சூரா 18: குகை (அல்-கஹ்ஃப்)

[18:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[18:1] இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு வெளிப் படுத்திய மேலும், குறைகளற்றதாக இதனை ஆக்கிய, கடவுள்-ஐப் புகழுங்கள்.
[18:2] அவரிடமிருந்து கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கை யாளர்களுக்கு, அவர்கள் தாராளமானதொரு வெகுமதியைச் சம்பாதித்து விட்டனர் என்ற நற்செய்தியை அறிவிப்பதற்காகவுமானதொரு, பரிபூரணமான (வேதம்) ஆகும்.
[18:3] அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப் பார்கள்.
[18:4] மேலும், “ஒரு மகனைக் கடவுள் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காக.
[18:5] இதைப் பற்றிய எந்த அறிவையும் அவர்களோ, அன்றி அவர்களுடைய பெற்றோர்களோ பெற்றிருக்கவில்லை.அவர்களுடைய வாய்களிலிருந்து எப்படிப்பட்டதோர் இறை நிந்தனை வெளிவருகின்றது! அவர்கள் கூறுவது மிகப்பெரியதொரு பொய்யாகும்.
[18:6] இந்த செய்திகளுக்கான அவர்களுடைய மறுமொழிக்காகவும் மேலும் இதில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பதற்காகவும், உம்மையே நீர் பழித்துக் கொள்ளக் கூடும்; நீர் துக்கமடையவும் கூடும்.
உலக முடிவு*
[18:7] அவர்களைச் சோதிப்பதற்காகவும், மேலும் இவ்விதமாக அவர்களில் நன்னெறியான காரியங்கள் செய்பவர்களைச் சிறப்பிப்பதற் காகவும், பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் அலங்காரமாக ஆக்கியுள்ளோம்.

அடிகுறிப்பு:
*18:7 18:8-9க்கான அடிக்குறிப்பை பார்க்கவும்.
[18:8] தவிர்த்து விட முடியாதவாறு, அதன் மீதுள்ள ஒவ்வொன்றையும் நாம் துடைத்தெடுத்துவிட்டு முற்றிலும் பொட்டலாக * அதனை விட்டு, விடுவோம்.

அடிகுறிப்பு:
*18:8-9 இப்போது வெளிப்பட்டுள்ளபடி, எஃபிஸஸில் உறங்கிய ஏழு பேரான இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் சரித்திரம், 18:9&21ல் கூறப்பட்டுள்ளபடி உலக முடிவுடன் நேரடித் தொடர்பு கொண்டதாக உள்ளது. உலக முடிவை வெளிப்படுத்துவதில் இந்த நம்பிக்கையாளர்களின் பங்கு பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளது.
குகையில் வசித்தவர்கள்
[18:9] குகைவாசிகள் மற்றும் அவர்களோடு தொடர்பு கொண்ட எண்கள் பற்றி, வேறு எதற்கு நாம் உமக்குக் கூறுகின்றோம் என்று நினைக் கின்றீர்? அவை நமது அற்புதமான அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.

அடிகுறிப்பு:
*18:8-9 இப்போது வெளிப்பட்டுள்ளபடி, எஃபிஸஸில் உறங்கிய ஏழு பேரான இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் சரித்திரம், 18:9&21ல் கூறப்பட்டுள்ளபடி உலக முடிவுடன் நேரடித் தொடர்பு கொண்டதாக உள்ளது. உலக முடிவை வெளிப்படுத்துவதில் இந்த நம்பிக்கையாளர்களின் பங்கு பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளது.
[18:10] அந்த இளைஞர்கள் குகையில் புகலிடம் எடுத்துக் கொண்டபோது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உமது கருணையைக் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு அருள்பாலிப்பீராக” என்று கூறினார்கள்.
[18:11] பின்னர், முன்பே தீர்மானிக்கப்பட்டதோர் எண்ணிக்கையிலான வருடங்களுக்கு குகை யில் அவர்களுடைய காதுகளில் நாம் முத்திரை யிட்டோம்.
[18:12] பின்னர் இரு தரப்பினரில், அங்கே அவர்கள் தங்கியிருந்த கால அளவைக் கணக்கிட முடிந்தவர்கள் யார் என்பதைக் காண்பதற்காக அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி னோம்.
[18:13] சத்தியம் நிறைந்ததாக, அவர்களுடைய சரித்திரத்தை உமக்கு நாம் எடுத்துரைக்கின் றோம். அவர்கள் தங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள், இன்னும் அவர்களுடைய வழிகாட்டலை நாம் அதிகரித்தோம்.
[18:14] “வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகர்தான் எங்களுடைய ஒரே இரட்சகர். அவருடன் வேறு தெய்வம் எதனையும் நாங்கள் ஒருபோதும் வழிபட மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் வெகுதூரம் வழிதவறியவர்களாவோம்”: என்று அவர்கள் எழுந்து நின்று பிரகடனம் செய்தபோது அவர்களுடைய இதயங்களை நாம் பலப்படுத்தினோம்.
[18:15] “இதோ, நமது சமூகத்தார் அவருடன் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய நிலைக்கு ஆதாரமாகச் சான்று எதையேனும் அவர்களால் மட்டும் வழங்க முடிந்தால்! பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுகின்ற ஒருவனைவிட மிகத் தீயவன் வேறு யார்?
எஃபிஸஸில் உறங்கிய ஏழுபேர்*
[18:16] “அவர்களையும், கடவுள்*-ஐ விடுத்து மற்றவர்களை அவர்கள் வழிபடுவதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புவதால், இக்குகையில் நாம் புகலிடம் எடுத்துக் கொள்வோம். உங்களுடைய இரட்சகர் தனது கருணையை உங்கள் மீது பொழியவும், மேலும் சரியான முடிவை நோக்கி உங்களைச் செலுத்தவும் செய்வாராக.”

அடிகுறிப்பு:
*18:16-20 பண்டைய நைசீனிற்கு 200 மைல்கள் தெற்கிலும்,மேலும் துருக்கியின் இன்றைய இஜ்மீருக்கு 30 மைல்கள் தெற்கிலும் எஃபிஸஸ் உள்ளது. குகைவாசிகள், இயேசுவின் போதனைகளைப் பின்பற்றவும் , மேலும் கடவுளை மட்டும் வழிபடவும் விரும்பிய இளம் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் இயேசுவிற்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, முக்கடவுள் கொள்கை அறிவிக்கப்பட்ட நைசீன் மாநாடுகளைத் தொடர்ந்து, சீர் குலைந்த கிறிஸ்துவத்தைப் பிரகடனம் செய்த நவீன கிறிஸ்தவர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆவர். 1928ல், ஃப்ரான்ஜ் மில்ட்னர், என்ற ஆஸ்திரியத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எஃபிஸஸில் உறங்கிய அந்த ஏழு பேரின் கல்லறையைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சரித்திரம் ஏராளமான கலைக்களஞ்சியங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டும் ஓர் ஆசிரியர் அத்தியாவசியம் ஆகின்றார்
[18:17] அவர்கள் அதிலுள்ள குழியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியன் அதன் உதயத்தின் போது அவர்களுடைய குகையின் வலப் புறமிருந்து வந்து கொண்டிருந்ததையும், மேலும் அதன் அஸ்தமனத்தின் பொழுது அவர்களுடைய இடப்புறமிருந்து பிரகாசித்ததையும் நீர் கண்டிருக்க இயலும். இது கடவுள்-ன் அற்புதங்களில் ஒன்றாகும்*. எவரொருவரைக் கடவுள் வழிநடத்துகின்றாரோ, அவரே உண்மையில் வழிநடத்தப்பட்டவர், மேலும் எவரொருவரை அவர் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ அவருக்கு வழிகாட்டும் ஓர் ஆசிரியரை நீர் காணமாட்டீர்.

அடிகுறிப்பு:
*18:17 இந்த அடையாளம், அல்லது குறிப்பு, அந்தக் குகை வடக்கு நோக்கி இருந்தது என்பதை நமக்குக் கூறுகின்றது.
[18:18] அவர்கள் உண்மையில் உறங்கிக் கொண்டிருந்த போதும், அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணியிருப்பீர். அவர்கள் நடுவே அவர்களுடைய நாய் அதன் முன்னங்கால்களை விரித்திருந்த அதே சமயம், அவர்களை நாம் வலப்புறமும் மற்றும் இடப்புறமும் புரட்டினோம். அவர்களை நீர் பார்த்திருந்தால், திகிலினால் அறையப் பட்டவராக, அவர்களை விட்டு நீர் வெருண்டோடி இருப்பீர்.

அடிகுறிப்பு:
*18:16-20 பண்டைய நைசீனிற்கு 200 மைல்கள் தெற்கிலும்,மேலும் துருக்கியின் இன்றைய இஜ்மீருக்கு 30 மைல்கள் தெற்கிலும் எஃபிஸஸ் உள்ளது. குகைவாசிகள், இயேசுவின் போதனைகளைப் பின்பற்றவும் , மேலும் கடவுளை மட்டும் வழிபடவும் விரும்பிய இளம் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் இயேசுவிற்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, முக்கடவுள் கொள்கை அறிவிக்கப்பட்ட நைசீன் மாநாடுகளைத் தொடர்ந்து, சீர் குலைந்த கிறிஸ்துவத்தைப் பிரகடனம் செய்த நவீன கிறிஸ்தவர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆவர். 1928ல், ஃப்ரான்ஜ் மில்ட்னர், என்ற ஆஸ்திரியத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எஃபிஸஸில் உறங்கிய அந்த ஏழு பேரின் கல்லறையைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சரித்திரம் ஏராளமான கலைக்களஞ்சியங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[18:19] அவர்களை நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பிய போது, அவர்கள் ஒருவரை ஒருவர், “எத்தனை காலம் நீங்கள் இங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் “ஒரு நாளோ அல்லது நாளின் பகுதியோ நாம் இங்கிருந் தோம்,” என்று பதிலளித்தனர். “நாம் எவ்வளவு காலம் இங்கே இருந்தோம் என்பதை உம்முடைய இரட்சகர் மிக நன்றாக அறிவார், எனவே இந்தப் பணத்துடன் நம்மில் ஒருவரை நாம் நகரத்திற்கு அனுப்புவோம். அவர் தூய்மைமிக்க உணவை போய் கொண்டு வரட்டும், மேலும் நமக்காகவும் சிலவற்றை வாங்கி வரட்டும். அவர் தன் முகத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமலும், மேலும் எவர் கவனத்தையும் ஈர்க்காமலுமிருக்கட்டும்.

அடிகுறிப்பு:
*18:16-20 பண்டைய நைசீனிற்கு 200 மைல்கள் தெற்கிலும்,மேலும் துருக்கியின் இன்றைய இஜ்மீருக்கு 30 மைல்கள் தெற்கிலும் எஃபிஸஸ் உள்ளது. குகைவாசிகள், இயேசுவின் போதனைகளைப் பின்பற்றவும் , மேலும் கடவுளை மட்டும் வழிபடவும் விரும்பிய இளம் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் இயேசுவிற்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, முக்கடவுள் கொள்கை அறிவிக்கப்பட்ட நைசீன் மாநாடுகளைத் தொடர்ந்து, சீர் குலைந்த கிறிஸ்துவத்தைப் பிரகடனம் செய்த நவீன கிறிஸ்தவர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆவர். 1928ல், ஃப்ரான்ஜ் மில்ட்னர், என்ற ஆஸ்திரியத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எஃபிஸஸில் உறங்கிய அந்த ஏழு பேரின் கல்லறையைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சரித்திரம் ஏராளமான கலைக்களஞ்சியங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[18:20] “அவர்கள் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், அவர்கள் உங்களைக் கல்லா லடித்துக் கொன்று விடுவார்கள், அல்லது வற்புறுத்தி அவர்களுடைய மார்க்கத்திற்கு உங்களைத் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.”

அடிகுறிப்பு:
*18:16-20 பண்டைய நைசீனிற்கு 200 மைல்கள் தெற்கிலும்,மேலும் துருக்கியின் இன்றைய இஜ்மீருக்கு 30 மைல்கள் தெற்கிலும் எஃபிஸஸ் உள்ளது. குகைவாசிகள், இயேசுவின் போதனைகளைப் பின்பற்றவும் , மேலும் கடவுளை மட்டும் வழிபடவும் விரும்பிய இளம் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் இயேசுவிற்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, முக்கடவுள் கொள்கை அறிவிக்கப்பட்ட நைசீன் மாநாடுகளைத் தொடர்ந்து, சீர் குலைந்த கிறிஸ்துவத்தைப் பிரகடனம் செய்த நவீன கிறிஸ்தவர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆவர். 1928ல், ஃப்ரான்ஜ் மில்ட்னர், என்ற ஆஸ்திரியத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எஃபிஸஸில் உறங்கிய அந்த ஏழு பேரின் கல்லறையைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சரித்திரம் ஏராளமான கலைக்களஞ்சியங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக முடிவுடனான தொடர்பு*
[18:21] கடவுள்-ன் வாக்குறுதி உண்மை தான் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்காகவும், மேலும் உலக முடிவைக்* குறித்த அனைத்துச் சந்தேகங்களையும் நீக்குவதற்காகவும், அவர் களை கண்டுபிடிக்கப்படும்படி நாம் செய்தோம். பின்னர் அவர்களைப் பற்றி மக்கள் தங்களுக் கிடையில் தர்க்கம் செய்து கொண்டனர். சிலர், “அவர்களைச் சுற்றி ஒரு கட்டிடத்தை நாம் கட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர் களுடைய இரட்சகர்தான் அவர்களைப் பற்றி நன்கறிந்தவர். மிகைத்தவர்கள், “அவர்களைச் சுற்றி ஒரு வழிபாட்டுத்தலத்தை நாம் கட்டுவோம்” என்று கூறினார்கள்.

அடிகுறிப்பு:
*18:21 பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த விபரங்கள் உலக முடிவைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டத் துணைபுரிந்தது.
[18:22] சிலர், “அவர்கள் மூவராக இருந்தனர்; அவர் களுடைய நாய் நான்காவதாக இருந்தது,” என்று கூறுவர். அதே சமயம் யூகம் செய்தவர் களாகவே மற்றவர்கள், “ஐந்து; அவர்களுடைய நாய் ஆறாவதாக இருந்தது” என்று கூறுவர். மற்றவர்கள், “ஏழு”, மேலும் எட்டாவதாக இருந் தது அவர்களுடைய நாய் என்று கூறினார்கள். “என் இரட்சகர்தான் அவர்களுடைய எண்ணிக்கையை நன்கறிந்தவர்” என்று கூறுவீராக. மிகச் சிலர் மட்டுமே சரியான அந்த எண்ணிக்கையை அறிந்திருக்கின்றனர். ஆகையால், அவர்களுடன் வாதித்துக் கொண்டிருக்காதீர்; அவர்களுடைய போக்கிலேயே சென்று விடும். எவர் ஒருவருடனும் நீர் இது குறித்து ஆலோசிக்க வேண்டாம்.
நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுளை நினைவு கூர்தல்
[18:23] எதிர் காலத்தில் எந்த ஒன்றையும் நீர் செய்வீர் என்று நீர் கூற வேண்டாம்,
[18:24] “கடவுள் நாடினால்,” என்று கூறாமல்*. இதனைச் செய்ய நீர் மறந்து விட்டால், உடனடியாக உமது இரட்சகரை நீர் நினைவு கூர்வதோடு, மேலும் “அடுத்த முறை இதை விடச் சிறப்பாகச் செய்யும்படி என் இரட்சகர் என்னை வழிநடத்துவாராக” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*18:24 இந்த முக்கிய கட்டளை அன்றாடம் கடவுளை நினைவு கூர்வதற்கு, நமக்கு வாய்ப்புகளைத் தருகின்றது.
(300+9)*
[18:25] அவர்கள் அவர்களுடைய குகையில் ஒன்பது அதிகமாக* முந்நூறு வருடங்கள் தங்கி யிருந்தனர்.

அடிகுறிப்பு:
*18:25 300 சூரிய வருடங்களுக்கும் 300 சந்திர வருடங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்பது வருடங்களாகும். இவ்விதமாக, கி.பி.1980(ஹிஜ்ரி 1400)ல் உலக முடிவிற்கு 300 வருடங்கள் (309 சந்திர வருடங்கள்) முன்னர் உலக முடிவின் கண்டுபிடிப்பு நிகழ வேண்டுமென சர்வ வல்லமையுடையவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது (72:27 & பின் இணைப்பு 25 ஐ பார்க்கவும்).
[18:26] “எவ்வளவு காலம் அவர்கள் அங்கே தங்கி யிருந்தனர் என்பதை கடவுள் தான் நன் கறிந்தவர்” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள எல்லா இரகசியங் களையும் அவர் அறிந்திருக்கின்றார். அவருடைய கருணையினால் தான் உங்களால் பார்க்க முடிகின்றது; அவருடைய கருணையினால் தான் உங்களால் செவியேற்க முடிகின்றது. அவருடன் இரட்சகராகவும், எஜமானராகவும் எவரும் இல்லை, மேலும் தனது ஆட்சியதி காரத்தில் பங்கு கொள்வதற்குப் பங்குதாரர்கள் எவரையும் அவர் ஒருபோதும் அனுமதிப்ப தில்லை.
[18:27] உம்முடைய இரட்சகரின் வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் ஓதி வர வேண்டும். எதுவும் அவருடைய வார்த்தைகளை மாற்றிவிட முடியாது, மேலும் அதனைத் தவிர வேறு ஆதாரம் எதையும் நீர் காண வேண்டாம்.
குர்ஆனைப் பயிலும் குழுக்கள்
[18:28] அவரை மட்டும் தேடியவர்களாக, இரவும் பகலும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக, அவர்களிடமிருந்து உமது கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவர்களுடைய இதயங்களை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கிவிட்டோமோ அவர்களுக்கும்; தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவர்களுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப் போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம்.
பரிபூரணமான மார்க்கச் சுதந்திரம்
[18:29] “இது உங்கள் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியம் ஆகும்,” என்று பிரகடனம் செய்வீராக. பின்னர் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும், மேலும் எவரொருவர் விரும்புகின்றாரோ அவர் நம்ப மறுக்கட்டும். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம். அவர்கள் உதவிக்காக அலறும் போது, முகங்களை வெந்து போகச் செய்யும் அடர்ந்த அமிலம் போன்ற ஒரு திரவமே அவர்களுக்குக் கொடுக்கப்படும். என்ன ஒரு துன்பகரமான பானம்! என்ன ஒரு துக்ககரமான விதி!
[18:30] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்த வரை, நன்னெறியான காரியங்களைச் செய் வோருக்குப் பிரதிபலன் வழங்க நாம் ஒரு போதும் தவறுவதில்லை.
[18:31] அவர்கள் ஏதேன் தோட்டங்களுக்கு தகுதியாகி விட்டார்கள், அதில் ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் தங்கத்தினாலான காப்புகள் கொண்டு அலங்கரிக்கப்படுவார்கள் மேலும் பச்சைப்பட்டிலும், மென்பட்டிலுமான ஆடைகளை அணிவார்கள், இன்னும் வசதியான இருக்கை களில் சாய்ந்திருப்பார்கள். என்ன ஓர் அற்புதமான வெகுமதி; என்ன ஓர் அற்புதமான தங்குமிடம்!
சொத்து ஓர் இணைத்தெய்வமாக*
[18:32] இரு மனிதர்களின் உதாரணத்தை அவர் களுக்கு எடுத்துரைப்பீராக: அவர்களில் ஒருவருக்கு பேரீத்த மரங்களால் சூழப்பட்ட இரு திராட்சைத் தோட்டங்களை நாம் கொடுத்தோம், மேலும் அவற்றிற்கிடையில் மற்ற பயிர்களை அமைத்தோம்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:33] இரு தோட்டங்களும் பருவத்தில் அவற்றின் விளைச்சல்களை உற்பத்தி செய்தன, மேலும் அபரிமிதமாக, ஏனெனில் அவற்றினூடே ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:34] ஒருமுறை, அறுவடைக்குப் பின்னர், அவர் தற்பெருமையோடு தன் நண்பரிடம்: “உன்னைவிடவும் மிகவும் வளம் படைத் தவனாக நான் இருக்கின்றேன், மேலும் நான் மக்களிடம் அதிக மரியாதையைப் பெற்ற வனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:35] தனது தோட்டத்திற்குள் அவர் நுழைந்தபோது, இவ்வாறு கூறியவராகத் தன் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டார், “இது எப்பொழு தேனும் அழிந்து விடும் என்று நான் எண்ணவில்லை.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:36] “மேலும், இது நிலையானதென்றே நான் எண்ணுகின்றேன்; நேரம் (மறுவுலகம்) எப்பொழுதேனும் நிகழ்ந்து விடும் என்றும் நான் எண்ணவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலும், இதனை விட மேலான ஒன்றை (அடையும் அளவு சாமர்த்தியத்தை) அங்கே நான் பெற்றிருப்பேன்.”

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:37] அவருடன் விவாதித்தவராக, அவருடைய நண்பர் கூறினார், “புழுதியிலிருந்தும், பின்னர் மிகச்சிறிய துளியிலிருந்தும், உன்னைப் படைத்து பின்னர் ஒரு மனிதனாக உன்னை முழுமைப்படுத்திய அந்த ஒருவரை நீ நம்ப மறுத்து விட்டாயா?

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:38] “என்னைப் பொறுத்தவரை, கடவுள் தான் எனது இரட்சகர், மேலும் என் இரட்சகருடன் வேறு எந்த தெய்வத்தையும் நான் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டேன்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
முக்கியமான கட்டளை
[18:39] “உனது தோட்டத்திற்குள் நீ நுழைந்த போது, ‘இது, கடவுள் எனக்குத் தந்தது (மாஷா அல்லாஹ்). கடவுள்-ஐத் தவிர எவர் ஒருவரும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை (லா குவ்வத்த இல்லாபில்லாஹ்)’ என்று நீ கூறியிருக்க வேண்டும். உன்னை விடக் குறைவான செல்வத்தையும், குறைவான பிள்ளைகளையும் நான் கொண்டிருப்பதை நீ காணலாம்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:40] “என் இரட்சகர் உன்னுடைய தோட்டத்தை விடவும் மேலானதை எனக்கு வழங்கக் கூடும். உன்னுடைய தோட்டத்தைத் துடைத்தெடுத்து விட்டு, முற்றிலும் அதனை தரிசாக்கி விட்டு விடக்கூடிய ஒரு கடும் புயல்காற்றை அவர் விண்ணிலிருந்து அனுப்பி வைக்கக் கூடும்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:41] “அல்லது, உன் கைகளுக்கெட்டாத ஆழத்திற்கு, அதன் தண்ணீர் கீழிறங்கி விடக்கூடும்”.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:42] உண்மையில், அவரது விளைச்சல்கள் துடைத்தெடுக்கப்பட்டன, அவருடைய நிலம் தரிசாகக் கிடந்த போது, வீணில் அதன் மீது தான் செலவழித்தவற்றிற்காகப் புலம்பியவராக அவர் துக்கமாகிப் போனார். இறுதியில் அவர், “என் இரட்சகருடன் எனது நிலத்தை ஒரு தெய்வமாக நான் அமைத்துக் கொள்ளாது இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.
[18:43] கடவுள்-க்கெதிராகப் பூமியின் மீதுள்ள எந்தப் படையும் அவருக்கு உதவி செய்திருக்க முடியாது, அன்றியும் எந்த உதவியையும் பெற்றுக் கொள்ள அவருக்குச் சாத்தியமும் இருந்திருக்காது.
[18:44] அது ஏனெனில் கடவுள் தான் உண்மையான ஒரே இரட்சகரும், எஜமானரும் ஆவார்; அவர் மிகச்சிறந்த பிரதிபலனை வழங்குகின்றார், மேலும் மிகச் சிறந்த விதி அவரிடமே உள்ளது.
[18:45] இந்த வாழ்க்கைக்கு, உதாரணமாக, பூமியின் தாவரங்களை முளைப்பிப்பதற்காக விண்ணி லிருந்து நாம் இறக்கியனுப்பும் தண்ணீரை எடுத்துரைப்பீராக, பின்னர் அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் கூளங்களாக மாறிவி டுகின்றன. கடவுள் அனைத்தையும் செய்யும் திறனுடையவராக இருக்கின்றார்.
நமது முன்னுரிமைகளைச் சரிவர மாற்றி அமைத்தல்
[18:46] செல்வமும், பிள்ளைகளும் இந்த வாழ்வின் இன்பங்களாகும், ஆனால் நன்னெறியான காரியங்கள் உமது இரட்சகரிடமிருந்து ஒரு நிரந்தரமான பிரதிபலனையும் மேலும் மிகவும் மேலானதொரு எதிர்பார்ப்பையும் வழங்குகின்றன.
[18:47] மலைகளை நாம் துடைத்தெடுத்து விடும் அந்நாள் வரும், மேலும் பூமியை நீர் பொட்டல் வெளியாகக் காண்பீர். அவர்களில் ஒருவரைக் கூட விட்டு விடாமல், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று கூட்டுவோம்.
[18:48] உமது இரட்சகர் முன் அவர்கள் ஒரு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். நாம் உங்களை முதன் முதலில் படைத்தவாறே, தனித்தவர்களாக நீங்கள் நம்மிடம் வந்துள்ளீர்கள். உண்மையில், ஒருபோதும் நிகழாது என்று நீங்கள் உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தது இதுதான்.
[18:49] பதிவேடுகள் காட்டப்படும், மேலும் அதில் உள்ளதைப் பற்றி அஞ்சியவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். சிறியதோ அல்லது பெரியதோ, எது ஒன்றையும் விட்டு விடாது, இப்புத்தகம் கணக்கில் கொண்டிருப்பது எப்படி?” என்று கூறுவார்கள். அவர்கள் செய்த ஒவ்வொன்றும் முன்னால்கொண்டு வரப்படு வதை அவர்கள் காண்பார்கள். உமது இரட்சகர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் அநீதமிழைப் பதில்லை.
கடவுளின் படைப்பினங்களை வகைப்படுத்துதல்
[18:50] நாம் வானவர்களிடம், “ஆதாமின் முன் சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர. அவன் ஒரு ஜின்னாக ஆனான், ஏனெனில் அவன் தன்னுடைய இரட்சகரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான்.* அவர்கள் உங்கள் விரோதிகளாக இருந்த போதிலும், எனக்குப் பதிலாக அவனையும் அவனுடைய சந்ததி யினரையும் நீங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொள்வீர்களா? என்ன ஒரு துக்ககரமான மாற்று!

அடிகுறிப்பு:
*18:50 விண்ணக சமூகத்தில் பெரிய நீண்ட சச்சரவு நடைபெற்ற போது (38:69), படைப்புகள் அனைத்தும் வானவர்கள், ஜின்கள், மற்றும் மனிதர்களாக வகைப்படுத்தப்பட்டனர் ( பின் இணைப்பு 7).
[18:51] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிற்கோ, அன்றி அவர்களுடைய படைப்பிற்கோ கூட அவர்களைச் சாட்சிகளாக ஒருபோதும் நாம் அனுமதிக்கவில்லை. அன்றியும் தீயவர்களை எனது சாம்ராஜ்யத்தில்* பணிபுரிய நான் அனுமதிப்பதுமில்லை.

அடிகுறிப்பு:
*18:51 சாத்தானும் அவனுடைய ஆதரவாளர்களும் (மனிதர்கள் மற்றும் ஜின்கள்) தவறான முடிவை மேற்கொள்ளப் போகின்றனர் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். ஆகையால் தான் படைப்பின் செய்முறைக்குச் சாட்சிகளாவதிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.
[18:52] “என்னுடன் தெய்வங்களென நீங்கள் உறுதி யாகக் கூறிக்கொண்டிருந்த என் பங்கு தாரர்களை அழையுங்கள்;” என்று அவர் கூறும் அந்த நாள் வரும், அவர்களை அவர்கள் அழைப் பார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்கு மறுமொழி அளிக்க மாட்டார்கள். தாண்டிவிட முடியாததொரு தடை அவர்களை ஒருவரி லிருந்து மற்றவரைப் பிரித்து வைக்கும்.
[18:53] குற்றவாளிகள் நரகத்தைக் காண்பார்கள், மேலும் அவர்கள் அதனுள் விழுந்து விடுவார் கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்பித்தல் என்பதே அவர்களுக்கு இருக்காது.
நம்பமறுப்பவர்கள் குர்ஆனின் முழுமைத் தன்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்
[18:54] எல்லா விதமான உதாரணத்தையும் இந்தக் குர்ஆனில் நாம் எடுத்துரைத்து இருக்கின்றோம். ஆனால் மனிதப் படைப்பானது மிகவும் தர்க்கம் செய்கின்ற படைப்பாக இருக்கின்றது.
[18:55] மனிதர்களை, வழிகாட்டல் அவர்களிடம் வந்த போது, நம்பிக்கை கொள்வதிலிருந்தும், மேலும் தங்களுடைய இரட்சகரிடம் பாவ மன்னிப்பைத் தேடுவதிலிருந்தும் தடுத்தது, முந்திய தலை முறையினருக்கான அதே (விதமான அற்புதங் களைக்) காண வேண்டுமென்று அவர்கள் கோரியது, அல்லது தண்டனையை முன்கூட்டி யே காணவேண்டும் என்று சவால் விட்டது தவிர வேறு எதுவும் இல்லை.
[18:56] தெளிவாக நற்செய்தியை அறிவிப்பவர் களாகவும், அதே சமயம் எச்சரிப்பவர்களாகவும் மட்டுமே நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நம்பமறுப்பவர்கள் சத்தியத்தைத் தோற்கடிப்ப தற்காக, பொய்களைக் கொண்டு வாதிடு கின்றனர், மேலும் அவர்கள் என்னுடைய சான்றுகள் மற்றும் எச்சரிக்கைகளை வீணானதென எடுத்துக் கொள்கின்றனர்.
தெய்வீகத் தலையீடு
[18:57] தங்கள் இரட்சகரின் சான்றுகளால் நினைவூட்டப்பட்டு, பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாது, அவற்றைப் புறக்கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்காக அவர் களுடைய இதயங்களின் மீது கவசங்களையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். இதனால், அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்திலும் வழி நடத்தப்படமாட்டார்கள்.
[18:58] ஆயினும், உமது இரட்சகர் மன்னிப்பவர், கருணை நிரம்பியவர். அவர்களுடைய செயல்களுக்கு விளக்கம் கூறுமாறு அவர்களை அவர் அழைத்திருந்தால், அவர்களை அங்கேயே அப்பொழுதே அவர் அழித்திருப்பார். மாறாக, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரம் வரை அவர் அவகாசம் அளிக்கின்றார்; அதன் பின்னர் அவர்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது.
[18:59] பல சமூகத்தாரை அவர்களுடைய வரம்புமீறல் களுக்காக நாம் அழித்தோம், அவர்களுடைய அழிவிற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்தோம்.
மோஸஸ் மற்றும் அவருடைய குருவிடமிருந்து மதிப்பு மிக்க படிப்பினைகள்
[18:60] மோஸஸ் தன் சேவகரிடம், “இரு நதிகளும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரை நான் ஓயமாட்டேன், அதற்கு எவ்வளவு நேரமானாலும் சரியே” என்று கூறினார்.
[18:61] இரு நதிகளும் சந்தித்துக் கொள்ளும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் தங்களுடைய மீனை மறந்துவிட்டனர், மேலும் அது நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியைக் கண்டு கொண்டு, இரகசியமாக நழுவிவிட்டது.
[18:62] அவ்விடத்தை அவர்கள் கடந்து விட்ட பின்னர், அவர் தன் சேவகரிடம், “நாம் மதிய உணவை எடுத்துக் கொள்வோம். இந்தப் பயணம் அனைத்தும் நம்மை முற்றிலும் களைப்படைய செய்து விட்டது” என்று கூறினார்.
[18:63] அவர், “வழியில் அந்தப் பாறையின் அருகே நாம் அமர்ந்தது நினைவிருக்கின்றதா? நான் மீனின் மீது கவனம் செலுத்தவில்லை. சாத்தான் அதனை நான் மறக்கும்படி செய்து விட்டான், மேலும் அதிசயமாக, நதிக்குள் மீண்டும் செல்லும் தனது வழியை அது கண்டு கொண்டது”என்று கூறினார்.
[18:64] (மோஸஸ்), “அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடமாகும்” என்று கூறினார். அவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளைத் தேடியவாறு திரும்பிச் சென்றனர்.
[18:65] நாம் கருணையைக் கொண்டு அருள்பாலித் திருந்த, மேலும் அவர்மீது நம்முடைய சொந்த அறிவிலிருந்து வழங்கப்பட்டிருந்த நமது அடியார்களில் ஒருவரை அவர்கள் கண்டனர்.
[18:66] மோஸஸ் அவரிடம், “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டலிலிருந்தும் மற்றும் அறிவிலிருந்தும் சிலவற்றை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, நான் உம்மைப் பின்தொடரலாமா?” என்று கூறினார்.
[18:67] அவர் கூறினார், “என்னோடு பொறுமையாக இருக்க உம்மால் முடியாது.”
[18:68] “உம்மால் புரிந்து கொள்ள முடியாதவற்றின் மீது எப்படி உம்மால் பொறுமையாக இருக்க இயலும்?”
[18:69] அவர், “கடவுள் நாடினால், என்னைப் பொறுமையுடையவராக நீர் காண்பீர். நீர் எனக்கிடும் எந்தக் கட்டளைக்கும் நான் கீழ்ப்படியாதிருக்க மாட்டேன்” என்று கூறினார்.
[18:70] அவர், “நீர் என்னைப் பின்தொடர்ந்தால், பின்னர் அதனைப் பற்றி உமக்குக் கூற நான் முடிவு செய்தாலன்றி, எந்த ஒன்றைப் பற்றியும் என்னிடம் நீர் கேட்காதிருக்க வேண்டும்” என்று கூறினார்.
[18:71] எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் துளை ஒன்றை போட்டார். அவர், “அதிலுள்ள மக்களை மூழ்கடிக்கவா அதில் நீர் ஒரு துளையை போட்டீர்? நீர் பயங்கரமான ஒன்றைச் செய்து விட்டீர்”என்று கூறினார்.
[18:72] அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.
[18:73] அவர், “நான் வருந்துகின்றேன். என்னுடைய மறதிக்காக என்னைத் தண்டித்து விடாதீர்; என்னிடம் மிகக் கடுமையாக இருக்காதீர்” என்று கூறினார்.
[18:74] எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிட்டார். அவர் “மற்றொரு ஆன்மாவைக் கொலை செய்திராத இத்தகையதொரு குற்றமற்ற ஆன்மாவை நீர் ஏன் கொலை செய்தீர்? கொடூரமான ஒன்றை நீர் செய்து விட்டீர்” என்று கூறினார்.
[18:75] அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.
[18:76] அவர், “வேறு எதையேனும் பற்றி நான் உம்மிடம் கேட்டால், பின்னர் நீர் என்னை உம்மோடு வைத்திருக்க வேண்டாம். என்னிடமிருந்து போதுமான அளவு மன்னிப்புக் கோருதலை நீர் கண்டு விட்டீர்” என்று கூறினார்.
[18:77] எனவே அவர்கள் சென்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் அம்மக்களிடம் உணவு கேட்டனர், ஆனால் அவர்களை உபசரிக்க அவர்கள் மறுத்து விட்டனர். விரைவில், அவர்கள் விழுந்து விட இருக்கும் ஒரு மதிற்சுவரைக் கண்டனர், அவர் அதனைச் சரி செய்தார். அவர், “அதற்கு ஒரு கூலியை நீர் கேட்டிருக்கலாம்!” என்று கூறினார்.
ஒவ்வொன்றிற்கும் ஒரு தக்க காரணம் உள்ளது
[18:78] அவர் கூறினார், “இப்போது நாம் பிரிந்துவிட வேண்டியது தான். ஆனால் உம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாத ஒவ்வொன்றைப் பற்றியும் நான் உமக்கு விளக்குவேன்”.
[18:79] “அந்தக் கப்பலைப் பொறுத்தவரை, அது ஏழை மீனவர்களுக்குரியதாக இருந்தது, எனினும், அதனைப் பழுதாக்க நான் விரும்பினேன். அவர்களுக்குப் பின்னால் பலவந்தமாக ஒவ்வொரு கப்பலையும் பறிமுதல் செய்கின்ற ஓர் அரசன் வந்து கொண்டிருந்தான்.
[18:80] “அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவனு டைய பெற்றோர்கள் நல்ல நம்பிக்கை யாளர்களாக இருந்தனர், மேலும் அவன் தனது வரம்பு மீறுதல் மற்றும் நம்பிக்கையின்மையால்*, அவர்களுக்குச் சுமையாக ஆவான் என்பதை நாம் கண்டோம்.

அடிகுறிப்பு:
*18:80 அடால்ஃப் ஹிட்லர் அழகான அப்பாவியாகத் தோற்றமளித்த ஒரு குழந்தையாக இருந்தான். ஒரு குழந்தையாக அவர் மரணித்திருந்தால், ஏராளமானோர் துக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பலர் கடவுளின் ஞானத்தைக் கூடச் சந்தேகித்திருப்பார்கள். ஆழமான இப்படிப்பினைகள் மூலம் ஒவ்வொன்றிற்கும் பின்னால் தக்கதொரு காரணம் உள்ளது என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம்.
[18:81] “உமது இரட்சகர் அவனுடைய இடத்தில் மற்றொரு மகனை, நன்னெறியிலும் மேலும் கனிவிலும் அவனை விட மேலான ஒருவனை அவனுக்குப் பகரமாக்க வேண்டும் என நாம் விரும்பினோம்.
[18:82] “அந்த மதிற்சுவரைப் பொறுத்தவரை, அது அந்நகரில் உள்ள இரு அநாதைச் சிறுவர் களுக்கு உரியதாக இருந்தது. அதன்கீழ், அவர்களுக்குரிய ஒரு புதையல் இருந்தது. அவர்களுடைய தந்தை ஒரு நன்னெறியான மனிதராக இருந்த காரணத்தால், அவர்கள் வளர்ந்து முழு வலிமை அடைந்த பின்னர், அவர்களுடைய அப்புதையலை வெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என உம் இரட்சகர் நாடினார். உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணை இத்தகையதேயாகும். அதில் எந்த ஒன்றையும் நான் என் சுயவிருப்பப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கம் இதுவேயாகும்.”
ஜுல்கர்னைன்: இரு கொம்புகள் அல்லது இரு தலைமுறைகளை உடையவர்
[18:83] ஜுல்-கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவருடைய சரித்திரத்தில் சிலவற்றை உங்களுக்கு நான் விவரிக் கின்றேன்” என்று கூறுவீராக.
[18:84] நாம் அவருக்கு பூமியின் மேல் அதிகாரத்தை அளித்தோம், மேலும் எல்லாவிதமான உபகர ணங்களையும் அவருக்கு வழங்கினோம்.
[18:85] பின்னர், அவர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.
[18:86] தொலைவிலுள்ள மேற்கை அவர் அடைந்த போது, பரந்து விரிந்ததொரு சமுத்திரத்தில் சூரியன் மறைவதை அவர் கண்டார், மேலும் அங்கே மக்களையும் கண்டார். நாம், “ஜுல்கர்னைனே, நீர் விரும்பிய வண்ணம் ஆட்சி செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம், அல்லது அவர்களிடம் கனிவுடனும் இருக் கலாம்” என்று கூறினோம்.
[18:87] அவர் கூறினார், “வரம்பு மீறுவோரைப் பொறுத்தவரை, நாம் அவர்களைத் தண்டிப் போம், பின்னர், அவர்கள் தங்கள் இரட்சகரிடம் திரும்பும்போது, அவர் இன்னும் அதிகமான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவார்.
[18:88] “நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நல்லதொரு வெகுமதியைப் பெறுகின்றனர்; அவர்களை நாம் கனிவுடன் நடத்துவோம்.”
[18:89] பின்னர் அவர் மற்றொரு வழியில் தொடர்ந்து சென்றார்.
[18:90] தொலைவிலுள்ள கிழக்கை அவர் அடைந்தபோது, சூரியனிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இடம் எதனையும் கொண்டிருக்காத மக்கள் மீது அது உதிப்பதை அவர் கண்டார்.
[18:91] இயல்பாகவே, அவர் கண்டுபிடித்த ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்திருந்தோம்.
[18:92] அவர் பின்னர் மற்றொரு வழியில் தொடர்ந்து சென்றார்.
[18:93] இரண்டு வேலிகளுக்கிடையில் இருந்த ஒரு பள்ளத்தாக்கை அவர் அடைந்தபோது, மிகக்குறைவாகவே புரியக்கூடிய மொழி பேசிய மக்களை அவர் கண்டார்.
காக் மற்றும் மேகாக்*
[18:94] அவர்கள், “ஜுல்கர்னைனே, காக் மற்றும் மேகாக் ஆகியோர் பூமியைச் சீர்குலைப்பவர்களாக இருக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடையை நீர் உருவாக்குவதற்காக உங்களுக்கு நாங்கள் ஊதியம் தரலாமா?” என்று கூறினார்கள்.

அடிகுறிப்பு:
*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).
[18:95] அவர் கூறினார், “என் இரட்சகர் எனக்கு மகத்தான கொடைகளைத் தந்து உள்ளார். என்னுடன் நீங்கள் ஒத்துழைத்தால், உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஓர் அணையை நான் கட்டி விடுவேன்.

அடிகுறிப்பு:
*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).
[18:96] “இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இரண்டு வேலிகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அவர் அடைத்தவுடன், அவர், “ஊதுங்கள்” என்று கூறினார். அது கொதித்துச் சிவந்தவுடன், அவர், “அதன் மேல் தாரை ஊற்றுவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).
[18:97] இதனால், அதில் அவர்களால் ஏற முடியாது அன்றியும் அதில் துளையிடவும் அவர்களால் முடியாது.

அடிகுறிப்பு:
*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).
[18:98] அவர், “இது என் இரட்சகரிடமிருந்துள்ள கருணை ஆகும். என் இரட்சகரின் முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும்போது, இந்த அணை நொறுங்கிப் போகும்படி அவர் செய்வார். என் இரட்சகரின் முன்னறிவிப்பு சத்தியமே ஆகும்” என்று கூறினார்.

அடிகுறிப்பு:
*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).
[18:99] அந்நேரத்தில், அவர்களை ஒருவர் மற்றவர் மீது படையெடுக்கும்படி நாம் விட்டு விடுவோம், பின்னர் கொம்பு ஊதப்படும், பின்னர் அவர்கள் அனைவரையும் ஒருசேர நாம் ஒன்று கூட்டுவோம்.
[18:100] அந்நாளில், நம்ப மறுப்பவர்களுக்கு, நரகத்தை நாம் அளிப்போம்.
[18:101] என்னுடைய செய்தியைக் காண்பதை விட்டும் தங்களுடைய கண்களில் அதிகம் திரையிடப் பட்டிருந்தவர்கள் அவர்கள் தான். அன்றியும் அவர்கள் செவியேற்க முடியாமலும் இருந்தனர்.
[18:102] என்னுடைய அடியார்களை என்னுடன் தெய்வங்களாக அமைத்துக் கொண்டு விட்டு தப்பித்து விடலாம் என்று நம்ப மறுப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நம்ப மறுப்பவர்களுக்கான நிரந்தரமான தங்கு மிடமாக நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.
உங்களையே பரிசோதித்துக் கொள்ளுங்கள்
[18:103] கூறுவீராக, “மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?
[18:104] “இந்த வாழ்வில் எவர்களுடைய காரியங்கள் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றார்களே அவர் கள் தான்.”
[18:105] இத்தகையவர்கள் தான் தங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளையும் மேலும் அவரைச் சந்திப்பதையும் நம்பமறுத்தவர்கள். ஆகையால், அவர்களுடைய காரியங்கள் வீணாக உள்ளன; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவற்றிற்கு மதிப்பு எதுவும் இருக்காது.
[18:106] அவர்களுடைய நம்பிக்கையின்மையின் பிரதிபலனாகவும், மேலும் என்னுடைய வெளிப் பாடுகளையும் மற்றும் என்னுடைய தூதர் களையும் பரிகாசம் செய்து கொண்டிருந்த தற்காகவும், அவர்களுக்குரிய நியாயமான கூலி நரகமேயாகும்.
[18:107] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய தங்குமிடமாக, பேரானந்தமயமான சுவனத்திற்குத் தகுதியாகி விட்டார்கள்.
[18:108] நிரந்தரமாக அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள்; அதற்குப் பதிலாக வேறு எதையும் அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
குர்ஆன்: நமக்குத் தேவையான அனைத்தும்
[18:109] “பெருங்கடலே என் இரட்சகரின் வார்த்தை களுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்துபோகும் முன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், மையை நாம் இருமடங்கு வழங்கினாலும் சரியே” என்று கூறுவீராக.
[18:110] “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டிருக்கும் நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. தங்கள் இரட்சகரைச் சந்திப்பதை எதிர்ப்பார்த்திருப்பவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்யவும், மேலும் தனது இரட்சகருடன் வேறு தெய்வம் எதனையும் ஒருபோதும் வழிபடாதிருக்கவும் வேண்டும்” என்று கூறுவீராக.