சூரா 37: வரிசைப்படுத்துவோர் (அல்-ஸாஃப்பாத்)

[37:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[37:1] அணிகளில் வரிசைப்படுத்துவோர்.
[37:2] பழிக்கப்பட வேண்டியவர்களைப் பழிப்போர்.
[37:3] தூதுச் செய்திகளை ஓதுவோர்.
[37:4] உங்கள் தெய்வம் ஒன்றே ஒன்று.
[37:5] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர், மேலும் கிழக்குகளின்* இரட்சகர்.

அடிகுறிப்பு:
*37:5 விண்வெளிப்பொருட்கள் ஒவ்வொன்றும் பூமிக்கிரகத்தில் உதிக்கவும் அஸ்தமிக்கவும் செய்கின்றது. ஒவ்வொரு உதயமும் “ கிழக்கு” என அழைக்கப்படுகின்றது.
[37:6] அலங்காரமான கோள்களைக் கொண்டு மிகக் கீழுள்ள வானத்தை நாம் அலங்கரித் துள்ளோம்.*

அடிகுறிப்பு:
*37:6 மிகவும் உள்ளார்ந்த, மேலும் மிகச்சிறிய பிரபஞ்சத்தில் நாம் வசிக்கின்றோம். ஜின்கள் இந்தப் பிரபஞ்சத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
[37:7] தீய சாத்தான் ஒவ்வொன்றிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்தோம்.
[37:8] மேலான சமூகத்தாரை அவர்கள் வேவுபார்க்க முடியாது; ஒவ்வொரு புறத்திலிருந்தும் அவர்கள் குண்டுகளால் தாக்கப்படுவார்கள்.
[37:9] அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டு விட்டனர்; நிலையானதொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[37:10] அவர்களில் எவரேனும் அதன் வெளி எல்லை களைக் கடக்கத் துணிந்தால், ஆவேசமான தொரு ஏவுகணையால் அவர் தாக்கப்படுவார்.
[37:11] அவர்களிடம், “படைப்பதற்குக் கடினமான வர்கள் அவர்களா, அல்லது மற்றப்படைப் புக்களா?” என்று கேட்பீராக. அவர்களை நாம் ஈரமான சேற்றிலிருந்து படைத்தோம்.
[37:12] நீர் பிரமிப்படையும் அதே சமயம், அவர்கள் பரிகாசம் செய்கின்றார்கள்.
[37:13] நினைவூட்டப்படும் பொழுது, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
[37:14] சான்றினை அவர்கள் காணும் பொழுது, அவர்கள் அதனைக் கேலி செய்கின்றனர்.
[37:15] அவர்கள் கூறுகின்றனர், “இது வெளிப் படையான மாயாஜாலமேயாகும்!
[37:16] “நாம் மரணித்து மேலும் தூசியாகவும் எலும்பு களாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?
[37:17] “பண்டைய எங்கள் மூதாதையரும் கூடவா?”
[37:18] “ஆம், வலுக்கட்டாயமாக நீங்கள் வர வழைக்கப்படுவீர்கள்” என்று கூறுவீராக.
[37:19] அதற்கு எடுத்துக்கொள்வதெல்லாம் ஒரு இடிப்புதான், உடனே அவர்கள் பார்த்தவாறு (எழுந்து நிற்பார்கள்).
[37:20] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான்; இது தான் தீர்ப்பு நாளாகும்” என்று கூறுவார்கள்.
[37:21] இதுதான் நீங்கள் நம்ப மறுத்துக் கொண்டிருந்த தீர்மானத்தின் நாளாகும்.
[37:22] வரம்பு மீறியவர்களையும், அவர்களுடைய வாழ்க்கைத் துணைகளையும் வரவழையுங்கள், மேலும் இணைத்தெய்வங்களாக அவர்கள் வழிபட்டவற்றையும்
[37:23] கடவுள்-ஐ தவிர, மேலும் நரகத்தின் பாதையை நோக்கி அவர்களை வழிநடத்துங்கள்.
[37:24] அவர்களை நிறுத்தி, அவர்களிடம் கேளுங்கள்:
[37:25] “ஏன் நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்ளவில்லை?”
[37:26] அவர்கள், அந்நாளில், முற்றிலும் அடிபணிந்து இருப்பார்கள்.
ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளுதல்
[37:27] கேள்வி கேட்டுக்கொண்டும், ஒருவர்­ மற்றவரைப் பழித்துக் கொண்டும் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள்.
[37:28] (தங்கள் தலைவர்களிடம்) அவர்கள், “நீங்கள் வலப்புறத்திலிருந்து எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
[37:29] அவர்கள் மறுமொழியளிப்பார்கள், “நீங்கள் தான் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
[37:30] “உங்கள் மீது நாங்கள் எந்த அதிகாரமும், கொண்டிருக்கவில்லை; நீங்கள்தான் தீயவர் களாக இருந்தீர்கள்.
[37:31] “நம் இரட்சகரின் தீர்ப்பிற்கு நாம் நியாயமாக உள்ளாகி விட்டோம்; இப்போது நாம் துன்பப் பட்டாக வேண்டும்.
[37:32] “நாங்களே வழிதவறியவர்களாக இருந்த காரணத்தினால்தான், நாங்கள் உங்களை வழிதவறச் செய்தோம்.”
[37:33] இவ்விதமாக, அந்நாளில் தண்டனையில் அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
[37:34] இவ்விதமாகவே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம்.
முதல்கட்டளை
[37:35] “லா இலாஹா இல்லல்லாஹ் ஸகடவுள்-ஐ தவிர வேறு தெய்வம் இல்லை]” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் ஆணவம் கொண்டார்கள்.
[37:36] அவர்கள், “புத்தி சுவாதீனமில்லாத ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டுவிட வேண்டுமா?” என்று கூறினார்கள்.
[37:37] உண்மையில், அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார், மேலும் தூதர்களை உறுதி செய்துள்ளார்.
[37:38] மிக நிச்சயமாக, மிகவும் வலி நிறைந்த தண்டனையை நீங்கள் சுவைப்பீர்கள்.
[37:39] நீங்கள் செய்தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்.
[37:40] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவார்கள்).
[37:41] அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர்.
[37:42] அனைத்து வகையான கனிவர்க்கங்களும். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
[37:43] பேரானந்தமயமான தோட்டங்களில்.
[37:44] அருகருகே அமைந்த இருக்கைகளில்.
[37:45] தூய்மையான பானங்களைக் கொண்ட கிண்ணங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
[37:46] அருந்துபவர்களுக்குத் தெளிவானதாகவும், மேலும் மதுரமானதாகவும்.
[37:47] ஒருபோதும் கெட்டுப்போகாது, மேலும் ஒருபோதும் தீர்ந்து போகாது.
[37:48] அற்புதமான துணைகள் அவர்களுடன் இருப்பார்கள்.
[37:49] எளிதில் உடையக் கூடிய முட்டைகளைப் போல் பாதுகாக்கப்பட்டவர்கள்.
சுவனவாசிகள் நரகவாசிகளைச் சந்திக்கின்றனர்
[37:50] அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள், மேலும் ஒருவருக்கொருவர் உரையாடுவார்கள்.
[37:51] அவர்களில் ஒருவர் கூறுவார், “ எனக்கொரு நண்பன் இருந்து வந்தான்.
[37:52] “அவன் பரிகாசம் செய்பவனாக இருந்தான்: ‘இதையெல்லாம் நீ நம்புகின்றாயா?
[37:53] “‘நாம் இறந்து தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், கணக்குக் கொடுக்க நாம் அழைக்கப்படுவோமா?’”
[37:54] அவர், “சற்று அங்கே பாருங்கள்!” என்று கூறுவார்.
[37:55] அவர் பார்க்கும் பொழுது, நரகின் மையத்தில் தன் நண்பனை அவர் காண்பார்.*

அடிகுறிப்பு:
*37:55 சுவனத்திற்குச் சென்று விட்ட மக்கள், தீய விளைவுகள் எதுவுமின்றி, நரகத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சென்று சந்திக்க இயலும். மறுவுலகில், எவரொருவரும் கீழ்நோக்கி நகர இயலும், ஆனால் குறிப்பிடப்பட்டதொரு எல்லைக்கப்பால் மேல் நோக்கிச் செல்ல முடியாது. அந்த எல்லை ஒருவருடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது (பின்இனைப்பு 5).
[37:56] (அவனிடம் சென்று) அவர் கூறுவார், “கடவுள் மீது ஆணையாக, நீ கிட்டத்தட்ட என்னை நாசமாக்கி விட்டாய்.
[37:57] “என் இரட்சகரின் அருட்கொடை மட்டும் இல்லாதிருந்தால், இப்போது நானும் உன்னுடன் இருந்திருப்பேன்.
[37:58] “(இப்பொழுதும் நீ நம்புகின்றாயா) நாம் மரணிப்பது அந்த,
[37:59] “முதல் மரணம் மட்டுமே, மேலும் நாம் ஒருபோதும் எந்தக் கூலியையும் பெற மாட்டோம் என்று?”
மீட்சி: மகத்தான மாபெரும்வெற்றி
[37:60] மகத்தான மாபெரும்வெற்றி இத்தகைய தேயாகும் .
[37:61] உழைப்பவர் ஒவ்வொருவரும் இதற்காகவே உழைக்க வேண்டும்.
[37:62] இது மேலான விதியா, அல்லது கசப்பான அந்த மரமா?
[37:63] வரம்பு மீறுகின்றவர்களுக்கு, அதனை ஒரு தண்டனையாக நாம் ஆக்கியுள்ளோம்.
[37:64] அது நரகத்தின் மையத்தில் வளர்கின்ற ஒரு மரமாகும்.
[37:65] அதன் பூக்கள் சாத்தானின் தலைகளைப் போல் தோன்றுகின்றன.
[37:66] அவர்களுடைய வயிறுகள் நிரம்பும் வரை அதிலிருந்து அவர்கள் உண்ணுவார்கள்.
[37:67] பின்னர் ஒரு நரக பானத்தைக் கொண்டு அதன் மேல் நிரப்புவார்கள்.
[37:68] பின்னர் அவர்கள் நரகத்திற்குத் திரும்புவார்கள்.
அவர்கள் தங்களுடைய பெற்றோர்களைக் கண்மூடிப் பின்பற்றினார்கள்
[37:69] அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை வழிதவறியவர்களாகக் கண்டனர்.
[37:70] மேலும் அவர்கள் குருட்டுத்தனமாக அவர் களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர்.
[37:71] முந்திய தலைமுறையினர்களில் அதிகமான வர்கள் இதே விதமாகவே வழிதவறினார்கள்.
[37:72] எச்சரிப்பவர்களை அவர்களுக்கு நாம் அனுப்பியுள்ளோம்.
[37:73] எச்சரிக்கப்பட்டவர்களுக்கு நேரிட்ட பின்விளைவுகளைக் கவனிப்பீராக.
[37:74] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).
நோவா
[37:75] இவ்விதமாக, நோவா நம்மை அழைத்தார், மேலும் நாமே சிறப்பாக மறுமொழியளிப் பவர்களாக இருந்தோம்.
[37:76] அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
[37:77] உயிருடன் தப்பித்தவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.
[37:78] மேலும் பின்வரும் தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.
[37:79] மக்களில் நோவாவின் மீது அமைதி நிலவு வதாக.
[37:80] இவ்விதமாகவே நாம் நன்னெறியாளர்களுக்கு வெகுமதியளிக்கின்றோம்.
[37:81] அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர் ஆவார்.
[37:82] மற்றவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
ஆப்ரஹாம்
[37:83] அவரைப் பின்பற்றியவர்களில் ஆப்ரஹாமும் இருந்தார்.
[37:84] அவர் முழு மனதுடன் தன் இரட்சகரிடம் வந்தார்.
[37:85] அவர் தன் தந்தையிடமும் மேலும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் எதனை வழிபடுகின்றீர்கள்?
[37:86] “கடவுள்-க்குப் பதிலாக, இட்டுக்கட்டப்பட்ட இந்தத் தெய்வங்களா, உங்களுக்கு வேண்டும்?
[37:87] “பிரபஞ்சத்தின் இரட்சகரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?”
[37:88] அவர் கவனத்துடன் நட்சத்திரங்களை நோக்கினார்.
[37:89] பின்னர் அவர் தன் முயற்சியைக் கைவிட்டார், மேலும், “இதில் நான் களைப்படைந்து விட்டேன்!” என்று கூறினார்.
[37:90] அவர்கள் அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
[37:91] அவர் பின்னர் அவர்களுடைய சிலைகளை நோக்கித் திரும்பியவாறு, கூறினார், “நீங்கள் உண்ண விரும்புகின்றீர்களா?
[37:92] “ஏன் நீங்கள் பேசுவதில்லை?”
[37:93] பின்னர் அவற்றை அவர் உடைத்து விட்டார்.
[37:94] பெருங்கோபத்துடன் அவர்கள் அவரிடம் சென்றனர்.
[37:95] அவர் கூறினார், “ நீங்களே செதுக்கியவற்றை எவ்வாறு நீங்கள் வழிபட இயலும்?
[37:96] “உங்களையும், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் படைத்தவராகக் கடவுள் இருக்கும் பொழுது!”
[37:97] அவர்கள், “நாம் ஒரு பெரும் நெருப்பை வளர்த்து, அவரை அதற்குள் எறிந்து விடுவோம்” என்று கூறினார்கள்.
[37:98] அவர்கள் அவருக்கெதிராகச் சூழ்ச்சி செய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியுற்றவர்களாக ஆக்கினோம்.
[37:99] அவர் கூறினார், “நான் என் இரட்சகரிடம் செல்கின்றேன்; அவர் என்னை வழிநடத்து வார்.”
[37:100] “என் இரட்சகரே, நன்னெறியுடைய பிள்ளை களை எனக்கு அளிப்பீராக.”
[37:101] ஒரு நல்ல மகனைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.
சாத்தானியக் கனவு*
[37:102] அவருடன் வேலை செய்யும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்ட போது, அவர், “என் மகனே, நான் உன்னைப் பலி கொடுப்பதாக, ஒரு கனவில் நான் காண்கின்றேன். நீ என்ன நினைக்கின்றாய்?” என்று கூறினார். அவர், “என் தந்தையே, உமக்குக் கட்டளையிடப் பட்டதை நீர் செய்வீராக. கடவுள் நாடினால், பொறுமையுடையவனாக, என்னை நீர் காண்பீர்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*37:102 மிக்க கருணையாளர் ஒருபோதும் தீமையை ஆதரிப்பதில்லை (7:28). ஜோப் விஷயத்தில் செய்ததைப் போல, ஆப்ரஹாம் தன் மகனை மிக அதிகமாக நேசிக்கின்றார் என்று சாத்தான் வாதிட்டான், மேலும் அந்தக் கடுமையான சோதனையில் ஆப்ரஹாமை ஆழ்த்துவதற்கு அவன் அனுமதிக்கப்பட்டான்.
[37:103] அவர்கள் இருவரும் அடிபணிந்தனர், மேலும் அவர் (அவரைப் பலியிடுவதற்காக) அவரு டைய நெற்றியைக் கீழே வைத்தார்.
ஆப்ரஹாமையும், இஸ்மவேலையும் காப்பதற்காகக் கடவுள் குறுக்கிடுகின்றார்
[37:104] “ஆப்ரஹாமே, என்று நாம் அவரை அழைத் தோம்.
[37:105] “நீர் கனவை நம்பி விட்டீர்.” இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதி யளிக்கின்றோம்.
[37:106] உண்மையில் அது ஒரு கடினமான சோதனையாக இருந்தது.
[37:107] ஒரு பிராணிப்பலியைப் பகரமாக்கி (இஸ்ம வேலை) நாம் மீட்டுக் கொண்டோம்.
[37:108] மேலும் பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.
[37:109] ஆப்ரஹாமின் மீது அமைதி நிலவுவதாக.
[37:110] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[37:111] அவர் நம்பிக்கை கொண்ட நம்முடைய அடியார் களில் ஒருவர் ஆவார்.
ஐசக்கின் பிறப்பு
[37:112] பின்னர் நன்னெறியுடைய வேதம் வழங்கப் பட்டவர்களில் ஒருவராக இருப்பவரான, ஐசக்கின் பிறப்பைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.
[37:113] அவருக்கும் மற்றும் ஐசக்கிற்கும் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய சந்ததியினரில், சிலர் நன்னெறியுடையவர்களாக இருக்கின் றனர், மேலும் சிலர் தீய வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றனர்.
மோஸஸும் ஆரோனும்
[37:114] அத்துடன் மோஸஸிற்கும் மற்றும் ஆரோனிற் கும் நாம் அருள்புரிந்தோம்.
[37:115] அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தாரையும் பெரும் பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
[37:116] அவர்கள் வெற்றியாளர்களாகும் வரை, அவர் களுக்கு நாம் ஆதரவளித்தோம்.
[37:117] ஆழ்ந்த வேதத்தை அவர்கள் இருவருக்கும் நாம் கொடுத்தோம்.
[37:118] சரியான பாதையில் அவர்களை நாம் வழிநடத்தி னோம்.
[37:119] பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவர் களுடைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.
[37:120] மோஸஸ் மற்றும் ஆரோன் மீது அமைதி நிலவுவதாக.
[37:121] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[37:122] நன்னெறியுடைய நம்முடைய அடியார்களில் அவர்கள் இருவரும் இருந்தனர்.
எலியாஸ்
[37:123] எலியாஸ் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
[37:124] அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “ நீங்கள் நன்னெறியான செயல்கள் புரிய மாட்டீர்களா?
[37:125] “மேலான அதிகாரம் கொண்ட படைப் பாளருக்குப் பதிலாக, ஒரு சிலையையா நீங்கள் வழிபடுகின்றீர்கள்?
[37:126] “கடவுள்; உங்களுடைய இரட்சகரும், உங்கள் முன்னோர்களுடைய இரட்சகருமாவார்!”
[37:127] அவர்கள் அவரை நம்பமறுத்தனர். அதன் விளைவாக, அவர்கள் கணக்குக் கொடுக்க அழைக்கப்பட வேண்டியவர்களானார்கள்.
[37:128] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).
[37:129] பின்வரும் தலைமுறையினர்களுக்காக அவரு டைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.
[37:130] எலியாஸின் மீதும், மேலும் எலியாஸைப் போன்ற அனைவர் மீதும் அமைதி நிலவுவதாக.
[37:131] இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிக்கின்றோம்.
[37:132] நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக அவர் இருந்தார்.
லோத்
[37:133] லோத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
[37:134] அவரையும் அவருடைய குடும்பத்தார் அனை வரையும் நாம் காப்பாற்றினோம்.
[37:135] வயதான அந்தப் பெண் மட்டுமே அழிவிற் குள்ளானவளாக இருந்தாள்.
[37:136] மற்றவர்கள் அனைவரையும் நாம் அழித்தோம்.
[37:137] இப்பொழுதும் அவர்களுடைய பாழடைந்த சின்னங்களின் அருகில் பகலில் நீங்கள் கடக்கின்றீர்கள்.
[37:138] மேலும் இரவிலும். நீங்கள் புரிந்து கொள் வீர்களா?
ஜோனா
[37:139] ஜோனா தூதர்களில் ஒருவராக இருந்தார்.
[37:140] சுமை நிரம்பிய கப்பலின் பால் அவர் தப்பித்துச் சென்றார்.
[37:141] அவர் கலகம் புரிந்தார், மேலும் இவ்விதமாக அவர் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டார்.
[37:142] அதன் விளைவாக, மீன் அவரை விழுங்கியது, மேலும் நிந்தனைக்குரிய ஒருவராக, அவர் இருந்தார்.
[37:143] (கடவுளின்) தியானத்தை மட்டும் அவர் மேற்கொள்ளாது இருந்திருந்தால்,
[37:144] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாள் வரை அதன் வயிற்றிலேயே அவர் தங்கி இருந் திருப்பார்.
[37:145] முற்றிலும் சோர்வடைந்தவராக, பாலை வனத்தில் நாம் அவரை வீசியெறியச் செய்தோம்.
[37:146] உண்ணத்தக்க கனியினைக் கொண்ட ஒரு மரத்தை அவருக்காக நாம் வளர்த்திருந்தோம்.
[37:147] பின்னர் ஒரு நூறு ஆயிரம்* அல்லது அதற்கும் அதிகமானோரிடம் நாம் அவரை அனுப்பினோம்.

அடிகுறிப்பு:
*37:147 குர்ஆன் 30 எண்களைக் குறிப்பிடுகின்றது : 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,19,20,30,40,50,60,70,80,99, 100, 200, 300,1000, 2000, 3000, 5000, 50000, மற்றும் 100000 . இந்த எண்களின் கூட்டுத்தொகை 162146 அல்லது 19ஒ8534 (பின் இணைப்பு1 ஐப் பார்க்கவும்).
[37:148] அவர்கள் நம்பிக்கை கொண்டனர், எனவே இந்த வாழ்வை அவர்கள் மகிழ்வுடன் அனுபவி க்கும்படி நாம் செய்தோம்.
[37:149] அவர்கள் மகன்களைக் கொண்டிருக்கும் அதே சமயம், உம் இரட்சகர் மகள்களைக் கொண் டிருக்கின்றாரா என்று அவர்களைக் கேட்பீராக!
[37:150] பெண்ணினத்தவர்களாக இருப்பதற்காகவா வானவர்களை நாம் படைத்தோம்? அவர்கள் அதற்குச் சாட்சியாக இருந்தனரா?
[37:151] உண்மையில், அவர்கள் மிகப்பெரியதான இறை நிந்தனையைப் புரிகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறும்பொழுது -
[37:152] “கடவுள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத் துள்ளார்.” உண்மையில், அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.
[37:153] ஆண்குழந்தைகளுக்கு மேலாகப் பெண் குழந்தைகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டாரா?
[37:154] உங்களுடைய தர்க்கமுறையில் என்ன கோளாறு?
நம்பமறுப்பவர்களை நோக்கி கூறப்படுகின்றது
[37:155] ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை?
[37:156] உங்களிடம் ஏதேனும் சான்று உள்ளதா?
[37:157] நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய புத்தகத்தைக் காட்டுங்கள்.
[37:158] அவருக்கும் ஜின்களுக்கும் இடையில் தனிப்பட்டதொரு உறவுமுறையையும் அவர்கள் கற்பித்தனர். தாங்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை ஜின்கள் கூட அறிந்தே இருக்கின்றனர்.
[37:159] கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர்களுடைய கூற்றுகளுக்கெல்லாம் மிக மிக மேலானவர்.
[37:160] கடவுள்-க்கு மட்டும் முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).
[37:161] உண்மையில், நீங்களும் நீங்கள் வழிபடுபவையும்.
[37:162] அவர் மீது எந்த ஒன்றையும் சுமத்தி விட முடியாது.
[37:163] நீங்கள்தான் நரகத்தில் எரிவீர்கள்.
வானவர்கள்
[37:164] எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடப்பட்ட தொரு பணி உண்டு.
[37:165] நாங்கள்தான் வரிசைப்படுத்துபவர்கள்.
[37:166] நாங்கள் சரியான முறையில் (எங்கள் இரட்சகரை) துதித்திருக்கின்றோம்.
பெற்றோர்களைக் கண்மூடிப் பின்பற்றுதல்
[37:167] அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர்,
[37:168] “எங்கள் பெற்றோர்களிடமிருந்து சரியான அறிவுறுத்தல்களை நாங்கள் பெற்றிருந்தால்,
[37:169] “நாங்கள் வழிபடுபவர்களாக இருந்திருப்போம்; கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களாக.
[37:170] ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.
தூதர்களுக்கு வெற்றி உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது
[37:171] தூதர்களான நம்முடைய அடியார்களுக்கு நமது முடிவு ஏற்கெனவே
[37:172] நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
[37:173] நம்முடைய படைவீரர்கள் தான் வெற்றி யாளர்கள்.
[37:174] எனவே சிறிது காலம் அவர்களைப் புறக் கணித்து விடுவீராக.
[37:175] அவர்களைக் கவனிப்பீராக; அவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
[37:176] நமது தண்டனைக்கு அவர்கள் சவால் விடுகின்றார்களா?
[37:177] ஒரு நாள் அது அவர்களைத் தாக்கும் போது, அது துன்பகரமானதொரு நாளாக இருக்கும்; அவர்கள் போதுமான அளவு எச்சரிக்கப் பட்டிருந்தார்கள்.
[37:178] சிறிது காலம் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[37:179] அவர்களைக் கவனிப்பீராக; அவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
[37:180] உம்முடைய இரட்சகர் துதிப்பிற்குரியவர், மகத் தான இரட்சகர்; அவர்களுடைய கூற்றுகளுக் கெல்லாம் மிக மிக மேலானவர்.
[37:181] தூதர்கள் மீது அமைதி நிலவுவதாக.
[37:182] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, பிரபஞ் சத்தின் இரட்சகர்.