சூரா 43: ஆபரணங்கள் (அல்-ஜுக்ருஃப்)

[43:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[43:1] ஹா.ம.*

அடிகுறிப்பு:
*43:1 40:1க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும். ஹா.ம. என்ற தலைப்பு எழுத்துக்களைக் கொண்ட ஏழு சூராக்களில் “ஹா” (ஹ்ஹா) மற்றும் “ம” (மீம்) ஆகிய எழுத்துக்கள் இடம் பெறும் எண்ணிக்கை முறையே 292 மற்றும் 1855 ஆகும். இதன் கூட்டுத் தொகை 2147 அல்லது 19 ஒ 113 ஆகும்.
[43:2] மற்றும் விவரமாக விளக்குகின்ற இவ்வேதம்.
[43:3] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான தொரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள் ளோம்*.

அடிகுறிப்பு:
*43:3 அரபி மிகத் திறன் வாய்ந்த மொழியாகும், குறிப்பாக கட்டளைகளை, சட்டத்திட்டங்களை தெளிவாகக் கூறுவதிலும் மேலும் சட்டங்களை வலியுறுத்துவதிலும் மிகச் சிறப்பானதாகும். எனவேதான் மக்கள் அனைவரும், அவர்களுடைய மொழிகள் எதுவானபோதிலும், தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, குர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்களுக்குப் பின் இணைப்பு 4ஐப் பார்க்கவும்.
[43:4] கண்ணியத்திற்குரிய, மேலும் ஞானம் நிரம்பிய மூலப்பிரதியில் நம்மிடம் இது பாதுகாக்கப்பட்டு உள்ளது.
[43:5] நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*

அடிகுறிப்பு:
*43:5 முன்னுரை மற்றும் பின் இணைப்பு 7 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி இது நம்முடைய ஆதிபாவத்தைக் குறிக்கின்றது.
மீட்சிக்கான திட்டம்
[43:6] வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.
[43:7] வேதம் வழங்கப்பட்ட ஒருவர் ஒவ்வொருமுறை அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை கேலி செய்தனர்.
[43:8] அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தியைக் கொண்டிருந்த மக்களை நாம் அழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைக்கின்றோம்.
[43:9] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தது யார்?,” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள், “சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்” என்று கூறுவார்கள்.
[43:10] அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு, உங்களுக்காக அதில் சாலைகளைப் படைத்தார்.
[43:11] அவர்தான் விண்ணிலிருந்து, மிகச்சரியான அளவில் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.
[43:12] அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல் களையும் கால்நடைகளையும் அவர் படைத்தார்.
[43:13] அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு அருட் கொடைக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுவீராக, “இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தி யிருக்க எங்களால் இயன்றிருக்காது.
[43:14] “இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.
புதல்விகளாக வானவர்கள்: ஓர் இறைநிந்தனை
[43:15] அவருடைய சொந்தப் படைப்புகளிலிருந்தே ஒரு பங்கினை அவருக்கென அவர்கள் ஒதுக் கீடு செய்தனர்! நிச்சயமாக, மனிதன் முற்றிலும் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
[43:16] தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந் தெடுத்துக் கொண்டு, அதே சமயம் புதல்வர் களைக் கொண்டு உங்களுக்கு அருள்பாலித்து விட்டாரா?
[43:17] மிக்க அருளாளருக்கு அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியை பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் மற்றும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது!
[43:18] (அவர்கள் கூறுகின்றனர்,) “அழகுடன் இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போர்களில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது?”
[43:19] மிக்க அருளாளரின் அடியார்களான வானவர் கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர்! அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா? அவர் களுடைய கூற்றுக்கள் பதிவு செய்யப்படு கின்றன, மேலும் அவர்கள் கேட்கப் படுவார்கள்.
[43:20] அவர்கள், “மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்” என்றும் கூட கூறினார்கள். இத்தகையதொரு கூற்றிற்கு எந்த அடிப்படையும் அவர்களிடம் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்*.

அடிகுறிப்பு:
*43:20 கடவுளை மட்டும் வழிபடுவதற்கோ, அல்லது அவ்வாறில்லாமல் இருப்பதற்கோ, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நாம் பரிபூரணமாக பெற்றிருப்பதால், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், தங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டிற்குக் கடவுள் மீது பழிபோட முடியாது.
[43:21] இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர் களுக்குத் தந்து, மேலும் அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?
பாரம்பர்யப் பழக்கவழக்கங்கள் கண்டனம் செய்யப்படுகின்றன
[43:22] உண்மையாவது: அவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர் கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறினார்கள்.
[43:23] எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம், சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர் களுடைய அடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்கின்றோம்” என்று கூறுவார்கள்.
[43:24] (அத்தூதர்), “உங்களுடைய பெற்றோர்களிட மிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறுவார். அவர்கள், “நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறுவார்கள்.
[43:25] அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர் களுக்கான பின்விளைவுகளைக் கவனிப் பீராக.
ஆப்ரஹாமின் உதாரணம்
[43:26] ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.
[43:27] “என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த இயலும்”.
[43:28] (ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின் தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத் திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.
[43:29] உண்மையில், இந்த மக்களுக்கும் மேலும் அவர் களுடைய முன்னோர்களுக்கும் போதிய வாய்ப்புகளை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.
[43:30] சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள், “இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
முஹம்மது கேலி செய்யப்பட்டார்
[43:31] அவர்கள், “(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்!” என்று கூறினார்கள்.
[43:32] இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை பங்கீடு செய்பவர்கள்? அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே பங்கீடு செய்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.
இந்த உலகப் பொருட்கள்: அனைத்தும் நம்ப மறுப்பவர்களுக்குக் கிடைக்கும்
[43:33] எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்ப மறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளி யிலான கூரைகள், மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக் கூடிய படிகள் கொண்ட மாளிகை களை நாம் வழங்கியிருப்போம்.
[43:34] அவர்களுடைய மாளிகைகள் மனம் கவரும் வாயில்களையும், மேலும் ஆடம்பரமான இருக்கைகளையும் கொண்டதாக இருந் திருக்கும்.
[43:35] அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறி யாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.
கண்ணுக்குத் தெரியாத, சாத்தானியக் கூட்டாளிகள்*
[43:36] எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*

அடிகுறிப்பு:
*43:36-39 தொடர்ந்து உடனிருக்கும் ஒரு கூட்டாளியாக சாத்தானின் ஒரு பிரதிநிதியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம் (பின் இணைப்பு 7).
[43:37] அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் தாங்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்று நம்பும்படி அவர்களை செய்து விடுவார்கள்.
[43:38] நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன், “ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிட மிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகர மான கூட்டாளி!” என்று கூறுவான்.

அடிகுறிப்பு:
*43:38 “கிழக்குகள்” என்பது சூரிய உதயம், சந்திர உதயம், மற்றும் விண்ணகப் பொருட்கள் உதயமாகும் இடங்களைக் குறிக்கின்றது.
[43:39] வரம்பு மீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக் கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்
[43:40] செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை, அல்லது வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்களை பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா?
[43:41] அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லது, இல்லையோ நிச்சயமாக நாம் அவர்களைப் பழி தீர்ப்போம்.
[43:42] அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித் துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றோம்.
[43:43] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில் இருக்கின்றீர்*.

அடிகுறிப்பு:
*43:43 “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பு (1230) உடன் 43ஐக் கூட்டினால் 1273, 19 ஒ 67 ஆகும்.
[43:44] இது உமக்கும் உம்முடைய சமூகத் தவருக்குமானதொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் கேட்கப்படுவீர்கள்.
[43:45] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம்: “வழிபடப்படுவதற்காக - மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின் றோமா?” என்பதை சரிபார்த்துக் கொள்வீராக.
[43:46] உதாரணத்திற்கு, “நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதர் ஆவேன்” எனப் பிரகடனம் செய்தவராக, ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் நம் சான்று களுடன் மோஸஸை நாம் அனுப்பினோம்.
[43:47] அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டியபொழுது, அவற்றைப் பார்த்து அவர்கள் சிரித்தனர்.
மோஸஸும் ஃபேரோவும்
[43:48] அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒரு வேளை அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காகத் தொந்தரவுகளைக் கொண்டு அவர்களை நாம் துன்புறுத்தினோம்.
[43:49] அவர்கள், “மந்திரவாதியே, (இந்தத் தொந்தரவை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப் பட்டவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.
[43:50] ஆனால் அவர்களுடைய துன்பத்தை நாம் நிவர்த்தி செய்தவுடன், அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விட்டனர்.
[43:51] ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், “என்னுடைய மக்களே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறுகள் எனக் குரியவை அல்லவா? நீங்கள் பார்க்க வில்லையா?
[43:52] “எவர் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்த வரும் மேலும் பேசுவதற்கே கஷ்டப்படுகின்ற வருமான அவரா?
[43:53] “ஒரு தங்கப் பொக்கிஷத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?”
[43:54] இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.
[43:55] நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித் தோம்.
[43:56] மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மேலும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் ஆக்கினோம்.
இயேசு: மற்றொரு உதாரணம்
[43:57] மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக் கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.
[43:58] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை வழி படுவது மேலானதா அல்லது அவரை வழிபடு வதா?” என்று கூறினார்கள். உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினார்கள். உண்மையில், அவர்கள் எதிரணி யினருடன் சேர்ந்து விட்ட மக்களாவர்.
[43:59] அவர் நம்மால் அருள்பாலிக்கப்பட்ட ஓர் அடியார் என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.
[43:60] நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.
இயேசுவும் உலகத்தின் முடிவும்*
[43:61] உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான தொரு அடையாளமாக அவர் பணியாற்ற உள்ளார், எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.

அடிகுறிப்பு:
*43:61 பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, உலகத்தின் முடிவு குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இயேசுவின் பிறந்த தேதி, இக்கணிப்பு சரியானதுதான் என்பதற்கு முக்கியத்துவமிக்க அடையாளங்களில் ஒன்றை வழங்கியது. இயேசுவின் பிறப்பிற்கு 2280 வருடம் கழித்து (19 ஒ 120) உலகம் முடிவுறும் என நாம் அறிகின்றோம் (பார்க்க 47:18). கூடுதலாக, சந்திர வருடம் (1710) மற்றும் சூரிய வருடம் (2280) ஆகிய இரண்டும் 570 (19 ஒ 30) ஆல் வகுபடக் கூடியதாக உள்ளன, இது இயேசுவின் பிறப்பிலிருந்து முஹம்மதின் பிறப்பு வரைக்கும் உள்ள வருடங்களின் எண்ணிக்கையாகும். இவ்விதமாக, இயேசுவின் பிறந்ததேதி ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது.
[43:62] சாத்தான் உங்களை விரட்டி விடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
[43:63] சான்றுகளுடன் இயேசு சென்ற பொழுது, அவர் கூறினார், “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் வந்துள் ளேன். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[43:64] “கடவுள் தான் என்னுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகரும் ஆவார், நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்”.
[43:65] எதிரிகள் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். வலிநிறைந்ததொரு நாளின் தண்டனையின் மூலம் வரம்பு மீறுபவர்களுக்குக் கேடுதான்.
[43:66] அந்த நேரமானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா?
[43:67] நெருங்கிய நண்பர்கள் அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாகி விடுவார்கள், நன்னெறியாளர்களைத் தவிர.
நன்னெறியாளர்கள்
[43:68] என் அடியார்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.
[43:69] அவர்கள் தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அடிபணிந் தவர்களாக இருந்தவர்கள்.
[43:70] உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் மகிழ்ச்சி யோடிருங்கள்.
[43:71] தங்கத் தாம்பாளங்களும் மற்றும் கிண்ணங்களும் அவர்களுக்கு முன் வைக்கப்படும், மேலும் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.
[43:72] உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசுரிமையாகப் பெறுகின்ற சுவனம் இத்தகைய தேயாகும்.
[43:73] அனைத்து வகையான கனிகளும் அதில் உங்களுக்குக் கிடைக்கும், அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
[43:74] நிச்சயமாக, குற்றவாளிகள் ஜஹன்னாவின் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[43:75] தண்டனை ஒருபோதும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது; அவர்கள் அதிலே அடைக்கப்படுவார்கள்.
[43:76] அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[43:77] அவர்கள்: “மாலிக்கே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப்பார்கள். அவர், “நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்” என்று கூறுவார்.
அவர்கள் சத்தியத்தை வெறுக்கின்றனர்
[43:78] “ நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்”.
[43:79] அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின் றோம்.
[43:80] அவர்களுடைய இரகசியங்களையும் மேலும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? ஆம், உண்மையில்; நம் தூதர்கள், பதிவு செய்து கொண்டு அவர்களுடன் இருக்கின்றனர்.
[43:81] “மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந் தாலும், அப்போதும் நான் தான் முதன்மையான வழிபடுபவராக இருப்பேன்” என்று பிரகடனம் செய்வீராக.
[43:82] அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுக்களுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தை உடைய இரட்சகர்.
[43:83] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாள் வரும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.
[43:84] அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[43:85] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். அந்த நேரம் (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.
[43:86] அவருடன் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.
[43:87] அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றனர்?
[43:88] “என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” என்று பிரகடனம் செய்யப்படும்.
[43:89] அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும், “அமைதி” என்று கூறுவீராக; அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.