சூரா 25: சட்டப்புத்தகம் (அல்-ஃபுர்கான்)

[25:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[25:1] தன் அடியாருக்கு, அவர் முழு உலகிற்கும் ஓர் எச்சரிக்கை செய்பவராகப் பணியாற்றுவதற் காக, இந்தச் சட்டப்புத்தகத்தை வெளிப் படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.
[25:2] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டார்.*

அடிகுறிப்பு:
*25:2 விண்வெளி வீரர்களை அண்டவெளிக்குள் நாம் மிதக்க விடும்போது, நாம் உணவு, தண்ணீர், பிராணவாயு மற்றும் பயணம் முழுவதற்குமான மற்றத் தேவைகளை மிகத் துல்லியமாக அளவிடுகின்றோம். அது போலவே, பூமியெனும் விண்கலத்தின் மீது அண்டவெளியில் கடவுள் நம்மை மிதக்க விட்டுள்ளார்-மேலும் நமக்கும் மற்றப் படைப்பினங்களுக்கும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய அனைத்து வகை வாழ்வாதாரங்களையும், ஒரு மிகச் சரியான வடிவில் வடிவமைத்துள்ளார். உதாரணத்திற்கு, நமக்கும் தாவரங்களுக்கும் இடையில் உள்ள ஒன்றுக்கொன்று இசைவான கூட்டு வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்; கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிச்சேர்க்கை மூலம் அவை உருவாக்கும் பிராணவாயுவை நாம் பயன்படுத்துகின்றோம், அதே சமயம் சுவாசிக்கும் போது நாம் வெளிப்படுத்தும் கரியமிலவாயுவை அவை பயன்படுத்திக் கொள்கின்றன.
[25:3] இருப்பினும், எந்த ஒன்றையும் படைக்காத வற்றை - அவர்களே படைக்கப்பட்டவர்களாக உள்ளனர்-மேலும் தங்களுக்கே கூட தீமையோ அல்லது நன்மையோ செய்து கொள்ளச் சக்தியற்றவற்றை, அவருடன் தெய்வங்களாக அவர்கள் அமைத்துக் கொள்கின்றனர், அன்றி யும் அவர்கள், வாழ்வையோ அல்லது மரணத் தையோ அல்லது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு தலையோ கட்டுப்படுத்தும் எந்தச் சக்தியையும் பெற்றிருக்கவில்லை.
குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம் நம்ப மறுப்பவர்கள் பொய்யர்கள் என நிரூபிக்கப்பட்டனர்
[25:4] நம்ப மறுப்பவர்கள், “இது மற்ற சில மனிதர்களின் உதவியுடன், அவர் உருவாக்கி கொண்ட ஓர் இட்டுக் கட்டலேயாகும்” என்று கூறினார்கள். அவர்கள் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பொய்மையையும் கூறி விட்டனர்.
[25:5] அத்துடன் அவர்கள், “அவர் எழுதிக் கொண்ட கடந்த காலக் கட்டுக்கதைகள்; அவை அவருக்கு இரவும் பகலும் எடுத்துக் கூறப் பட்டன”* என்றும் கூறினார்கள்.

அடிகுறிப்பு:
*25:5 முஹம்மதின் சமகாலத்தவர்கள், அவர் எழுதவும் படிக்கவும் தெரிந்த கல்வி கற்ற ஒருவர் என்பதை அறிந்திருந்தனர்; கடவுளின் வெளிப்பாடுகளை அவர் தன் சொந்தக் கரங்களால் எழுதிக் கொண்டார் (பின் இணைப்பு 28ஐ பார்க்கவும்).
[25:6] “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியத்தை* அறிந்த ஒருவரிடமிருந்து இது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*25:6 நம்ப மறுப்பவர்களின் கூற்றுக்களுக்கு, மறுக்க முடியாத பதிலான குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீடு, 1400 வருடங்களாக தெய்வீகமாகப் பாதுகாக்கப்பட்டதோர் இரகசியமாக இருந்து வந்தது. கடவுளின் அனுமதிப்படி அதனைத் திரைவிலக்க, கடவுளின் உடன்படிக்கைத் தூதர் விதிக்கப்பட்டிருந்தார் (பின்இணைப்புகள் 1, 2 & 26).
நம்ப மறுப்பவர்களுடைய ஒரே விதமான கூற்றுக்கள்
[25:7] மேலும் அவர்கள் கூறினர், “இந்தத் தூதர் உணவு உட்கொண்டும் அங்காடிகளில் நடந்து கொண்டும் இருப்பது எப்படி? அவருடன் ஒரு பிரச்சாரகராகப் பணிபுரிய ஒரு வானவர் மட்டும் அவருடன் இறங்கி வர முடிந்தால்!”
[25:8] அல்லது, “ஒரு புதையல் மட்டும் அவருக்குக் கொடுக்கப்பட்டால்!” அல்லது, “அவர் ஒரு தோட்டத்தை மட்டும் பெற்றிருந்து அதிலிருந்து அவர் உண்ணுவாரானால்!” வரம்பு மீறுபவர்கள் மேலும், “நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்” என்றும் கூறினார்கள்.
[25:9] அவர்கள் எப்படி உம்மை எல்லாவிதமான பெயர்களையும் கொண்டு அழைத்தார்கள் என்பதையும், மேலும் எவ்வாறு இது அவர்களை ஒருபோதும் தங்கள் வழியைத் திரும்பக் காணாதவாறு , வழிதவறிச் செல்லச் செய்தது என்பதையும் கவனிப்பீராக.
[25:10] பாக்கியமிக்க ஒருவரான, அவர் நாடினால், அவர்களுடைய கோரிக்கைகளை விடவும் மிகச்சிறந்தவற்றை-ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களும் மற்றும் ஏராளமான மாளிகைகளும் - உமக்குத் தர இயலும்.
உண்மையான காரணம்
[25:11] உண்மையில், அவர்கள் அந்த நேரத்தின் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்) மீது நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர், மேலும் அந்த நேரத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்காக கொழுந்து விட்டெரியும் நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.
நம்ப மறுப்பவர்களுக்கான தண்டனை
[25:12] அது அவர்களைத் தொலைவிலிருந்து காணும் பொழுதே, அவர்கள் அதன் கோபத்தையும் மற்றும் சீற்றத்தையும் செவியேற்பார்கள்.
[25:13] மேலும் ஒரு குறுகிய இடத்தின் ஊடே, முற்றிலும் விலங்கிடப்பட்டவர்களாக அவர்கள் அதில் எறியப்பட்டுவிடும் போது, தங்களுடைய கைசேதத்தை அவர்கள் வெளிப்படுத்து வார்கள்.
[25:14] அந்நாளில், நீங்கள் ஒரே ஒரு கைசேதத்தை மட்டும் வெளிப்படுத்த மாட்டீர்கள்; மிக அதிக எண்ணிக்கையிலான கைசேதங்களின் மூலம் நீங்கள் துயரப்படுவீர்கள்.
நன்னெறியாளர்களுக்கான வெகுமதி
[25:15] கூறுவீராக, “மேலானது இதுவா, அல்லது நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும் நிரந்தரமான சுவனமா? அது அவர்களுக்கு நன்கு தகுதியான வெகுமதி; நன்கு தகுதியான விதியாகும்.”
[25:16] அங்கே அவர்கள் விரும்புகின்ற எதுவும், என்றென்றும் அவர்களுக்குக் கிடைக்கும். இது உம்முடைய இரட்சகரின் மாற்றமுடியாத வாக்குறுதியாகும்.
[25:17] கடவுள்-உடன், அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத்தெய்வங்களுடன், அவர் களையும் ஒன்று சேர்த்து அவர் வரவழைக்கும் அந்நாளில், அவர் , “என்னுடைய இந்த அடியார் களை நீங்கள் வழிகெடுத்தீர்களா, அல்லது அவர்கள் தாங்களாகவே வழிதவறிச் சென்றன ரா?” என்று கூறுவார்.
[25:18] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், உம்முடன் எந்த இரட்சகர்களையும் நாங்கள் அமைத்துக் கொள்வதென்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அவர்களை, அவர்களுடைய பெற்றோர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்க நீர் அனுமதித்தீர். அதன் விளைவாக, அவர்கள் தூதுச்செய்தியைப் புறக்கணித்தனர், மேலும் இவ்விதமாகத் தீய மக்களானார்கள்” என்று கூறுவார்கள்.
[25:19] நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த தூதுச் செய்தியை அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் உள்ளாகி யிருக்கும் தண்டனையிலிருந்து உங்களால் அவர்களைக் காக்க இயலாது, அன்றியும் எந்த வழியிலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யவும் முடியாது. உங்களில் எவர் ஒருவர் தீமை செய்கின்றாரோ, அவரை நாம் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவோம்.
தூதர்களும் மனிதர்களே
[25:20] உணவு உட்கொள்ளாத, மேலும் அங்காடிகளில் நடந்து போகாத எந்தத் தூதர்களையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. இவ்விதமாக நாம் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரை சோதனை செய்கின்றோம்; நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடனேஇருப்பீர்களா? உம்முடைய இரட்சகர் பார்ப்பவர்.
[25:21] நம்மைச் சந்திப்பதை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “வானவர்கள் மட்டும் நம்மிடம் இறங்கி வர முடிந்தால், அல்லது நாம் நம்முடைய இரட்சகரைப் பார்க்க முடிந்தால் (அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)!” என்று கூறினார்கள். உண்மையில், அவர்கள் மிகப்பெரும் ஆணவத்தைக் கொண்டு விட்டனர், மேலும் மிகப்பெரும் இறைநிந்தனையைச் செய்து விட்டனர்.
[25:22] வானவர்களை அவர்கள் காணும் அந்நாளில், குற்றவாளிகளுக்கு அது நற்செய்தியாக இருக்காது; அவர்கள், “இப்பொழுது, நாம் திரும்பிச் செல்லமுடியாதவாறு அடைக்கப்பட்டு விட்டோம்” என்று கூறுவார்கள்.
[25:23] அவர்கள் செய்த காரியங்கள் அனைத்தையும் நாம் நோட்டமிடுவோம், மேலும் அவற்றை செல்லாததாகவும் பயனற்றதாகவும் ஆக்கி விடுவோம்.
[25:24] அந்நாளில் சுவனவாசிகள் மிகவும் சிறப்பானவர்கள்; அவர்கள் நல்ல செய்திகளைக் கேட்பார்கள்.
[25:25] மேகங்களின் திரள்களாக வானம் உடைந்து துண்டாகி விடும், மேலும் அதிக எண்ணிக்கை யில் வானவர்கள் இறங்கி வருவார்கள்.
[25:26] ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் மிக்க அருளாளருக்கே உரியதாகும். நம்ப மறுப்பவர்களுக்கோ, அது ஒரு கடினமான நாளாக இருக்கும்.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*
[25:27] வரம்பு மீறுபவன் (மிகுந்த வேதனையால்) தன் கரங்களைக் கடித்துக் கொள்ளும் அந்நாள் வரும், மேலும், “ஐயோ, தூதருடன் அவ்வழியை நானும் பின்பற்றியிருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறுவான்.

அடிகுறிப்பு:
*25:27-30 இந்த வசனம் கடவுளின் உடன்படிக்கை தூதரை “ரஷாத் கலீஃபா” என்ற அவருடைய பெயர் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), தொடர்ந்து இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 ,மற்றும் 30, ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.
[25:28] “ஐயோ, எனக்குக் கேடே, ஒரு நண்பனாக அந்த மனிதனை நான் எடுத்துக் கொள்ளாதிருந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

அடிகுறிப்பு:
*25:27-30 இந்த வசனம் கடவுளின் உடன்படிக்கை தூதரை “ரஷாத் கலீஃபா” என்ற அவருடைய பெயர் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), தொடர்ந்து இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 ,மற்றும் 30, ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.
[25:29] “தூதுச் செய்தி என்னிடம் வந்து விட்ட பின்னர், அதனை விட்டும் என்னை அவன் திருப்பி விட்டான். உண்மையில், சாத்தான் தன்னுடைய மனிதப்பலிகளைக் கைவிட்டு விடுகின்றான்”.

அடிகுறிப்பு:
*25:27-30 இந்த வசனம் கடவுளின் உடன்படிக்கை தூதரை “ரஷாத் கலீஃபா” என்ற அவருடைய பெயர் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), தொடர்ந்து இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 ,மற்றும் 30, ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.
[25:30] தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*25:27-30 இந்த வசனம் கடவுளின் உடன்படிக்கை தூதரை “ரஷாத் கலீஃபா” என்ற அவருடைய பெயர் கணித அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725), தொடர்ந்து இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 ,மற்றும் 30, ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.
[25:31] வேதம் வழங்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதி களையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.
[25:32] நம்ப மறுப்பவர்கள், “ஏன் இந்தக் குர்ஆன் அவர் மூலம் மொத்தமும் ஒரே தடவையில் வரவில்லை?” என்று கூறினார்கள். உமது நினைவில் அதனை நிலைநிறுத்துவதற்காக, அதனை நாம் உமக்குப் படிப்படியாக விடுவித் தோம். குறிப்பிட்டதொரு வரிசைக்கிரமத்தில் அதனை நாம் ஓதிக்காட்டியுள்ளோம்.
கடவுளின் சான்றுகள் வெற்றி கொள்பவை
[25:33] எவ்விதமான வாதத்துடன் அவர்கள் வந்தாலும், உமக்கு நாம் சத்தியத்தையும், மேலும் மேலானதொரு புரிந்துகொள்ளு தலையும் வழங்குகின்றோம்.
[25:34] வலுக்கட்டாயமாக நரகத்திற்கு வரவழைக்கப் படுபவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்; அவர்கள் தான் சரியான பாதையி லிருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள்.
[25:35] நாம் மோஸஸிற்கு வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அவருக்கு உதவியாளராக இருப்பதற்காக அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்.
[25:36] நாம், “நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்த மக்களிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள், என்று கூறினோம், மேலும் அதன் பின்னர், நிராகரித்தவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விட்டோம்.
[25:37] அது போலவே, நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்ப மறுத்தபோது, அவர்களை நாம் மூழ்கடித்தோம், மேலும் அவர்களை மக்களுக் காக ஓர் அடையாளமாக நாம் ஆக்கினோம். வரம்பு மீறுபவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை நாம் தயாரித்துள்ளோம்.
[25:38] அத்துடன் ஆது, தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறையினர்.
[25:39] இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும், அவர் களை நாம் அழிப்பதற்கு முன்னர், போதுமான உதாரணங்களை நாம் கொடுத்தோம்.
[25:40] துன்பகரமானதொரு பொழிவைக் கொண்டு பொழியப்பட்ட (சோடம்) சமூகத்தைக் கடந்து அவர்கள் வந்தனர். அவர்கள் அதனைப் பார்க்கவில்லையா? உண்மை என்ன வென்றால், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வில்லை.
தூதர்கள் கேலி செய்யப்பட்டனர்
[25:41] அவர்கள் உம்மைக் காணும் போதெல்லாம்; “ஒரு தூதராக இருப்பதற்குக் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தானா?” என்று உம்மை அவர்கள் எப்பொழுதும் கேலி செய்தார்கள்.
[25:42] “நம்முடைய தெய்வங்களிலிருந்து நம்மைக் கிட்டத்தட்ட அவர் திருப்பி விட்டார், நாம் அவற்றுடன் உறுதியோடு சகித்துக் கொண்டு இருந்திராவிட்டால்”. தண்டனையை அவர்கள் காணும்போது, பாதையிலிருந்து உண்மை யாகவே வழிதவறியவர் யார் என்பதை, அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.
அகந்தை ஒரு தெய்வமாக
[25:43] தன் சொந்த அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் பார்த்தீரா? அவனு டைய வழக்கறிஞராக நீர் இருப்பீரா?
[25:44] அவர்களில் அதிகமானோர் செவியேற் கின்றனர், அல்லது புரிந்து கொள்கின்றனர் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்; அல்ல, அவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள்.
கடவுளிடமிருந்து எல்லையற்ற அருட்கொடைகள்
[25:45] உம் இரட்சகர் எவ்வாறு நிழலை வடிவமைத் துள்ளார் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் நாடியிருந்தால், அதனை அவர் நிலை யானதாக ஆக்கியிருக்க இயலும், அப்போது நாம் அதற்கேற்றவாறு சூரியனை வடிவமைத் திருப்போம்.
[25:46] ஆனால் அதனை மெதுவாக நகரும்படி நாம் வடிவமைத்தோம்.
[25:47] அவர்தான் ஒரு போர்வையாகவும், மேலும் நீங்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும் இரவை வடிவமைத்தவர். மேலும் பகலை ஒரு மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதலாக அவர் ஆக்கினார்.
[25:48] அவர்தான் தன்னுடைய கருணையின் நற்சகுனங் களுடன் காற்றுகளை அனுப்புகின்றவர், மேலும் விண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.
[25:49] அதனைக் கொண்டு, இறந்த நிலங்களை நாம் மீண்டும் உயிர்ப்பிக்கின்றோம், மேலும் நம் படைப்புகளுக்கு - எண்ணற்ற விலங்குகள் மற்றும் மனிதர்கள் - பானம் வழங்குகின்றோம்.
[25:50] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையில் மிகச் சரி யாக அதனை நாம் பங்கீடு செய்தோம். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பமறுப்பதையே வலியுறுத்துகின்றனர்.
[25:51] நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை அனுப்பியிருக்க நம்மால் இயலும்.
[25:52] ஆகையால், நம்ப மறுப்பவர்களுக்குக் கீழ்ப் படியாதீர், மேலும் இதனைக்கொண்டு அவர் களுக்கெதிராகப் பாடுபடுவீராக, ஒரு மிகப்பெரும்பாடு.
[25:53] அவர்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்ப் பவர்; ஒன்று புதியதாகவும் மேலும் நாவிற் கினியதாகவும் உள்ளது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும், அருந்த முடியாத தாகவும் உள்ளது. மேலும் அவர் வலிமையான, மீறமுடியாததொரு தடை (ஆவியாதல்) கொண்டு அவற்றைப் பிரித்தார்.
[25:54] அவர்தான் தண்ணீரிலிருந்து ஒரு மனிதனைப் படைத்து, பின்னர் திருமணம் மற்றும் தாம்பத்யம் மூலம் அவனை இனப்பெருக்கம் செய்யச் செய்தார். உம் இரட்சகர் சர்வ சக்தியுடையவர்.
[25:55] இருப்பினும், வழக்கமாக, அவர்களுக்கு நன்மை செய்யவோ அன்றி அவர்களுக்குத் தீமை செய்யவோ இயலாத இணைத் தெய்வங் களை அவர்கள் கடவுள்-உடன்அமைத்துக் கொள்கின்றனர். உண்மையில், நம்ப மறுப்பவன் தன்னுடைய இரட்சகரின் ஒரு விரோதியாவான்.
[25:56] நற்செய்தியை அறிவிக்கின்ற ஒருவராகவும், அவ்வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாதே) உம்மை* நாம் அனுப்பி இருக்கின்றோம்.

அடிகுறிப்பு:
*25:56 “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த சூரா மற்றும் வசன எண்களை (25+56) நாம் கூட்டினால் கிடைக்கப் பெறும் கூட்டுத் தொகை 1230+25+56=1311=19ஒ69.
[25:57] “நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்க வில்லை. நான் விரும்புவதெல்லாம் உங்கள் இரட்சகரிடம் செல்லும் சரியான பாதையைக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவி செய்வது தான், இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக இருந்தால்,” என்று கூறுவீராக.
வேதம் வழங்கப்பட்டவர்களும் மகான்களும் இறந்து விட்டவர்களே
[25:58] உயிரோடிருக்கும் ஒருவரிடமே உமது உறுதியான நம்பிக்கையை நீர் வைக்க வேண்டும்-ஒருபோதும் இறவாத ஒருவர்- மேலும் அவரைப் புகழவும் துதிக்கவும் செய் வீராக. தன்னுடைய படைப்பினங்களின் பாவங்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[25:59] அவர்தான் வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன் றையும், ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். மிக்க அருளாளர்; அறிவில் நன்கு ஊன்றியவர்களிடம் அவரைப்பற்றிக் கேட்பீராக.
நன்றிகெட்ட மனிதன்
[25:60] “மிக்க அருளாளரின் முன்னர் சிரம் பணியுங்கள்,” என்று அவர்களிடம் கூறப்படும் போது, அவர்கள், “மிக்க அருளாளர் என்றால் என்ன? நீர் ஆதரிப்பவற்றிற்கு நாங்கள் சிரம்பணிய வேண்டுமா?” என்று கூறுகின் றனர். இவ்விதமாக, இது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.
[25:61] விண்ணில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்தவர், மேலும் அதில் ஒரு விளக்கையும், மற்றும் பிரகாசிக்கும் ஒரு நிலவையும் அமைத்த அந்த ஒருவர் பாக்கியம் மிக்கவர்.
[25:62] அவர்தான் மாறி மாறி வருமாறு இரவையும் பகலையும் வடிவமைத்தவர்: கவனத்தில் எடுத்துக்கொள்ள, அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்புவோருக்குப் போதுமானதொரு சான்று.
நன்னெறியாளர்களின் பண்புகள்
[25:63] பூமியில் நிதானமாக நடப்பவர்களே மிக்க அருளாளரின் வணக்கசாலிகள் ஆவர், மேலும் அறிவில்லாதவர் அவர்களிடம் பேசும்போது, அவர்கள் அமைதியை மட்டுமே கூறுவார்கள்.
[25:64] இரவின் தனிமையில், அவர்கள் தங்களுடைய இரட்சகரைத் தியானிப்பார்கள், மேலும் சிரம் பணிந்து விழுவார்கள்.
[25:65] மேலும் அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.
[25:66] “ மிக மோசமான தங்குமிடம் அதுவேயாகும்; மிக மோசமான விதி”.
[25:67] அவர்கள் கொடுக்கும்பொழுது ஊதாரித் தனமாகவோ அன்றி கஞ்சத்தனமாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்கள் நடுத்தரமாகக் கொடுப்பார்கள்.
[25:68] கடவுள்-உடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அவர்கள் ஒருபோதும் இறைஞ்ச மாட்டார்கள், அன்றியும் நீதியின் போக்கிலேயே தவிர எந்த ஆன்மாவையும் அவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்-ஏனெனில் கடவுள் உயிர்களைப் புனிதமாக்கியிருக்கின்றார். அன்றி அவர்கள் விபச்சாரம் செய்யமாட்டார்கள். இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.
[25:69] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுக்குரிய தண்டனை இரு மடங்காக்கப்படும், மேலும் இழிவுபடுத்தப் பட்டவர்களாக அதிலே அவர்கள் வசிப்பார்கள்.
[25:70] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர். அவர் களுடைய பாவங்களைக் கடவுள் நன்மையின் வரவுகளாக மாற்றிவிடுவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[25:71] எவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் நன்னெ றியான தொரு வாழ்வு நடத்துகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார்; ஒரு முழுமையான மீட்சி.
நன்னெறியாளர்களின் கூடுதல் பண்புகள்
[25:72] அவர்கள் பொய்சாட்சி சொல்லமாட்டார்கள். வீண்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் அதனை புறக்கணித்து விடுவார்கள்.
[25:73] அவர்களுடைய இரட்சகரின் வெளிப்பாடு களால் நினைவூட்டப்படும்போது, அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருந்ததைப் போன்று அவற்றின் பால் அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார்கள்.
[25:74] மேலும் அவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளையும் மற்றும் பிள்ளைகளையும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறி யாளர்களின் முன் அணியில் எங்களை வைப்பீராக” என்று கூறுவார்கள்.
[25:75] தங்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பிரதி பலனாக சுவனத்தை அடைபவர்கள் இவர்கள் தான்; இன்பகரமான வாழ்த்துக்களுடனும் அமைதியுடனும் அங்கே அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
[25:76] அங்கே நிரந்தரமாக அவர்கள் தங்கியிருப்பார்கள்; என்ன ஓர் அழகிய விதி; என்ன ஓர் அழகிய தங்குமிடம்.
[25:77] “உங்களுடைய வழிபாட்டின் மூலம் மட்டுமே என் இரட்சகரிடம் நீங்கள் நன்மதிப்பை அடைகின்றீர்கள். ஆனால் நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், தவிர்த்து விட முடியாத பின்விளைவுகளுக்கு நீங்கள் உள்ளாகின்றீர் கள்” என்று கூறுவீராக.