சூரா 29: சிலந்தி (அல்-‘அன்கபூத்)

[29:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[29:1] அ.ல.ம*

அடிகுறிப்பு:
*29:1 குர்ஆனுடைய கணிதக்கட்டமைப்பின் விபரங்களுக்கும், இதற்கு முன்னர் மர்மமாக இருந்து வந்த இந்தக் குர்ஆனியத் தலைப்பு எழுத்துக்களின் அர்த்தத்திற்கும் பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்.
சோதனை கட்டாயமானது
[29:2] சோதனையில் ஆழ்த்தப்படாமலேயே, “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்,” என்று கூறுமாறு அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக் கின்றனரா?
[29:3] அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்தோம், ஏனெனில் உண்மையாளர் களாக இருப்பவர்களைக் கடவுள் சிறப்பிக்க வேண்டியது உள்ளது, மேலும் பொய்யர்களை அவர் வெளிப்படுத்த வேண்டியதும் உள்ளது.
[29:4] பாவங்களைச் செய்பவர்கள் நம்மை எப்போதும் ஏமாற்றி விடஇயலும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனரா? அவர்களுடைய கருத்து உண்மையில் தவறானதாகும்.
[29:5] கடவுள்-ஐச் சந்திப்பதை எதிர்பார்க்கும் எவர் ஒருவரும், கடவுள்-உடன் அத்தகையதொரு சந்திப்பு மிக நிச்சயமாக நிகழ்ந்தேறும் (என்பதை அறிந்து கொள்ள வேண்டும்). அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[29:6] எவர்கள் பாடுபடுகின்றனரோ, அவர்கள் தங்கள் சொந்த நலனிற்காகவே பாடுபடு கின்றனர். கடவுள் எவர் ஒருவரின் தேவையு மற்றவர்.
[29:7] எவர்கள் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் மன்னித்து விடுவோம், மேலும் அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக அவர் களுக்கு நிச்சயமாக தாராளமாக வெகுமதி யளிப்போம்.
உங்கள் பெற்றோர்களை நீங்கள் கண்ணியப்படுத்த வேண்டும்
[29:8] தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு மனிதர்களுக்கு நாம் கட்டளை யிட்டோம். ஆனால் என்னுடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளுமாறு அவர்கள் உம்மை நிர்ப்பந்திக்க முயன்றால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். உங்களுடைய இறுதித் திரும்புதல் என்னிடமே உள்ளது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்கு நான் அறிவிப்பேன்.
[29:9] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ, அவர்களை நிச்சயமாக நன்னெறியாளர்களுடன் நாம் அனுமதிப்போம்.
நல்ல காலத்தில் நண்பர்கள்
[29:10] “நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண் டோம்,” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர், ஆனால் கடவுள்-க்காக ஏதேனும் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தால், உடனே அவர்கள் மனிதர்களின் துன்புறுத்து தலை கடவுள்-ன் தண்டனையோடு ஒப்பிடுகின்றனர். ஆனால் உமது இரட்சகரின் அருட்கொடைகள் உமது வழியில் வந்தால் “நாங்கள் உங்களோடுதான் இருந்தோம்” என அவர்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை கடவுள் முற்றிலும் அறிந்திருக்கவில்லையா?
[29:11] நம்பிக்கை கொண்டோரை மிகவும் நிச்சய மாகக் கடவுள் மேன்மைப்படுத்துவார், மேலும் நயவஞ்சகர்களை மிகவும் நிச்சயமாக அவர் வெளிப்படுத்திவிடுவார்.
[29:12] நம்பமறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர் களிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றினால் உங்களுடைய பாவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்” என்று கூறினார்கள். உண்மை அல்ல; அவர்களுடைய பாவங்களில் எதையும் அவர்களால் சுமக்க முடியாது. அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.
[29:13] உண்மையில், அவர்கள் தங்களுடைய சொந்தப்பாவங்களையும், அத்துடன் கூடு தலாக மற்ற மக்களின் பாவச்சுமைகளில் எவற்றிற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தனரோ, அவற்றையும் சேர்த்துச் சுமப்பார்கள். மிகவும் நிச்சயமாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுடைய பொய்க் கூற்றுக் களைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.
நோவா
[29:14] நாம் நோவாவை, அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர் களுடன் வாழ்ந்திருந்தார். அதன்பின்னர், அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.

அடிகுறிப்பு:
*29:14 குர்ஆனுடைய அற்புதம் கணித ரீதியாக இருப்பதால், பிரத்தியேகமாக எண்கள், 19ன் அடிப்படையிலான குறியீட்டின் முக்கியப் பகுதியாக அமைகின்றன. இவ்விதமாக, குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களின் கூட்டுத்தொகை 162146 அல்லது 19ஒ8534 ஆக உள்ளது (விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐ பார்க்கவும்).
[29:15] நாம் அவரையும் அவருடன் கூட இருந்தவர் களையும் மரக்கலத்தில் ஏற்றி காப்பாற்றி னோம்,மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
ஆப்ரஹாம்
[29:16] ஆப்ரஹாம் தன் சமூகத்தாரிடம் கூறினார், “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், மேலும் அவரிடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மேலானதாகும்.
கடவுள்: வாழ்வாதாரங்களின் ஒரே மூலாதாரம்
[29:17] “ கடவுள்-க்குப் பதிலாக நீங்கள் வழிபடுபவை சக்தியற்ற சிலைகளே; நீங்கள் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துக் கொண்டீர்கள்”. கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்கள் உங்களுக்காக எந்த வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால், வாழ்வாதாரங்களை நீங்கள் கடவுள்-இடம் மட்டுமே தேடவேண்டும். நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும், மேலும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்; அவரிடமே உங்களுடைய இறுதித் திரும்புதல் உள்ளது.
[29:18] நீங்கள் நம்பமறுப்பீர்களாயின், உங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரும் நம்பமறுத் திருக்கின்றனர். தூதரின் ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பதே.
உயிர்களின் துவக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்*
[29:19] எவ்வாறு கடவுள் படைப்பைத் துவக்குகின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

அடிகுறிப்பு:
*29:19-20 பரிணாமம் என்பது தெய்வீகமாக வழிகாட்டப்பெற்ற ஒரு செயல்பாடாக அமைந்துள்ளது என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம். விபரங்களுக்கு பின் இணைப்பு 31ஐ பார்க்கவும்.
[29:20] “பூமியில் சுற்றித் திரிந்து உயிர்களின் துவக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்”* என்று கூறுவீராக. ஏனெனில் கடவுள் இவ்விதமாகவே மறுவுலகில் படைப்பைத் துவக்குவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

அடிகுறிப்பு:
*29:19-20 பரிணாமம் என்பது தெய்வீகமாக வழிகாட்டப்பெற்ற ஒரு செயல்பாடாக அமைந்துள்ளது என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம். விபரங்களுக்கு பின் இணைப்பு 31ஐ பார்க்கவும்.
[29:21] தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டனைக்கு என தீர்மானிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவர் மீதும் தன் அருளைப் பொழிகின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பிச் சென்றடைவீர்கள்.
[29:22] பூமியின் மீதோ அல்லது வானத்திலோ, உங்களில் எவரும் இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சக ராகவும் மற்றும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.
[29:23] கடவுள்-ன் வெளிப்பாடுகளையும், மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுப்பவர்கள், என்னுடைய அருளில் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
மீண்டும் ஆப்ரஹாமிடம்
[29:24] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறு மொழியாக, “ அவரைக் கொல்லுங்கள், அல்லது அவரை எரித்து விடுங்கள்,” என்று அவர்கள் கூறுவதாகவே இருந்தது. ஆனால் கடவுள் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றினார். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.
சமூக அழுத்தம்: ஆழ்ந்ததொரு பெருநாசம்
[29:25] அவர், “ இவ்வுலகில் உங்களுக்கிடையில் சில நட்புக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேண்டி, சமூக அழுத்தம் காரணமாகவே கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை நீங்கள் வழிபடுகின்றீர்கள். ஆனால் பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்அன்று, நீங்கள் ஒருவர் மற்றவரைக் கைவிட்டு விடுவீர்கள், மேலும் ஒருவர் மற்றவரைச் சபிப்பீர்கள். நரகமே உங்களு டைய விதியாகும், அங்கே நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய இயலாது” என்று கூறினார்.
[29:26] லோத் அவருடன் நம்பிக்கை கொண்டார், மேலும், “நான் என் இரட்சகரிடம் குடி பெயர்ந்து செல்கின்றேன். அவர்தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[29:27] நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் தந்தோம், அவருடைய சந்ததியினருக்கு வேதம் வழங்கப்பட்ட தூதுத்துவத்தையும் மேலும் வேதங்களையும் நாம் கொடுத்தோம். இவ்வுலகில் அவருக்குரிய சன்மானத்தைக் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம், மேலும் மறுவுலகில் அவர் நிச்சயமாக நன்னெறியாளர் களுடன் இருப்பார்.
லோத்
[29:28] லோத் தன் சமூகத்தாரிடம் கூறினார், “உங்களுக்கு முன்னர் உலகில் எவர் ஒருவரும் எக்காலத்திலும் செய்திராத, இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை நீங்கள் செய்கின்றீர்கள்.
[29:29] “நீங்கள் ஆண்களுடன் பாலுறவு கொள் கின்றீர்கள், நீங்கள் வழிப்பறிக் கொள்ளை செய்கின்றீர்கள், மேலும் உங்களுடைய சமூகத் தில் அனைத்து வகையான ஒழுக்கக் கேடு களுக்கும் இடமளிக்கின்றீர்கள்”. அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழியாக, “நீர் உண்மையாளராக இருந்தால், கடவுள்-ன் தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்” என்று கூறுவதாகவே இருந்தது.
[29:30] அவர், “என் இரட்சகரே, இந்தத் தீய மக்கள் மீது எனக்கு வெற்றியைத் தருவீராக” என்று கூறினார்.
ஆப்ரஹாமையும், லோத்தையும் வானவர்கள் சந்திக்கின்றனர்
[29:31] (ஐசக்கின் பிறப்பு குறித்த) நற்செய்தியுடன் நம் தூதர்கள் ஆப்ரஹாமிடம் சென்ற போது, அவர்கள்,“(சோடம் எனும்) அந்நகரின் மக்களை அழிப்பதற்கு நாங்கள் சென்று கொண்டு இருக்கின்றோம். ஏனெனில் அதன் மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்” என்றும் கூறினார்கள்.
[29:32] அவர், “ ஆனால் அங்கே லோத் வசிக்கின்றார்” என்று கூறினார். அவர்கள், “அதில் வசிக்கின்ற ஒவ்வொருவரைப் பற்றியும் நாங்கள் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் காப் பாற்றி விடுவோம், அவருடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக் கின்றாள்” என்று கூறினார்கள்.
[29:33] லோத்தின் இருப்பிடத்திற்கு நம் தூதர்கள் வந்து சேர்ந்த போது, அவர்கள் தவறாக நடத்தப் பட்டனர், மேலும் அவர்களுடைய வருகை யினால் அவர் சங்கடத்திற்குள்ளானார். ஆனால் அவர்கள் கூறினர், “அச்சம் எதுவும் கொள்ளாதீர், மேலும் கவலையும் படாதீர். உம்மையும் உம் குடும்பத்தாரையும் நாங்கள் காப்பாற்றுவோம், உம்முடைய மனைவியைத் தவிர; அவள் அழிக்கப்பட்டவளாக இருக்கின்றாள்.
[29:34] “அவர்களுடைய தீச்செயல்களின் விளை வாக, விண்ணிலிருந்து ஒரு பேரழிவை இந் நகரின் மக்கள் மீது நாங்கள் ஊற்றுவோம்.”
[29:35] புரிந்து கொள்ளக் கூடிய மக்களுக்கு ஆழ்ந்த தொரு படிப்பினையாகத் திகழ்வதற்காக, அவற்றின் அழிவுச்சின்னங்களில் சிலவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டோம்.
ஷுஐப்
[29:36] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர், “என் சமூகத்தாரே, நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும் இறுதி நாளைத் தேடவும் வேண்டும், மேலும் சீர்குலைக்கும் முகமாக பூமியில் சுற்றித் திரியாதீர்கள்” என்று கூறினார்.
[29:37] அவர்கள் அவரை நம்ப மறுத்தனர், மேலும் அதன்விளைவாக, நில நடுக்கம் அவர்களை அழித்தது; காலையில் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இறந்தவர்களாக விட்டு விடப்பட்டனர்.
[29:38] அதைப்போலவே, ‘ஆது மற்றும் தமூது (ஆகி யோரும் அழிக்கப்பட்டனர்). அவர்களுடைய அழிவுச்சின்னங்களின் மூலமாக இது உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக ஆக்கிவிட்டான், மேலும் கண்களுடையவர் களாக அவர்கள் இருந்த போதிலும், பாதையை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டான்.
கடவுளின் மாறா வழிமுறை
[29:39] மேலும் காரூன், ஃபேரோ, மற்றும் ஹாமான்; மோஸஸ் அவர்களிடம் தெளிவான அத்தாட்சி களுடன் சென்றார். ஆனால் அவர்கள் பூமியின் மீது தொடர்ந்து கொடுங்கோன்மை புரிந்தனர். அதன் விளைவாக, அவர்களால் (தண்டனையை) தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
[29:40] அந்த நம்பமறுப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய பாவங்களின் விளைவாக அழிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை நாம் உக்கிரமான காற்றின் மூலம் அழித்தோம், சிலர் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டனர், சிலரை நாம் பூமி விழுங்கும்படி செய்தோம், மேலும் சிலரை நாம் மூழ்கடித்தோம். அவர்களுக்கு அநீதியிழைத்தது கடவுள் அல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
சிலந்தி
[29:41] கடவுள்-உடன் வேறு எஜமானர்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு உவமானமாவது, பெண் சிலந்தியும் அதனுடைய வீடுமாகும்; அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்*, வீடுகள் அனைத்திலும் மிகவும் பலஹீனமானது சிலந்தியின் வீடே ஆகும்.

அடிகுறிப்பு:
*29:41-43 கருப்பு விதவைச் சிலந்தி தன் ஜோடியைக் கொன்று விடுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு மனிதர் அறிவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 29:41ல் சிலந்திக்கு பெண்பால் சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது இவ்விதமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது சிலந்தியின் வலை, இயல்பில் மிகவும் பலஹீனமானது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுவதாகும்.
[29:42] அவரைத் தவிர அவர்கள் வழிபடுகின்ற எதுவாயினும் அவை உண்மையில் ஒன்றுமே யில்லை என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறி கின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு:
*29:41-43 கருப்பு விதவைச் சிலந்தி தன் ஜோடியைக் கொன்று விடுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு மனிதர் அறிவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 29:41ல் சிலந்திக்கு பெண்பால் சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது இவ்விதமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது சிலந்தியின் வலை, இயல்பில் மிகவும் பலஹீனமானது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுவதாகும்.
[29:43] இந்த உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம், மேலும் அறிவுடை யோரைத்தவிர* எவர் ஒருவரும் அவற்றின் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

அடிகுறிப்பு:
*29:41-43 கருப்பு விதவைச் சிலந்தி தன் ஜோடியைக் கொன்று விடுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு மனிதர் அறிவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். 29:41ல் சிலந்திக்கு பெண்பால் சொற்குறிப்பு பயன்படுத்தப்படுவது இவ்விதமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது சிலந்தியின் வலை, இயல்பில் மிகவும் பலஹீனமானது என்ற உண்மைக்கு மேலும் வலுவூட்டுவதாகும்.
[29:44] சத்தியத்தோடு, கடவுள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தார். நம்பிக்கை யாளர்களுக்குப் போதுமான சான்றை இது வழங்குகின்றது.
தொடர்புத் தொழுகைகள் (ஸலாத் )
[29:45] வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக் கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.

அடிகுறிப்பு:
*29:45 உங்களுடைய மனங்களை அதிகமான நேரம் ஆக்கிரமித்திருப்பது எதுவாயினும் அதுவே உங்களுடைய தெய்வமாகும் (20:14 மற்றும் பின் இணைப்பு 27ஐ பார்க்கவும்).
ஒரு கடவுள் / ஒரு மார்க்கம்
[29:46] அவர்கள் வரம்பு மீறினாலே தவிர-இயன்ற அளவிற்கு மிகச்சிறந்த முறையிலன்றி வேதம் வழங்கப்பட்ட (யூத, கிறிஸ்தவ, & முஸ்லிம்) மக்களிடம் நீங்கள் தர்க்கம் செய்யக்கூடாது- மேலும், “எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வற்றின் மீதும் மேலும் உங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் எங்களுடைய தெய்வமும் மேலும் உங்களு டைய தெய்வமும் அதே ஒருவர்தான்; அவருக் கே நாங்கள் அடிபணிந்தோராக இருக்கின் றோம்” என்று கூறுவீராக.
[29:47] நாம் இந்த வேதத்தை உமக்கு வெளிப்படுத்தி யிருக்கின்றோம், மேலும் முந்திய வேதங் களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள் பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள். அத்துடன், உம்முடைய சமூகத்தாரில் சிலரும் இதில் நம்பிக்கை கொள்வார்கள். உண்மையில், நமது வெளிப் பாடுகளைப் புறக்கணிப்பவர்கள் தான் மெய்யான நம்பமறுப்பவர்கள்.
குர்ஆன்: முஹம்மதின் அற்புதம்*
[29:48] முந்திய வேதங்களை நீர் படித்திருக்கவில்லை, அன்றி உமது கரத்தால் அவற்றை எழுதி யிருக்கவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஏற்க மறுத்தவர்கள் சந்தேகங்களைத் தாங்கிக் கொண்டிருக்கக் காரணம் இருந் திருக்கக்கூடும்.

அடிகுறிப்பு:
*29:48-51 குர்ஆனை விட்டும், அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தை 1400 ஆண்டுகள் பிரித்து வைக்க வேண்டும் என்பது ஞானம் மிக்கவருடைய நாட்டமாக இருந்தது. முஸ்லிம்கள் எப்படி முஹம்மதை ஒட்டு மொத்தமாக இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர் என்பதைக் காண்கையில், குர்ஆனுடைய கணித அற்புதமும் முஹம்மதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், ஏராளமான மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகவே வழிபட்டிருப்பார்கள் என்பது கண்கூடானதாகும். இப்போதுள்ளபடி, குர்ஆனுடைய மகத்தான அற்புதம் (74:30-35) கணினி யுகம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அவருடைய உடன்படிக்கைத் தூதர் மூலமாகத் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுள் நாடியிருந்தார் (பின் இணைப்பு 1, 2 மற்றும் 26 ஐ பார்க்கவும்).
[29:49] உண்மையில், அறிவைப் பெற்றிருப்பவர்களின் நெஞ்சங்களில் இந்த வெளிப்பாடுகள் தெளிவானதாக இருக்கின்றன. தீயவர்கள் மட்டுமே நமது வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வார்கள்.

அடிகுறிப்பு:
*29:48-51 குர்ஆனை விட்டும், அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தை 1400 ஆண்டுகள் பிரித்து வைக்க வேண்டும் என்பது ஞானம் மிக்கவருடைய நாட்டமாக இருந்தது. முஸ்லிம்கள் எப்படி முஹம்மதை ஒட்டு மொத்தமாக இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர் என்பதைக் காண்கையில், குர்ஆனுடைய கணித அற்புதமும் முஹம்மதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், ஏராளமான மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகவே வழிபட்டிருப்பார்கள் என்பது கண்கூடானதாகும். இப்போதுள்ளபடி, குர்ஆனுடைய மகத்தான அற்புதம் (74:30-35) கணினி யுகம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அவருடைய உடன்படிக்கைத் தூதர் மூலமாகத் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுள் நாடியிருந்தார் (பின் இணைப்பு 1, 2 மற்றும் 26 ஐ பார்க்கவும்).
[29:50] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அற்புதங்கள்* மட்டும் அவருக்கு இறங்கி வந்திருந்தால்!” என்று கூறினார்கள். “அற்புதங்கள் அனைத்தும் கடவுள்-இட மிருந்து மட்டுமே வருகின்றன; நான் தெளிவான தோர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*29:48-51 குர்ஆனை விட்டும், அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தை 1400 ஆண்டுகள் பிரித்து வைக்க வேண்டும் என்பது ஞானம் மிக்கவருடைய நாட்டமாக இருந்தது. முஸ்லிம்கள் எப்படி முஹம்மதை ஒட்டு மொத்தமாக இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர் என்பதைக் காண்கையில், குர்ஆனுடைய கணித அற்புதமும் முஹம்மதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், ஏராளமான மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகவே வழிபட்டிருப்பார்கள் என்பது கண்கூடானதாகும். இப்போதுள்ளபடி, குர்ஆனுடைய மகத்தான அற்புதம் (74:30-35) கணினி யுகம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அவருடைய உடன்படிக்கைத் தூதர் மூலமாகத் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுள் நாடியிருந்தார் (பின் இணைப்பு 1, 2 மற்றும் 26 ஐ பார்க்கவும்).
[29:51] அவர்களுக்கு ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற, இந்தப் புத்தகத்தை நாம் இறக்கி அனுப்பியிருப்பது போதுமானதோர் அற்புதமாக* இல்லையா? உண்மையில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு கருணையாகவும் மேலும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கின்றது.

அடிகுறிப்பு:
*29:48-51 குர்ஆனை விட்டும், அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தை 1400 ஆண்டுகள் பிரித்து வைக்க வேண்டும் என்பது ஞானம் மிக்கவருடைய நாட்டமாக இருந்தது. முஸ்லிம்கள் எப்படி முஹம்மதை ஒட்டு மொத்தமாக இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர் என்பதைக் காண்கையில், குர்ஆனுடைய கணித அற்புதமும் முஹம்மதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், ஏராளமான மக்கள் அவரைக் கடவுளின் அவதாரமாகவே வழிபட்டிருப்பார்கள் என்பது கண்கூடானதாகும். இப்போதுள்ளபடி, குர்ஆனுடைய மகத்தான அற்புதம் (74:30-35) கணினி யுகம் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அவருடைய உடன்படிக்கைத் தூதர் மூலமாகத் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடவுள் நாடியிருந்தார் (பின் இணைப்பு 1, 2 மற்றும் 26 ஐ பார்க்கவும்).
[29:52] “எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். நிச்சயமாக, பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்,” என்று கூறுவீராக.
அவர்கள் நரகத்தில் இருக்கின்றனர்
[29:53] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு சந்திப்பு என்பது இல்லாதிருந்தால், தண்டனை அவர்களிடம் உடனடியாக வந்திருக்கும்.* நிச்சயமாக, அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அவர்களிடம் அது திடீரென வரும்.

அடிகுறிப்பு:
*29:53 40 வயதிற்கு முன்னர் மரணிக்கும் எவரொருவரும் சுவனம் செல்கின்றார், மேலும் எல்லோரும் இதற்குத் தகுதியுடையவர்களும் அல்ல. துஷ்டனான குற்றவாளி ஒருவன் சரியான நேரத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்த படவில்லையென்றால் சில சமயங்களில் மனிதர்கள் நீதியின் தாமதத்திற்காகப் புலம்புகின்றனர். சுவனத்திற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைக் கடவுள் அறிகின்றார் (46:15 மற்றும் பின் இணைப்பு 32 ஐ பார்க்கவும்).
[29:54] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! நரகம் நம்ப மறுப்பவர்களை ஏற்கனவே சூழ்ந்துள்ளது.
[29:55] அவர்களுக்கு மேலிருந்தும் மேலும் அவர் களுடைய பாதங்களுக்குக் கீழிருந்தும், தண்டனை அவர்களை நசுக்குகின்ற அந்நாள் வரும்; அவர், “உங்களுடைய காரியங்களின் விளைவுகளைச் சுவையுங்கள்” என்று கூறுவார்.
கடவுளுக்காகக் குடிபெயர்ந்து செல்லுங்கள்
[29:56] நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, என்னுடைய பூமி விசாலமானது, எனவே என்னையே, வழிபடுங்கள்.
[29:57] ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் இறுதியாக நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
[29:58] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களை நிச்சயமாக நாம் மாளிகைகளும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளும் கொண்ட சுவனத்தில் அமர்த்துவோம். என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள். செயல் புரிவோருக்கு எத்தகையதொரு அழகிய வெகுமதி.
[29:59] உறுதியாய் விடாமுயற்சியுடனும், மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பேற்படுத்திக் கொண்டும் இருந்தவர்கள் அவர்கள்தான்.
[29:60] பல உயிரினம் அதன் வாழ்வாதாரத்தைச் சுமந்து கொண்டிருக்க வில்லை, அதற்கும், அதேபோல் உங்களுக்கும் கடவுள் வழங்குகின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் நரகத்திற்கென விதிக்கப்பட்டுள்ளனர்
[29:61] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவரும், மேலும் சூரியன் மற்றும் சந்திரனை உங்களுக்குப் பணி செய்யும் படி ஆக்கியவரும் யார்,” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்?
[29:62] கடவுள் தான் தன் படைப்புக்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பவரும் மேலும் நிறுத்தி வைப்பவரும் ஆவார். அனைத்துப் பொருட்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[29:63] “இறந்த நிலங்களை, மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புபவர் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “கடவுள்-ஐப் புகழுங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும் பாலானோர் புரிந்து கொள்வதில்லை.
உங்களுடைய முன்னுரிமைகளை மறு சீரமைத்துக் கொள்ளுங்கள்
[29:64] இவ்வுலக வாழ்வு வீண்பகட்டு மற்றும் விளையாட்டு என்பதை விட அதிகம் எதுவுமில்லை, அதே சமயம் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் வீடுதான் மெய்யான வாழ்வாகும்.
[29:65] அவர்கள் ஒரு கப்பலில் சவாரி செய்யும்போது, தங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள்-க்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களை அவர் காப்பாற்றி கரை சேர்த்தவுடன், அவர்கள் இணைத்தெய்வ வழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்.
[29:66] அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றை அவர்கள் நம்பமறுக்கட்டும், மேலும் அவர்கள் தற்காலிகமாகச் சுகமனுபவிக்கட்டும்; அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[29:67] நம்மால் பாதுகாப்பாக ஆக்கப்பட்டதொரு புனிதமான புகலிடத்தை நாம் நிர்மானித் துள்ளோம் என்பதையும், அதே சமயம் அவற்றைச் சுற்றியுள்ள எல்லா மக்களும் தொடர்ந்து ஆபத்தி லிருப்பதையும் அவர்கள் காணவில்லையா? அவ்வாறிருந்தும் அவர்கள் தொடர்ந்து பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டும், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளை ஏற்க மறுத்தும் விடுவார்களா?
[29:68] பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற, அல்லது சத்தியம் அவனிடம் வரும் போது அதனை ஏற்க மறுக்கின்ற ஒருவனை விட மிகத்தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான தண்டனைதான் அல்லவா?
[29:69] நமக்காகப் பாடுபடுவோரைப் பொறுத்தவரை, நமது பாதைகளில் நிச்சயமாக நாம் அவர்களை வழிநடத்துவோம். மிகவும் நிச்சயமாக, கடவுள் பக்திமான்களுடன் இருக்கின்றார்.