் இருந்தால் -
[56:93] பின்னர் தீக்கனலின் ஒரு தங்குமிடம்-
[56:94] மேலும் நரகத்தில் எரிதல்.
[56:95] இதுவே பூரணமான சத்தியமாகும்.
[56:96] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.