சூரா 47: முஹம்மது

[47:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[47:1] எவர்கள் நம்ப மறுப்பதுடன் மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் தடுக்கின்றனரோ, அவர் களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:2] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்களை புரிந்து, மேலும் முஹம்மதிற்கு இறக்கி அனுப்பப்பட்டதில் நம்பிக்கை கொள்கின்றனரோ - அது அவர் களுடைய இரட்சகரிடமிருந்து வந்த சத்தியமாகும் - அவர்களுடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்து விடுகின்றார், மேலும் மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிக்கின்றார்.
[47:3] இது ஏனெனில், நம்ப மறுப்பவர்கள் பொய்மையைப் பின்பற்றுகின்றனர், அதே சமயம் நம்பிக்கை கொண்டவர்களோ தங்களுடைய இரட்சகரிட மிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றுகின்றனர். கடவுள் இவ்விதமாக மக்களுக்கு அவர்களது உதாரணங்களை எடுத்துரைக்கின்றார்.
[47:4] நம்ப மறுப்பவர்களை நீங்கள் (போரில்) எதிர்கொண்டால், நீங்கள் கழுத்துக்களைத் தாக்கலாம். அவர்களை நீங்கள் கைதிகளாகப் பிடித்துக் கொண்டால், போர் முடியும் வரை, அவர்களை நீங்கள் விட்டுவைக்கலாம், அல்லது ஈடு பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். கடவுள் நாடியிருந்தால், போர் இன்றியே, அவர் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்க இயலும். ஆனால் இவ்விதமாக அவர் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரைச் சோதிக்கின்றார். கடவுள்-ன் நிமித்தம் கொல்லப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய தியாகத்தை அவர் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டார்.
[47:5] அவர்களை அவர் வழிநடத்துவார், மேலும் மனத்திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிப்பார்.
[47:6] அவர்களுக்கு அவர் விவரித்திருந்த சுவனத் தினுள் நுழைய, அவர்களை அவர் அனுமதிப்பார்.
[47:7] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர் உங்களுக்கு ஆதர வளிப்பார், மேலும் உங்களுடைய ஆதாரத்தை பலப்படுத்துவார்.
[47:8] நம்ப மறுப்பவர்கள் துன்பத்திற்கு உள்ளா கின்றனர்; அவர்களுடைய காரியங்களை அவர் முற்றிலும் வீணானதாக ஆக்கி விடுகின்றார்.
[47:9] இது ஏனெனில், அவர்கள் கடவுள் வெளிப் படுத்தியவற்றை வெறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:10] அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த பின் விளைவு களைப் பார்க்கவில்லையா? கடவுள் அவர் களுடைய காரியங்களை நாசமாக்கினார்; நம்ப மறுப்பவர்கள் அனைவரும் இதே விதியைத்தான் அனுபவிப்பார்கள்.
[47:11] இது ஏனெனில், நம்பிக்கை கொண்டவர்களின் இரட்சகராகக் கடவுள் இருக்கின்றார், அதே சமயம் நம்ப மறுப்பவர்களுக்கோ இரட்சகர் இல்லை.
[47:12] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக் கின்றார். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்ந்து கொண்டும், மிருகங்கள் தின்பதைப் போலத் தின்று கொண்டும் இருக்கின்றனர், பின்னர் நரக நெருப்பைச் சென்றடைவார்கள்.
[47:13] உம்முடைய நகரத்தை விட்டு உம்மை வெளி யேற்றிய சமூகத்தை விட மிகவும் வலிமையான சமூகம் பல இருந்தன; நாம் அவர்களை அழித்த போது, எவர் ஒருவரும் அவர்களுக்கு உதவ இயலவில்லை.
[47:14] தங்களுடைய இரட்சகரால் அறிவூட்டப் பெற்றவர்களும், எவர்களுடைய தீய காரியங்கள் அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப் பட்டு, மேலும் தங்களுடைய சுய அபிப்பிராயங் களைப் பின்பற்றுகின்றவர்களும் சமமான வர்கள் ஆவார்களா?
[47:15] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சுவனத்தின் உவமானம் இதுவாகும்: அதில் மாசற்ற தண்ணீரைக் கொண்ட நதிகளும், மேலும் புத்தம் புதிய பாலாறுகளும், மேலும் மது ஆறுகளும் - அருந்துபவர்களுக்கு மதுர மானது - மேலும் வடிகட்டப்பட்ட தேனாறுகளும் உள்ளன. அதிலே அனைத்துக் கனிவர்க்கங் களும், மேலும் அவர்களுடைய இரட்சகரின் மன்னிப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்கள் மேலானவர்களா) அல்லது நரக நெருப்பில் என்றென்றும் தங்கியிருந்து, மேலும் அவர்களுடைய குடல்களைக் கிழித்து விடுகின்ற நரக தண்ணீரை அருந்துகின்றவர்களா?
[47:16] அவர்களில் சிலர் உம்மைக் கவனத்துடன் செவியேற்கின்றனர், பின்னர் அவர்கள் பிரிந்து சென்றவுடன் அறிவூட்டப்பெற்றவர்களிடம் அவர்கள், “அவர் இப்போது என்ன கூறினார்?” என்று கேட்கின்றார்கள். கடவுள் இவ்விதமாக அவர்களுடைய இதயங்களில் முத்திரையிடுகின்றார், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தங்களுடைய சுய அபிப்பிராயங்களை மட்டுமே பின்பற்று கின்றார்கள்.
[47:17] வழிகாட்டப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய வழிகாட்டலை அவர் அதிகரிக் கின்றார், மேலும் அவர்களுடைய நன்னெறியை அவர்களுக்கு வழங்குகின்றார்.
உலகத்தின் முடிவு*
[47:18] அந்த நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றனரா? அதற்குரிய அடையாளங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து விட்டன*. அந்த நேரம் அவர்களிடம் வந்து விட்டால், தங்களுக்குரிய தூதுச்செய்தி யினால் எவ்வாறு அவர்கள் பயனடைவார்கள்?

அடிகுறிப்பு:
*47:18 இந்தக் குர்ஆன், இறுதி ஏற்பாடாக இருப்பதால், உலகத்தின் முடிவு கி.பி.2280 என்பதைச் சுட்டிக்காட்ட அவசியமான அனைத்து அடையாளங்களையும் வழங்குகின்றது. விபரங்களுக்கு பின் இணைப்பு 25 ஐப் பார்க்கவும்.
லா இலாஹா இல்லல்லாஹ்: முதற் கட்டளை
[47:19] நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: “கடவுள்-உடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை,”* மேலும் உம்முடைய பாவங்களுக்காகவும் மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவருடைய பாவங் களுக்காகவும் மன்னிப்புக் கேட்பீராக. உங்களுடைய தீர்மானங்களையும் மேலும் உங்களுடைய இறுதி விதியையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

அடிகுறிப்பு:
*47:19 குறிப்பிடத்தக்க வகையில், மார்க்கத்தின் “முதல் தூணானது” முஹம்மது என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட சூராவில் கூறப்படுகின்றது, மேலும் அது முற்றிலும் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாக உள்ளது. முஹம்மதின் பெயர் அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக, அவரை இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களால் சேர்க்கப்பட்டது.
நயவஞ்சகர்களை வெளிப்படுத்துதல்
[47:20] நம்பிக்கை கொண்டவர்கள்: “எப்பொழுது ஒரு புதிய சூரா வெளிப்படுத்தப்படும்?” என்று கூறினார்கள். ஆனால் சண்டையிடுவதைப் பற்றி அதிலே குறிப்பிடப்பட்ட, நேரடியானதொரு சூரா வெளிப்படுத்தப்பட்ட பொழுது, தங்கள் நெஞ்சங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருந் தவர்கள், மரணம் அவர்களிடம் ஏற்கனவே வந்து விட்டதைப் போல உம்மை நோக்குவதை நீர் காண்பீர். இவ்விதமாக அவர்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டனர்.
முஹம்மதுடைய சகாப்தத்தின் போது விசுவாசத்தின் சான்று
[47:21] கீழ்ப்படிதலும் மேலும் நன்னெறியான கூற்றுக் களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப் பட்டன. புறப்படுவதற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது, கடவுள்-ன் மீது உறுதியான நம்பிக்கையை அவர்கள் மட்டும் காட்டியிருந் தால், அது அவர்களுக்கு மிகவும் மேலானதாக இருந்திருக்கும்.
[47:22] நீங்கள் விலகிச் சென்றவுடன், நீங்கள் தீமைகள் புரியவேண்டும், மேலும் உங்களுடைய உறவினர்களைத் தவறாக நடத்தவேண்டும் என்பதும் உங்களுடைய நோக்கமா?
[47:23] இவர்கள்தான் கடவுள்-இடமிருந்து சாபத் திற்கு உள்ளானவர்கள், அதனால் அவர்களைச் செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர் ஆக்கிவிட்டார்.
குர்ஆனை ஆராய்ந்து பாருங்கள்
[47:24] அவர்கள் ஏன் குர்ஆனைக் கவனத்துடன் ஆராய்ந்து பார்க்காதிருக்கின்றனர்? அவர் களுடைய மனங்களின் மீது பூட்டுக்கள் அவர் களுக்கு இருக்கின்றனவா?
[47:25] நிச்சயமாக, எவர்கள் வழிகாட்டல் தங்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும், பின்னால் சறுக்கி விடுகின்றார்களோ, அவர்களைச் சாத்தான் வசீகரித்து விட்டான், மேலும் தவறான வழியில் இட்டுச் சென்று விட்டான்.
[47:26] இது ஏனெனில் கடவுள் இறக்கி அனுப்பியவற்றை வெறுத்தவர்களிடம் அவர்கள், “குறிப்பிட்ட சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். கடவுள் அவர்களுடைய இரகசியச் சதியாலோசனைகளை முற்றிலும் அறிவார்.
[47:27] வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் பொழுது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுடைய முகங்களிலும் மேலும் அவர் களுடைய பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்.
[47:28] இது ஏனெனில் கடவுள்-க்குக் கோப முண்டாக்குபவற்றை அவர்கள் பின்பற்றினார்கள், மேலும் அவருக்குத் திருப்தியளிக்கும் விஷயங் களை வெறுத்தார்கள். அதன் விளைவாக, அவர்க ளுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விட்டார்.
[47:29] தங்களுடைய இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருப்பவர்கள் கடவுள் அவர்களுடைய தீய எண்ணங்களை வெளிக்கொண்டு வர மாட்டார் என எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
[47:30] நாம் நாடினால், அவர்களைப் பார்த்தவுடன் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணம், அவர்களை உமக்கு வெளிப் படுத்திக்காட்டியிருக்க இயலும். எனினும், அவர்கள் பேசுகின்ற விதத்தின் மூலம் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளலாம். கடவுள் உங்களுடைய காரியங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[47:31] உங்களில் பாடுபடுபவர்கள், மேலும் உறுதியுடன் விடாமுயற்சி செய்பவர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுவதற்காக, நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம். உங்களுடைய உண்மையான தன்மைகளை நாம் வெளிப்படுத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.
[47:32] நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, மேலும் வழிகாட்டல் அவர்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும் தூதரை எதிர்ப்பவர்கள், ஒருபோதும் கடவுள்-க்குச் சிறிதளவும் தீங்கிழைக்க முடியாது. மாறாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:33] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படியவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படி யவும் வேண்டும். இல்லையேல், உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வீணானவையாகி விடும்.
பெரிய நாசம்
[47:34] எவர்கள் நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, பின்னர் நம்ப மறுப்பவர்களாகவே இறந்து விடுகின்றனரோ, அவர்களைக் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
[47:35] ஆகையால், நீங்கள் தடுமாற்றமடைந்து, சமாதானத்தைத் தேடிச் சரணடையாதிருக்க வேண்டும், ஏனெனில் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளீர்கள், மேலும் கடவுள் உங்களுடன் இருக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களுடைய உழைப்பை வீணாக்கி விட மாட்டார்.
[47:36] இந்த உலக வாழ்வு விளையாட்டு மற்றும் வீணான பெருமை தவிர அதிகம் எதுவுமில்லை. ஆனால் நீங்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், உங்களிடம் எந்தப் பணமும் கேட்காமல், அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
[47:37] உங்களுக்கு ஒரு கஷ்டத்தை உண்டாக்கும் அளவிற்கு, அவர் உங்களிடம் பணம் கேட்டிருந் தால், நீங்கள் கஞ்சர்களாகி இருக்கக் கூடும், மேலும் மறைக்கப்பட்டிருக்கின்ற உங்களுடைய தீயவை வெளிப்பட்டிருக்கக் கூடும்.
அரேபியர்களுக்கான எச்சரிக்கை*
[47:38] கடவுள்-ன் நிமித்தம் செலவு செய்யுமாறு அழைக்கப்படுகின்றீர்கள், ஆனால் உங்களில் சிலர் கஞ்சர்களாக மாறி விடுகின்றீர்கள். கஞ்சர்கள் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே கஞ்சத்தனம் செய்கின்றார்கள். கடவுள் செல்வந் தராக இருக்கின்றார், அதே சமயம் நீங்களோ ஏழைகளாக உள்ளீர்கள்.

அடிகுறிப்பு:
*47:38 இந்தக் குர்ஆன் அரேபியர்களுக்கு, அவர்களுடைய மொழியில், 1400 வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் தெளிவாக இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர், மேலும் இது முழுமையானது என்பதில் நம்பிக்கை கொள்ள மறுத்தனர்; அவர்கள் ஹதீஸ் மற்றும் சுன்னாவை இட்டுக்கட்டிக் கொண்டனர்.