சூரா 55: மிக்க அருளாளர் (அல்-ரஹ்மான்)

[55:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[55:1] மிக்க அருளாளர்.
[55:2] குர்ஆனின் ஆசிரியர்.
[55:3] மனிதர்களின் படைப்பாளர்.
[55:4] பகுத்தறிவது எப்படியென அவர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்.
[55:5] சூரியனும் சந்திரனும் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
[55:6] நட்சத்திரங்களும் மரங்களும் சிரம் பணி கின்றன.
[55:7] வானத்தை அவர் நிர்மாணித்தார், மேலும் விதிமுறையினை நிலைநாட்டினார்.
[55:8] நீங்கள் விதிமுறையில் வரம்பு மீறக்கூடாது.
[55:9] நீங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும்; விதிமுறையினை மீறக் கூடாது.
[55:10] அனைத்துப் படைப்புகளுக்காகவும் பூமியை அவர் படைத்தார்.
[55:11] அதிலே பழங்களும், அவற்றில் தொங்குகின்ற பழக்குலைகளுடன் கூடிய பேரீத்தம் மரங்கள் உள்ளன.*

அடிகுறிப்பு:
*55:11 பூமியெனும் விண்வெளிக்கலத்தின் புதுப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளையும் இனப்பெருக்கம் செய்கின்ற விண்வெளிப் பயணிகளையும், நாம் விண்வெளிக்குள் மிதக்க விடுகின்ற அதிநவீன விண்வெளிக்கலங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். கடவுள் துதிப்பிற்குரியவர்.
[55:12] அத்துடன் தானியங்களும் வாசனைப் பொருட்களும்.
[55:13] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:14] குயவனின் களிமண்ணைப் போன்ற, முற்றிய களிமண்ணிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.
[55:15] மேலும் சுடர் விட்டெரியும் நெருப்பிலிருந்து ஜின்களைப் படைத்தார்.
[55:16] (மனிதர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:17] இரு கிழக்குகள் மற்றும் இரு மேற்குகளின் இரட்சகர்.
[55:18] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:19] இருகடல்களையும், அவை சந்திக்குமிடத்தில் அவர் பிரிக்கின்றார்.
[55:20] எல்லை மீறுவதை விட்டு அவற்றைத் தடுப்பதற்காக, அவற்றிற்கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
[55:21] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:22] அவை இரண்டிலிருந்தும் முத்துக்களும் பவளங்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.
[55:23] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:24] கடலில் சுற்றிவரும் கொடிகளைப் போன்ற கப்பல்களை அவர் உங்களுக்குத் தந்தார்.
[55:25] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:26] பூமியிலுள்ள ஒவ்வொருவரும் அழிந்து விடுவார்கள்.
[55:27] உம்முடைய இரட்சகரின் வருகை மட்டுமே நிலைத்திருக்கும். மாட்சிமை மற்றும் கண்ணியம் உடையவர்.
[55:28] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:29] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும் அவரை இறைஞ்சிப் பிரார்த்திக் கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவர் முழுமை யான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்.
[55:30] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:31] கணக்குக் கொடுப்பதற்காக உங்களை நாம் அழைப்போம், மனிதர்கள் மற்றும் ஜின்களே.
[55:32] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:33] ஜின்கள் மற்றும் மனிதர்களே, வானங்கள் மற்றும் பூமியின் வெளிப்புற எல்லைகளை உங்களால் ஊடுருவ இயலுமானால்,தொடர்ந்து சென்று ஊடுருவிக் கொள்ளுங்கள். அதிகாரம் இன்றி உங்களால் ஊடுருவ இயலாது.
[55:34] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:35] நெருப்பு மற்றும் உலோகத்தினாலான ஏவுகணைகளால் நீங்கள் தொடர்ந்து தாக்கப்படுவீர்கள், மேலும் உங்களால் ஜெயிக்க இயலாது.
[55:36] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:37] வானம் உடைந்து சிதறி, மேலும் வர்ணம் போல ரோஜா நிறமாக மாறி விடும்போது.
[55:38] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:39] அந்நாளில், எந்த மனிதனிடமோ, அன்றி எந்த ஜின்னிடமோ, அவனுடைய பாவங்களைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது.
[55:40] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:41] (இது ஏனெனில்) குற்றவாளிகள் அவர்களு டைய தோற்றங்களைக் கொண்டே அடையா ளம் கண்டு கொள்ளப்படுவார்கள்; நெற்றிமுடி மற்றும் கால்களைப் பிடித்து அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்.
[55:42] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:43] இதுதான் குற்றவாளிகள் மறுத்துக் கொண் டிருந்த ஜஹன்னாவாகும்.
[55:44] அதற்கும் மேலும் தாங்க இயலாததொரு தீக்கனலுக்கும் இடையில் அவர்கள் சுழன்று வருவார்கள்.*

அடிகுறிப்பு:
*55:44 உயர்வான சுவனம் , கீழான சுவனம், ஆன்மா தூய்மையடையும் இடம், நரகம், மற்றும் தாங்க இயலாத தீக்கனல் ஆகியன பற்றிய முழு விபரங்கள் பின் இணைப்பு 5 மற்றும் 11-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
[55:45] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:46] தங்களுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சுபவர்களுக்கு, இருதோட்டங்கள் (ஜின்களுக்கு ஒன்று மேலும் மனிதர்களுக்கு ஒன்று).
[55:47] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:48] வாழ்வாதாரங்கள் நிரம்பியவை.
[55:49] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:50] அவற்றில் இரு ஊற்றுக்கள், ஓடிக் கொண்டு இருக்கின்றன.
[55:51] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:52] அவற்றில் ஒவ்வொரு பழங்களிலும், இருவகைகள்.
[55:53] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:54] பளபளக்கும் பட்டால் சுற்றிலும் நெய்யப்பட்ட இருக்கைகளில் அவர்கள் ஓய்வெடுக்கின்ற அச்சமயம், பழங்கள் கைக்கெட்டக் கூடியவை யாக இருக்கும்.
[55:55] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:56] அவர்களுடைய அழகிய ஜோடிகள் எந்த மனிதராலோ அல்லது ஜின்னாலோ ஒருபோதும் தொடப்பட்டிராதவர்கள்.
[55:57] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:58] அவர்கள் இரத்தினங்கள் மற்றும் பவளங்களைப் போன்று இருப்பார்கள்.
[55:59] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:60] நன்மைக்குரிய வெகுமதி நன்மையைத் தவிர வேறெதுவும் உண்டா?
[55:61] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:62] அவர்களுக்குக் கீழே இரு தோட்டங்கள் இருக்கின்றன (ஜின்களுக்கு ஒன்று மேலும் மனிதர்களுக்கு ஒன்று).
[55:63] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:64] அருகருகே.
[55:65] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:66] அவற்றில், இறைக்கப்பட வேண்டிய கிணறுகள்.
[55:67] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:68] அவற்றில் பழங்கள், பேரீத்தம் மரங்கள், மற்றும் மாதுளை.
[55:69] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:70] அவற்றில் அழகிய ஜோடிகள் உள்ளனர்.
[55:71] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:72] கூடாரங்களில் வரையறுக்கப்பட்டு உள்ளனர்.
[55:73] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:74] மனிதர் எவருமோ அன்றி ஒரு ஜின்னோ, எக்காலத்திலும் அவர்களைத் தொட்டதில்லை.
[55:75] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:76] பச்சை நிறக் கம்பளங்களின் மீது, அழகிய சூழல்களில் அவர்கள் ஓய்வு எடுப்பார்கள்.
[55:77] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[55:78] உம்முடைய இரட்சகரின் பெயர் மிகவும் உயர்வானது, மாட்சிமை மற்றும் கண்ணியம் உடையவர்.