சூரா 51: காற்றுகளைச் செலுத்துவோர் (அல்-தாரியாத்)

[51:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[51:1] வீசுகின்ற காற்றுகள்.
[51:2] மழையைச் சுமக்கின்றன.
[51:3] வாழ்வாதாரங்களைக் கொண்டு வருகின்றன.
[51:4] கட்டளைப்படி அவற்றை விநியோகிக்கின்றன.
[51:5] உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிச்சயமாக நிகழ்ந்தே தீரும்.
[51:6] தீர்ப்பு நாள் தவிர்த்து விட இயலாதது.
[51:7] குறையின்றிப் படைக்கப்பட்ட வானம் இருந்த போதிலும்.
[51:8] நீங்கள் தொடர்ந்து சத்தியத்தை மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
[51:9] விலகிச் செல்பவர்களே அதிலிருந்து விலகிச் செல்கின்றனர்.
[51:10] பொய்ப்பிப்பவர்களுக்குக் கேடுதான்.
[51:11] அவர்களுடைய மூடத்தனமான தவறுகளில், அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.
[51:12] தீர்ப்பு நாளை அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
[51:13] நெருப்பின் பால் அவர்கள் கொண்டுவரப்படு கின்ற அந்நாளில்.
[51:14] தண்டனையைச் சுவையுங்கள்; இதனைத் தான் நீங்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தீர்கள்.
[51:15] நன்னெறியாளர்கள் தோட்டங்களுக்கும் ஊற்றுக்களுக்கும் தகுதி பெற்று விட்டனர்.
[51:16] தங்களுடைய இரட்சகரின் வெகுமதிகளை அவர்கள் பெறுவார்கள், ஏனெனில் அவர்கள் பக்தியுடையவர்களாகவே இருந்து வந்தனர்.
[51:17] அரிதாகவே அவர்கள் இரவு முழுக்க உறங்கினர்.
[51:18] விடியலில், அவர்கள் மன்னிப்பிற்காகப் பிரார்த் தித்தனர்.
[51:19] அவர்களுடைய பணத்தின் ஒரு பகுதி யாசிப்பவர்களுக்கும், மற்றும் தேவையுடையவர் களுக்கும் என ஒதுக்கி வைக்கப்பட்டது.
[51:20] உறுதியுடையவர்களுக்கு பூமியானது அத்தாட்சிகளால் நிறைந்துள்ளது.
[51:21] மேலும் உங்களுக்குள்ளேயும்; உங்களால் பார்க்க முடிகின்றதா?
[51:22] உங்களுடைய வாழ்வாதாரமும், மேலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள ஒவ்வொ ன்றும் வானத்தில்தான் உள்ளது.
[51:23] வானம் மற்றும் பூமியின் இரட்சகர் மீது சத்தியமாக, இது நீங்கள் பேசுகின்றீர்கள் என்ற உண்மையைப் போல் அவ்வளவு சத்தியமானதாகும்.
[51:24] ஆப்ரஹாமின் கண்ணியமான விருந்தினர் களின் சரித்திரத்தை நீர் கவனித்திருக்கின்றீரா?
[51:25] “அமைதி” என்று கூறியவர்களாக, அவர்கள் அவரைச் சந்தித்தனர். அவர், “அறிமுகமில்லா தவர்களே, உங்களுக்கும் அமைதி!” என்று கூறினார்.
[51:26] பெரியதொரு விருந்தினை தயாரிக்குமாறு தன் குடும்பத்தாரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
[51:27] அவர்களிடம் அதனை அவர் சமர்ப்பித்தபோது, அவர் கவனித்தார், “நீங்கள் உண்ண மாட்டீர்களா?”
[51:28] அவர்களைப் பற்றி அவர் அச்சம் கொண்டார். அவர்கள், “அச்சம் எதுவும் கொள்ளாதீர்,” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் அறிவாற்றலுடைய ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியைக் கொடுத்தனர்.
[51:29] அவருடைய மனைவி வியப்படைந்தார். சுருக்கம் விழுந்த தனது முகத்தைச் சுட்டிக் காட்டியவாறு: “நான் ஒரு மலட்டுக் கிழவியாக இருக்கின்றேன்.”
[51:30] அவர்கள், “ உம்முடைய இரட்சகர் இவ்விதமே கூறினார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்கள்.
[51:31] அவர், “ நீங்கள் வந்திருக்கும் விஷயம் என்ன, தூதர்களே?” என்று கூறினார்.
[51:32] அவர்கள், “ குற்றம் புரிந்த சமூகத்தவரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
[51:33] “களிமண்ணாலான பாறைகளை அவர்கள் மீது நாங்கள் பொழிவோம்.
[51:34] “வரம்பு மீறுபவர்களுக்கென உம்முடைய இரட்சகரால் குறியிடப்பட்டவை.”
[51:35] பின்னர் நாம் நம்பிக்கையாளர்கள் அனை வரையும் காப்பாற்றினோம்.
[51:36] அடிபணிந்தவர்களின் ஒரு வீட்டைத்தவிர அதில் நாம் காணவில்லை.
[51:37] வலிநிறைந்த தண்டனையை அஞ்சுகின்றவர் களுக்கு ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
[51:38] மோஸஸிடம் (ஒரு படிப்பினை உள்ளது). தெளிவான அத்தாட்சிகளுடன் ஃபேரோவிடம் நாம் அவரை அனுப்பினோம்.
[51:39] ஆனால் அவன் ஆணவத்தினால், திரும்பிக் கொண்டான், மேலும், “மந்திரவாதி அல்லது புத்தி சுவாதீனமில்லாதவர்” என்று கூறினான்.
[51:40] அதன் விளைவாக, அவனையும் அவனுடைய படையினரையும் நாம் தண்டித்தோம். அவர் களை நாம் கடலுக்குள் வீசினோம், மேலும் அவன் நிந்திக்கப்பட்ட ஒருவனாக இருக்கின் றான்.
[51:41] ‘ஆதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அழிவுண்டாக்குகின்ற காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்.
[51:42] எதன் மீது அது சென்றதோ, அது முற்றிலும் அழிந்தது.
[51:43] தமூதுகளிடம் (ஒரு படிப்பினை உள்ளது). அவர்களிடம், “தற்காலிகமாகச் சுகமனு பவியுங்கள்” என்று கூறப்பட்டது.
[51:44] தங்களுடைய இரட்சகரின் கட்டளைக் கெதிராக அவர்கள் கலகம் செய்தனர். அதன் விளைவாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மின்னல் அவர்களைத் தாக்கியது.
[51:45] அவர்கள் ஒருபோதும் எழ முடியவில்லை, அன்றி அவர்கள் உதவி செய்யப்படவுமில்லை.
[51:46] அதற்கு முன்னர் நோவாவின் சமூகத்தார்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.
“பிரபஞ்சம் விரிவடைதல் எனும் கோட்பாடு” உறுதிப்படுத்தப்படுகின்றது
[51:47] நம்முடைய கரங்களால் வானத்தை நாம் நிர்மானித்தோம்,மேலும் நாம் தொடர்ந்து அதனை விரித்துக் கொண்டிருப்போம்.
[51:48] மேலும் பூமியை நாம் வசிக்கத்தக்கதாக ஆக்கி னோம்; மிகச்சரியானதொரு வடிவமைப்பு.
[51:49] நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, ஒவ்வொன்றிலும் (ஆண் மற்றும் பெண் என) ஒரு ஜோடியை நாம் படைத்தோம்.
[51:50] நீங்கள் தப்பித்துக் கடவுள்-இடம் செல்ல வேண்டும். தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள் ளேன்.
[51:51] கடவுள்-ஐத் தவிர வேறு எந்தத் தெய்வத் தையும் அமைத்துக் கொள்ளாதீர்கள். தெளி வானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள்ளேன்.
[51:52] ஒரே சீராக, முந்திய தலைமுறையினரிடம் ஒரு தூதர் சென்ற பொழுதெல்லாம், அவர்கள், “மந்திரவாதி,” அல்லது, “புத்திசுவாதீன மில்லாதவர் ” என்று கூறினார்கள்.
[51:53] அவர்கள் ஒருவருக்கொருவர் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளனரா? உண்மையில், அவர்கள் வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.
[51:54] அவர்களை நீர் புறக்கணிக்கலாம்; உம்மைக் குற்றம் சுமத்த இயலாது.
[51:55] மேலும் நினைவூட்டுவீராக, ஏனெனில் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டல் பலனளிக்கும்.
நமது வாழ்வின் நோக்கம்
[51:56] என்னை மட்டுமே வழிபடுவதற்காகவே தவிர ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.
[51:57] அவர்களிடமிருந்து வாழ்வாதாரங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை, அன்றியும் எனக்கு உணவுபுகட்டவும் அவர்களுடைய தேவை எனக்கு இல்லை.
[51:58] கடவுள் தான் வழங்குபவர், அனைத்துச் சக்தியும் கொண்டவர், மேலான அதிகாரம் உடையவர்.
[51:59] வரம்பு மீறுபவர்கள் அவர்களுடைய முந்திய சகாக்களைப் போன்ற அதே விதிக்கு உள்ளாகி விட்டனர்; அவர்கள் சவால் விட வேண்டாம்.
[51:60] அவர்களுக்காகக் காத்திருக்கும் அந்நாளில் நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்.