சூரா 40: மன்னிப்பவர் (க்ஹாஃபிர்)

[40:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[40:1] ஹா.ம*

அடிகுறிப்பு:
*40:1 “ஹாமீம்” ஆகிய இந்த தலைப்பு எழுத்துக்கள் 40-46 சூராக்களில் இடம் பெறுகின்றன. ஹா மற்றும் மீம் ஆகிய எழுத்துக்கள் இந்த ஏழு சூராக்களிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கையாவது 2147 அல்லது 19ஒ113 (பின் இணைப்பு 1).
[40:2] இவ்வேதத்தின் இந்த வெளிப்பாடு சர்வ வல்லமையுடையவரும், எல்லாம் அறிந்த வருமான, கடவுள்-இடமிருந்து வந்துள்ளது.
[40:3] பாவங்களை மன்னிப்பவர், வருந்தித்திருந் துதலை ஏற்றுக் கொள்பவர், தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர், மேலும் அனைத்து அதிகாரங்களும் கொண்டவர். அவருடன் வேறு தெய்வம் இல்லை. இறுதி விதி அவரிடமே உள்ளது.
[40:4] நம்பமறுப்பவர்களைத் தவிர எவரும் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதாட மாட்டார்கள். அவர்களுடைய வெளிப்ப டையான வெற்றியால் கவரப்பட்டு விடாதீர்.
[40:5] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத் தாரும், அவர்களுக்குப் பின்னர் ஏராளமான எதிரிகளும் நம்ப மறுத்தனர். ஒவ்வொரு சமூகமும் அவர்களுடைய தூதரை அவரை இயங்காமல் செய்யும் பொருட்டு, அடக்கு முறை செய்தன. மேலும் சத்தியத்தைத் தோல்வியுறச் செய்வதற்காக அவர்கள் பொய்மையைக் கொண்டு வாதிட்டனர். அதன் விளைவாக, நான் அவர்களைத் தண்டித்தேன்; எனது தண்டனை எவ்வளவு கடுமையானதாக இருந்தது!
[40:6] இவ்விதமாக, உம் இரட்சகரின் தீர்ப்பு, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள் என்று நம்ப மறுப் பவர்கள் மீது ஏற்கெனவே முத்திரையிடப் பட்டுள்ளது.
வானவர்கள் நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர்
[40:7] அரியாசனப் பணிபுரிபவர்களும் அதனைச் சூழ்ந்து இருப்பவர்களும் தங்களுடைய இரட்ச கரைத் துதித்துக் கொண்டும், புகழ்ந்து கொண்டும் இருக்கின்றனர், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்கின்றனர்: “எங்கள் இரட்சகரே, உமது கருணையும் மற்றும் உமது அறிவும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்துள்ளது. பாவங்களுக்காக வருந்தித்திருந்தி மேலும் உம்முடைய பாதையைப் பின்பற்றுபவர்களை மன்னிப்பீராக, மேலும் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களை விலக்கிடுவீராக.
[40:8] “எங்கள் இரட்சகரே, மேலும் அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களிலும், வாழ்க் கைத் துணைகளிலும், மற்றும் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுக்கும், நீர் வாக்களித்த ஏதேன் தோட்டங்களுக்குள் அவர்களை அனுமதிப்பீராக. நீர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[40:9] “மேலும் பாவங்களில் வீழ்வதிலிருந்தும் அவர் களைப் பாதுகாப்பீராக. பாவங்களில் வீழ்வதி லிருந்து நீர் பாதுகாக்கும் எவரும், அந்நாளில், உம்மிடமிருந்து கருணையை அடைந்து விட்டார். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.”
கடவுள் மட்டும்: நம்ப மறுப்பவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்
[40:10] நம்ப மறுப்பவர்களிடம், “ உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் சொந்த வெறுப்பை விடவும் உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள வெறுப்பு மிகவும் அதிகமானதாகும். ஏனெனில் நம்பிக்கை கொள்ளுமாறு நீங்கள் அழைக்கப் பட்டீர்கள், ஆனால் நீங்கள் நம்பமறுப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்” என்று கூறப்படும்.
கடவுள் மட்டும்: நம்பமறுப்பவர்கள் இரு மரணங்களை*அனுபவிக்கின்றனர்
[40:11] அவர்கள், “ எங்கள் இரட்சகரே, நீர் எங்களை இருமுறை மரணத்தில்* ஆழ்த்தினீர். மேலும் இரண்டு வாழ்வுகளை எங்களுக்குக் கொடுத் தீர்; இப்போது நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டு விட்டோம். இதிலிருந்து வெளியேற ஏதேனும் வழி உண்டா?” என்று கூறுவார்கள்.

அடிகுறிப்பு:
*40:11-12 நம்பமறுப்பவர்கள் இரண்டு மரணங்களை அனுபவிக்கின்றனர், அதே சமயம் நன்னெறியாளர்களான நம்பிக்கையாளர்கள், நாம் ஏற்கெனவே அனுபவித்த மரணத்திற்கு அப்பால், மரணத்தைச் சுவைப்பதில்லை (44:56). பின் இணைப்பு 17ஐ தயவுசெய்து பார்க்கவும். நரகத்திற்குச் செல்லும் காரணம் வெளிப்படையானதாகும்; கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கூட மற்றவர்களை அவருடன் இணைத்துக் கொள்கின்றனர் (39 :45 ஐப் பார்க்கவும்).
கடவுள் மட்டும்: காரணத்தைக் கவனியுங்கள்
[40:12] இது ஏனெனில் கடவுள் மட்டும் என்று வாதிட்ட போது, நீங்கள் நம்பமறுத்தீர்கள், ஆனால் அவருடன் மற்றவர்களும் சேர்த்து கூறப்பட்ட போது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். ஆகையால், கடவுள்-ன் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, அவர் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.

அடிகுறிப்பு:
*40:11-12 நம்பமறுப்பவர்கள் இரண்டு மரணங்களை அனுபவிக்கின்றனர், அதே சமயம் நன்னெறியாளர்களான நம்பிக்கையாளர்கள், நாம் ஏற்கெனவே அனுபவித்த மரணத்திற்கு அப்பால், மரணத்தைச் சுவைப்பதில்லை (44:56). பின் இணைப்பு 17ஐ தயவுசெய்து பார்க்கவும். நரகத்திற்குச் செல்லும் காரணம் வெளிப்படையானதாகும்; கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கூட மற்றவர்களை அவருடன் இணைத்துக் கொள்கின்றனர் (39 :45 ஐப் பார்க்கவும்).
[40:13] அவர்தான் தன்னுடைய சான்றுகளைத் தொடர்ச்சியாக உங்களுக்குக் காட்டுபவர், மேலும் விண்ணிலிருந்து வாழ்வாதாரங்களை இறக்கி அனுப்புபவர். முற்றிலும் அடிபணிந் தவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பார்கள்.
[40:14] ஆகையால், நம்பமறுப்பவர்கள் அதனை விரும்பாத போதிலும், உங்களுடைய வழிபாட்டை நீங்கள் முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும்.
[40:15] மிக உயர்ந்த அந்தஸ்துக்களைக் கொண்டவர், மேலும் முழு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர். ஒன்று கூட்டுகின்ற நாளைக் குறித்து எச்சரிப்பதற்காக, தன் அடியார்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், தன்னுடைய கட்டளைகளைக் கொண்ட, உள்ளுணர்வை அவர் அனுப்புகின்றார்.
[40:16] அதுதான் ஒவ்வொருவரும் முற்றிலும் வெளிப் படுத்தப்படுகின்ற நாளாகும்; அவர்களில் எவரும் கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றையும் மறைக்க முடியாது. ஆட்சியதிகாரம் அனைத் தும் அந்நாளில் எவருக்குரியது? ஒருவரும், மேலான அதிகாரமுடையவருமான, கடவுள் - க்கு.
அந்தப் பெரிய நாளுக்காகத் தயார் செய்யுங்கள்
[40:17] அந்நாளில், ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநீதியும் இருக்காது. கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.
பரிந்துரை இல்லை
[40:18] சமீபத்திலிருக்கும் அந்த நாளைப் பற்றி அவர் களை எச்சரிப்பீராக, அப்போது இதயங்கள் திகிலடைந்து விடும், மேலும் ஏராளமானோர் குற்றம் உணர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் இருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக்குக் கீழ்ப்படிய எந்த நண்பனோ அன்றிப் பரிந்துரையாளரோ இருக்க மாட்டார்கள்.
[40:19] கண்கள் காணமுடியாதவற்றையும், மேலும் மனங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[40:20] கடவுள் நியாயமாகத் தீர்ப்பளிக்கின்றார், அதே சமயம் அவருடன் அவர்கள் இறைஞ்சுகின்ற இணைத் தெய்வங்கள் எந்த ஒன்றிற்கும் தீர்ப்பளிக்க இயலாது. கடவுள் தான் செவியேற்பவராகவும், பார்ப்பவராகவும் இருக்கின்றவர்.
[40:21] அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் வலிமையுள்ளவர் களாகவும், மேலும் பூமியின் மீது அதிகம் விளைவித்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் கடவுள் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், மேலும் கடவுள் - இடமிருந்து எந்த ஒன்றும் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
[40:22] அது ஏனெனில், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களைத் தண்டித்தார். அவர் பலம் மிக்கவர், தண்டனை யை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.
மோஸஸ்
[40:23] நம்முடைய அத்தாட்சிகளுடனும் மேலும் ஆழ்ந்ததோர் அங்கீகாரத்துடனும் மோஸஸை நாம் அனுப்பினோம்.
[40:24] ஃபேரோ, ஹாமான், மற்றும் காரூனிடம். ஆனால் அவர்கள், “ ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்” என்று கூறினார்கள்.
[40:25] மேலும் அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களுக்குக் காட்டிய பொழுது, அவர்கள், “அவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் மகன்களைக் கொன்று விடுங்கள், மேலும் அவர்களுடைய மகள்களை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். “இவ்விதமாக, நம்ப மறுப்பவர்களின் சூழ்ச்சிகள் எப்பொழுதும் தீயவையாகவே உள்ளன.
மோஸஸும், ஃபேரோவும் எதிரி நிலையில்
[40:26] ஃபேரோ, “என்னை, மோஸஸைக் கொல்ல விடுங்கள், மேலும் அவர் அவருடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திக்கட்டும். அவர் உங்களுடைய மார்க்கத்தைப் பாழாக்கி விடுவார், அல்லது நாடு முழுவதும் தீமைகளைப் பரப்பி விடுவார் என்று நான் கவலைப்படுகின்றேன்” என்று கூறினான்.
[40:27] மோஸஸ், “ கணக்குக் கொடுக்கின்ற நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத ஆணவக்காரன் ஒவ்வொருவனிடமிருந்தும், என்னுடைய இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்” என்று கூறினார்.
கடவுள் பொய்யர்களை வழிநடத்துவதில்லை
[40:28] ஃபேரோவின் சமூகத்தாரிடையே, தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர் கூறினார், “‘என் இரட்சகர் கடவுள் தான்,’ என்று கூறியதற்காக மட்டும் எப்படி ஒரு மனிதரை நீங்கள் கொலை செய்ய இயலும், மேலும் அவர் உங்கள் இரட்சகரிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களுக்குக் காட்டியுள்ள போது? அவர் ஒரு பொய்யராக இருந்தால், அது அவருடைய பிரச்சனையாகும், மேலும் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் வாக்களித்தவற்றிலிருந்து நீங்கள் பயனடை வீர்கள். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்,பொய்யர் எவரையும் கடவுள் வழி நடத்த மாட்டார்.
[40:29] “என் சமூகத்தாரே, இன்றைய தினம் அரசுரி மையும், மேலும் மேன்மையும் உங்களிடம் உள்ளது. ஆனால் கடவுள் - ன் தீர்ப்பு நம்மிடம் வந்து விட்டால், அதற்கு எதிராக நமக்கு உதவுபவர் யார்?” ஃபேரோ, “ நான் எதனை பொருத்தமெனக் காண்கின்றேனோ, அதனைப்பின்பற்ற வேண்டியவர்களாகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள்; சரியான பாதையில் மட்டுமே நான் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறினான்.
[40:30] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, முந்திய எதிரிகளுக்கு நேரிட்டதைப் போன்ற அதே விதியை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.
[40:31] “நோவா, மேலும் ஆது, தமூது, மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றவர்களின் எதிரிகள். மக்களுக்கு அநியாயம் எதையும் கடவுள் விரும்புவதில்லை.
[40:32] “என் சமூகத்தாரே, ஒன்று கூட்டுகின்ற அந்த நாளை உங்களுக்கு நான் அஞ்சு கின்றேன்.
[40:33] “புறங்காட்டித் திரும்பித் தப்பியோட நீங்கள் விரும்பக் கூடிய நாள் அதுவாகும். ஆனால் அப்போது கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் உங்களைக் காப்பாற்றாது. கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்புகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த இயலாது.”
இறுதித் தூதர் *யார்? சோகமானதொரு மனிதப் பண்பு
[40:34] அதற்கு முன்னர் ஜோஸஃப் தெளிவான வெளிப்பாடுகளுடன் உங்களிடம் வந்திருந் தார், ஆனால் நீங்கள் அவருடைய தூதுச் செய்தியைத் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர், அவர் இறந்து விட்ட பொழுது நீங்கள், “அவருக்குப் பின்னர் வேறு எந்தத் தூதரையும் கடவுள் அனுப்பமாட்டார். (அவர் தான் இறுதித் தூதர்!)”** என்று கூறினீர்கள். கடவுள் இவ்விதமாக வரம்பு மீறுபவர்களையும், சந்தேகிப்பவர்களையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.

அடிகுறிப்பு:
*40:34 யூதர்கள், மெஸையாஹ் அவர்களிடம் வந்தபோது அவர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தனர், கிறிஸ்தவர்கள், முஹம்மது அவர்களிடம் வந்த போது அவர் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தனர், மேலும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர் முஹம்மது இறுதித் தூதர் என்று நம்புகின்றனர். இந்தத் தவறான அடிப்படையில், கடவுளின் உடன்படிக்கைத் தூதரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். 3:81-90 மற்றும் 33:7 ஆகியவற்றிலிருந்து, “ கடவுளி ன் உடன்படிக்கைத் தூதர் மீது நம்பிக்கை கொண்டு ஆதரவளிக்க வேண்டும்,” என்ற குர்ஆனின் கட்டளையை ஏற்றுக் கொள்ளத் தவறுபவர்கள், நம்பிக்கையாளர்களாக நீடிப்பதில்லை என்று நாம் அறிந்து கொள்கின்றோம். பின்இணைப்பு 2 & 26 ஐப் பார்க்கவும். **40:34 “ இறுதித் தூதர்” என்று கூறுவதற்கு எதிரான தடையுத்தரவிற்கு மிகச்சரியாக நான்கு வசனங்கள், முன்னாலும் அதற்கு நான்கு வசனங்கள் பின்னாலும் ‘ ரஷாத்” என்ற பெயர் அரபி மூலத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
[40:35] எந்த அடிப்படையுமின்றி, கடவுள்-ன் வெளிப் பாடுகளுக்கு எதிராக அவர்கள் வாதிடு கின்றனர். இந்த தன்மை கடவுள் மற்றும் நம்பிக்கையாளர்களால் மிகவும் வெறுக்கப் படுவதாகும். கடவுள் இவ்விதமாக ஒவ்வொரு ஆணவம் கொண்ட கொடுங்கோலனின் இதயத்தையும் முத்திரையிட்டு விடுகின்றார்.
[40:36] ஃபேரோ கூறினான், “ஹாமானே, நான் சென்றடைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, உயர்ந்ததொரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக.
[40:37] “நான் வானத்தைச் சென்றடைந்து, மோஸஸின் தெய்வத்தை ஒரு பார்வையிடவும் விரும்பு கின்றேன். அவர் ஒரு பொய்யர் என்றே நான் நம்புகின்றேன்.” இவ்விதமாக ஃபேரோவின் தீய காரியங்கள் அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டன, மேலும் இவ்விதமாக (சரியான) பாதையைப் பின்பற்றுவதிலிருந்து அவன் தடுக்கப்பட்டான். ஃபேரோவின் சூழ்ச்சி மெய்யாகவே தீயதாக இருந்தது.
[40:38] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னைப் பின்பற்றுங்கள், மேலும் நான் சரியான வழியில் உங்களை வழிநடத்துவேன்.
[40:39] “என் சமூகத்தாரே, இந்த முதல் வாழ்வு தற்காலிகமானதொரு மாயையேயாகும். அதே சமயம் மறுவுலகமே நிரந்தரமான தங்குமிடமாகும்.”
மிகச்சிறந்த வணிகம்
[40:40] எவரேனும் ஒரு பாவத்தைச் செய்தால் அதற் குரிய கூலி மட்டுமே கொடுக்கப்படுவார், மேலும் எவரேனும்-ஆணோ அல்லது பெண்ணோ-நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான காரியங்கள் புரிந்தால்-அவர் கள் சுவனத்திற்குள் நுழைவார்கள், அதிலே அவர்கள் எவ்வித வரை யறையுமின்றி வாழ்வாதாரங்களைப் பெறுவார்கள்.
நம்பிக்கை கொண்ட எகிப்தியர் தன் சமூகத்தாருடன் விவாதம் செய்கின்றார்
[40:41] “ என் சமூகத்தாரே, காப்பாற்றப்படுவதற்காக உங்களை நான் அழைக்கும் அதே சமயம், நரக நெருப்பின் பால் என்னை நீங்கள் அழைக் கின்றீர்கள்.
[40:42] “கடவுள்-க்கு நன்றி கெட்டவனாகும்படியும், மேலும் நான் அறியாத இணைத் தெய்வங்களை அவருடன் அமைத்துக் கொள்ளும்படியும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நான் உங்களை, சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவரின் பால் அழைக்கின்றேன்.
[40:43] “எதைச் செய்யும்படி என்னை நீங்கள் அழைக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும், அன்றி மறுவுலகிலும் எந்த அடிப்படையும் கிடையாது என்பதிலும், நம் இறுதித்திரும்புதல் கடவுள்-இடமே என்பதிலும், மேலும் வரம்பு மீறுபவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர் என்பதிலும் சந்தேகமெதுவும் இல்லை.
[40:44] “ இப்போது நான் உங்களிடம் கூறுவதை என்றே னும் ஒரு நாள் நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். இவ்விஷயத்தின் தீர்ப்பை நான் கடவுள்-இடம் விட்டு விடுகின்றேன்; மக்கள் அனைவரையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.”
[40:45] பின்னர் கடவுள் அவர்களுடைய தீய சூழ்ச்சி களிலிருந்து அவரைக் காப்பாற்றினார், அதே சமயம் ஃபேரோவின் சமூகத்தார் மோசமான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
சமாதியில் இருக்கும் பொழுது: தொடர்ச்சியானதொரு திகில் கனவு
[40:46] இரவும் பகலும் நரகம் அவர்களுக்குக் காட்டப் படும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாளன்று: “ஃபேரோவின் சமூகத்தாரை மோசமான தண்டனைக்குள் நுழையச் செய்யுங்கள்.”
[40:47] நரகத்தில் அவர்கள் தர்க்கித்தவாறு, பின் பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம், இந்த நரகத்தின் எந்தப்பகுதியை யாவது எங்களிடமிருந்து நீங்கள் விலக்கி விட முடியுமா?” என்று கூறுவார்கள்.
[40:48] அந்தத் தலைவர்கள், “நாம் எல்லோரும் ஒன்றாக இதில் இருக்கின்றோம். மக்களுக் கிடையில் கடவுள் தீர்ப்பளித்துவிட்டார்” என்று கூறுவார்கள்.
மிகவும் தாமதம்
[40:49] நரக நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலர்களிடம், “ எங்களுக்குத் தண்டனை யைக் குறைக்கும்படி உங்கள் இரட்சகரை அழையுங்கள், ஒரு நாளைக்கேனும்” என்று கூறுவார்கள்.
[40:50] அவர்கள், “தெளிவான தூதுச் செய்தியை உங்களிடம் ஒப்படைத்த உங்களுடைய தூதர் களை நீங்கள் பெறவில்லையா?” என்று கூறு வார்கள். அவர்கள், “ ஆம் நாங்கள் பெற்றோம்” என்று பதிலளிப்பார்கள். அவர்கள், “ பின்னர் (நீங்கள் விரும்பிய அளவு) இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்; நம்ப மறுப்பவர்களின் இறைஞ்சுதல் எப்பொழுதும் வீணானதேயாகும்“ என்று கூறுவார்கள்.
உத்தரவாதமான வெற்றி; இங்கும் எப்பொழுதும்
[40:51] மிகவும் நிச்சயமாக, நம் தூதர்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலகம் மற்றும் சாட்சிகள் வரவழைக்கப்படும் அந்த நாள் ஆகிய இரண்டிலும், நாம் வெற்றியைத் தருவோம்.
[40:52] அந்நாளில், நம்ப மறுப்பவர்களின் மன்னிப்புக் கோருதல்கள் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் தண்டித்தலுக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகி விட்டனர்.
சரித்திரத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
[40:53] மோஸஸிற்கு நாம் வழிகாட்டலைத் தந்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை வேதத் திற்கு வாரிசாகச் செய்தோம்.
[40:54] அறிவுத்திறனுடையவர்களுக்கு (அவர்களுடைய சரித்திரம்) ஒரு படிப்பினையும் மேலும் ஒரு நினைவூட்டலுமாகும்.
[40:55] ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக, ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்திய மாகும், மேலும் உம்முடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக, மேலும் இரவும் பகலும் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் செய்வீராக.
[40:56] நிச்சயமாக, ஆதாரமின்றி கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு எதிராக வாதிடுபவர்கள், தங்கள் நெஞ்சங்களில் மறைத்துள்ள ஆணவத் தையே வெளிப்படுத்துகின்றார்கள், மேலும் அவர்கள் அதனைப்பற்றி அறியாமலும் இருக்கின்றார்கள். ஆகையால், கடவுள்-இடம் புகலிடம் தேடுவீராக; அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.
பிரபஞ்சத்தின் அச்சுறுத்தும் கட்டமைப்பு
[40:57] மனிதனின் படைப்பை விடவும் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு இன்னும் அதிக ஆச்சர்யமானதாகும், ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்.
[40:58] குருடரும் மற்றும் பார்வையுடையவரும் சமமானவர்கள் அல்ல. அன்றி நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியம் புரிபவர்கள் பாவிகளுக்குச் சமமானவர்கள் அல்ல. அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[40:59] மிகவும் உறுதியாக, அந்த நேரம் (தீர்ப்பு நாள்) வந்து கொண்டிருக்கின்றது, அதைப் பற்றி சந்தேகம் இல்லை, ஆனால் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
பிரார்த்தனை: வழிபாட்டின் ஒரு வடிவம்*
[40:60] உங்களுடைய இரட்சகர், “ என்னை இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள், மேலும் நான் உங்களுக்கு மறுமொழியளிப்பேன். நிச்சயமாக, என்னை வழிபடுவதற்கு மிகவும் ஆணவம் கொள்பவர்கள், நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக ஜஹன்னாவிற்குள் நுழைவார்கள்” என்று கூறுகின்றார்.

அடிகுறிப்பு:
*40:60 பொருள் சார்ந்த வசதிகள் உட்பட, எந்த ஒன்றிற்காகவும் பிரார்த்தித்தல், கடவுளை இறைஞ்சுதல், வழிபாட்டின் ஒரு வடிவமாகும். எனவே தான் நமக்கு ஏதேனும் தேவை ஏற்படும் போதெல்லாம் கடவுளை இறைஞ்சிப் பிரார்த்திக்கும்படிக் கட்டளையிடப்படுகின்றது. ஒரு நாத்திகன் ஒரு போதும் எந்த ஒன்றிற்காகவும் கடவுளை இறைஞ்ச மாட்டான்.
[40:61] கடவுள் தான் இரவை, அதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், மேலும் பகலைப் பிரகாசமானதாகவும் வடிவமைத்தார். மனிதர்கள் மீது கடவுள் ஏராளமான அருட் கொடைகளை அளிக்கின்றார், ஆனால் அதிகமான மக்கள் நன்றியுடையவர்கள் அல்ல.
[40:62] உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமான வர், அனைத்துப் பொருட்களின் படைப்பாளர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழிதவறிச் செல்ல இயலும்?
[40:63] கடவுள்-ன் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்பவர்களே வழிதவறிச் செல்வபவர்களாக இருக்கின்றனர்.
[40:64] கடவுள் தான் பூமியை உங்களுக்கு வசிக்கத் தக்கதாகவும், மேலும் வானத்தை வலி மைமிக்கதொரு அமைப்பாகவும் ஆக்கினார், மேலும் அவர் உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களை நன்கு வடிவமைத்தார். அவர்தான் நல்ல வாழ்வாதாரங்களை* உங்களுக்கு வழங்குகின்றவர். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; கடவுள் மிகவும் உயர் வானவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.

அடிகுறிப்பு:
*40:64 15:20, 20:54, 25:2, மற்றும் 35:12-13 ஆகிய வசனங்களுக்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
[40:65] அவர் உயிருடனிருப்பவர்: அவரைத் தவிர தெய்வம் இல்லை. நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவரை மட்டுமே வழிபட வேண்டும். பிரபஞ்சத்தின் இரட்சகராகிய, கடவுள்-க்கே புகழ் அனைத்தும்.
முஹம்மது மீதான கடவுளின் அருட்கொடைகளுக்கு முன்னர், அவர் இணைத் தெய்வங்களை வழிபடுபவராக இருந்தார்
[40:66] “என் இரட்சகரிடமிருந்து தெளிவான வெளிப்பாடுகள் என்னிடம் வந்த பொழுது, கடவுள்-உடன் நீங்கள் வழிபடுகின்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதிலிருந்து நான் தடுக்கப்பட்டுள்ளேன். பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு அடிபணிய வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்”*என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*40:66 இவ்வசனத்தில் பயன்படுத்தப்படும் “ நஹா” என்ற அரபி வார்த்தை ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவதையே குறிக்கின்றது. உதாரணத்திற்கு 4:171ல் இதே வார்த்தையை பார்க்கவும். 93:7ஐயும் பார்க்கவும்.
[40:67] அவர்தான் உங்களைத் தூசியிலிருந்து, மேலும் அதனைத் தொடர்ந்து மிகச் சிறியதொரு துளியிலிருந்து, பின்னர் தொங்குகின்றதொரு கருவிலிருந்து படைத்தார், பின்னர் ஒரு குழந்தையாக உங்களை வெளிக் கொண்டு வருகின்றார், பின்னர் உங்களை முதிர்ச்சி யடைய விடுகின்றார், பின்னர் நீங்கள் வயதானவர்களாகின்றீர்கள்-உங்களில் சிலர் சீக்கிரத்திலேயே மரணித்து விடுகின்றீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வயதை நீங்கள் அடைகின்றீர்கள்.
[40:68] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்ற ஒரே ஒருவர். எந்த ஒன்றும் செய்யப்பட வேண்டுமெனில், அவர் அதனை நோக்கி, “ஆகு” என்று மட்டும் கூறுகின்றார், அது ஆகிவிடுகின்றது.
[40:69] கடவுள்-ன் சான்றுகளுக்கு எதிராக வாதிடுகின்றவர்களையும், மேலும் எவ்வாறு அவர்கள் வழிதவறி விட்டனர் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?
[40:70] அவர்கள் தான் வேதத்தையும், மேலும் நம் தூதர்களுடன் நாம் அனுப்பிய தூதுச் செய்திகளையும் நம்பமறுத்து விட்டவர்கள். ஆகையால், அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[40:71] அவர்களுடைய கழுத்துகளைச்சுற்றி விலங்கு கள் இருக்கும், மேலும் அவர்களை இழுத்துச் செல்லச் சங்கிலிகள் பயன்படுத்தப்படும்.
[40:72] தீக்கனலிலும்,* பின்னர் நெருப்பிலும், அவர்கள் எரிவார்கள்.

அடிகுறிப்பு:
*40:72 தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்கள், தீர்ப்பு நாளன்று கடவுளின் வருகையின் போது மிகப்பயங்கரமான துன்பத்தை அடைவார்கள். அவர்களுடைய ஆன்மாக்கள் போதுமான வளர்ச்சியையும் ஊட்டத்தையும் பெறாத காரணத்தால், கடவுளின் அருகாமையை அவர்களால் தாங்கஇயலாது. குறிப்பிட்ட இந்தச் சூழ்நிலையை (55:44) வர்ணிக்க “தீக்கனல்” (ஐகேநசnடி) என்பதை நான் பயன்படுத்துகின்றேன். கடவுளால் விதிக்கப்பட்டுள்ள தொடர்புத் தொழுகை போன்ற சடங்குகளின் மூலம் ஆன்மாவின் தயாரிப்பு முழுமையடைகின்றது
[40:73] அவர்களிடம் கேட்கப்படும், “ நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே,
அவர்கள் வழிபட்டது ஒன்றுமில்லை
[40:74] “ கடவுள் - ஐ அன்றி?” அவர்கள், “ அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டனர். உண்மையில், அவர்களை நாங்கள் வழிபட்ட பொழுது, இல்லாத ஒன்றையே நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறுவார்கள். இவ்விதமாகக் கடவுள் நம்ப மறுப்பவர்களை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.
[40:75] இது ஏனெனில், பூமியின் மீது, நீங்கள் பொய் யான கொள்கைகளில் மகிழ்ந்து கொண்டிருந் தீர்கள், மேலும் நீங்கள் அவற்றை ஊக்கு வித்துக் கொண்டிருந்தீர்கள்.
[40:76] ஜஹன்னாவின் வாயில்களில் நுழையுங்கள், அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப் பீர்கள். ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துக்ககரமான விதி.
[40:77] நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும். அவர்களுக்கு நாம் வாக்களித்துள்ள (தண்டனையை) உமக்கு நாம் காட்டினாலும், அல்லது அதற்கு முன்னரே உம்முடைய வாழ்க்கையை முடித்துவிட்டாலும், அவர்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
குர்ஆனின் கணித அற்புதத்திற்குக் கடவுளின் அங்கீகாரம் *
[40:78] உமக்கு முன்னரும் தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம்-அவர்களில் சிலரை நாம் உமக்கு கூறியுள்ளோம், மேலும் சிலரை நாம் உமக்கு கூறவில்லை. எந்தத் தூதரும் கடவுள்-ன் அங்கீகாரமின்றி* எந்த அற்புதத்தையும் உருவாக்க முடியாது. கடவுள்-ன் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், சத்தியம் மேலோங்கும், மேலும் பொய்யர்கள் வெளிப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்படுவார்கள்.

அடிகுறிப்பு:
*40:78 17:45-46, 18:57 மற்றும் 56:79 ஆகிய வசனங்களில் இருந்து நம்பமறுப்பவர்கள் குர்ஆனை அடைந்து கொள்ள வழி இல்லை என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்; நம்பிக்கையாளர்களும் மேலும் உண்மையான தேடுதல் உடையவர்களும் மட்டுமே அதனைப் புரிந்து கொள்ளக் கடவுளால் அனுமதிக்கப் படுகின்றனர். “ மகத்தான அற்புதங்களில் ஒன்றான” (74:30-35), குர்ஆனின் கணிதக் குறியீடு, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் கடவுளுடைய உடன்படிக்கைத் தூதர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது (பின் இணைப்பு 2).
[40:79] கடவுள் தான் உங்களுக்காகக் கால்நடை களைப் படைத்தவர்;சிலவற்றில் நீங்கள் சவாரி செய்கின்றீர்கள், மேலும் சிலவற்றை நீங்கள் உண்ணுகின்றீர்கள்.
[40:80] அத்துடன் உங்களுடைய பல தேவைகளைத் திருப்தி செய்கின்ற கூடுதல் பலன்களையும் அவை உங்களுக்கு வழங்குகின்றன. அவற் றின் மீதும், அவ்வண்ணமே கப்பல்கள் மீதும், நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.
[40:81] இவ்விதமாக அவர் தன் சான்றுகளை உங்களுக்குக் காட்டுகின்றார். கடவுள்-ன் சான்றுகளில் எதனை உங்களால் மறுக்க இயலும்?
[40:82] அவர்கள் பூமியைச் சுற்றிப் பார்த்து தங்களுக்கு முன்சென்றவர்களுக்கு நேரிட்ட விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வலிமை மிகுந்தவர்களாகவும், மேலும் பூமியின் மீது அதிகமான பரம்பரைச் சொத்துக்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அவர்களுடைய சம்பாத்தியங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சிறிதளவும் உதவிடவில்லை.
[40:83] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்ற பொழுது, அவர்கள் பாரம்பர்யமாகப் பெற்ற அறிவில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
கடவுள் மட்டும்
[40:84] அதனைத் தொடர்ந்து, நம் தண்டனையை அவர்கள் கண்டபொழுது, அவர்கள், “ கடவுள் மட்டுமே என்பதில் நாங்கள் இப்போது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்த இணைத் தெய்வவழிபாட்டை இப்போது நாங்கள் நிராகரிக்கின்றோம்“ என்று கூறினார்கள்.
மிகவும் தாமதம்
[40:85] நம் தண்டனையை அவர்கள் கண்டுவிட்ட வுடன், அவர்களுடைய நம்பிக்கை அப்போது அவர்களுக்குச் சிறிதளவும் உதவிட இயல வில்லை. அவருடைய படைப்புகளை நிர்வகிப் பதற்காக நிலை நாட்டப்பட்டுள்ள கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும்; நம்ப மறுப் பவர்கள் எப்பொழுதும் அழிந்தே போவார்கள்.