சூரா 45: மண்டியிடுதல் (அல்-ஜாஸியா)

[45:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[45:1] ஹா.ம.
[45:2] இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள்-இடமிருந்து வந்துள்ளது.
[45:3] வானங்கள் மற்றும் பூமி, நம்பிக்கையாளர் களுக்குச் சான்றுகள் நிரம்பியவையாக உள்ளன.
[45:4] அத்துடன் உங்களுடைய படைப்பிலும், மேலும் அனைத்து விலங்குகளின் படைப்பிலும், உறுதி யுடைய மக்களுக்குச் சான்றுகள் உள்ளன.
[45:5] அத்துடன், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மேலும் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப் பதற்காக விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்ற வாழ்வாதாரங்களிலும், மேலும் காற்றுகளைத் திறம்படக் கையாளுவதிலும்; புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இவை அனைத்தும் சான்றுகளாகும்.
எந்த ஹதீஸ்?*
[45:6] இவை, நாம் உமக்கு எடுத்துரைக்கின்ற சத்தியம் நிறைந்த கடவுள்-ன் வெளிப்பாடுகளாகும். கடவுள்-க்கும் அவருடைய வெளிப்பாடுகளுக்கும் பின்னர் வேறு எந்த ஹதீஸில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?

அடிகுறிப்பு:
*45:6-7கடவுள் “ஹதீஸ்”களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்கின்றார், மேலும் அது இறைநிந்தனையான தொரு இட்டுக்கட்டல் தான் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றார்.
[45:7] இட்டுக்கட்டுபவனான குற்றவாளி ஒவ்வொரு வனுக்கும் கேடுதான்*.

அடிகுறிப்பு:
*45:6-7கடவுள் “ஹதீஸ்”களைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்கின்றார், மேலும் அது இறைநிந்தனையான தொரு இட்டுக்கட்டல் தான் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றார்.
[45:8] கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்துரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காத வனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலி நிறைந்த தொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
[45:9] நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதை யேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவன் அவற்றைப் பரிகசிக்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
[45:10] ஜஹன்னா அவர்களுக்காகக் காத்துக் கொண்டி ருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ, அன்றிக் கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. அவர்கள் பயங்கரமானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[45:11] இது ஒரு வழிகாட்டி, மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தண்டித்தலுக்கும் மேலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.
[45:12] கடவுள் தான், அவருடைய விதிமுறைகளுக்கு இணங்க கப்பல்கள் அதில் சுற்றி வருவதற் காக, கடலினை உங்களுடைய சேவைக்கெனப் பணித்தவர். இவ்விதமாக, அவருடைய வாழ்வாதாரங்களை நீங்கள் தேடுகின்றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு.
[45:13] அவர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் சேவைக்கெனப் பணித்தார்; அனைத்தும் அவரிடமிருந்தே. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை சான்றுகளாகும்.
[45:14] கடவுள்-ன் நாட்களை எதிர்பார்க்காதவர்களை மன்னித்து விடும்படி நம்பிக்கை கொண்டவர் களிடம் கூறுவீராக. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றிற்காக அவர் முழுமையாகக் கூலி கொடுப்பார்.
[45:15] நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவரா யினும் தன் சொந்த நலனிற்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீய செயல்கள் புரிகின்ற எவராயினும் தன் சொந்த கேட்டிற் காகவேஅவ்வாறு செய்கின்றார். உங்களுடைய இரட்சகரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.
[45:16] நாம் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு வேதத் தையும், ஞானத்தையும், வேதம் பெறுகின்ற தூதுத்துவத்தையும் கொடுத்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு வழங்கினோம்; மற்றெந்த மக்களை விடவும் அதிகமான அருட்கொடைகளை அவர்கள் மீது நாம் அளித்தோம்.
[45:17] தெளிவான கட்டளைகளை இதிலே நாம் அவர் களுக்குக் கொடுத்துள்ளோம். நேர்மாற்றமாக, அறிவு அவர்களிடம் வரும் வரை இதனை அவர்கள் மறுக்கவில்லை. இது அவர்கள் பக்கம் உள்ள பொறாமையின் காரணமாகவேயாகும். நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளன்று அவர்கள் மறுத்த ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.
[45:18] பின்னர் சரியான சட்டங்களை நிலைநாட்டு வதற்காக உம்மை நாம் நியமித்தோம்; நீர் இதனைப் பின்பற்ற வேண்டும், மேலும் அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
[45:19] கடவுள்-க்கெதிராக எவ்விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உதவ இயலாது. வரம்பு மீறுபவர் கள் தான் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக்கிக் கொள்கின்றனர், அதே சமயம் கடவுள் தான் நன்னெறியாளர்களின் இரட்சகராக இருக்கின்றார்.
[45:20] இது மக்களுக்கு ஞான உபதேசங்களையும், மேலும் உறுதியுடையவர்களுக்கு வழிகாட்டல், மற்றும் கருணையையும் வழங்குகின்றது.
[45:21] தீய செயல்களைப் புரிபவர்கள், நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நடத்துவது போன்ற அதே விதமாக அவர்களையும் நாம் நடத்துவோம் என்று எதிர்பார்க்கின்றனரா? அவர்களுடைய வாழ்வும் மற்றும் அவர்களுடைய மரணமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா?* உண்மையில் அவர்களுடைய தீர்ப்பு தவறானதாக இருக்கின்றது.

அடிகுறிப்பு:
*45:21 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை என்பதை இப்போது நாம் தெளிவாக அறிந்திருக்கின்றோம் - அவர்கள் நேரடியாகச் சுவனம் செல்கின்றனர் (16:32)-அதே சமயம் நன்னெறியற்றவர்கள் மரணத்தின் வானவர்களால் அடித்து நொறுக்கப் படுகின்றனர் ( 8:50 & 47:27).
[45:22] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே கடவுள் படைத்தார், சிறிதளவும் அநீதமின்றி,* ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலியைக் கொடுப்பதற்காக.

அடிகுறிப்பு:
*45:22 நம்மை மீட்டுக்கொள்வதற்கும், சாத்தானுடனான நம்முடைய பண்டைய உடன்பாட்டை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கும், மேலும் கடவுளின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாக இந்த வாழ்வைக் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். முன்னுரை & பின் இணைப்பு 7ஐப் பார்க்கவும்.
இணைவழிபாட்டின் ஒரு பொதுவான வடிவம்: அகந்தை ஒரு தெய்வமாக
[45:23] தன்னுடைய அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா? அதன் விளைவாக, அவனுக்கு அறிவு இருந்த போதிலும், கடவுள் அவனை வழிகேட்டில் அனுப்பி, அவனுடைய செவிப்புலனிலும், அவனுடைய மனதிலும் முத்திரையிடுகின்றார், மேலும் அவனுடைய கண்களின் மீது ஒரு திரையை அமைத்து விடுகின்றார். கடவுள்-ன் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின், எவர் அவனை வழிநடத்த இயலும்? நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[45:24] அவர்கள், “இந்த வாழ்வு மட்டுமே நாம் வாழ்கின்றோம்; நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம், மேலும் காலம்தான் நம்முடைய மரணத்திற்குக் காரணமா கின்றது!” என்று கூறினார்கள். இதனைப் பற்றிய உறுதியான அறிவு எதுவும் அவர்களுக்கு கிடையாது; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்.
[45:25] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம், தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், அவர்களு டைய ஒரே வாதமாவது, “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், எங்கள் முன்னோர் களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவதாகவே இருந்தது.
[45:26] “கடவுள் உங்களுக்கு வாழ்வை வழங்கினார், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் தவிர்த்து விட முடியாதவாறு, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் அன்று உங்களை அவர் ஒன்று கூட்டுவார். ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார் கள்” என்று கூறுவீராக.
[45:27] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்தும் கடவுள்-க்குரியது. அந்த நேரம் (தீர்ப்பு) நிகழ்ந்தேறும் அந்நாள், அப்போது தான் பொய்ப்பிப்பவர்கள் நஷ்டமடைவார்கள்.
மண்டியிடுதல்
[45:28] ஒவ்வொரு சமூகமும் மண்டியிட்டிருக்க நீர் காண்பீர். ஒவ்வொரு சமூகமும் அவற்றினுடைய பதிவேட்டைப் பார்ப்பதற்காக அழைக்கப்படும். இன்றைய தினம், நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்.
[45:29] இது நம்முடைய பதிவேடாகும்; உங்களைப் பற்றிய உண்மைகளை இது கூறுகின்றது. நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
[45:30] நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியங்கள் புரிபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இரட்சகர் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[45:31] நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை: “என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா, ஆனால் நீங்கள் ஆணவம் கொண்டவர்களாகி மேலும் தீயமக் களாக இருக்கவில்லையா?”
[45:32] கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் எனவும், (தீர்ப்பின்) அந்த நேரம் தவிர்த்து விட முடியாதது எனவும் பிரகடனம் செய்யப்பட்ட போது, நீங்கள், “அந்த நேரம் என்றால் என்ன என்பதை நாங்கள் அறிய மாட்டோம்! அதனைப் பற்றி நாங்கள் முற்றிலும் அனுமானத்துடனேயே இருக்கின்றோம்; நாங்கள் உறுதியுடையவர்களாக இல்லை” என்று கூறினீர்கள்.
[45:33] அவர்களுடைய செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டு விடும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்.
[45:34] இவ்வாறு பிரகடனம் செய்யப்படும் : “இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்ற அதே விதமாக, இன்றைய தினம் நாம் உங்களை மறந்து விடுகின்றோம். நரக நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாகும், மேலும் உங்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
[45:35] “இது ஏனெனில் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நீங்கள் வீணானதென எடுத்துக் கொண்டீர்கள், மேலும் முந்திய இந்த வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தீர்கள்”. அதன் விளைவாக, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள், அன்றி அவர்கள் பிழைபொறுக்கப்படவும் மாட்டார்கள்.
[45:36] அனைத்துப் புகழும் கடவுள்-க்குரியது; வானங்களின் இரட்சகர், பூமியின் இரட்சகர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[45:37] வானங்கள் மற்றும் பூமியில் மேலான அதிகாரம் அனைத்தும் அவருக்குரியது. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.