சூரா 44: புகை (அல்-துகான்)

[44:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[44:1] ஹா.ம.
[44:2] மேலும் ஞானம் உபதேசிக்கின்ற இவ்வேதம்.
[44:3] பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப் பவர்களாக இருக்கின்றோம்.
[44:4] (வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
[44:5] நாம் தூதர்களை அனுப்புவோம் என்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொரு கட்டளையாக உள்ளது.
[44:6] இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[44:7] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!
[44:8] அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப் படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.
[44:9] உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர் களாகவும், கவனத்தில் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.
புகை: முக்கியமானதொரு முன்னறிவிப்பு*
[44:10] ஆகையால், வானம் ஆழ்ந்ததொரு புகையைக் கொண்டு வரும் அந்நாளுக்காக விழிப் புடனிருப்பீராக.*

அடிகுறிப்பு:
*44:10 இரண்டு அத்தாட்சிகள் மட்டுமே இன்னும் பூர்த்தியாக வேண்டியுள்ளது, இந்தப் புகை மேலும் காக் மற்றும் மேகாக் (பின் இணைப்பு 25).
[44:11] மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; இது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.
[44:12] “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நீக்குவீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.”
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*
[44:13] அவர்கள் நினைவில் கொள்கின்றனர், இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது! தெளிவாக விளக்குகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந் தார்.*

அடிகுறிப்பு:
*44:13 இந்த சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகை (44+13) 57, 19 ஒ 3 ஆகும், மேலும் குர்ஆனுடைய இக்குறியீடு கடவுளின் உடன்படிக்கைத் தூதரால் பிரகடனம் செய்யப்பட்டது (பின் இணைப்பு 1, 2, & 26).
[44:14] ஆனால் அவர்கள், “நன்கு கல்வி கற்றவர், ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறியவர் களாக, அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
[44:15] சிறிது காலத்திற்கு தண்டனையை நாம் நீக்குவோம்; ஆனால் நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்புவீர்கள்.
[44:16] பெரிய அடியை நாம் அடிக்கும் நாளில், நாம் பழிதீர்ப்போம்.
[44:17] அவர்களுக்கு முன் ஃபேரோவின் சமூகத்தாரை நாம் சோதித்தோம்; கண்ணியமானதொரு தூதர் அவர்களிடம் சென்றார்.
[44:18] பிரகடனம் செய்தவாறு : “கடவுள்-ன் அடியார் களே, நான் சொல்வதை கவனித்துக் கேளுங் கள். நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.”
[44:19] மேலும், “கடவுள்-க்கெதிராக வரம்பு மீறாதீர் கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களி டம் நான் கொண்டு வருகின்றேன்.
[44:20] “என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.
[44:21] “நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை யென்றால், பின்னர் என்னை அப்படியே தனியே விட்டுச் சென்று விடுங்கள்”.
[44:22] அதன் பிறகு, அவர் தன் இரட்சகரிடம்: “இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[44:23] (கடவுள் கூறினார்,) “இரவுப் பொழுதில் என் அடியார்களுடன் பயணிப்பீராக. நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
[44:24] “விரைவாகக் கடலைக் கடந்து விடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்”.
[44:25] இவ்விதமாக, அவர்கள் பல தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் அவர்கள் பின்னால் விட்டுச் சென்று விட்டனர்.
[44:26] விளைச்சல்களையும் மற்றும் ஆடம்பரமான தொரு வாழ்வையும்.
[44:27] அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அருட் கொடைகளையும்.
[44:28] இவை அனைத்தையும் வேறு மக்கள் வாரிசாகப் பெறும்படி நாம் செய்தோம்.
[44:29] வானமோ, அன்றிப் பூமியோ அவர்களுக்காக அழவில்லை, மேலும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இல்லை.
[44:30] இதற்கிடையில், இஸ்ரவேலின் சந்ததியினரை இழிவு தரும் அடக்குமுறையிலிருந்து நாம் காப் பாற்றினோம்.
[44:31] ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங் கோலனாக இருந்தான்.
[44:32] நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கு மத்தியில் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
[44:33] பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராள மான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.
அதே விளைவுகளை எதிர்பாருங்கள்
[44:34] தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,
[44:35] “முதல் மரணம் மட்டுமே நாம் மரணிக்கின் றோம்; நாம் ஒருபோதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படமாட்டோம்!
[44:36] “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடைய முன்னோர்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்”.
[44:37] டுப்பஹ் சமூகத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களையும் விட இவர்கள் மேலானவர்களா? அவர்களுடைய குற்றங் களுக்காக அவர்களை நாம் அழித்தோம்.
[44:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காக நாம் படைக்கவில்லை.
[44:39] குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே அவற் றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[44:40] தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக் காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.
[44:41] எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவருக்கும் உதவி செய்யப்பட இயலாது.
[44:42] கடவுள்-இடமிருந்து கருணையை அடைந்து விட்டவர்களைத் தவிர. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
நம்ப மறுப்பவர்கள்
[44:43] நிச்சயமாக, கசப்பினுடைய மரமானது-
[44:44] பாவகரமானவர்களுக்கு உணவை வழங்கும்.
[44:45] கடுங்கார நீரைப் போல, வயிறுகளில் அது கொதிக்கும்.
[44:46] நரகத்தின் பானங்கள் கொதிப்பதைப் போல.
[44:47] அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத் தினுள் அவனை வீசி விடுங்கள்.
[44:48] பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனு டைய தலையின் மீது ஊற்றுங்கள்.
[44:49] “இதனைச் சுவைப்பாயாக; நீ மிகவும் சக்தி யுடையவனாக, மிகவும் கண்ணியத்திற் குரியவனாக இருந்தாய்.”
[44:50] இதுதான் நீ சந்தேகித்துக் கொண்டிருந்தது.
நன்னெறியாளர்கள்
[44:51] நன்னெறியாளர்கள் பாதுகாப்பானதொரு நிலையில் இருப்பார்கள்.
[44:52] தோட்டங்களிலும், ஊற்றுக்களிலும் மகிழ்ந் தவர்களாக.
[44:53] மென்பட்டையும் மேலும் பளபளக்கும் பட்டையும் அணிந்தவர்களாக; ஒருவருக்கொருவர் நெருக்கமாக.
[44:54] அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
[44:55] பூரணமான அமைதியில், அனைத்துக் கனி வர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக் கின்றார்கள்.
நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை*
[44:56] அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை-முதல் மரணத்திற்கு* அப்பால்-மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டார்.

அடிகுறிப்பு:
*44:56 பின் இணைப்பு 17ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் ஆதாமும் ஏவாளும் முன்னர் வசித்த அதே சுவனத்திற்கு நேரடியாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் கூற்றுடன் 40:11ல் நம்ப மறுப்பவர்களின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.
[44:57] உம் இரட்சகரிடமிருந்துள்ள அருட்கொடை இத்தகையதே. மகத்தான மாபெரும் வெற்றி இத்தகையதே.
[44:58] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக நாம் இதனை உம்முடைய மொழியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
[44:59] ஆகையால், காத்திருப்பீராக; அவர்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.