சூரா 27: எறும்பு (அல்-நம்ல்)

[27:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[27:1] த.ஸீ.* (எழுத்துக்களாகிய) இவை இந்தக் குர்ஆனின் சான்றுகளாக அமைகின்றன; ஆழ்ந்ததோர் வேதம்.

அடிகுறிப்பு:
*27:1 குர்ஆனுடைய இந்த தலைப்பு எழுத்துக்களின் அர்த்தத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[27:2] நம்பிக்கையாளர்களுக்கு, ஒரு வழிகாட்டி, மற்றும் நற்செய்தி ஆகும்.
[27:3] அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பவர்கள், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பவர்கள், மேலும் அவர்கள், மறுவுலகைக் குறித்து, முற்றிலும் உறுதியோடு இருப்பவர்கள்.
[27:4] எவர்கள் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் நாம் அழகானதாக ஆக்குகின்றோம். இவ்விதமாக, அவர்கள் பெருந்தவறுகளைத் தொடர்ந்து புரிகின்றனர்.
[27:5] மிக மோசமான தண்டனைக்குள்ளானவர்கள் இவர்கள் தான், மேலும் மறுவுலகில், மிகவும் மோசமான நஷ்டமடைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
[27:6] நிச்சயமாக, ஞானம் மிக்கவரும், எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து இந்தக் குர்ஆனை நீர் பெறுகின்றீர்.
மோஸஸ்
[27:7] மோஸஸ் தன் குடும்பத்தாரிடம்,“நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; அதிலிருந்து உங்களுக்குச் செய்தியையோ, அல்லது உங்களு க்குக் கதகதப்பளிக்கும் ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகின்றேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[27:8] அவர் அதன் அருகில் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டார்: “நெருப்பிற்குள்ளிருந்து (பேசுகின்ற) அந்த ஒருவரும், மேலும் அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் பாக்கியமானவர்கள்”. கடவுள் துதிப்பிற்குரியவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
[27:9] “மோஸஸே, நான் தான், கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[27:10] “உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக.” அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்டபோது” அவர் திரும்பியடித்து ஓடினார். “மோஸஸே, அச்சம் கொள்ளாதீர். என்னுடைய தூதர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
[27:11] “ஒரு வரம்புமீறலைச் செய்தவர்களைத் தவிர, பாவம் புரிந்துவிட்ட பின்னர் நன்னெறியை அவர்கள் மாற்றியமைக்கும் பட்சத்தில்; நான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[27:12] “உமது கரத்தை உமது சட்டைப்பைக்குள் வைப்பீராக; ஒரு மாசுமின்றி, வெண்மையாக அது வெளியில் வரும். இவை ஃபேரோவிற்கும் அவனுடைய சமூகத்தாருக்குமான ஒன்பது அற்புதங்களில் உள்ளவையாகும், ஏனெனில் அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்.”
[27:13] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது அற்புதங்கள் அவர்கள் முன்வைக்கப்பட்ட போது, அவர்கள், “இது தெளிவானதொரு மாயாஜாலமே ஆகும்” என்று கூறினார்கள்.
[27:14] அவைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர், மேலும் அவர்களுடைய ஆணவத்தின் காரணத்தால் தங்களுடைய தவறான வழிகளில் முற்றிலும் உறுதியான நம்பிக்கையை அடைந்திருந்தனர். தீமை செய்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
டேவிட்டும், ஸாலமனும்
[27:15] டேவிட் மற்றும் ஸாலமனுக்கு நாம் அறிவைக் கொடையளித்தோம், மேலும் அவர்கள், “தன்னுடைய நம்பிக்கை கொண்ட அடியார்களில் பலரை விட அதிகமாக எங்களுக்கு அருள்புரிந்த தற்காகப் புகழ் அனைத்தும் கடவுள்-க்கே” என்று கூறினார்கள்.
[27:16] ஸாலமன், டேவிட்டின் வாரிசாக இருந்தார். அவர், “மக்களே, பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டு நாங்கள் கொடையளிக்கப்பட்டுள்ளோம், மேலும் அனைத்து விதமான பொருட்களும் எங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ளன. உண்மையில் இது மெய்யான தொரு அருட்கொடையாகும்” என்று கூறினார்.
[27:17] ஜின்களிலும் மனிதர்களிலும், அவ்வண்ணமே பறவைகளிலும் இருந்த அவருக்குக் கீழ்ப்படிந்த படைவீரர்கள் ஸாலமனின் பணிக்கென ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்; அனைத்தும் அவருடைய முடிவின்படி.
[27:18] எறும்புகளின் பள்ளத்தாக்கை அவர்கள் நெருங்கியபோது, ஓர் எறும்பு, “எறும்புகளே, ஸாலமனும் அவருடைய படையினரும் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுடைய வீடுகளுக்குள் சென்று விடுங்கள்”* என்று கூறியது.

அடிகுறிப்பு:
*27:18-19 குறிப்பிட்ட சூராவில் எவ்வளவுக்கெவ்வளவு அசாதாரணமான நிகழ்வுகள் உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு வலிமையான கணித ஆதாரங்கள் அவற்றிற்கு ஆதரவு அளிக்கின்றன. இத்தகைய வினோதமான அற்புத நிகழ்வுகள் கடவுளின் வல்லமையைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள இது உதவுகின்றது. இந்த சூராவின் தலைப்பு எழுத்துக்களான த.ஸீ., குர்ஆனின் தலைப்பு எழுத்துக்களுடன் தொடர்புடைய கணித அற்புதத்தின் பின்னிப்பிணைந்த சிக்கலானதொரு அங்கமாக அமைகின்றது. இயேசுவின் அசாதாரணப் பிறப்பு மற்றும் அற்புதங்கள், ஐந்து தலைப்பு எழுத்துக்களைத் துவக்கத்தில் கொண்ட 19வது சூராவில் உள்ளது. விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[27:19] அந்த பெண் எறும்பின் கூற்றைக்கேட்டு அவர் புன்னகைத்தார், மேலும் சிரித்தார்,* மேலும் அவர், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றிபாராட்டுபவராக இருப்பதற்கும் உம்மை திருப்தி படுத்தும் நன்னெறியான காரியங்களைச் செய்வதற்கும் என்னை வழிநடத்துவீராக. உமது கருணையால், நன்னெறியாளர்களான உம்முடைய அடியார்களின் கூட்டத்தில் நுழைய என்னை அனுமதிப்பீராக” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*27:18-19 குறிப்பிட்ட சூராவில் எவ்வளவுக்கெவ்வளவு அசாதாரணமான நிகழ்வுகள் உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு வலிமையான கணித ஆதாரங்கள் அவற்றிற்கு ஆதரவு அளிக்கின்றன. இத்தகைய வினோதமான அற்புத நிகழ்வுகள் கடவுளின் வல்லமையைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள இது உதவுகின்றது. இந்த சூராவின் தலைப்பு எழுத்துக்களான த.ஸீ., குர்ஆனின் தலைப்பு எழுத்துக்களுடன் தொடர்புடைய கணித அற்புதத்தின் பின்னிப்பிணைந்த சிக்கலானதொரு அங்கமாக அமைகின்றது. இயேசுவின் அசாதாரணப் பிறப்பு மற்றும் அற்புதங்கள், ஐந்து தலைப்பு எழுத்துக்களைத் துவக்கத்தில் கொண்ட 19வது சூராவில் உள்ளது. விபரங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
[27:20] அவர் பறவைகளைக் கண்காணித்தார், மேலும் கவனித்தார்: “நான் ஹூப்போவை காண முடியாதது ஏன்? அவன் ஏன் காணவில்லை?
[27:21] “சரியானதொரு காரணத்தை அவன் எனக்குத் தரவில்லையென்றால், நான் அவனைக் கடுமையாகத் தண்டிப்பேன், அல்லது அவனைப் பலிகொடுத்து விடுவேன்”.
[27:22] அவர் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. (ஹூப்போ), “நீங்கள் பெற்றிராத செய்தி என்னிடம் இருக்கின்றது. ஷீபாவிலிருந்து, சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.
[27:23] “ஒவ்வொரு பொருளையும் கொண்டு அருள் பாலிக்கப்பட்ட, மேலும் பிரம்மாண்டமானதொரு மாளிகையைக் கொண்ட, ஒரு பெண்மணி அவர்களை ஆட்சிசெய்ய நான் கண்டேன்.
[27:24] “அவளும், அவளுடைய சமூகத்தாரும், கடவுள்-ஐ விடுத்து சூரியன் முன் சிரம் பணிந்து கொண்டிருக்க நான் கண்டேன். சாத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக்கி விட்டான், மேலும் அவர்களைப் பாதையிலிருந்து விரட்டி விட்டான்; அதன் விளைவாக, அவர்கள் வழிகாட்டப் பட்டவர்களாக இல்லை.”
[27:25] அவர்கள் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து மர்மங்களையும் வெளிப்படுத்துகின்ற ஒருவரும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும், நீங்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கும் ஒருவருமாகிய கடவுள்-ன் முன் சிரம்பணிந்திருக்க வேண்டும்.
[27:26] கடவுள்: அவருடன் வேறு எந்தத் தெய்வமும் இல்லை; மகத்தான சாம்ராஜ்யம் கொண்ட இரட்சகர்.
[27:27] (ஸாலமன்) கூறினார், “நீ உண்மையைக் கூறினாயா, அல்லது நீ ஒரு பொய்யனாக இருக்கின்றாயா என்பதை நாம் காண்போம்.
[27:28] “இந்தக் கடிதத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள், அவர்களிடம் அதனைக் கொடு, பின்னர் அவர்களுடைய மறுமொழியைக் கவனித்துப்பார்”.
ஷீபாவில் நிகழ்ந்தது
[27:29] அவள் கூறினாள், “என்னுடைய ஆலோசகர்களே, நான் கண்ணியமானதொரு கடிதத்தைப் பெற்றிருக்கின்றேன்.”
[27:30] “அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது, ‘கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*’ என்றுள்ளது.

அடிகுறிப்பு:
*27:30 இந்த வசனத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ‘பஸ்மலாஹ்’ 19 சூராக்களுக்கு முன்னதாக சூரா 9ல் இடம்பெறாத ‘பஸ்மலாஹ்’வை ஈடு செய்கின்றது. இது ‘பஸ்மலாஹ்’வின் மொத்த எண்ணிக்கையை மீண்டும் 114, 19ஒ6 ஆக ஆக்குகின்றது. இந்த ‘பஸ்மலாஹ்’வுடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான ஆழ்ந்த அற்புதத்தின் விபரங்களுக்கு பின் இணைப்பு 29ஐப் பார்க்கவும்.
[27:31] “பிரகடனம் செய்வதாவது: ‘ஆணவம் கொண்டு இருக்காதீர்கள்; அடிபணிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்’”.
[27:32] அவள், “என் ஆலோசகர்களே, இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனையளியுங்கள். நீங்கள் எனக்கு ஆலோசனையளிக்காத வரை, நான் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன்” என்று கூறினாள்.
[27:33] அவர்கள், “நாம் வலிமையைக் கொண்டிருக் கின்றோம், போர்த்திறனையும் பெற்றிருக்கின் றோம், எனினும் இறுதிக் கட்டளை உம் கரத்திலேயே உள்ளது. என்ன செய்வதென்பதை நீரே முடிவெடுப்பீராக” என்று கூறினார்கள்.
[27:34] அவள் கூறினாள், “மன்னர்கள், அவர்கள் படையெடுக்கும் எந்த நாட்டையும் சீர்குலைத்து விடுகின்றனர், அதன் கண்ணியத்திற்குரிய மக்களை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். இதுதான் அவர்கள் வழக்கமாகச் செய்வது.
[27:35] “நான் அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்புகின்றேன்; தூதர்கள் திரும்பக் கொண்டு வருவது என்ன என நாம் காண்போம்.”
[27:36] ஹூப்போ ஸாலமனிடம் திரும்பிய போது (அவன் அவரிடம் செய்தியைச் சொன்னான்), மேலும் அவர் (ஷீபாவின் மக்களுக்கு): “எனக்கு நீங்கள் பணம் தருகின்றீர்களா? கடவுள் எனக்குத் தந்திருப்பது, உங்களுக்கு அவர் தந்திருப்பதை விட மிகவும் மேலானது. நீங்கள் தான் இத்தகைய பரிசுகளில் ஆனந்தம் அடைகின்றீர்கள்” என்று மறுமொழி அளித்தார்.
[27:37] (ஹூப்போவிடம் அவர் கூறினார்,) “அவர்களிடம் திரும்பிச் செல், மேலும் அவர்களால் கற்பனையும் செய்யமுடியாத படைகளுடன் அவர்களிடம் நாம் வருவோம் (என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்). இழிவடைந்தவர்களாகவும், சிறுமைப்படுத்தப்பட்டவர்களாகவும் அவர்களை நாம் வெளியேற்றுவோம்”.
ஒளியின் வேகத்தை விட விரைவாக
[27:38] அவர், “என் பிரதானிகளே, அடிபணிந்தவர்களாக இங்கே அவர்கள் வருவதற்கு முன்னர், அவளுடைய மாளிகையை என்னிடம் கொண்டு வர உங்களில் எவரால் இயலும்?” என்று கூறினார்.
[27:39] ஜின்களில் இருந்து அஃப்ரீத் என்ற ஒன்று, “நீர் எழுந்து நிற்பதற்கு முன்னர் உம்மிடம் அதனைக் கொண்டு வர என்னால் இயலும். அதனைச் செய்யும் அளவிற்கு சக்தி நிறைந்தவனாக இருக்கின்றேன்” என்று கூறியது.
[27:40] புத்தகத்திலிருந்து அறிவைப் பெற்றிருந்த ஒன்று, “உமது கண்ணிமைப்பதற்குள் அதனை உம்மிடம் கொண்டு வர என்னால் இயலும்” என்று கூறியது. அவருக்கு முன்னால் அது நிர்மாணிக்கப் பட்டிருப்பதை அவர் கண்டதும், அவர்,“இது என் இரட்சகரிடமிருந்து ஓர் அருட்கொடையாகும், நான் நன்றியுடையவனாக இருக்கின்றேனா அல்லது நன்றிகெட்டவனா என்று காட்டு வதற்காக, இதன் மூலம் அவர் என்னைச் சோதிக்கின்றார். எவரொருவர் நன்றியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார், மேலும் ஒருவன் நன்றிகெட்டவனாக மாறிவிட்டால், பின்னர் என்னுடைய இரட்சகர் அவன் பால் எந்தத் தேவையும் இல்லாதவர், மிக்க கண்ணிய முடையவர்” என்று கூறினார்.
[27:41] அவர், “அவளுடைய மாளிகையை அவளுக்காக நீங்கள் மாற்றியமைத்து விடுங்கள். அவள் வழிகாட்டப்பட்டவளாக இருக்கப் போகின்றாளா, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களுடன் தொடரப் போகின்றாளா என்பதை நாம் காண்போம்” என்று கூறினார்.
[27:42] அவள் வருகை தந்தபோது, அவளிடம், “உன் மாளிகை இதைப் போன்றுதான் தோற்றமளிக்குமா?” என்று கேட்கப்பட்டது. அவள், “இதுதான் அது என்று தோன்றுகிறது” என்று கூறினாள். (ஸாலமன் கூறினார்,) “அவள் என்ன செய்யப் போகின்றாள் என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம், மேலும் நாங்கள் ஏற்கனவே அடிபணிந்தவர்களாக இருந்தோம்”.
[27:43] கடவுள்-க்குப் பதிலாக இணைத்தெய்வங்களை வழிப்பட்டதனால் திசை திருப்பப் பட்டவளாக அவள் இருந்தாள்; நம்ப மறுக்கும் மக்களைச் சேர்ந்தவளாக அவள் இருந்தாள்.
[27:44] அவளிடம், “மாளிகையின் உள்ளே செல்” என்று கூறப்பட்டது. அதன் உட்புறத்தை அவள் கண்டபோது, அதனை ஒரு தண்ணீர் குளம் என்று எண்ணினாள், மேலும் அவள் (தன் ஆடையை உயர்த்தியவளாக,) தன்னுடைய கால்களை வெளிப்படுத்தினாள். அவர், “இதன் உட்புறமானது இப்போது பளிங்கினால் மேவப்பட்டுள்ளது” என்று கூறினார். அவள், “என் இரட்சகரே, நான் எனது ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். இப்போது நான் ஸாலமனுடன் பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-க்கு அடிபணிகின்றேன்” என்று கூறினாள்.
ஸாலிஹ்
[27:45] “நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும்” என்று கூறியவராக, தமூதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சச்சரவு செய்கின்ற இரு பிரிவினர்களாக மாறினார்கள்.
[27:46] அவர், “என் சமூகத்தாரே, நல்ல செயல்களுக்குப் பதிலாகத் தீமைகளைப் புரிய நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள்? பாவ மன்னிப்பிற்காகக் கடவுள்-ஐ நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்தால் மட்டுமே, நீங்கள் கருணையை அடையலாம்” என்று கூறினார்.
[27:47] அவர்கள், “நாங்கள் உம்மை, எங்களுக்கு ஒரு கெட்ட சகுனமாக கருதுகின்றோம், உம்மையும் உம்முடன் சேர்ந்து கொண்டவர்களையும் என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய சகுனம் கடவுள்-ஆல் முற்றிலும் கட்டுப்படுத்தப் படுகின்றது. உண்மையில், நீங்கள் வழிதவறுகின்ற மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.
[27:48] அந்நகரில் தீயவர்களான ஒன்பது கொடுங் குற்றவாளிகள் இருந்தனர், மேலும் அவர்கள் நல்லது எதையும் ஒருபோதும் செய்ததில்லை.
[27:49] அவர்கள், “அவரையும், அவருடைய கூட்டத் தாரையும் கொன்று விடுவதாகக் கடவுள் மீது ஆணையிட்டுவிட்டுப் பின்னர், அவருடைய குலத்தவரிடம், ‘அவர்களுடைய மரணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உண்மையாளர்களே, என்று கூறி விடுவோம்’” என்று கூறினார்கள்.
நம்பிக்கையாளர்களைக் கடவுள் காக்கின்றார்
[27:50] அவர்கள் திட்டமிட்டனர் மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் அதே சமயம் அவர்கள் உணராது, நாமும் திட்டமிட்டோம் மேலும் சூழ்ச்சி செய்தோம்.
[27:51] அவர்களுடைய சூழ்ச்சியின் விளைவுகளைக் கவனிப்பீராக; அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் நாம் அழித்து விட்டோம்.
[27:52] அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக, இதோ அவர்களுடைய வீடுகள் முற்றிலும் அழிந்து கிடக்கின்றன. அறிந்திருக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[27:53] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை நாம் காப்பாற்று கின்றோம்.
லோத்
[27:54] லோத் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறினார், “இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை, பகிரங்கமாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?
[27:55] “பெண்களை விடுத்து, காமத்துடன் நீங்கள் ஆண்களோடு பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.”
[27:56] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழி, “லோத்தின் குடும்பத்தாரை உங்களுடைய நகரத்தை விட்டு வெளியேற்றி விடுங்கள்; அவர்கள் தூய்மையுடன் இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர் என்று கூறுவதாகவே இருந்தது.
[27:57] அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம், அவருடைய மனைவியைத் தவிர; அழிந்து விட்டவர்களுடன் அவளை நாம் கணக்கிட்டோம்.
[27:58] குறிப்பிட்டதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்களுக்கு துன்பகரமான தொரு பொழிவாக அது இருந்தது.
கடவுளின் தூதர்களுக்கிடையில் பேதங்கள் செய்யாதீர்கள்
[27:59] “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, மேலும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மீது அமைதி நிலவுவதாக. கடவுள் மேலானவரா, அல்லது சில மனிதர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத்தெய்வங்களா?” என்று கூறுவீராக.
கடவுள் மட்டுமே வழிபடுவதற்குத் தகுதியானவர்
[27:60] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த ஒருவர் யார்? எதன் மூலம் எழில் நிறைந்த தோட்டங்களை நாம் உருவாக்குகின்றோமோ, அந்த தண்ணீரை விண்ணிலிருந்து உங்களுக்கு இறக்கி அனுப்புகின்ற அந்த ஒருவர் யார்- அதன் மரங்களை நீங்கள் உற்பத்தி செய்ய சாத்தியமில்லையே? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்கள் வழி தவறிச் சென்று விட்ட மக்களாகவே இருக்கின்றனர்.
இயேசு, மேரி, முஹம்மது, மகான்கள் போன்றோர் ஒருபோதும் பங்குபெறவில்லை
[27:61] வசிக்கத்தக்கதாக பூமியை ஆக்கி, அதனூடே ஆறுகளை ஓடச் செய்து, அதன் மீது மலைகளை அமைத்ததுடன், மேலும் நீர்ப்பரப்புகள் இரண்டிற்குமிடையே ஒரு தடையை உருவாக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
[27:62] விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை காப்பாற்றி, இன்னலை இலகுவாக்கி, மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய அந்த ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[27:63] நிலத்திலும் மற்றும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களை வழிநடத்துகின்ற ஒருவர் யார்? அவருடைய கருணையின் அடையாளமாக, நற்செய்திகளுடன் காற்று களை அனுப்புகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? பங்குதாரர் எவரையும் கொண்டிருப்பதற்கெல்லாம் மேலாகக், கடவுள் மிகவும் உயர்வானவர்.
[27:64] படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்ற ஒருவர் யார்? வானத்தி லிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு வழங்குகின்ற ஒருவர் யார்? கடவுள்-உடன் மற்றொரு தெய்வமா? “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால், உங்களுடைய சான்றினை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.
[27:65] “கடவுள்-ஐத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் எதிர்காலம் தெரியாது. எப்படி அல்லது எப்பொழுது அவர் கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அவர்கள் உணர மாட்டார்கள்” என்று கூறுவீராக.
மறுவுலகின் மீது நம்பிக்கை: அதிகமான மக்களுக்கு ஒரு மாபெரும் இடையூறு
[27:66] உண்மையில், மறுவுலகைக் குறித்து அவர் களுடைய அறிவு குழம்பி விட்டது. உண்மை யில், அதைப்பற்றி அவர்கள் சந்தேகங்களைத் தாங்கி இருக்கின்றனர். உண்மையில், அவர்கள் அதில் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
[27:67] நம்ப மறுத்தவர்கள் கூறினர், “நாங்களும் எங்களுடைய பெற்றோரும் கூட, புழுதியாக மாறிய பின்னர், நாங்கள் வெளிக்கொண்டு வரப்படுவோமா?
[27:68] “கடந்த காலத்திலும் இதே வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவை கடந்த காலத்திலிருந்துள்ள கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”
[27:69] “பூமியைச் சுற்றிப்பார்த்து குற்றவாளி களுக்கான விளைவுகளைக் கவனிப்பீராக” என்று கூறுவீராக.
[27:70] அவர்களுக்காக துக்கப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் நீர் கோபம் அடையாதீர்.
[27:71] அவர்கள், “நீர் உண்மையானவராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்று கூறுகின்றார்கள்.
[27:72] “நீங்கள் அறைகூவல் விடுகின்ற அத் தண்டனையில் சிலவற்றால் நீங்கள் ஏற்கனவே துன்புற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[27:73] உம்முடைய இரட்சகர் மனிதர்கள் பால் அருள் நிறைந்தவராக இருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிகமானோர் நன்றி கெட்டவர் களே.
[27:74] அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பவற்றையும், மேலும் அவர்கள் அறிவிப்பவற்றையும் உம்முடைய இரட்சகர் முற்றிலும் அறிவார்.
[27:75] வானங்கள் மற்றும் பூமியில் (கடவுளிடமிருந்து) மறைக்கப்பட்டவை எதுவுமில்லை; ஒவ் வொன்றும் ஆழ்ந்ததோர் பதிவேட்டில் உள்ளது.
[27:76] இஸ்ரவேலின் சந்ததியினருடைய விவகாரங் களில் பலவற்றை இந்தக் குர்ஆன் தீர்த்து வைக்கின்றது; இன்னமும் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விவகாரங்கள்.
[27:77] மேலும் மிகவும் நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி யாகவும் மற்றும் கருணையாகவும் உள்ளது.
[27:78] உம்முடைய இரட்சகர்தான் தனது சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பவர். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், எல்லாம் அறிந்தவர்.
[27:79] ஆகையால், உமது பொறுப்பைக் கடவுள் மீது வைப்பீராக; தெளிவான சத்தியத்தையே நீர் பின்பற்றுகின்றீர்.
[27:80] இறந்துவிட்டவர்களையோ, அன்றிச் செவிடர் களையோ, அவர்கள் திரும்பிச்சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும் படிச் செய்ய உம்மால் முடியாது.
[27:81] அன்றியும், குருடர்களை அவர்களுடைய வழிகேட்டிலிருந்து வெளியில் நடத்தவும் உம்மால் முடியாது. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு அடிபணிந்தோராக இருக்க முடிவெடுத்தவர்கள் மட்டுமே உம்மைச் செவியேற்பார்கள்.
கணினிதான் அந்த சிருஷ்டிப் பொருள்*
[27:82] சரியான தருணத்தில், மனிதர்கள் நம் வெளிப்பாடுகளைக் குறித்து உறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அறிவிக்கின்ற, பூமியின் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு சிருஷ்டிப்பொருளை, அவர்களுக்காக நாம் உருவாக்குவோம்.

அடிகுறிப்பு:
*27:82 (2+7+8+2=19) குர்ஆனுடைய கணித அற்புதத்தின் திரையை விலக்க கணினி அவசியமானதாக இருந்தது, மேலும் அதிகமான மனிதர்கள் கடவுளின் தூதுச் செய்தியைக் கைவிட்டு விட்டனர் என்பதை இது நிரூபித்தது. (பின்இணைப்புகள் 1 & 19 ஐ பார்க்கவும்).
[27:83] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும், நமது சான்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாத சிலரை, நிர்ப்பந்தமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
குர்ஆனின் கணிதக்குறியீட்டைக் கவனத்துடன் பரிசீலியுங்கள்
[27:84] அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர், “எனது வெளிப்பாடுகளை, அவற்றைப் பற்றிய அறிவை நீங்கள் அடைவதற்கு முன்னர் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். இதுதான் நீங்கள் செய்தது அல்லவா?” என்று கூறுவார்.
[27:85] அவர்களுடைய தீமைகளுக்குரிய கூலிக்கு அவர்கள் உள்ளாவார்கள்; அவர்கள் எதுவும் கூற மாட்டார்கள்.
[27:86] இரவை அவர்களுடைய ஓய்விற்கெனவும், மேலும் பகலை ஒளிமிக்கதாகவும் நாம் ஆக்கினோம் என்பதை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை போதுமான சான்றுகளாக இருக்க வேண்டும்.
[27:87] கொம்பு ஊதப்படும் அந்நாளில், கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் திகிலடைந்து விடுவார்கள். நிர்பந்திக்கப்பட்ட வர்களாக, அனைவரும் அவர் முன் வருவார்கள்.
பூமியின் இயக்கம்: ஒரு விஞ்ஞான அற்புதம்
[27:88] மலைகளை நீர் பார்க்கும் போது, அவை அசையாமல் நிற்பதாக நீர் நினைக்கின்றீர். ஆனால் அவை மேகங்களைப் போல் நகர்கின்றன. ஒவ்வொன்றையும் மிகச் சரியாக ஆக்கிய, கடவுள்-ன் உற்பத்தி இவ்விதமானதாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
தீர்ப்பு நாள்
[27:89] (தங்களுடைய பதிவேடுகளில்) நல்ல செயல் களைக் கொண்டு வருபவர்கள் மிகச் சிறப்பான வெகுமதிகளைப் பெறுவார்கள், மேலும் அந் நாளின் திகில்களிலிருந்து அவர்கள் பூரணமான பாதுகாப்புடன் இருப்பார்கள்.
[27:90] தீய காரியங்களைக் கொண்டு வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்குள் நிர்ப் பந்திக்கப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றிற் குத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள் அல்லவா?
[27:91] இந்த நகரத்தின் இரட்சகரை வழிபடவேண்டும் என்று மட்டுமே நான் கட்டளையிடப்பட்டு ள்ளேன்-அவர் இதனைப் பாதுகாப்பான புனிதஸ்தலமாகஆக்கியுள்ளார்-மேலும் அவர் அனைத்துப் பொருட்களையும் தன் வசம் கொண்டுள்ளார். அடிபணிந்த ஒருவராக இருக்கவேண்டுமென்று நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்.
[27:92] மேலும் இந்தக் குர்ஆனை ஓதி வர வேண்டுமென்றும். எவரொருவர் வழிநடத்தப் படுகின்றாரோ அவர் தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றால், பின்னர், “நான் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே” என்று கூறுவீராக.
[27:93] மேலும், “புகழ் அனைத்தும் கடவுள்-க் குரியது; அவர் தன் சான்றுகளை, அவற்றை நீங்கள் அங்கீகரிக்கும் வரை உங்களுக்குக் காட்டுவார். நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் உம் இரட்சகர் ஒருபோதும் அறியாதவர் அல்ல” என்று கூறுவீராக.