சூரா 48: வெற்றி (அல்-ஃபத்ஹ்)

[48:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[48:1] (தூதரே), மகத்தானதொரு வெற்றியை நாம் உம் மீது வழங்கியுள்ளோம்*.

அடிகுறிப்பு:
*48:1 நமது தலைமுறைதான் கடவுளின் தூய்மைப்படுத்தப்பட்ட, ஒன்றுபடுத்தப்பட்ட, மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட கடவுளின் மார்க்கமான - அடிபணிதலுக்குரிய (3:19,85) வெற்றித் தலைமுறையாகும் என்பதைக் குறிக்கும் விதமாக, ஆழ்ந்த இவ்வாசகம் 19 எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. நமது தலைமுறைதான் குர்ஆனிலுள்ள கடவுளுடைய மகத்தான அற்புதத்தின் வெளிப்பாடுகளுக்கு சாட்சியாகும் (பின் இணைப்பு 1).
[48:2] அதன் மூலம் உம்முடைய கடந்த காலப் பாவங் களையும், அவ்வண்ணமே எதிர்காலப்பாவங் களையும் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் உம் மீது தன்னுடைய அருட்கொடைகளைப் பூரணப்படுத்துகின்றார், மேலும் நேரானதொரு பாதையில் உம்மை வழிநடத்துகின்றார்.
[48:3] கூடுதலாக, தடுமாற்றம் இல்லாததொரு ஆதரவைக் கொண்டு கடவுள் உமக்கு ஆதரவளிப்பார்.
[48:4] அவர்தான் நம்பிக்கையாளர்களின் இதயங் களில், அவர்களுடைய விசுவாசத்துடன் கூடுத லாக மேலும் விசுவாசத்தை அதிகரிப்பதற் காக, மனத்திருப்தியை ஏற்படுத்தியவர். வானங்கள் மற்றும் பூமியின் அனைத்துப் படைகளும் கடவுள்-க்கே உரியவை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[48:5] நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் நிச்சயமாக நுழைய அனுமதிப்பார், அதில் அவர்கள் என்றெ ன்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுடைய பாவங்களை அவர் மன்னிப்பார். இதுதான், கடவுள்-ன் பார்வையில், மகத்தானதொரு மாபெரும் வெற்றியாகும்.
[48:6] மேலும் அவர் நயவஞ்சக ஆண்கள் மற்றும் பெண்களை மேலும், இணைத் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களைப் பழி தீர்ப்பார், ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐப் பற்றிக் கெட்ட எண்ணங்களைத் தாங்கி யிருந்தனர். அவர்களுடைய தீமை அவர்களுக் கெதிரான விளைவுகளையே திருப்பித் தரும். ஏனெனில் கடவுள் அவர்கள் மீது கோபம் கொண்டிருக்கின்றார், அவர்களைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவர்களுக்காக ஜஹன்னாவைத் தயார் செய்துள்ளார். என்ன ஒரு துன்பகரமான விதி!
[48:7] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப்படைகளும் கடவுள்-க்கு உரியவை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[48:8] ஒரு சாட்சியாக, ஒரு நற்செய்தி சுமப்பவராக, மேலும் ஓர் எச்சரிப்பவராக உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.
[48:9] ஏனென்றால் மக்களாகிய நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவரிடம் பயபக்தி கொண்டு, மேலும் அவரை கவனத்தில் கொண்டு, மேலும் பகலும் இரவும், அவரைத் துதிக்கும் பொருட்டு.
கடவுளின் தூதருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்
[48:10] நிச்சயமாக, உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிப்பவர்கள், கடவுள்-இடமே விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிக் கின்றனர். கடவுள் அவர்களுடைய வாக்குறுதி யை அங்கீகரிக்கின்றார்; அவர்களுடைய கரங்களுக்கு மேலே அவர் தன் கரத்தை வைக்கின்றார். இத்தகையதொரு வாக்குறுதி யை மீறுபவர்கள், தங்களுக்கே கேடாகத்தான் அம்மீறுதலைப் புரிகின்றனர். கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதியை நிறை வேற்றுபவர்களைப் பொறுத்த வரை, மகத்தான தொரு பிரதிபலனை அவர்களுக்கு அவர் வழங்குவார்.
[48:11] பின்தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்கள், “எங்களுடைய பணம் மற்றும் குடும்பங்களில் மூழ்கியவர்களாக நாங்கள் இருந்து விட்டோம், எனவே எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்பீராக!” என்று கூறுவார் கள். அவர்களுடைய இதயங்களில் இல்லாத தைத் தங்கள் நாவுகளால் அவர்கள் கூறுகின் றனர். “கடவுள் உங்களுக்கு ஏதேனும் துன்பத் தை நாடியிருந்தால், அவரிடமிருந்து உங்களைக்காக்க எவரால் இயலும், அல்லது அவர் உங்களுக்கு ஏதேனும் அருட்கொடையை நாடியிருந்தால்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[48:12] தூதரும் மற்றும் நம்பிக்கையாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் ஒருபோதும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள் என்று நீங்கள் இரகசியமாக நம்பிக்கை கொண்டீர்கள், மேலும் இது உங்களுடைய இதயங்களில் உறுதியாக நிலைப்பெற்றிருந்தது. நீங்கள் கெட்ட எண்ணங்களைத் தாங்கியிருந்தீர்கள், மேலும் தீய மக்களாக மாறிவிட்டீர்கள்.
[48:13] எவர் ஒருவர் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ, நம்ப மறுப்பவர்களுக்கொரு நரக நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம்.
[48:14] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எவரையும் அவர் மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[48:15] போரில் சூறையாடப்பட்ட பொருட்களைத் திரட்டுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கும் பொழுது, பின்தங்கியவர்களான சரீர உழைப் பில்லாதவர்கள், “இதில் பங்கு பெறுவதற்காக உங்களைப் பின்தொடர எங்களை அனுமதி யுங்கள்!” என்று கூறுவார்கள். இவ்விதமாக அவர்கள் கடவுள்-ன் வார்த்தைகளை மாற்றி விட விரும்புகின்றனர். “நீங்கள் எங்களைப் பின் தொடராதீர்கள். இதுதான் கடவுள்-ன் தீர்மானமாகும்” என்று கூறுவீராக. அவர்கள் அப்போது, “(பின்தங்கி விட்டதால்) நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டிருக்கின்றீர் கள் போலும்” என்று கூறுவார்கள். உண்மையில், அவர்கள் அரிதாகவே எந்த ஒன்றையும் புரிந்து கொள்கின்றார்கள்.
ஆரம்பத் தலைமுறையினருக்கான சோதனை
[48:16] பின் தங்கியவர்களான சரீர உழைப்பில்லாத அரேபியர்களிடம், “வலிமை நிறைந்த மக்களை எதிர் கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் அடிபணியாவிட்டால், அவர்களுடன் சண்டை யிடுவதற்காகவும் நீங்கள் அழைக்கப் படுவீர்கள். நீங்கள் கீழ்ப்படிந்தால், தாராளமான தொரு பிரதிபலனைக் கொண்டு கடவுள் உங்களுக்கு வெகுமதியளிப்பார். ஆனால் கடந்த காலத்தில் செய்ததைப்போல், நீங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டால், வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு உங்களை அவர் பழிவாங்குவார்” என்று கூறுவீராக.
[48:17] குருடர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், மேலும் நோயாளி குற்றம் பிடிக்கப்பட மாட்டார். எவர்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிகின்றனரோ, அவர்களை ஓடிக்கொண் டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் நுழைய அவர் அனும திப்பார். திரும்பிச் சென்று விடுபவர்களைப் பொறுத்த வரை, வலி நிறைந்ததொரு தண்ட னையைக் கொண்டு அவர்களை அவர் பழிவாங்குவார்.
[48:18] மரத்தின் அடியில் உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளித்த நம்பிக்கை யாளர்களைக் கொண்டு கடவுள் திருப்தி யடைந்தார். அவர்களுடைய இதயங்களில் இருந்தவற்றை அவர் அறிந்திருந்தார், மேலும் அதன் விளைவாக, மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அவர் அருள்பாலித்தார், மேலும் உடனடியானதொரு வெற்றியைக் கொண்டு அவர்களுக்கு அவர் வெகுமதி யளித்தார்.
[48:19] கூடுதலாக, ஏராளமான போர்ப் பொருட்களை அவர்கள் அடைந்தனர். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[48:20] ஏராளமான போர்ப்பொருட்களை நீங்கள் அடைவீர்கள் என்று கடவுள் உங்களுக்கு வாக்களித்துள்ளார். இவ்விதமாக அவர் இந்த வாழ்விலேயே சில பலன்களை உங்களுக்கு முற்படுத்தினார், மேலும் உங்களுக்கெதிராக மக்களின் அத்துமீறுகின்ற கரங்களை அவர் தடுத்து நிறுத்தினார், மேலும் நம்பிக்கை யாளர்களுக்கு இதனை ஓர் அத்தாட்சியாக ஆக்கினார். இவ்விதமாக, அவர் உங்களை நேரானதொரு பாதையில் வழிநடத்துகின்றார்.
[48:21] நீங்கள் தோற்கடிக்கச் சாத்தியமில்லாத கூட்டத்தைப் பொறுத்தவரை, கடவுள் அவர் களைக் கவனித்துக் கொண்டார்; கடவுள் சர்வ சக்தியுடையவர்.
வெற்றியானது நம்பிக்கையாளர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது
[48:22] நம்ப மறுப்பவர்கள் எப்பொழுது உங்களிடம் சண்டையிட்டாலும், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடுவார்கள். அவர்களுக்கு எந்த இரட்சகரும் எஜமானரும் இல்லை; அவர் களுக்கு உதவியாளரும் இல்லை.
[48:23] சரித்திரம் முழுவதும் கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றமுடியாதது என்பதை நீர் காண்பீர்.
[48:24] அவர்தான் உங்களுக்கெதிரான அவர் களுடைய அத்துமீறுகின்ற கரங்களைத் தடுத்து நிறுத்தியவர், மேலும் அவர்களுக்கு மேலாக உங்களுக்கு வெற்றியை வழங்கிய பின்னர், மக்காப் பள்ளத்தாக்கில் அவர்களுக் கெதிரான உங்களுடைய அத்துமீறல் கரங் களைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[48:25] அவர்கள் தான், நம்ப மறுத்து மேலும் புனித மஸ்ஜிதை விட்டும் உங்களைத் தடுத்தவர்கள், மேலும் உங்களுடைய நேர்ச்சைகள் அவற்றிற் குரிய சேருமிடத்தை அடைவதையும் கூடத் தடை செய்தவர்கள். அங்கே (எதிரிகளின் பாசறைக்குள்) நீங்கள் அறிந்திராதவர்களாகிய நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் இருந்தனர் மேலும் நீங்கள் அறியாத நிலையில், அவர்களைத் தாக்க இருந்தீர்கள். கடவுள் இவ்விதமாக, தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அனுமதிக் கின்றார். அவர்கள் பிடிவாதம் செய்தால், அவர்களுக்கிடையில் உள்ள நம்ப மறுப்பவர் களை வலி நிறைந்ததொரு தண்டனையைக் கொண்டு அவர் பழிவாங்குவார்.
[48:26] நம்ப மறுப்பவர்கள் பெரும் கோபம் கொண்டு, மேலும் அவர்களுடைய இதயங்கள் அறியாமை நாட்களின் பெருமையால் நிறைந்திருந்த அதே சமயம், கடவுள் தன்னுடைய தூதரையும் மற்றும் நம்பிக்கையாளர்களையும் அமைதி நிறைந்த மனத் திருப்தியைக் கொண்டு அருள் பாலித்தார், மேலும் நன்னெறியின் வார்த்தை யை ஆதரிப்பதின் பால் அவர்களைச் செலுத்தினார். இதற்குத்தான் அவர்கள் நன்கு தகுதி பெற்றிருந்தனர். கடவுள் அனைத்துப் பொருட் களையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.
[48:27] கடவுள் தன்னுடைய தூதரின் சத்தியம் நிறைந்த பார்வையினை நிறைவேற்றி விட்டார்: “கடவுள் நாட்டப்படி, பூரணப் பாதுகாப்புடன், நீங்கள் புனித மஸ்ஜிதில் நுழைவீர்கள், மேலும் (புனித யாத்திரையின் சடங்குகளை நீங்கள் நிறைவு செய்தவாறு) அங்கே உங்கள் முடியை வெட்டிக் கொள்வீர்கள் அல்லது குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எவ்வித அச்சமும் இருக்காது. நீங்கள் அறியாதவற்றை அவர் அறிந்திருந்ததால், இத்துடன் உடனடியான தொரு வெற்றியையும் அவர் இணைத் துள்ளார்”.
மகத்தான முன்னறிவிப்பு*
[48:28] அவர்தான் வழிகாட்டலையும் மேலும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு தன்னுடைய தூதரை மற்ற அனைத்து மார்க்கங்களையும் அது வெற்றி கொள்ளச் செய்வதற்காக அனுப்பியவர். ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர்*.

அடிகுறிப்பு:
*48:28 முக்கியமான இம்முன்னறிவிப்பு, தவிர்த்து விட முடியாதவாறு முழு உலகிலும் ஆதிக்கம் செலுத்தப்போவது அடிபணிதலே என்பதை நமக்கு அறிவிக்கின்றது. இது, வசனங்கள் 9:33, 41:53 மற்றும் 61:9 ஆகியவற்றுடன் சேர்ந்து, இம்முன்னறிவிப்பில் குர்ஆனுடைய கடவுளின் கணித அற்புதம் ஒரு முக்கிய பங்கை ஆற்றும் என்பதில் எந்த ஐயத்தையும் விட்டு வைக்கவில்லை. குர்ஆனுடைய திடமான கணித ஆதாரங்கள், கடவுளின் உடன்படிக்கைத் தூதர் இம்முன்னறிவிப்பை நிறைவேற்றுவதாகச் சுட்டிக் காட்டுகின்றது. ஆதாரங்களுக்கும் மற்றும் குறிப்பான விபரங்களுக்கும் பின் இணைப்பு 2 & 26 ஐப் பார்க்கவும்.
நம்பிக்கையாளர்களின் விசேஷ குணங்கள்
[48:29] முஹம்மது - கடவுள்-ன் தூதர் - மற்றும் அவருடன் இருப்பவர்கள் நம்ப மறுப்பவர்களிடம் கடுமையாகவும் மேலும் கண்டிப்பாகவும், ஆனால் தங்களுக்கிடையில் கனிவுடனும் மேலும் இரக்கத்துடனும் இருக்கின்றனர். அவர்கள் கடவுள்-ன் அருட் கொடைகளையும் மேலும் பொருத்தத்தையும் தேடியவர்களாக, குனிந்தவர்களாகவும் மேலும் சிரம்பணிந்தவர் களாகவும் அவர்களை நீர் காண்கின்றீர். சிரம் பணிதலின் காரணத்தினால், அவர்களுடைய அடையாளங்கள் அவர்களுடைய முகங்களில் உள்ளன. இது தோராவில் உள்ளதைப் போன்ற அதே உதாரணமாகும். சுவிசேஷத்தில் அவர்களுடைய உதாரணமானது உயரமாகவும் மேலும் பலமாகவும் வளர்ந்து விவசாயிகளை மகிழ்வடையச் செய்கின்ற தாவரங்களைப் போன்றதாகும். இவ்விதமாக அவர் நம்ப மறுப்பவர்களுக்குக் கோபமூட்டுகின்றார். அவர்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு மன்னிப்பையும் மேலும் மகத்தானதொரு பிரதிபலனையும் கடவுள் வாக்களிக்கின்றார்.