சூரா 52: சினாய் மலை (அல்-தூர்)

[52:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[52:1] சினாய் மலை.
[52:2] பதிவு செய்யப்பட்ட வேதம்.
[52:3] புத்தகங்களில் வெளியிடப்பட்டது.
[52:4] அடிக்கடி தரிசிக்கப்படும் ஆலயம்.
[52:5] உயர்த்தப்பட்ட முகடு.
[52:6] பிரகாசமாக எரியச் செய்யப்பட்ட கடல்.
[52:7] உம்முடைய இரட்சகரின் கைம்மாறு தவிர்க்கப்பட இயலாதது.
[52:8] பிரபஞ்சத்தில் எந்தச் சக்தியும் அதனைத் தடுத்துவிட இயலாது.
[52:9] வானம் உக்கிரமாக இடிக்கும் அந்நாள் வரும்.
[52:10] மலைகள் துடைத்தெடுக்கப்பட்டு விடும்.
[52:11] நம்பமறுப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான் -
[52:12] தங்களுடைய மடத்தனமான தவறுகளில், கவனமில்லாமல் இருப்பவர்கள்.
[52:13] வலுக்கட்டாயமாக, ஜஹன்னாவிற்குள் அவர்கள் ஓட்டிச்செல்லப்படுவார்கள்.
[52:14] இதுதான் நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்த நெருப்பாகும்.
[52:15] இது மாயாஜாலமா, அல்லது நீங்கள் பார்க்க வில்லையா?
[52:16] எரிந்து துன்புறுங்கள். நீங்கள் பொறுத்துக் கொண்டோ அல்லது பொறுத்துக் கொள்ளாமலோ இருந்த போதிலும், அது உங்களுக்கு சமமாகவே இருக்கும். இதுவே நீங்கள் செய்தவற்றிற்கான நியாயமான கைம்மாறாகும்.
[52:17] நன்னெறியாளர்கள் தோட்டங்கள் மற்றும் பேரானந்தத்திற்கு தகுதி பெற்று விட்டனர்.
[52:18] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்காகத் தயார் செய்தவற்றை அவர்கள் அனுபவிப்பார்கள் ; அவர்களுடைய இரட்சகர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைப்பாதுகாத்து விட்டார்.
[52:19] உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதிபலனாக, மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.
[52:20] ஆடம்பரமான இருக்கைகளில் அவர்கள் ஓய்வை அனுபவிப்பார்கள், மேலும் அவர்களுக்காக அழகிய துணைகளை நாம் இணை சேர்ப்போம்.
[52:21] நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மேலும் நம்பிக்கையில் அவர்களைப் பின் தொடர்ந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும், நாம் அவர்களுடைய பிள்ளைகளை அவர்களுடன் சேர்ந்து கொள்ளச்செய்வோம். எந்தக் காரியத்திற்கும் அவர்களுக்கு வெகுமதியளிக்க நாம் ஒருபோதும் தவற மாட்டோம். ஒவ்வொரு மனிதரும் அவர் செய்தவற்றிற்குரிய கூலி கொடுக்கப்படுபவராக இருக்கின்றார்.
[52:22] அவர்கள் விரும்புகின்ற பழங்கள் மற்றும் இறைச்சிகளை அவர்களுக்கு நாம் வழங்குவோம்.
[52:23] ஒரு போதும் கெட்டுப்போகாத, மேலும் அருந்து வதற்கு ஒருபோதும் பாவகரமாக இல்லாத பானங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.
[52:24] பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்ற பணியாளர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள்.
[52:25] அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு மேலும் தங்களுக்கிடையில் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
[52:26] அவர்கள் கூறுவார்கள், “ நம் மக்களுக்கிடையில் நாம் கனிவுடனும் எளிமையுடனும் இருந்து வந்தோம்.
[52:27] “கடவுள் நமக்கு அருள்பாலித்து விட்டார், மேலும் கொடிய காற்றுகளின் வேதனையிலிருந்து நம்மை பாதுகாத்துவிட்டார்.
[52:28] “நாம் அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தோம். அவர் மிக்க கனிவானவர், மிக்க கருணையாளர்”.
தூதர்
[52:29] நீர் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். உம் மீதான உம்முடைய இரட்சகரின் அருட்கொடை யினால், நீர் ஒரு குறி சொல்பவர் அல்ல, அன்றி புத்திசுவாதீனமில்லாதவரும் அல்ல.
[52:30] அவர்கள், “ அவர் ஒரு கவிஞர்; அவர் இறந்து போகும் வரை நாம் சற்றுக் காத்திருப்போம்” என்று கூறக்கூடும்.
[52:31] “காத்துக் கொண்டே இருங்கள்; நானும் உங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருப்பேன்“ என்று கூறுவீராக.
[52:32] அவர்களுடைய கனவுகள்தான் அவர்களுடைய நடவடிக்கைகளை உத்தரவிடுகின்றதா, அல்லது இயல்பிலேயே அவர்கள் தீயவர்களாக இருக்கின் றனரா?
[52:33] “அவரே இது அனைத்தையும் உருவாக்கிக் கொண்டார்,?” என்று அவர்கள் கூறுகின் றனரா? பதிலாக, அவர்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றனர், அவ்வளவுதான்.
“முஹம்மதியர்கள்” கடவுளுக்குச் சவால் விட்டு ஹதீஸ்களை உருவாக்குகின்றனர்
[52:34] அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இது போன்ற ஒரு ஹதீஸை உருவாக்கட்டும்.
[52:35] இல்லாத ஒன்றிலிருந்து அவர்கள் படைக்கப்பட்டு விட்டனரா? அவர்கள் தான் படைப்பாளர்களா?
[52:36] வானங்கள் மற்றும் பூமியை அவர்கள் படைத்தனரா? உண்மையில், அவர்களிடம் உறுதிப்பாடு இல்லை.
[52:37] உம்முடைய இரட்சகரின் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனரா?
[52:38] அவர்கள் கவனமாகக் கேட்பதற்கு வகை செய்யும் ஓர் ஏணியில் அவர்கள் ஏறுகின்றனரா? அவர்களில் கவனித்துக் கேட்பவர்கள் தங்களுடைய சான்றுகளைக் காட்டட்டும்.
[52:39] நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்ற அதே சமயம், அவர் மகள்களைக் கொண்டிருக் கின்றாரா?
[52:40] அவர்களிடம் நீர் கூலி எதுவும் கேட்கின்றீரா, மேலும் அதனால் அவர்கள் சுமையேற்றப் பட்டுவிட்டனரா?
[52:41] அவர்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கின்றனரா, மேலும் அதனைப் பதிவு செய்து வைத்திருக் கின்றனரா?
[52:42] அவர்கள் திட்டங்களும் மேலும் சூழ்ச்சிகளும் செய்கின்றனரா? நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் அவர்களுக்கெதிராகவே திருப்பித் தாக்கும்.
[52:43] கடவுள்-ஐத் தவிர மற்றொரு தெய்வம் அவர்களுக்கு இருக்கின்றதா? கடவுள் துதிப்பிற்குரியவர், பங்காளிகளைக் கொண்டிருப்பதை விட்டும் மிக மேலானவர்.
[52:44] விண்ணிலிருந்து பெரிய துண்டுகள் விழு வதை அவர்கள் பார்க்கும் போது, அவர்கள் “அடுக்கடுக்கான மேகங்கள்!”என்று கூறுவார் கள்.
[52:45] அவர்கள் தாக்கப்படுகின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[52:46] அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் அவர்களைக் காப்பாற்றாது, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
[52:47] வரம்பு மீறுபவர்கள் இங்கேயே தண்டனையை அனுபவிக்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[52:48] உம்முடைய இரட்சகரின் கட்டளையை நிறை வேற்றுவதில் நீர் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் - நீர் நம் கண்களின் முன்னே இருக்கின்றீர் - மேலும் நீர் எழுந்திருக்கும்போது உம் இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய் வீராக.
[52:49] அத்துடன் இரவுப் பொழுதிலும், மேலும் நட்சத்திரங்கள் மங்கிக் கொண்டே செல்லும் விடியலிலும் அவரைத் துதிப்பீராக.