சூரா 22: புனித யாத்திரை (அல்-ஹஜ்)

[22:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[22:1] மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்க வேண்டும், ஏனெனில், அந்த நேரத்தின் அதிர்வானது படுபயங்கரமான ஒன்றாகும்.
[22:2] அதனை நீங்கள் காணும் நாளில், பாலூட்டிக்கொண்டிருக்கும் ஒரு தாய் தன் குழந்தையைக் கைவிட்டு விடுவாள், மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கருவைச் சிதைத்துக் கொள்வாள். மக்களை அவர்கள் போதையில் இல்லாதிருந்த போதிலும், அவர்கள் போதையிலிருப்பவர்களைப் போல் தள்ளாடிய வர்களாக நீர் காண்பீர். இதன் காரணமாவது, கடவுள்-ன் தண்டனை மிகவும் அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.
[22:3] மனிதர்களில், அறிவின்றிக் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் கலகக்காரனான ஒவ்வொரு சாத்தா னையும் பின்பற்றுகின்றனர்.
[22:4] எவர் ஒருவர் அவனுடன் தன்னைக் கூட்டாளியாக்கிக் கொள்கின்றாரோ, அவரை அவன் தவறாக வழி நடத்துவதுடன் நரகின் மீளாத்துயரின் பால் அவரை வழிநடத்தி விடுவான் என்றும் விதிக்கப் பட்டுள்ளது.
நாம் எங்கிருந்து வந்தோம்?
[22:5] மனிதர்களே, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல் பற்றி நீங்கள் ஏதேனும் ஐயம் கொண்டிருப்பின், (நினைவில் கொள்ளுங்கள்) நாம் உங்களைத் தூசியிலிருந்தும், அதன் பின்னர் தொங்கு கின்ற ஒரு (கருவாக) மாறும், மிகச்சிறியதொரு துளியிலிருந்தும் படைத்தோம், பின்னர் அது உயிரளிக்கப்பட்ட ஒரு சிசுவாக ஆகிவிடுகின்றது, அல்லது உயிரற்றதெனக் கருதப்படு கின்றது. இவ்விதமாக நாம் விஷயங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு* நாம் நாடியவற்றைக் கருவறைகளில் நாம் தங்கச் செய்கின்றோம். உங்களைக் குழந்தைகளாக நாம் வெளிக்கொண்டு வருகின்றோம், பின்னர் நீங்கள் முதிர்ச்சியை அடைகின்றீர்கள். உங்களில் சிலர் இளவயதில் இறந்து விடும் அதே சமயம், மற்றவர்கள், குறிப்பிட்ட ஓர் எல்லைக்கு அப்பால், எந்த அறிவையும் அதிகமாக அடைந்து கொள்ள முடியாது என்பதைக் கண்டுகொள்வதற் காகவே, மிக மோசமான வயது வரை உயிர் வாழ்கின்றீர்கள். இன்னும், நீங்கள் இறந்து விட்ட ஒரு நிலத்தைப் பார்க்கின்றீர்கள், பின்னர் அதில் நாம் தண்ணீரைப் பொழிந்தவுடன், அதில் உயிர் தளிர்க்கின்றது, மேலும் எல்லா வகை அழகிய தாவரங்களையும் முளைப்பிக்கின்றது.

அடிகுறிப்பு:
*22:5 குர்ஆனுடைய கணித அற்புதம் 19என்ற எண்ணின் அடிப்படையிலானது. இப்போது வெளிப்பட்டுள்ளபடி இந்த எண்ணானது, கடவுளுடைய படைப்புகள் மீது அவருடைய கையொப்பமாகத் திகழ்கின்றது. இவ்விதமாக, நீங்களும் நானும் நமது உடல்களில் 209 எலும்புகளைக் கொண்டிருக்கின்றோம் (209 = 19ஒ11). ஒரு கருவின் முழுகர்ப்ப கால அளவானது, 266 நாட்களாகும் (19ஒ14) (லாங்மன்ஸ் மெடிகல் எம்ப்ரையாலஜி கூ.று. சாட்லர், பக்கம் 88,1985).
[22:6] இது, கடவுள் தான் சத்தியம் என்பதையும், மேலும் இறந்தவற்றை அவர் உயிர்ப்பிக்கின்றார் என்பதையும், மேலும் அவர் சர்வ சக்தியுடையவர் என்பதையும் நிரூபிக்கின்றது.
[22:7] மேலும் அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது, அதைப்பற்றி சந்தேகமேயில்லை, மேலும் மண்ணறைகளில் உள்ளோரைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார்.
ஒரு சாதாரண நிகழ்வு
[22:8] மனிதர்களில் அறிவின்றியும், மேலும் வழிகாட்டுதல் இன்றியும் மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமின்றியும் கடவுள்-ஐக் குறித்து தர்க்கம் செய்பவனும் இருக்கின்றான்.
[22:9] ஆணவத்துடன் அவன் மக்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பப் பாடுபடு கின்றான். இதனால் அவன் இவ்வுலகில் இழிவிற்கு உள்ளாகின்றான் மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எரிகின்ற வேதனையில் அவனை நாம் தண்டிப்போம்.
[22:10] இதுதான் உன் கரங்கள் உனக்காக முற்படுத்தி அனுப்பியது. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.
நல்ல காலத்தில் நண்பர்கள்
[22:11] நிபந்தனையுடன் கடவுள்-ஐ வழிபடுபவனும் மனிதர்களில் இருக்கின்றான். விஷயங்கள் அவன் நினைத்தபடி நடந்தால், அவன் திருப்தி அடைகின்றான். ஆனால் அவனுக்கு ஏதேனும் கஷ்டம் நேரிட்டால், அவன் முகம் திருப்பிச் சென்று விடுகின்றான். இதனால், அவன் இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம், இரண்டையும் இழந்து விடுகின்றான். மெய்யான நஷ்டம் என்பது இத்தகையதுதான்.
[22:12] அவனுக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-உடன் அவன் இணையாக வழிபடுகின்றான்; மெய்யான வழிதவறுதல் என்பது இத்தகையது தான்.
[22:13] அவனுக்குப் பயன்தருவதை விட அவனுக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவற்றை அவன் இணையாக வழிபடுகின்றான். என்ன ஒரு துன்பகரமான எஜமானன்! என்ன ஒரு துன்பகரமான தோழன்!
[22:14] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக்கின்றார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.
மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும்
[22:15] எவர் ஒருவர் இந்த வாழ்விலும் மறுவுலகிலும் தனக்குக் கடவுள் ஆதரவளிக்க முடியாதென எண்ணுகின்றாரோ, அவர் வானத்தில் (உள்ள தன் படைப்பாளரை) நோக்கி முற்றிலும் திரும்பிக் கொள்ளட்டும், மேலும் (வேறு எவர் ஒருவரையும் அவர் சார்ந்திருப்பதை) துண்டித் துக் கொள்ளட்டும். இத்திட்டம் அவரை வருத் திக் கொண்டிருக்கின்ற எந்த ஒன்றையும், நீக்கிவிடுவதை அப்போது அவர் காண்பார்.
[22:16] நாம் இவ்விதமாக இதிலே மிகத்தெளிவான வெளிப்பாடுகளையே வெளிப்படுத்தியுள் ளோம், பின்னர் தான் நாடுகின்றவர்களைக் கடவுள் வழிநடத்துகின்றார்.
கடவுள்: ஒரே நீதிபதி
[22:17] நம்பிக்கைகொண்டோர், யூதர்களாக இருப் பவர்கள், மதம்மாறியவர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிமதத்தவர்கள், மற்றும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், அவர்களுக்கிடையில் கடவுள் தான் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்க இருப்பவர். கடவுள் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றார்.
[22:18] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் சூரியனும், சந்திரனும், நட்சத் திரங்களும், மலைகளும், மரங்களும், விலங்கு களும், மற்றும் பெரும்பாலான மனிதர்களும் கடவுள்-க்குச் சிரம்பணிகின்றனர் என்பதை நீங்கள் உணரவில்லையா? மக்களில் ஏராள மான மற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள் ளாகிவிட்டார்கள். எவனொருவனைக் கடவுள் இழிவுபடுத்துகின்றாரோ, அவனை எவரும் கண்ணியப்படுத்தமாட்டார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே உள்ளது.
நரகம் எவ்வளவு பயங்கரமானது!*
[22:19] இதோ இரு கூட்டத்தினர் தங்கள் இரட்சகரைக் குறித்து நீண்ட சச்சரவு செய்து கொண்டிருக் கின்றனர். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்களுக்காகத் தைக்கப்பட்ட நெருப்பினா லான ஆடைகளை அவர்கள் கொண்டிருப் பார்கள். நரகதிரவம் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.

அடிகுறிப்பு:
*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு: இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என்று புகார் கூறவே செய்வார்கள். அடையாளமான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சுவனமும், நரகமும் மாறாமல் ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
[22:20] அது அவர்களுடைய உட்புறங்களும், அத்துடன் அவர்களுடைய தோல்களும் உருகிவிட காரணமாகி விடும்.

அடிகுறிப்பு:
*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு: இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என்று புகார் கூறவே செய்வார்கள். அடையாளமான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சுவனமும், நரகமும் மாறாமல் ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
[22:21] இரும்புக் கொப்பரைகளில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.

அடிகுறிப்பு:
*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு: இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என்று புகார் கூறவே செய்வார்கள். அடையாளமான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சுவனமும், நரகமும் மாறாமல் ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
[22:22] இத்தகைய துன்பத்திலிருந்து அவர்கள் வெளி யேற முயலும் போதெல்லாம், வலுக்கட்டாய மாக அவர்கள் உள்ளே திருப்பப்படுவார்கள்: “எரிகின்ற வேதனையைச் சுவையுங்கள்”.

அடிகுறிப்பு:
*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு: இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என்று புகார் கூறவே செய்வார்கள். அடையாளமான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சுவனமும், நரகமும் மாறாமல் ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
சுவனத்தின் பேரானந்தம்
[22:23] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிப்பார். தங்கத்திலும் முத்துக்களிலுமான காப்புகள் கொண்டு அங்கே அவர்கள் அலங்கரிக்கப் படுவார்கள், மேலும் அங்கே அவர்களுடைய ஆடைகள் பட்டாக இருக்கும்.
[22:24] நல்ல வார்த்தைகளின் பால் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்; மிகவும் புகழுக்குரியவரின் பாதையில் வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்.
[22:25] நிச்சயமாக, நம்ப மறுத்து மேலும் மற்றவர் களைக் கடவுள்-ன் பாதையிலிருந்தும், மக்கள் அனைவருக்காகவும், நாம் நியமித்த புனித மஸ்ஜிதை விட்டும் துரத்துபவர்கள்-அவர்கள் ஊர்வாசிகளோ அல்லது தரிசனத்திற்கு வருபவர்களோ-மேலும் அதனை மாசுபடுத்தவும், அதனை சீர்கெடுக்கவும் முயற்ச்சிக்கின்ற அவர்களை வலிநிறைந்த தண்டனை கொண்டு நாம் வேதனை செய்வோம்.
இஸ்லாத்தின் மற்ற அனைத்துக் கடமைகளைப் போலவே புனித யாத்திரையும், ஆப்ரஹாமின்* மூலமே விதிக்கப்பட்டது
[22:26] புனிதப்பள்ளியை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: “ என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணையாக வழிபட வேண்டாம், என்னுடைய புனிதப் பள்ளியை, அதனைத் தரிசிக்க வருவோருக்காகவும், அதன் அருகில் வசிப்போருக்காகவும், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காகவும் தூய்மைப்படுத்துவீராக.

அடிகுறிப்பு:
*22:26-27 (இஸ்லாம்) அடிபணிதலின் ஆரம்பத் தூதர் ஆப்ரஹாமாவார். 22:78 மற்றும் பின் இணைப்பு 9 ஐ பார்க்கவும்.
[22:27] “மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை* மேற் கொள்ளவேண்டுமெனப் பிரகடனம்செய்வீராக. அவர்கள் உம்மிடம் நடந்தவர்களாக அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்குவரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்.”

அடிகுறிப்பு:
*22:26-27 (இஸ்லாம்) அடிபணிதலின் ஆரம்பத் தூதர் ஆப்ரஹாமாவார். 22:78 மற்றும் பின் இணைப்பு 9 ஐ பார்க்கவும்.
[22:28] அவர்கள் வணிகப்பலன்களைத் தேடிக் கொள்ளலாம், மேலும் கால்நடைகளை அவர் களுக்கு வழங்கியமைக்காக குறிப்பிட்ட நாட்களின் போது கடவுள்-ன் பெயரை அவர் கள் நினைவு கூர வேண்டும். “அதிலிருந்து உண்ணுங்கள் மேலும் சோர்வடைந்தவர் களுக்கும் மற்றும் ஏழைகளுக்கும் உணவளி யுங்கள்.”
[22:29] அவர்கள் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்யவும், தங்களுடைய பிரமாணங்களை நிறைவேற்றவும், மேலும் பழமையான புனிதப் பள்ளியைத் தரிசிக்கவும் வேண்டும்.
[22:30] கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்கள் இரட்சகரி டம் நல்லதொரு வெகுமதிக்குத் தகுதியாகி விட்டனர். குறிப்பிட்டு உங்களுக்கு தடுக்கப் பட்டவற்றைத் தவிர, அனைத்துக் கால்நடைகளும் உங்களுடைய உணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு எனும் வெறுக்கதக்க செயலை தவிர்த்துக் கொள்ளவும், மேலும் பொய்சாட்சி கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
[22:31] நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பை முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே செய்து வர வேண்டும். கடவுள்- உடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளும் எவர்ஒருவரும், விண்ணிலிருந்து விழுந்து, பின்னர் கழுகுகளால் பிடுங்கிச் செல்லப்பட்ட, அல்லது ஆழமானதொரு கணவாய்க்குள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் போலாவார்.
[22:32] உண்மையில், கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை பயபக்தியோடு செய்வோர் தங்களுடைய இதயங்களிலுள்ள நன்னெறியைச் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.
புனிதப்பயணத்தின் போது பிராணிப்பலி *
[22:33] பழமையான புனிதப்பள்ளிக்கு நன்கொடை யளிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு காலம் வரை ஏராளமான பயன்களை (கால்நடைகள்) உங்களுக்கு வழங்குகின்றன.
[22:34] கால்நடைகளை அவர்களுக்கு வழங்கிய தற்காகக் கடவுள்-ன் பெயரை அவர்கள் நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு சமூகத் திற்கும் நாம் சடங்குகளை விதித்துள்ளோம். உங்கள் தெய்வம் அதே ஒரே தெய்வம்தான்; நீங்கள் அனைவரும் அவரிடம் அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவோருக்கு நற்செய்தி வழங்குவீராக.
[22:35] கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங் கிடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள் தான், துன்பமான காலத்திலும் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், அவர்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பார்கள், மேலும் அவர்களுக்கான நம் முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
[22:36] பிராணிப்பலியானது, உங்கள் சொந்த நலனிற்காகக் கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளில் உள்ளதாகும்.* அவை வரிசையில் நிற்கும்போது நீங்கள் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரை கூற வேண்டும். பலிக்காக அவை அர்ப்பணிக்கப்பட்டவுடன், நீங்கள் அதிலிருந்து உண்ணுவதுடன் ஏழைகளுக்கும் தேவையுடை யோருக்கும் உணவளிக்கவும் வேண்டும். நீங்கள் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும்பொருட்டு, இதற்காகத்தான்அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தினோம்,

அடிகுறிப்பு:
*22:36 புனித யாத்திரிகர்களின் பிராணிப் பலியானது, புனித யாத்திரைத் தலத்திலுள்ள வளங்களைப் பாதுகாக்கின்றது. புனித யாத்திரையின் போது மக்காவில் ஏறத்தாழ 2,000,000 யாத்திரிகர்கள் குவிகின்றனர் என்பதைக் கவனிக்கவும்.
[22:37] அவற்றின் இறைச்சியோ அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை. அவரை அடைவது உங்களுடைய நன்னெறி களே. உங்களுக்கு வழிகாட்டியதற்காக கடவுள்-ஐத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு, அவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார். தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.
நம்பிக்கையாளர்களைக் கடவுள் காக்கின்றார்
[22:38] நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக் கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.
யூத வழிபாட்டுத் தலங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மஸ்ஜிதுகள்
[22:39] அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்ட காரணத்தால், அடக்குமுறை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது, மேலும் கடவுள் நிச்சயமாக அவர் களுக்கு ஆதரவளிக்க ஆற்றலுடையவர்.
[22:40] “எங்கள் இரட்சகர் கடவுள் தான்” என்று கூறியதைத் தவிர, மற்ற காரணமெதற்காகவு மின்றி, அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர். மற்றவர்களுக்கெதிராக சில மக்களுக்குக் கடவுள் ஆதரவளித்திருக்கவில்லையென்றால் மடங்கள், தேவாலயங்கள், யூத ஆலயங்கள் மற்றும் கடவுள்-ன் பெயர் அடிக்கடி நினைவு கூரப்படும்- மஸ்ஜிதுகள் ஆகியவை-அழிக்கப்பட்டுப் போயிருக்கும். நிச்சயமாக, கடவுள்-க்கு ஆதரவளிப்பவர்களுக்கு அவர் ஆதரவளிக் கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.
[22:41] அவர்கள் யாரென்றால், பூமியின் ஆட்சி யாளர்களாக நாம் அவர்களை நியமித்தால், அவர்கள் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிலைநாட்டுவார்கள், மேலும் நன்னெறியை ஆதரிப்பார்கள் மேலும் தீமையைத் தடுப்பார்கள். கடவுள் தான் முடிவான அரசர் ஆவார்.
[22:42] அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு முன்னர் நோவா, ஆது, மற்றும் தமூது ஆகியோரின் சமூகத்தாரும் நம்ப மறுத்தனர்.
[22:43] அத்துடன் ஆப்ரஹாமின் சமூகத்தாரும், லோத்தின் சமூகத்தாரும்.
[22:44] மேலும் மித்யன் வாசிகளும். மோஸஸும் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்டார். அம்மக்கள் அனை வரையும் அவ்வாறே நான் தொடர்ந்து அழைத்துச் சென்றேன், பின்னர் நான் அவர் களைக் கணக்குத்தீர்க்க அழைத்தேன்; எனது பழி தீர்த்தல் எப்படி (நாசம் விளைவிப்பதாக) இருந்தது!
[22:45] பல சமூகத்தை அவர்களுடைய தீய செயல் களின் காரணமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் முற்றிலும் அழிவுகளுடனும், பாழடைந்த கிணறுகளுடனும், வெறுமையான மாளிகைகளுடனும் முடிந்து போயினர்.
[22:46] அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து, பின்னர் புரிந்து கொள்வதற்குத் தங்கள் மனங்களையும், கேட்பதற்குத் தங்கள் காதுகளையும் பயன் படுத்தவில்லையா? உண்மையில், உண்மையான குருட்டுத்தனம் என்பது கண்களின் குருட்டுத் தனம் அல்ல, ஆனால் நெஞ்சங்களில் உள்ள இதயங்களின் குருட்டுத்தனமே ஆகும்.
[22:47] தண்டனையைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடுகின்றனர், மேலும் கடவுள் ஒருபோதும் தனது முன்னறிவிப்பை நிறை வேற்றத் தவறமாட்டார். உம்முடைய இரட் சகரின் ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.
[22:48] கடந்த காலத்தில் பல சமூகம் தீமைகள் புரிந்தது, மேலும் நான் அவ்வாறே அவர்களைச் சிறிது காலம் தொடர்ந்து அழைத்துச்சென்றேன், பின்னர் நான் அவர்களைத் தண்டித்தேன். இறுதி விதி என் வசமே உள்ளது.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்
[22:49] “மனிதர்களே, ஓர் ஆழ்ந்த எச்சரிக்கை செய்பவராக* உங்களிடம் நான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*22:49 இக்கட்டளை, கடவுளின் உடன்படிக்கைத் தூதரை நோக்கிக் குறிப்பாகக் கூறப்படுகின்றது. இந்த உண்மையும், மேலும் அத்தூதருடைய குறிப்பான பெயரும் குர்ஆனில் கணித ரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மறுக்க முடியாத சான்றுகளுடன், விபரங்களை பின்இணைப்பு 2 மற்றும் 26ல் பார்க்கவும்.
[22:50] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோர், மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதோர் பிரதிபலனுக்கும் தகுதி பெற்று விட்டார்கள்.
[22:51] நம்முடைய வெளிப்பாடுகளுக்குச் சவால் விட முயற்சி செய்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் நரகிற்கு உள்ளாகின்றார்கள்.
வழிமுறை*
[22:52] உமக்கு முன்னர் எந்தத் தூதரையோ, அன்றி வேதம் வழங்கப்பட்டவரையோ, அவருடைய விருப்பங்களில் சாத்தானின் தலையீடு இல்லாமல் நாம் அனுப்பவில்லை. பின்னர் சாத்தான் செய்தவற்றை கடவுள் பயனற்றதாக ஆக்கி விடுகின்றார். கடவுள் அவருடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.*

அடிகுறிப்பு:
*22:52 இந்த உலகம் சம்பந்தமான சோதனை முழுவதும், தனது கண்ணோட்டத்தை எடுத்துக்காட்ட சாத்தான் அனுமதிக்கப்படுகின்றான் (நமது உடல்களில் சாத்தானுடைய ஒரு பிரதிநிதியுடன் நாம் பிறக்கின்றோம்). கடவுளின் சாட்சியம் மற்றும் சாத்தானின் சாட்சியம் ஆகியவற்றிற்கிடையில், மக்கள் ஒன்றைத் தேர்வு செய்ய இது இடம் அளிக்கின்றது. சாத்தானின் சாட்சியங்கள் மாற்றமேயில்லாமல் பொய்களின் அடிப்படையிலானது. சாத்தானின் பிரதிநிதிகள் ஒவ்வொரு தூதருக் கெதிராகவும் மிகவும் அபத்தமான பொய்களையும், நிந்தனைகளையும், மற்றும் குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர் என்னும் உண்மையை இந்த வழிமுறை விவரிக்கின்றது. (6:33-34, 8:30, 17:76-77, 27:70 ஐ பார்க்கவும்).
நயவஞ்சகர்கள் விலகிக் கொள்கின்றனர்
[22:53] இவ்விதமாக அவர் சாத்தானின் சூழ்ச்சியை, தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி யவர்களுக்கும், மேலும் இதயங்கள் கடின மாகிப் போனவர்களுக்கும் ஒரு சோதனையாக அமைத்து விடுகின்றார், தீயவர்கள் எதிரணி யில் தான் இருந்தாக வேண்டும்.
[22:54] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர் கள் உம் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், பின்னர் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்களுடைய இதயங்கள் முழுமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும். மிகவும் உறுதி யாக, நம்பிக்கையாளர்களைக் கடவுள் சரி யான பாதையில் வழிநடத்துகின்றார்.
[22:55] நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை, நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை, அல்லது பயங்கரமானதொரு நாளின் தண்டனை அவர் களிடம் வரும்வரை, அவர்கள் தொடர்ந்து தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கிய வண்ணமே இருப்பார்கள்.
சாத்தானின் தற்காலிக அரசு
[22:56] ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் கடவுள்-க்கே உரியதாகும், மேலும் அவர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார். நம்பிக் கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் பேரானந்தமயமான தோட்டங் களுக்குத் தகுதியாகி விட்டார்கள்.
[22:57] அதே சமயம் நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
கடவுளுக்காகப் பாடுபடுதல்
[22:58] கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து, பின்னர் கொல்லப்பட்டாலோ, அல்லது இறந்துவிட்டா லோ, அவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக நல்ல வாழ்வாதாரங்களைப் பொழிவார். வழங்குபவர் களில் நிச்சயமாகக் கடவுள் மிகச் சிறந்தவர்.
[22:59] மிகவும் உறுதியாக, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு நுழைவில் அவர் அவர்களை நுழையச் செய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமிக்கவர்.
அடக்குமுறை செய்யப்பட்டோருக்கு தெய்வீக உதவி
[22:60] தன் மீது நேரிட்ட ஓர் அநீதிக்காக, நீதமாகப் பழிதீர்த்த ஒருவர், பின்னர் அதன் காரணமாக அடக்குமுறை செய்யப்படுவாராயின், நிச்சய மாகக் கடவுள் அவருக்கு ஆதரவளிப்பார் என விதிக்கப்பட்டுள்ளது. கடவுள் பிழைபொறுப் பவர், மன்னிப்பவர்.
கடவுளின் சர்வ வல்லமை
[22:61] கடவுள் பகலிற்குள் இரவைச் சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலைச் சேர்க்கின்றார் என்பதும், மேலும் கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர், என்பதும் ஓர் உண்மையாகும்.
[22:62] கடவுள் தான் சத்தியம், அதே சமயம் அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள் ளுதல் ஒரு பொய்மையை நிலைப்படுத்து வதாக அமைகின்றது என்பதும், கடவுள் மிகவும் உயர்ந்தவர், அதிகாரமிக்கவர் என்பதும் ஓர் உண்மையாகும்.
[22:63] கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை கீழே அனுப்புவதையும், அது நிலத்தை பசுமையாக மாற்றுவதையும் நீங்கள் காணவில்லையா? கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.
[22:64] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், அவருக்குரியது. நிச்சயமாக, கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிக்க புகழுக்குரியவர்.
[22:65] பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணிசெய்வதற்காக, கடவுள் ஆக்கியிருக் கின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அவருடைய கட்டளைப்படி கப்பல்கள் பெருங்கடலில் ஓடுகின்றன. அவருடைய கட்டளைக்கு ஏற்பவே தவிர, விண்ணகப் பொருட்கள் பூமியின் மீது மோதிவிடாதவாறு அவர் தடுத்துக் கொண்டிருக்கின்றார், கடவுள் மனிதர்கள் மீது மிக்க கனிவுடையவராக இருக்கின்றார், மிக்க கருணையாளர்.
[22:66] அவர்தான் உங்களுக்கு வாழ்வளித்தவர், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் அவர் மீண்டும் உங்களை வாழ்விற்குக் கொண்டு வருகின்றார். நிச்சய மாக, மனிதன் நன்றியற்றவனாக இருக் கின்றான்.
[22:67] ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பை நாம் விதித்துள்ளோம். ஆகையால், அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் உறுதியாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.
[22:68] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது “ நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.
[22:69] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உங்களுடைய அனைத்துத் தர்க்கங்கள் குறித்தும், கடவுள் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார்.
[22:70] வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா? இவை அனைத்தும் ஒரு பதிவேட்டில் பதியப் பட்டுள்ளது. இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
[22:71] இருப்பினும், அவற்றிற்கு சக்தி எதையும், அவர் வழங்கியிருக்காத இணைத்தெய்வங்களை அவர்கள் கடவுள்-உடன் இணையாக வழிபடுகின்றனர், மேலும் அவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. வரம்பு மீறுபவர்களுக்கு உதவியாளர் எவருமிலர்.
வன்முறை & சண்டையில் ஈடுபடுவது: நம்பமறுப்பின் அடையாளங்கள்
[22:72] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களுக்குத் தெளிவாக ஓதிக்காட்டப்படும் போது, நம்ப மறுப்பவர்களின் முகங்களில் பொல்லாத் தனத்தை நீர் காண்பீர். நமது வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டுபவர்களை அவர்கள் கிட்டத்தட்டத் தாக்கி விடுகின்றனர். “மிகவும் மோசமான ஒன்றைப்பற்றி நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? நம்ப மறுப்பவர்களுக்குக் கடவுள்-ஆல் நரகம் வாக்களிக்கப்பட்டுள்ளது; என்ன ஒரு துன்பகரமான விதி” என்று கூறுவீராக.
அவர்களால் ஒரு ஈயைப் படைக்க முடியுமா?
[22:73] மனிதர்களே, நீங்கள் கவனத்துடன் சிந்திக்க வேண்டியதொரு நீதிபோதனை இதோ: கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் ஒரு போதும் ஓர் ஈயைப் படைக்கவும் இயலாது, அதைச் செய்வதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாலும் கூட. அது மட்டுமின்றி, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் திருடிவிட்டால், அவர்களால் அதனை மீட்டுக் கொள்ளவும் இயலாது; தொடர்பவரும் தொடரப்படுபவரும் பலவீனர் களே.
[22:74] அவர்கள் கடவுள்-ஐ, அவர் மதிக்கப்பட வேண்டியவாறு மதிக்கவில்லை. கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[22:75] வானவர்களில் இருந்தும், அவ்வண்ணமே மனிதர்களில் இருந்தும் தூதர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்கின்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[22:76] அவர்களுடைய கடந்த காலத்தையும் மேலும் அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். அனைத்து விஷயங் களின் இறுதிக்கட்டுப்பாடும் கடவுள்-க்குரி யதே ஆகும்.
[22:77] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் குனியவும், சிரம் பணியவும், உங்கள் இரட்சகரை வழிபடவும், மேலும் நன்னெறிகள் புரியவும் வேண்டும்.
ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் ஆரம்பத்தூதர்*
[22:78] நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவருக்காக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹா மின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “ அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார். இவ்விதமாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகப் பணியாற்றிட வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாக பணியாற்றிட வேண்டும். ஆகையால், நீங்கள் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வரவும், மேலும் கடவுள்-ஐப் பலமாகப் பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச்சிறந்த ஆதரவாளர்.

அடிகுறிப்பு:
*22:78 “கடவுளை மட்டும் வழிபடுங்கள்,” என்ற அதே ஒரே செய்தியைத்தான் தூதர்கள் அனைவரும் உபதேசித்தனர் என்ற போதிலும், அடிபணிதல் (இஸ்லாம்) மற்றும் அடிபணிந்தவர் (முஸ்லிம்) என்னும் வார்த்தைகளை உருவாக்கிய முதல் தூதர் ஆப்ரஹாம் ஆவார் (2:128). அடிபணிதலுக்கு ஆப்ரஹாமின் பங்களிப்பு என்ன? அடிபணிதலின் மார்க்கக் கடமைகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டது என 16:123 லிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம் (பின் இணைப்புகள் 9 & 26ஐ பார்க்கவும்).