சூரா 23: நம்பிக்கையாளர்கள் (அல்-முஃமினூன்)

[23:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[23:1] நம்பிக்கையாளர்களே உண்மையில் வெற்றி யாளர்கள்;
[23:2] தங்களுடைய தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) போது பயபக்தியோடிருப்பவர்கள்.
[23:3] மேலும் அவர்கள் வீண்பேச்சைத் தவிர்த்துக் கொள்வார்கள்.
[23:4] மேலும் அவர்கள் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுப்பார்கள்.
[23:5] மேலும் அவர்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாப்பார்கள்.
[23:6] அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக ளுடன், அல்லது சட்டபூர்வமாக அவர்களுக் குரியவர்களுடன் மட்டும், பாலியல் உறவு கொள்வார்கள்; அவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களாக ஆக மாட்டார்கள்.
[23:7] இந்த எல்லைகளை மீறுபவர்களே வரம்பு மீறியவர்கள்.
[23:8] அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வைப்புப் பொருட்கள், அதேபோல் அவர்கள் செய்து கொள்ளும் ஏதேனும் உடன்படிக்கைகள் என வரும்போது, அவர்கள் நம்பகமானவர்களாக இருப்பார்கள்.
[23:9] மேலும் அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) ஒழுங்காகக் கடைப் பிடிப்பார்கள்.
[23:10] இத்தகையவர்கள் தான் வாரிசுகள்.
[23:11] அவர்கள் சுவனத்திற்கு வாரிசாவார்கள், அதில் அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.
துல்லியமான கருவியல்நூல்
[23:12] ஒரு குறிப்பிட்ட வகையான சேற்றில் இருந்து மனிதப்படைப்பை நாம் படைத்தோம்.
[23:13] அதன் பின்னர், நன்கு பாதுகாக்கப்பட்டதொரு கருவூலத்தில் வைக்கப்பட்ட, மிகச் சிறியதொரு துளியிலிருந்து அவனை நாம் மீண்டும் உருவாக்கினோம்.
[23:14] பின்னர் அத்துளியை தொங்குகின்ற (கரு) ஒன்றாக நாம் வளர்த்தோம், பின்னர் தொங்கு கின்ற (கருவை) ஒரு கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவாக) வளர்த் தோம், பின்னர் கடிக்கும் அளவிலான (பூரண வளர்ச்சியடைந்த கருவை) எலும்புகளாக நாம் படைத்தோம், பின்னர் தசைகளைக் கொண்டு எலும்புகளைப் போர்த்தினோம். இவ்விதமாக வே புதியதொரு படைப்பை நாம் உருவாக்கு கின்றோம். கடவுள் மிகவும் போற்றுதலுக் குரியவர், மிகச் சிறந்த படைப்பாளர்.
[23:15] பின்னர், சிறிது காலம் கழித்து, நீங்கள் மரணிக்கின்றீர்கள்.
[23:16] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.
ஏழு பிரபஞ்சங்கள்
[23:17] உங்களுக்கு மேலே அடுக்குகளாக ஏழு பிரபஞ்சங்களை நாம் படைத்துள்ளோம், மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் நாம் ஒரு போதும் அறியாமல் இல்லை.
கடவுளிடமிருந்து எண்ணற்ற அருட்கொடைகள்
[23:18] மிகச் சரியான அளவில், விண்ணிலிருந்து நாம் தண்ணீரைக் கீழே அனுப்புகின்றோம், பின்னர் அதனை நாம் நிலத்தில் சேகரிக்கின்றோம். நிச்சயமாக, அதனை மறைந்தோடும்படி நாம் விட்டு விடஇயலும்.
[23:19] அதனைக் கொண்டு, நாம் உங்களுக்காக பேரீச்சம் பழத்தோட்டங்களையும், திராட்சை களையும், அனைத்துக் கனிவர்க்கங்களையும், மேலும் பல்வேறு உணவுகளையும் உருவாக்கு கின்றோம்.
[23:20] அத்துடன், சினாயைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரம் எண்ணையையும், அத்துடன் உண்ணுவோருக்கு விருப்பமிகு சுவையையும் தருகின்றது.
[23:21] மேலும் கால்நடைகள் உங்களுக்கொரு படிப்பினையை வழங்க வேண்டும். அவற்றின் வயிறுகளிலிருந்து நாம் உங்களை (பால்) அருந்தச் செய்கின்றோம், அவற்றிலிருந்து வேறு பலன்களையும் நீங்கள் பெறுகின்றீர்கள், மேலும் அவற்றில் சிலவற்றை நீங்கள் உணவிற்காகப் பயன்படுத்துகின்றீர்கள்.
[23:22] அவற்றின் மீதும், மேலும் கப்பல்கள் மீதும், நீங்கள் சவாரி செய்கின்றீர்கள்.
நோவா
[23:23] “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியுடையோராக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்.
[23:24] அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்பமறுத்த தலைவர்கள் கூறினர், “ இவர் உங்களுக் கிடையில் முக்கியத்துவம் அடைய விரும்பு கின்ற, உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. கடவுள் நாடியிருந்தால், அவர் வானவர்களைக் கீழே அனுப்பியிருக்க இயலும். நம்முடைய முன்னோர்களிடமிருந்து இது போன்ற எதையும் நாம் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை.
[23:25] “இவர் புத்தி சுவாதீனமில்லாதவராக ஆகி விட்ட ஒரு மனிதர் அவ்வளவுதான். சிறிது காலத்திற்கு அவரைச் சற்று அலட்சியப்படுத்தி விடுங்கள்.”
[23:26] அவர், “என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்துவிட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.
[23:27] பின்னர் நாம் அவருக்கு உள்ளுணர்வு அளித்தோம்: “நம்முடைய கவனமான கண்களின் கீழே, மேலும் நம்முடைய உள்ளுணர்விற்கு ஏற்ப படகைக்* கட்டுவீராக. நமது கட்டளை வரும்போது, மேலும் சுற்றுச்சூழல் கொதிப்படையும் போது, (உம்முடைய வீட்டுப் பிராணிகளில்) ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியையும், மேலும் அழியவேண்டும் என்று மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர, உம் குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக. வரம்பு மீறியவர்கள் சார்பாக என்னிடம் பேசாதீர்; அவர்கள் மூழ்கடிக் கப்படுவார்கள்.

அடிகுறிப்பு:
*23:27 கதை சொல்லுபவர்கள் நோவாவின் சரித்திரத்தை பரிகாசத்திற்குரியதாக ஆக்கி விட்டார்கள். நோவாவின் படகு, மரக்கட்டைகளால் செய்யப்பட்டு, சாதாரணமான கயிறுகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட தட்டையானதொரு மரக்கலமேயாகும் (54:13), அவ்வெள்ளம் சாக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே ஏற்பட்டது, மேலும் அந்தப்பிராணிகள் நோவாவால் வளர்க்கப்பட்ட வீட்டுப் பிராணிகளே.
[23:28] “உம்முடன் இருப்பவர்களோடு சேர்ந்து, படகின் மீது நீர் அமர்ந்து விட்டவுடன் ‘பாவிகளான மக்களிடமிருந்து நம்மைக் காக்கின்ற, கடவுள்-ஐப் புகழுங்கள்’ என்று நீர் கூற வேண்டும்.
[23:29] “மேலும், ‘ என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரை யிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்,’” என்று கூறுவீராக.
[23:30] இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.
[23:31] அதற்குப்பிறகு, மற்றொரு தலைமுறையினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.
[23:32] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவேண்டும். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, அவர்களுக்கிடையில் இருந்து ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம்.
[23:33] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த, மேலும் மறுவுலகம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைவர்கள் - இவ்வுலகில் நாம் அவர்களுக்கு தாராளமாக வழங்கியிருந்த போதிலும் - கூறினர், “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் உண்ணுபவற்றையே அவர் உண்ணுகின்றார், மேலும் நீங்கள் அருந்துவதைப் போலவே அருந்துகின்றார்.
[23:34] “ உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், பின்னர் நீங்கள் மெய்யாகவே நஷ்டப்பட்டவர்களாவீர்கள்.
[23:35] “ நீங்கள் மரணித்த பிறகு மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நீங்கள் மீண்டும் வெளிவருவீர்கள் என்று, அவர் உங்களுக்கு வாக்களிக்கின்றாரா?
[23:36] “சாத்தியமற்றது, உங்களுக்கு வாக்களிக் கப்படுவது உண்மையில் சாத்தியமற்றதே.
[23:37] “ இந்த வாழ்வை மட்டுமே நாம் வாழ்கின்றோம் -நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம் -மேலும் நாம் ஒரு போதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்பட மாட்டோம்.
[23:38] “இவர் பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற் றைக் கடவுள் மேல் சாட்டுகின்ற ஒரு மனிதர் தான். நாங்கள் ஒரு போதும் அவரை நம்ப மாட்டோம்.”
[23:39] அவர், “ என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்ப மறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக” என்று கூறினார்.
[23:40] அவர், “ விரைவில் அவர்கள் வருத்தப்பட்டவர் களாவார்கள்” என்று கூறினார்.
[23:41] நீதமாக, தண்டனை அவர்களைத் தாக்கியது, மேலும் இவ்வாறாக, அவர்களை நாம் முற்றிலும் அழிந்தவர்களாக மாற்றினோம். தீய மக்கள் அழிந்து போனார்கள்.
[23:42] அதன்தொடர்ச்சியாக, மற்றத் தலைமுறை யினரை அவர்களுக்குப் பின்னர் நாம் நிர்மாணித்தோம்.
[23:43] எந்தச் சமூகமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அதன் விதியை முற்படுத்தி விடவோ, அன்றி பிற்படுத்தி விடவோ முடியாது.
[23:44] பின்னர் நாம் தொடர்ச்சியாக நம் தூதர்களை அனுப்பினோம். ஒரு தூதர் தன் சமூகத்தாரிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் அவரை நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, ஒன்றன் பின் மற்றொன்றாக, அவர்களை நாம் அழித்தோம், மேலும் அவர்களை சரித்திரமாக்கினோம். நம்பமறுத்த மக்கள் அழிந்து போனார்கள்.
மோஸஸும் ஆரோனும்
[23:45] பின்னர் நமது வெளிப்பாடுகளுடனும் மேலும் ஆழ்ந்ததொரு சான்றுடனும் மோஸஸையும் மற்றும் அவருடைய சகோதரர் ஆரோனையும் நாம் அனுப்பினோம்.
[23:46] ஃபேரோவிடமும், அவனுடைய பிரதானிகளிடமும், ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர்களாக மாறினார்கள். அவர்கள் அடக்குமுறை செய்கின்ற மக்களாக இருந்தனர்.
[23:47] அவர்கள், “நமது அடிமைகளாக இருக்கின்ற சமூகத்தின் இரு மனிதர்களுக்காக, நாம் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று கூறினார்கள்.
[23:48] அவர்கள் அவ்விருவரையும் ஏற்க மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் அழிக்கப்பட்டனர்.
[23:49] அவர்கள் வழிகாட்டப்பட்டவர்களாகும் பொருட்டு, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம்.
[23:50] மேரியின் மகனையும் மற்றும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி னோம், மேலும் உணவு மற்றும் பானத்துடன் ஒரு குன்றின் மீது அவர்களுக்கு நாம் புகலிட மளித்தோம்.
ஒரு கடவுள்/ ஒரு மார்க்கம்
[23:51] தூதர்களே, நல்ல ஆகாரங்களிலிருந்து உண்ணுங்கள், மேலும் நன்னெறியான செயல் களைப் புரியுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன்.
[23:52] உங்கள் சமூகம் இவ்விதமானதே - ஒரே சமூகம் - மேலும் நானே உங்கள் இரட்சகராவேன்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.
[23:53] ஆனால் அவர்கள் தர்க்கித்துக் கொள்ளும் பிரிவுகளாகத் தங்களையே பிளவு படுத்திக் கொண்டனர்; ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
[23:54] ஆகையால், சிறிது காலத்திற்கு, அவர்களுடைய குழப்பத்திலேயே அவர்களைச் சற்று விட்டு விடுவீராக.
[23:55] செல்வமும் பிள்ளைகளும் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதால், அவர்கள் எண்ணிக்கொண்டனரா,
[23:56] அருட்கொடைகளைக் கொண்டு நாம் அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருக்கின்றோம் என்று? உண்மையில், அவர்களுக்கு எதுவும் தெரியாது.
[23:57] நிச்சயமாக, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியான உணர்வுடன் இருப்பவர்கள்,
[23:58] மேலும் தங்களுடைய இரட்சகரின் வெளிப் பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள்,
[23:59] மேலும் தங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் ஒரு போதும் அமைத்துக் கொள்ளாதவர்கள்,
[23:60] தங்களுடைய தர்மங்களை அவர்கள் கொடுத்தவர்களாக, அவர்களுடைய இதயங்கள் முற்றிலும் பயபக்தியோடிருக்கின்றன. ஏனெனில் தங்களுடைய இரட்சகருக்கு முன்னால் வரவழைக் கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து இருக்கின்றனர்,
[23:61] அவர்கள் நன்னெறியான செயல்கள் புரிய ஆவலுடன் உள்ளனர்; அவற்றைச் செய்ய அவர்கள் போட்டியிடுகின்றனர்.
நம்பமறுப்பவர்கள் நன்றிகெட்டவர்கள்
[23:62] எந்த ஒரு ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு நாம் ஒருபோதும் சுமத்துவதில்லை, மேலும் உண்மையே உரைக்கும் ஒரு பதிவேட்டை நாம் வைத்திருக்கின்றோம். எவர் ஒருவரும் அநீதத்தை அனுபவிக்க மாட்டார்.
[23:63] அவர்களுடைய மனங்கள் இதுகுறித்து அறியாத காரணத்தினால், இதற்கு ஒவ்வாத காரியங்களை அவர்கள் செய்கின்றனர்; அவர்களுடைய காரியங்கள் தீயவையாக உள்ளன.
[23:64] பின்னர், அவர்களுடைய தலைவர்களை நாம் தண்டனையைக் கொண்டு பழிவாங்கும் போது, அவர்கள் புகார் கூறுகின்றனர்.
[23:65] இப்போது புகார் கூறாதீர்கள்; நம்மிடமிருந்து உதவி அனைத்தையும் நீங்கள் விட்டு விட்டீர் கள்.
[23:66] என்னுடைய சான்றுகள் உங்களிடம் காட்டப் பட்டன, ஆனால் நீங்கள் உங்கள் குதிகால் களின் மீது திரும்பிச் சென்று விட்டீர்கள்.
[23:67] அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருந்தீர்கள், மேலும் நீங்கள் அகந்தையுடன் அவற்றை அலட்சியம் செய்தீர்கள்.
[23:68] அவர்கள் ஏன் இந்த வேதத்தைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை? அவர்களுடைய முன்னோர் களால் ஒரு போதும் அடையப்பெறாத ஒன்றை அவர்கள் பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?
[23:69] அவர்கள் தங்களுடைய தூதரை அடையாளம் கண்டு கொள்ளத்தவறி விட்டனரா? இதனால் தான் அவர்கள் அவரை அலட்சியம் செய்கின் றனரா?
[23:70] அவர் புத்திசுவாதீனமில்லாதவர் என்று அவர்கள் தீர்மானித்து விட்டனரா? உண்மையில், அவர்களிடம் சத்தியத்தை அவர் கொண்டு வந்திருக்கின்றார், ஆனால் அவர்களில் அதிக மானோர் சத்தியத்தை வெறுக்கின்றனர்.
[23:71] உண்மையில், சத்தியம் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்திருந்தால், வானங்கள் மற்றும் பூமியில் முற்றிலும் குழப்பமே இருந்திருக்கும்; அவற்றில் உள்ள ஒவ்வொன்றும் சீர்குலைந்து போயிருக்கும். அவர்களுக்குரிய சான்றை நாம் அவர் களுக்குக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் தங்களுக்குரிய சான்றை அலட்சியம் செய் கின்றனர்.
[23:72] அவர்களிடம் நீர் ஒரு கூலி கேட்கின்றீரா? உம் இரட்சகரின் கூலி மிகவும் மேலானதாகும். அவர்தான் வழங்குவோரில் மிகச்சிறந்தவர்.
[23:73] மிகவும் உறுதியாக, ஒரு நேரான பாதைக்கு அவர்களை நீர் அழைக்கின்றீர்.
[23:74] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், சரியான பாதையிலிருந்து நிச்சயம் விலகிச் சென்று விடுவார்கள்.
[23:75] நாம் கருணையைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்து, மேலும் அவர்களுடைய பிரச்சனை களை நிவர்த்தித்த போதிலும், அவர்கள் வரம்பு மீறல்களில் ஆழமாக மூழ்கிவிட்டனர், மேலும் பெருந்தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.
[23:76] தண்டனையைக் கொண்டு நாம் அவர்களை துன்புறுத்திய போதிலும், இறைஞ்சிப் பிரார்த்தித்தவர்களாக தங்கள் இரட்சகரிடம் அவர்கள் ஒரு போதும் திரும்பவில்லை.
[23:77] அதன்பிறகு, அவர்கள் உள்ளாகியிருந்த கடும் தண்டனையைக் கொண்டு அவர்களை நாம் பழிவாங்கிய போது, அவர்கள் அதிர்ந்து விட்டனர்.
[23:78] அவர்தான் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப்புலனையும், மேலும் மூளைகளையும் வழங்கியவர். அரிதாகவே நீங்கள் நன்றியோடு இருக்கின்றீர்கள்.
[23:79] அவர் தான் பூமியின் மீது உங்களை நிலை நிறுத்தியவர், மேலும் அவர் முன்னால் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்கள்.
[23:80] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துபவர், மேலும் அவர்தான் இரவை யும் பகலையும் மாற்றியமைப்பவர். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[23:81] அவர்களுடைய முன்னோர்கள் கூறியதையே அவர்களும் கூறினார்கள்.
[23:82] அவர்கள் கூறினார்கள், “நாம் மரணித்து, மேலும் தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுவோமா?
[23:83] “இத்தகைய வாக்குறுதிகள் கடந்த காலத்தில் நம்முடைய பெற்றோர்களுக்கும் கொடுக்கப் பட்டன. இவை கடந்த காலத்துக் கட்டுக் கதைகள் என்பதை விட அதிகம் எதுவு மில்லை.”
நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலானோர் நரகத்திற்கென விதிக்கப்பட்டுள்ளனர்*
[23:84] “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் மேலும் அதிலுள்ள ஒவ்வொருவரும் எவருக்குரியவர் கள்?” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*23:84-89 கடவுளின் தன்மைகளை, உதாரணமாகக் கடவுள் ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துகின்றார் (8:17) , என்பன போன்ற உண்மைகளை அடையாளம் கண்டு கொண்டால் மட்டுமே கடவுள் மீது நம்பிக்கை என்பது செல்லுபடியாகும். கடவுள் - ஐப் பற்றி அறியாத நம்பிக்கை கொண்டவர்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களே அல்ல. நம்பிக்கை கெண்டவர்களில் அதிகமானோர், வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் மகான்கள் முதலான சக்தியற்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதன் மூலம், தங்களுடைய நம்பிக்கையைப் பயனற்றதாக ஆக்கி விடுகின்றனர் (6:106).
[23:85] அவர்கள், “ கடவுள் -க்கு என்று கூறுவார்கள்”. “பின்னர் ஏன் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை?” என்று கூறுவீராக.
[23:86] “ஏழுபிரபஞ்சங்களின் இரட்சகர்; மகத்தான சாம்ராஜ்யத்தின் இரட்சகர் யார்?” என்று கூறுவீராக.
[23:87] அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் நீங்கள் நன்னெறியாளர்களாக மாறவில்லை?” என்று கூறுவீராக.
[23:88] “நீங்கள் அறிவீர்களாயின், எவருடைய கரங்களில் அனைத்துப் பொருட்களின் மீதான அனைத்து ஆட்சியதிகாரமும், மேலும் அவர் தான் உதவி வழங்கக்கூடிய ஒரே ஒருவராகவும், ஆனால் எந்த உதவியும் தேவையற்றவராகவும் இருப்பவர் யார்?” என்று கூறுவீராக.
[23:89] அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள் “நீங்கள் எங்கே தவறாகச் சென்று வீட்டீர் கள்?”என்று கூறுவீராக.
[23:90] நாம் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொடுத் துள்ளோம், அதே சமயம் அவர்களோ பொய்யர் களாக இருக்கின்றனர்.
[23:91] கடவுள் ஒருபோதும் ஒரு மகனைப் பெற் றெடுக்கவில்லை அன்றி அவரைத் தவிர வேறு தெய்வம் எதுவும் எப்பொழுதும் இருந்ததில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஒவ்வொரு தெய்வமும் தன் படைப்புகளோடு சுதந்திரத்தைப் பிரகடனம் செய்திருக்கும், மேலும் அவர்கள் ஒருவர் மற்றவருடன் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டிருப் பார்கள். கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர் களுடைய கூற்றுக்களுக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவர்.
[23:92] எல்லா இரகசியங்களையும் மற்றும் பிரகடனங் களையும் அறிந்தவர்; அவர் உயர்வானவர், ஒரு பங்குதாரரைக் கொண்டிருப்பதை விட்டும் மிகவும் மேலானவர்.
[23:93] கூறுவீராக, “என் இரட்சகரே, அவர்கள் உள்ளாகியிருப்பதை (அந்த தண்டனையை) நீர் எனக்குக் காட்டினாலும்,
[23:94] “என் இரட்சகரே, வரம்பு மீறுகின்ற மக்களில் ஒருவராக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்”.
[23:95] நாம் அவர்களுக்காகத் தயார் செய்து வைத் திருக்கும் (அந்த தண்டனையை) உமக்குக் காட்டுவதென்பது நாம் எளிதில் செய்யக்கூடிய ஒன்றேயாகும்.
[23:96] ஆகையால், நன்மையைக் கொண்டு அவர் களுடைய தீயகாரியங்களை எதிர்கொள்வீராக; அவர்களுடைய கூற்றுக்களைப் பற்றி நாம் முற்றிலும் அறிவோம்.
சாத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமெனில்
[23:97] கூறுவீராக, “என் இரட்சகரே, சாத்தான்களின் கிசுகிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.
[23:98] “மேலும் என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.”
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்வரை மாண்டவர்கள் மீண்டு வர மாட்டார்கள்
[23:99] அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் பொழுது, அவன் கூறுகின்றான், “ என் இரட்சகரே, என்னைத் திருப்பி அனுப்புவீராக.
[23:100] “அப்போது நான் விட்டு வந்த ஒவ்வொன்றிலும் நன்னெறியான காரியங்களை நான் செய்வேன்” உண்மை அல்ல. இது அவன் கூறும் பொய்க்கூற்றாகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் வரை இவ்வுலகிலிருந்து அவனது ஆன்மாவை ஒரு தடை பிரித்து வைக்கும்.
[23:101] கொம்பு ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் எந்த உறவும் இருக்காது, அன்றி அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படவும் மாட்டார்கள்.
[23:102] எடைகள் கனமாக உள்ளவர்களைப் பொறுத்த வரை, அவர்கள்தான் வெற்றியாளர்களாக இருப் பார்கள்.
[23:103] எவர்களுடைய எடைகள் இலேசாக உள்ளதோ அவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களைத் தொலைத்தவர்கள்; என்றென்றும் அவர்கள் நரகில் தங்கி இருப்பார்கள்.
[23:104] நெருப்பு அவர்களுடைய முகங்களைச் சூழ்ந்து கொள்ளும், மேலும் அங்கே அவர்கள் துன்பகரமாக நிலைத்திருப்பார்கள்.
[23:105] என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துக் கொண் டேயிருந்தீர்கள் அல்லவா?
[23:106] அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, எங்களு டைய பொல்லாத்தனம் எங்களை நசுக்கி விட்டது, மேலும் நாங்கள் வழிதவறிச் சென்ற மக்களாகவே இருந்தோம்.
[23:107] “எங்கள் இரட்சகரே, இதிலிருந்து எங்களை வெளியே எடுத்துவிடுவீராக; (எங்கள் பழைய நடத்தைகளுக்கு) நாங்கள் திரும்பினால், பின்னர் நாங்கள் மெய்யாகவே தீயவர்களாவோம்.”
[23:108] அவர், “இழிவு படுத்தப்பட்டவர்களாக, அங்கேயே தங்கியிருங்கள், மேலும் என்னுடன் பேசாதீர்கள் என்று கூறுவார்.
அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கேலி செய்தனர்
[23:109] “என்னுடைய அடியார்களில் ஒரு கூட்டத்தினர், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களை கருணையால் பொழிந்திடுவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்’ என்று கூறுபவர்களாக இருந்தனர்.
[23:110] “ஆனால் என்னையே நீங்கள் மறக்கும் அளவிற்கு, அவர்களை நீங்கள் பரிகாசமும், கேலியும் செய்தீர் கள். அவர்களை நோக்கி நகைப்பவர்களாக நீங்கள் இருந்தீர்கள்.
[23:111] “அவர்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பலனாக, அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியதன் மூலம்,இன்றைய தினம் நான் அவர்களுக்கு வெகுமதியளித்து விட்டேன்.”
[23:112] அவர், “பூமியின் மீது எவ்வளவு காலம் நீங்கள் நிலைத்திருந்தீர்கள்? எத்தனை வருடங்கள்?” என்று கூறினார்.
[23:113] அவர்கள், “ நாங்கள் ஒரு நாளோ அல்லது ஒரு நாளின் ஒரு பகுதியோ நிலைத்திருந்தோம். கணக்கெடுத்தவர்களைக் கேட்பீராக” என்று கூறினார்கள்.
[23:114] “அவர் நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் உண்மையில், ஒரு குறுகிய காலஅளவு மட்டுமே நீங்கள் தங்கியிருந்தீர்கள் என்று கூறினார்.
[23:115] “நாம் உங்களை வீணிற்காகப் படைத்தோம்: நம்மிடம், நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள் என்று எண்ணி விட்டீர்களா?”
[23:116] கடவுள் மிகவும் உயர்ந்தவர், உண்மையான அரசர். அவருடன் வேறு தெய்வம் எதுவு மில்லை; மிகவும் கண்ணியத்திற்குரிய இரட் சகர், அனைத்து அதிகாரங்களையும் வைத் திருப்பவர்.
[23:117] எவ்விதமான சான்றுமின்றி, எவனொருவன் கடவுள்-உடன் வேறு தெய்வத்தை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றானோ, அவனுடைய கணக்கெடுப்பு அவனுடைய இரட்சகரிடமே உள்ளது. நம்பமறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்.
[23:118] “என் இரட்சகரே, மன்னிப்பையும், கருணை யையும் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.