சூரா 24: ஒளி (அல்-நூர்)

[24:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[24:1] நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப் படுத்தியுள்ளோம்.
விபச்சாரம்
[24:2] விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கை யாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*

அடிகுறிப்பு:
* 24:2 சமூக நெருக்கடி, அதாவது தண்டனையைப் பொதுமக்கள் பார்ப்பதுதான், அடிப்படையான தண்டனை (மேலும் 5:38ஐப் பார்க்கவும்) . சவுக்கடி அடையாளபூர்வமானதாகவே இருக்க வேண்டும், கடுமையானதாக அல்ல.
[24:3] விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்யும் ஒருத்தியையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருத்தியையோ திருமணம் செய் வதில் சென்று முடிவான், மேலும் விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்யும் ஒருவனையோ அல்லது இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற ஒருவனையோ திருமணம் செய்வதில் சென்று முடிவாள். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.
[24:4] எவர்கள் திருமணமான பெண்கள் மீது விபச்சாரக் குற்றம்சாட்டிவிட்டு, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரத் தவறு கின்றனரோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சவுக்கடிகள் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து எந்தச் சாட்சியத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.
[24:5] அதன்பின்னர் அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொண்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[24:6] வேறு சாட்சிகள் எதுவுமின்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கைத் துணைகளைக் குற்றம் சாட்டுபவர்களைப் பொறுத்தவரை, அவர் உண்மையையே கூறுவதாக நான்கு முறை கடவுள் மீது சத்தியம் செய்தால், பின்னர் அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
[24:7] ஐந்தாம் பிரமாணமானது, அவர் கூறுவது பொய்யாக இருந்தால், கடவுள்-ன் தண்டனை யானது அவர் மீதே உண்டாவதாக என்று இருத்தல் வேண்டும்.
[24:8] அவள், அவன் ஒரு பொய்யன் என்று கடவுள் மீது நான்கு முறை சத்தியம் செய்தால், அவள் குற்றமற்றவளாகக் கருதப்பட வேண்டும்.
[24:9] ஐந்தாம் பிரமாணமானது, அவன் கூறுவது உண்மையாக இருந்தால் கடவுள்-ன் கடுங் கோபத்தை அவள் தன் மீது உண்டாக்கிக் கொள்வதாக இருத்தல் வேண்டும்.
[24:10] இது உங்கள் பால் கடவுள்-ன் அருளும் கருணையுமாகும். கடவுள் மீட்பவர், ஞானம் மிக்கவர்.
வதந்திகள் மற்றும் நிரூபணமில்லாத குற்றச்சாட்டுக்களைக் கையாள்வது எப்படி
[24:11] உங்களில் ஒரு கும்பல் பெரியதொரு பொய் யைக் கொண்டு வந்தது*. அது உங்களுக்குக் கெட்டதாக இருந்தது என்று நீங்கள் நினைக்காதீர்கள்; மாறாக, அது உங்களுக்கு நல்லதாகவே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில், அவர்களில் ஒவ்வொருவனும் குற்றத்தில் அவனுடைய பங்கைச் சம்பாதித்துக் கொண்டான். சம்பவம் முழுவதையும் துவக்கிய வனைப் பொறுத்தவரை, அவன் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டான்.

அடிகுறிப்பு:
*24:11வேதம் வழங்கப்பட்டவரின் மனைவி ஆயிஷா தவறுதலாகப் பாலைவனத்தில் விட்டுச் செல்லப்பட்டு, பின்னர், ஓர் இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டு வேதம் வழங்கப்பட்டவரின் பிரயாணக் கூட்டத்தைப் பிடிக்க அவரால் உதவி செய்யப்பட்ட ஒரு சரித்திரச் சம்பவத்தை இது குறிக்கின்றது. இது ஆயிஷாவிற்கெதிரான பிரசித்தி பெற்ற ‘பெரும்பொய்’ யைத் துவக்கியது.
[24:12] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது, நம்பிக்கை கொண்ட ஆண்களும் மற்றும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும், மேலும், “ இது வெளிப் படையானதொரு பெரும் பொய்” என்று கூறியிருக்க வேண்டும்.
[24:13] நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்தால் மட்டும் (நீங்கள் அவர்களை நம்பலாம்). அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவரத் தவறினால், அப்போது அவர்கள், கடவுள்-ஐப் பொறுத்தவரை, பொய்யர்கள் ஆவார்கள்.
[24:14] கடவுள்-ன் அருளும், மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவருடைய கருணையும் உங்கள் பால் இல்லாதிருந்தால், இச்சம்பவத்தின் காரணமாக மகத்தானதொரு தண்டனையால் துயருற்று இருப்பீர்கள்.
[24:15] உங்களுடைய சொந்த நாவுகளால் அதனை நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டீர்கள், மேலும் உங்களில் மற்றவர்கள் சான்றின்றி உங்கள் வாய்களால் அதனைத் திரும்பக் கூறினீர்கள். அதனை சாதாரணமானதாக நீங்கள் நினைத் தீர்கள், ஆயினும் கடவுள்-ஐப் பொறுத்தவரை, அது மிகப்பெரியதாக இருந்தது.
என்ன செய்வது
[24:16] அதனை நீங்கள் கேள்விப்பட்டபோது,“ நாங்கள் இதனைத் திரும்பக் கூறமாட்டோம். நீர் துதிப்பிற்குரியவர். இதுமிகப் பெரியதொரு பொய்யாகும்” என நீங்கள் கூறியிருக்க வேண்டும்.
[24:17] நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அதனை நீங்கள் மீண்டும் ஒரு போதும் செய்யக் கூடாதென கடவுள் உங்களை எச்சரிக் கின்றார்.
[24:18] கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களுக்காக விவரிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானமுடையவர்
[24:19] நம்பிக்கையாளர்களுக்கிடையில் ஒழுக்கக்கேடுகள் பரவுவதைக் காண விரும்பு பவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர். கடவுள் அறிந்திருக்கின்றார், அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
[24:20] கடவுள் தனது அருளையும் மற்றும் கருணை யையும் கொண்டு உங்கள் மேல் பொழி கின்றார். நம்பிக்கையாளர்கள் பால் கடவுள் மிக்க கனிவானவராகவும், மிக்க கருணை யாளராகவும் இருக்கின்றார்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சாத்தான் ஊக்குவிக்கின்றான்
[24:21] நம்பிக்கை கொண்டோரே, சாத்தானின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். சாத்தானின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற எவரொருவ னும், அவன் தீமையையும், ஒழுக்கக்கேட்டையுமே ஆதரிக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள்-ன் அருளும் மற்றும் அவருடைய கருணையும் உங்கள் மீது இல்லாது இருந்திருக்குமேயானால், உங்களில் எவருமே தூய்மையடைந்திருக்க மாட்டீர்கள். ஆனால் தான் நாடுகின்றோரைக் கடவுள் தூய்மைப் படுத்துகின்றார். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[24:22] உங்களில் வளமும் மற்றும் செல்வமும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உறவினர்கள், ஏழைகள் மற்றும் கடவுள்-ன் நிமித்தம் குடி பெயர்ந்தவர்களின் பால் தர்மவான்களாகத் திகழ வேண்டும். அவர்கள், கனிவுடனும், சகிப்புத் தன்மை யுடனும், அவர்களை நடத்திட வேண்டும்; கடவுள்-ன் மன்னிப்பை அடைய நீங்கள் விரும்பவில்லையா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
மிகப்பெரும் பாவம்
[24:23] நிச்சயமாக, திருமணமான பக்தியுடைய நம்பிக்கை கொண்ட பெண்களைப் பொய் யாகக் குற்றம் சாட்டுபவர்கள், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிந்தனைக்குள்ளாகி விட்டனர்; அவர்கள் படுபயங்கரமானதொரு தண்டனைக் குள்ளாகி விட்டனர்.
[24:24] அவர்களுடைய சொந்த நாவுகளும், கரங்களும், மற்றும் பாதங்களும், அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறுகின்ற அந்நாள் வரும்.
[24:25] அந்நாளில், அவர்களுடைய காரியங்களுக் காகக் கடவுள் அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பார், மேலும் கடவுள் தான் சத்தியம் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[24:26] கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கு, மற்றும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கு, மேலும் நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கு, மற்றும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கு. இரண்டாவதாக கூறப்பட்டவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர்களாக உள்ளனர்.அவர்கள் மன்னிப்பையும் மேலும் தாராளமானதொரு வெகுமதியையும் அடைந்து விட்டார்கள்.
தெய்வீக நன்னடத்தைக் கோட்பாடு
[24:27] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடையதைத் தவிர வேறு வீடுகளில், அவற்றில் வசிப்பவர் களின் அனுமதி பெறாமலும், மேலும் அவர்களை வாழ்த்தாமலும் நீங்கள் உள்ளே நுழையாதீர்கள். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இதுவே உங்களுக்கு சிறப்பான தாகும்.
[24:28] அவற்றில் எவர் ஒருவரையும் நீங்கள் காணா விட்டால், அனுமதியைப் பெறும்வரை நீங்கள் அவற்றினுள் நுழையாதீர்கள் “ திரும்பிச் செல்லுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். இதுவே உங்களுக்குத் தூய்மையானது. நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:29] எவரும் வசிக்காத வீடுகளில், உங்களுக் குரியது ஏதேனும் இருந்தால் அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றையும், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார்.
நம்பிக்கையாளர்களுக்குரிய ஆடைக் கட்டுப்பாடு*
[24:30] நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் (மேலும் பெண்களை உற்றுப்பார்க்கக் கூடாது) என்றும், மேலும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுவீராக. இதுவே அவர்க ளுக்குத் தூய்மையுடையதாகும். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

அடிகுறிப்பு:
*24:30-31 ஆகையால் , ஒழுக்கமாக ஆடையணிதல், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஒரு பண்பாகும். ஒரு பெண்ணின் ஆடைக்கான குறைந்தபட்சத் தேவையானது அவளுடைய ஆடையை நீளப்படுத்திக் கொள்வதும் (33:59) மேலும் அவளது மார்பை மறைத்துக்கொள்வதுமாகும். கொடுங்கோன்மையான அரேபியப் பாரம்பர்யங்கள், ஒரு பெண் உச்சி முதல் பாதம் வரை மூடப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு பொய்யான கருத்தைத் தந்துள்ளன; இத்தகையது குர்ஆனுடைய அல்லது இஸ்லாத்தினுடைய ஆடை அல்ல.
[24:31] மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்வதுடன், தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கூறுவீராக. அவசியமானவற்றைத் தவிர, தங்களுடைய உடல்களின் எந்தப் பகுதியையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் தங்க ளுடைய மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுடைய கணவர்கள், அவர்களுடைய தந்தையர், அவர்களுடைய கணவர்களின் தந்தையர், அவர்களுடைய மகன்கள், அவர்களுடைய கணவர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரர்கள், அவர்களுடைய சகோதரர் களின் மகன்கள், அவர்களுடைய சகோதரி களின் மகன்கள், மற்றப் பெண்கள், பாலியல் உந்துதல் அற்றுப்போன ஆண் ஊழியர்கள் அல்லது பணியாளர்கள், அல்லது பருவம் அடையாத குழந்தைகள் முன்னிலையில் தவிர இவ்விதியைத் தளர்த்த வேண்டாம். அவர்கள் நடக்கும் பொழுது தங்களுடைய உடல்களின் குறிப்பிட்ட விவரங்களைக் குலுக்கி வெளிப் படுத்துவதற்காகத் தங்கள் பாதங்களை அதிரச் செய்ய வேண்டாம். நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் வெற்றியடையும்* பொருட்டு, கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும்.

அடிகுறிப்பு:
*24:30-31 ஆகையால் , ஒழுக்கமாக ஆடையணிதல், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஒரு பண்பாகும். ஒரு பெண்ணின் ஆடைக்கான குறைந்தபட்சத் தேவையானது அவளுடைய ஆடையை நீளப்படுத்திக் கொள்வதும் (33:59) மேலும் அவளது மார்பை மறைத்துக்கொள்வதுமாகும். கொடுங்கோன்மையான அரேபியப் பாரம்பர்யங்கள், ஒரு பெண் உச்சி முதல் பாதம் வரை மூடப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு பொய்யான கருத்தைத் தந்துள்ளன; இத்தகையது குர்ஆனுடைய அல்லது இஸ்லாத்தினுடைய ஆடை அல்ல.
ஒழுக்கக் கேட்டை ஊக்கம் குன்றச் செய்ய திருமணத்தை ஊக்கப்படுத்துங்கள்
[24:32] உங்களில் திருமணமாகாத நபர்களைத் திருமணம் புரிந்து கொள்ள நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாக இருந்தால், உங்கள் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிலுள்ள நன்னெறியுடையவர்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கடவுள் தன் அருளிலிருந்து அவர்களைச் செல்வந்தர்களாக்குவார். கடவுள் தாராள மானவர், அறிந்திருப்பவர்.
[24:33] திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்கள், கடவுள் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கும்வரை ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.உங்கள் ஊழியர்களில் திருமணம் செய்து கொள்வதற்காக விடுதலையடைய விரும்புபவர்களுக்கு, அவர்கள் நேர்மையான வர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டால், அவர்களுடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு அவர் அளித்துள்ள கடவுள்-ன் பணத்திலிருந்து, அவர்களுக்குக் கொடுங்கள். உங்களுடைய பெண் களை, அவர்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், இவ்வுலகப் பொருட்களை தேடி அவர்களை விபச்சாரம் செய்வதற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம். எவரேனும் அவர்களை நிர்பந்தித்தால், பின்னர் கடவுள், அவர்கள் நிர்பந்திக்கப்படுவதைக் காண்பதால், மன்னிப்பவராகவும் கருணையா ளராகவும் இருக்கின்றார்.
[24:34] தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையும், மேலும் கடந்தகாலத் தலைமுறைகளிலிருந்து உதாரணங் களையும், மேலும் நன்னெறியுடையோருக்கு ஒரு ஞான உபதேசமாகவும் இதனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
கடவுள்
[24:35] கடவுள் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக உள்ளார். அவருடைய ஒளிக்கு உதாரணமாவது, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கப் பட்டுள்ள, ஒரு விளக்கின் பின்னாலுள்ளதொரு குழிகண்ணாடியைப் போன்றதாகும். அக் கண்ணாடிக் குடுவை முத்தைப் போல் பிரகாசமானதொரு நட்சத்திரத்தைப் போன்று ள்ளது. அதற்குரிய எரிபொருள், கிழக்கத்தியது மல்லாத, அன்றி மேற்கத்தியதுமல்லாத, அருள் பாலிக்கப்பட்டதொரு எண்ணெய் தரும் மரத்திலிருந்து வழங்கப்படுகின்றது. அதன் எண்ணெய் ஏறத்தாழ சுயமாகவே ஒளிர்கின்றது; அதனை மூட்டுவதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. ஒளிக்கு மேல் ஒளி. கடவுள் (வழிநடத்தப்படவேண்டும் என) நாடுகின்ற எவரையும் தன் ஒளியின் பால் வழிநடத்துகின்றார். நீதிபோதனைகளை மனிதர்களுக்குக் கடவுள் இவ்விதமாக எடுத்துரைக்கின்றார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.
[24:36] கடவுள்-ஆல் உயர்த்தப்பட்ட வீடுகளில் (கடவுளின் வழிகாட்டல் காணப்படுகின்றது), ஏனெனில் அங்கு அவருடைய பெயர் நினைவு கூரப்படுகின்றது. அங்கு இரவும், பகலும் அவர் துதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்-
மஸ்ஜிதிற்கு அடிக்கடி வருபவர்கள்
[24:37] தொழில் அல்லது வியாபாரத்தினால் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து திசை திருப்பப்படாத மக்கள்; அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பார்கள், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள், மேலும் மனங்களும் மற்றும் கண்களும் திகிலடைந்து விடும் அந்நாள் குறித்து அவர்கள் எச்சரிக் கையுடன் இருப்பார்கள்.
[24:38] அவர்களுடைய நல்ல காரியங்களுக்காகக் கடவுள் அவர்களுக்கு நிச்சயமாக வெகுமதி வழங்குவார், மேலும் தனது அருளைக் கொண்டு அவர்கள் மீது பொழிவார். தான் நாடுகின்றோருக்குக் கடவுள் அளவின்றி வழங்குகின்றார்.
ஒரு கானலைத் துரத்திச் செல்லுதல்
[24:39] நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர் களுடைய செயல்கள் பாலைவனத்திலுள்ளதோர் கானலைப் போன்றதாகும். தாகமுள்ள ஒரு மனிதன் அதனைத் தண்ணீரென்றே நினைக்கின்றான். ஆனால் அவன் அதனை அடையும் போது, அது ஒன்றுமேயில்லை என்பதை அவன் காண்கின்றான், மேலும் அதற்கு மாறாக, அவனுடைய செயல்களுக்கு அவனை முற்றிலும் பழிதீர்ப்பதற்காகக், கடவுள்-ஐ அங்கே அவன் காண்கின்றான். கடவுள் தான் மிகத்திறன் வாய்ந்த கணக்காளர்.
கடவுளிடமிருந்து வெறியேற்றம்: முற்றிலும் இருட்டு
[24:40] மற்றொரு உருவகமாவது அலைகளுக்கு மேல் அலைகளுடன், உக்கிரமானதோர் பெருங்கடல் மத்தியில், கூடவே அடர்ந்த பனியுடன் முழுமை யான இருளினுள் இருப்பதைப் போன்றதாகும். இருளுக்கு மேல் இருள்-அவன் தன் சொந்தக் கரங்களை நோக்கினாலும், அவன் அதனை அரிதாகவே காணஇயலும். எவருக்குக் கடவுள் ஒளியைப் பறித்து விடுகின்றாரோ, அவருக்கு ஒளி எதுவும் இருக்காது.
[24:41] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும், இன்னும் பறவைகள் அவை ஒரு வரிசையில் பறந்தவைகளாக கடவுள்-ஐத் துதிப்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ் வொன்றும் அதன் தொழுகையையும் மேலும் அதன் துதிப்பையும் அறிந்திருக்கின்றது. அவை செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:42] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது, மேலும் இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது.
[24:43] கடவுள் மேகங்களை ஓட்டுகின்றார், பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்க்கின்றார், பின்னர் அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்குகின்றார், பின்னர் அவற்றிலிருந்து மழை வெளிவருவதை நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அவர் விண்ணி லிருந்து ஏராளமான பனியைக் கீழே அனுப்பி தான் நாடுகின்ற எவரையும் மூடவும், அதே சமயம் தான் நாடுகின்ற எவரிடமிருந்தும் அதனை விலக்கவும் செய்கின்றார். அந்த பனியின் பிரகாசமானது கண்களைக் கிட்டத்தட்ட குருடாக்கி விடுகின்றது.
[24:44] கடவுள் இரவையும், பகலையும் கட்டுப்படுத்து கின்றார். கண்களுடையவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[24:45] மேலும் கடவுள் தண்ணீரிலிருந்தே ஒவ்வொரு உயிர்ப்பிராணியையும் படைத்தார். அவற்றில் சில தங்கள் வயிறுகளால் நடக்கின்றன, சில இருகால்களால் நடக்கின்றன, மேலும் சில நான்கால் நடக்கின்றன. தான் நாடுகின்ற எதையும் கடவுள் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[24:46] தெளிவுபடுத்தும் வெளிப்பாடுகளையே நாம் உமக்கு இறக்கி அனுப்பியுள்ளோம், பின்னர் விரும்புகின்ற எவரொருவரையும் நேரான தொரு பாதையில் கடவுள் வழிநடத்துகின்றார்.
கடவுள் தனது தூதர் மூலம் கட்டளைகளை அனுப்புகின்றார்
[24:47] அவர்கள், “ நாங்கள் கடவுள் மீதும் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்ப்படிகின்றோம்” என்று கூறுகின்றார்கள், ஆனால் பின்னர் அவர்களில் சிலர் அதற்குப் பிறகு, பின்னால் சறுக்கி விடுகின்றார்கள். இவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.
[24:48] அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கக் கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களில் சிலர் கலக்கமடைந்து விடுகின்றனர்.
[24:49] ஆயினும், தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், அவர்கள் தயக்கமின்றி அதனை ஏற்றுக் கொள்கின்றனர்!
[24:50] அவர்களுடைய இதயங்களில் ஒரு நோய் இருக்கின்றதா? அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களா? கடவுள்-ம் அவரு டைய தூதரும் தங்களை நியாயமில்லாமல் நடத்தக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின் றனரா?உண்மையில், அவர்கள் தான் அநியாயக்காரர்களாக உள்ளனர்.
கடவுளுக்கும் அவருடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்கள் தயக்கமின்றிக் கீழ்ப்படிகின்றனர்
[24:51] அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளிக்கப் படுவதற்காக கடவுள்-இடமும், அவருடைய தூதரிடமும், அழைக்கப்படும் போதெல்லாம், நம்பிக்கையாளர்களின் கூற்று, “ நாங்கள் செவியேற்றோம் மேலும் நாங்கள் கீழ்ப்படிகின் றோம்“ என்பதாகவே இருந்தது. இவர்கள் தான் வெற்றியாளர்கள்.
[24:52] கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் கடவுள்-இடம் பயபக்தி கொண்டு மேலும் அவரை கவனத்தில் கொள்பவர்கள், இவர்கள் தான் பெரும் வெற்றி பெற்றவர்கள்.
[24:53] புறப்படும்படி அவர்களுக்கு நீர் கட்டளை யிட்டால், நாங்கள் புறப்படுவோம், என்று கடவுள் மீது அவர்கள், பயபக்தியோடு சத்தியம் செய்கின்றார்கள். “சத்தியம் செய்யாதீர்கள். கீழ்ப்படிதல் ஒரு கடமையாகும். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.
[24:54] “கடவுள்-க்குக் கீழ்ப்படியுங்கள், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் மறுத்துவிட்டால், பின்னர் அவருடைய கடமைகளுக்கு அவர் பொறுப் பாவார், மேலும் உங்கள் கடமைகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந் தால், நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள் . தூதரின் ஒரே பணி (தூதுச்செய்தியை) ஒப்படைப்பதே.
பூமியின் மீது ராஜாக்களாகவும் ராணிகளாகவும் கடவுளின் வாக்குறுதி
[24:55] உங்களில் நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு, அவர் செய்தவாறே அவர்களையும் பூமியின் மீது ஆட்சியாளர்களாக அவர் ஆக்குவார் என்று கடவுள் வாக்களிக்கின்றார், மேலும் அவர்களுக்காக அவர் தேர்ந்தெடுத்து கொண்ட மார்க்கத்தை அவர் அவர்களுக்காக நிலைப்படுத்துவார், மேலும் பயம் இருந்த இடத்தில் அமைதியையும் மற்றும் பாதுகாப்பையும் அவர் மாற்றி அமைப்பார். இவை அனைத்தும் அவர்கள் என்னை மட்டும் வழிபட்டதற்காகவேயாகும்; அவர்கள் என்னுடன் இணைத் தெய்வங்கள் எதையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். இதன் பின்னரும் நம்ப மறுப்பவர்கள் உண்மை யில் தீயவர்களேயாவர்.
வெற்றியின் சூத்திரம்
[24:56] நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்துவரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[24:57] நம்ப மறுப்பவர்கள் ஒருக்காலும் அத்துடன் அப்படியே தப்பிச் சென்று விடுவார்கள் என்று நினைக்காதீர்.அவர்களுடைய கடைசித் தங்கு மிடம் நரகம் ஆகும்; என்ன ஒரு துன்பகரமான விதி.
நன்னடத்தைக் கோட்பாடு இரு தொழுகைகள் பெயர் குறிப்பிடப்படுகின்றன
[24:58] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய ஊழியர்களும் மேலும் பருவம் அடையாத குழந்தைகளும் (உங்களுடைய அறைகளில் நுழைவதற்கு முன்னர்) அவசியம் அனுமதி கேட்க வேண்டும். இது மூன்று சந்தர்ப்பங்களில் செய்யப்பட வேண்டும் - அதிகாலைத் தொழு கைக்கு முன்னர், பகலில் ஓய்விற்காக நீங்கள் உங்களுடைய ஆடைகளை மாற்றியிருக்கும் போது, மேலும் இரவுத் தொழுகைக்குப் பிறகு. இவை உங்களுக்கு மூன்று அந்தரங்க நேரங் களாகும். மற்றச் சமயங்களில், நீங்கள் ஒருவர் மற்றவருடன் கலந்திருப்பதில் உங்கள் மீதோ அவர்கள் மீதோ தவறு இல்லை. கடவுள் இவ்விதமாக இந்த வெளிப்பாடுகளை உங்களு க்கு தெளிவுபடுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[24:59] குழந்தைகள் பருவம் அடைந்து விட்டால், அவர்களுக்கு முன்னர் பருவம் அடைந்தவர்கள் (நுழையும் முன்) அனுமதி கேட்டதைப் போலவே அவர்களும் (நுழையும் முன்) அனுமதி கேட்க வேண்டும். கடவுள் இவ்விதமாக அவருடைய வெளிப்பாடுகளை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
நீங்கள் கண்ணியமாக ஆடையணிய வேண்டும்
[24:60] திருமணம் செய்து கொள்ளப்படுவதை எதிர் பார்க்காதிருக்கும் வயது முதிர்ந்த பெண்கள், தங்களுடைய உடல்களை மிகவும் அதிகமாக வெளிப்படுத்தாதவாறு, தங்களுடைய ஆடைக்கட்டுப்பாட்டைத் தளர்த்திக் கொள் வதன் மூலம் தவறெதுவும் செய்து விடவில்லை. கண்ணியத்தைப் பராமரித்துக் கொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். கடவுள் செவி யேற்பவர், அறிந்தவர்.
உங்களுடைய உணவு சட்டபூர்வமானது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்
[24:61] குருடர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், முடவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், அன்றி ஊனமுற்றவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார், உங்களுடைய வீடுகளில் உண்பதால் நீங்கள் குற்றம் பிடிக்கப்படமாட்டீர்கள் என்பதைப் போல, அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய வீடுகளில், அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தந்தையர்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரர்களின் வீடுகளில், அல்லது உங்கள் தாய்மார்களுடைய சகோதரிகளின் வீடுகளில், அல்லது அவற்றின் சாவிகளை நீங்கள் வைத்திருக்கின்ற உங்களுக்குச் சொந்தமான வீடுகளில், அல்லது உங்கள் நண்பர்களுடைய வீடுகளில். ஒன்றுசேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ உண்பதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்துவிடவில்லை. எந்த வீட்டில் நீங்கள் நுழையும் போதும் கடவுள் - இடமிருந்துள்ள அருள்பாலிக்கப்பட்ட மேலும் நல்ல, ஒரு வாழ்த்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்திக்கொள்ள வேண்டும். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, கடவுள் இவ்விதமாக இந்த வெளிப் பாடுகளை உங்களுக்கு விவரிக்கின்றார்.
[24:62] கடவுள் மீதும் அவருடைய தூதர்* மீதும் நம்பிக்கை கொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர், மேலும் அவர்கள் அவருடன் ஒரு சமூகக் கூட்டத்தில் இருக்கும் போது, அனுமதியின்றி அவரை விட்டுச் சென்றுவிட மாட்டார்கள். அனுமதி கேட்பவர் களே கடவுள் மீதும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். தங்களுடைய விவகாரங்களில் சிலவற்றைக் கவனிப்பதற் காக, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், நீர் விரும்பியவருக்கு நீர் அனுமதி வழங்கலாம், மேலும் அவர்களை மன்னிக்கும்படிக் கடவுள்-இடம் கேட்பீராக. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அடிகுறிப்பு:
*24:62 இவ்வசனம் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றது; “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505) “கலீஃபா” என்பதன் எழுத்தெண்மதிப்பையும் (725) , வசன எண்ணையும் (62), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 1292, ஒரு 19ன் பெருக்குத் தொகையாகும் (1292=19ஒ68) . பின் இணைப்பு 2 ஐ பார்க்கவும்.
[24:63] நீங்கள் ஒருவர் மற்றவருடைய வேண்டுகோள் களைக் கருதுவதைப் போல தூதருடைய வேண்டுகோள்களைக் கருதாதீர்கள். உங்களில் பலவீனமான சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தி நழுவிச் சென்று விடுபவர்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் - அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் ஒரு பேரழிவோ அல்லது கடுமையானதொரு தண்டனையோ அவர்களைத் தாக்கக்கூடும்.
[24:64] பரிபூரணமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், கடவுள்-க் குரியது. நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் முற்றிலும் அறிகின்றார். அவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர்களுக்கு அவர் தெரிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.