சூரா 16: தேனீ (அல்-நஹ்ல்)

[16:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[16:1] கடவுள்-ன் கட்டளை முன்னரே வெளியிடப் பட்டுவிட்டது (மேலும் ஒவ்வொன்றும் முன்னரே எழுதப்பட்டு விட்டது), எனவே அதனை விரைவு படுத்தாதீர்கள்*. அவர் துதிப்பிற்குரியவர்; அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களை விட மிகவும் மேலானவர்.

அடிகுறிப்பு:
*16:1 அனைத்தும் ஏற்கெனவே பதியப்பட்டதாக உள்ளது (57:22). பின் இணைப்பு 14 ஐயும் பார்க்கவும்.
[16:2] அவர் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத் தோரிடம், தனது கட்டளைகளைக் கொண்ட வெளிப்பாடுகளுடன், வானவர்களைக் கீழே அனுப்புகின்றார்: “என்னுடன் வேறு தெய்வம் எதுவுமில்லை என நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும்.”
[16:3] வானங்கள் மற்றும் பூமியை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவர் படைத்துள்ளார். அவர் மிகவும் உயர்வானவர், அவர்கள் அமைத்துக் கொள்கின்ற எந்த இணைத் தெய்வங்களையும் விட மிகவும் மேலானவர்.
[16:4] அவர் மனிதனை மிகச்சிறிய ஒரு துளியி லிருந்து படைத்தார், பின்னர் அவன் ஒரு தீவிரமான எதிரியாக மாறிவிடுகின்றான்.
[16:5] மேலும் உங்களுக்குக் கதகதப்பை வழங்கு வதற்காகவும், மேலும் மற்ற பல பயன்களுக் காகவும், அவ்வாறே உணவிற்காகவும், கால் நடைகளை உங்களுக்காக அவர் படைத்தார்.
[16:6] உங்கள் ஓய்வின்போதும், மேலும் நீங்கள் பயணிக்கும் போதும், அவை உங்களுக்கு சொகுசையும் வழங்குகின்றன.
கடவுளின் அருட்கொடைகள்
[16:7] மேலும் மிகுந்ததொரு சிரமத்துடனன்றி உங்களால் சென்று சேர முடியாத இடங்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக, உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
[16:8] மேலும் குதிரைகளையும், கோவேறு கழுதை களையும், கழுதைகளையும், சவாரிக்காகவும், சொகுசிற்காகவும் உங்களுக்காக (அவர் படைத்தார்). கூடுதலாக, நீங்கள் அறியா தவற்றையும் அவர் படைத்தார்.
[16:9] கடவுள் வழிகளைச் சுட்டிக் காட்டுகின்றார், தவறானவை உட்பட. அவர் நாடியிருந்தால், உங்கள் அனைவரையும் அவர் வழி நடத்தியிருக்க இயலும்.
[16:10] உங்கள் பானத்திற்காகவும், உங்களுடைய பயன்பாட்டிற்கென மரங்களை வளர்ப்பதற்காகவும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழே இறக்கி அனுப்புகின்றார்.
[16:11] அதனைக் கொண்டு, அவர் உங்களுக்காகப் பயிர்கள், ஒலிவம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிவர்க்கங்களையும் விளை விக்கின்றார். சிந்திக்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாகும்.
[16:12] மேலும் இரவையும், பகலையும் அவ்வாறே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார். இன்னும் நட்சத்திரங்களும் அவருடைய கட்டளையால் பணிக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை (போதிய) சான்றுகளாகும்.
[16:13] மேலும் உங்களுக்காகப் பூமியின் மீது பல்வேறு நிறங்கள் கொண்ட பொருட்களையும் (அவர் படைத்தார்). கவனத்தில் கொள்ளும் மக்களுக்கு இது ஒரு (போதிய) சான்றாகும்.
[16:14] மேலும் கடலை உங்களுக்குப் பணி செய்வதற்காக அவர் ஆக்கினார்; அதிலிருந்து மிருதுவான இறைச்சியை நீங்கள் உண்ணு கின்றீர்கள், மேலும் நீங்கள் அணிந்து கொள்ளும் ஆபரணங்களை அதிலிருந்து எடுத்துக் கொள்கின்றீர்கள். மேலும் அவருடைய அருட்கொடைகளை நீங்கள் தேடும் பொழுது, நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, உங்களுடைய வணிகப்பலன் களுக்காகக் கப்பல்கள் அதனைச் சுற்றி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள்.
[16:15] மேலும் உங்களுடன் சேர்ந்து உருண்டு விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, நிலைப்படுத்து பவைகளை (மலைகளை)யும் அவ்வாறே நீங்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, ஆறுகளையும், சாலைகளையும் அவர் பூமியின் மீது அமைத்தார்.
[16:16] கடற்பிரயாணத்திற்கு, பயன்படுவதற்காக திசை காட்டும் அடையாளங்களையும், அவ்வாறே நட்சத்திரங்களையும்.
[16:17] படைக்கின்ற ஒருவர், படைக்காத ஒருவரைப் போலாவாரா? இப்போதாவது நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்களா?
[16:18] கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி னால், அவற்றை உங்களால் முழுமையாக அறிந்து கொள்வது சாத்தியம் கிடையாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[16:19] மேலும் கடவுள் நீங்கள் மறைத்து வைப் பவற்றையும், மேலும் நீங்கள் அறிவிப்பவற்றையும் அறிகின்றார்.
மரணித்துவிட்ட, வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் மகான்கள்
[16:20] கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த ஒன்றையும் படைப்பதில்லை; அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான்.
[16:21] அவர்கள் மரணித்து விட்டவர்கள், உயிருடன் இல்லை, மேலும் அவர்கள் எப்படி அல்லது எப்பொழுது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படு வார்கள் என்பதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.
[16:22] உங்கள் தெய்வம் ஒரே தெய்வம். மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆணவம் கொண்டிருக்கின்றனர்.
[16:23] நிச்சயமாக, அவர்கள் மறைக்கும் ஒவ்வொன் றையும் அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன் றையும் கடவுள் அறிகின்றார். ஆணவம் கொண்டவர்களை அவர் நேசிப்பதில்லை.
[16:24] “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்,” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது, “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் கூறு கின்றனர்.
[16:25] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுடைய பாவங்களுக்கும் அத்துடன் கூடுதலாக, அவர்களுடைய அறியாமை யினால் அவர்கள் வழிதவறச் செய்தவர்களின் பாவங்களுக்கும் சேர்த்து, அவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப் படுவார்கள். எத்தகையதொரு துக்ககரமான சுமை!
[16:26] அவர்களைப் போன்ற மற்றவர்களும், கடந்த காலத்தில் சூழ்ச்சிகள் செய்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய கட்டடத்தை அஸ்திவாரத்தோடு அழித்து விட்டார், அதன் முகடுகளை அவர்கள் மீது விழச் செய்தார். அவர்கள் சற்றும் எதிர்பாராத போது தண்டனை அவர்களைத் தாக்கியது.
[16:27] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களை அவர் அவமானப் படுத்துவார், மேலும் “எவர்களுக்காக என்னை எதிர்த்தீர்களோ, என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த என்னுடைய பங்குதாரர்கள் எங்கே?” என்று கேட்பார். அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “ இன்றைய தினம், நம்ப மறுப்பவர்கள் மீது இழிவும் துன்பமும் ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.
நம்ப மறுப்பவர்களுக்கு மரணம்
[16:28] தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங் கிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்து வார்கள். இறுதியில் அப்போதுதான் அவர்கள் அடிபணிவார்கள், மேலும், ஆம் உண்மையில் “நாங்கள் தவறான எந்த ஒன்றையும் செய்ய வில்லை!” என்று கூறுவார்கள். கடவுள் நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன் றையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[16:29] ஆகையால், நரகத்தின் வாசல்களுக்குள் நுழையுங்கள், அங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். ஆணவம் கொண்டவர் களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.
நம்பிக்கையாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை *
[16:30] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது அவர்கள், “ நல்லது” என்று கூறுவார்கள். நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மகிழ்ச்சி, மேலும் மறுவுலகின் வீடானது இன்னும் மிக மேலானது. நன்னெறியாளர்களுக்கு என்ன ஒரு பேரானந்த மயமான வீடு.

அடிகுறிப்பு:
*16: 30-32 நம் அனைவராலும் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டுவிட்ட முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் சுவைக்கின்றனர் (44:56ஐ பார்க்கவும்) இவ்வுலகில் அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்தவுடன் மரணிக்கச் செய்யும் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அந்தச் சுவனத்தை நோக்கி வருமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர், அவ்வளவுதான் ( 2:154, 3:169, 8:24, 22:58, 36:27).
[16:31] ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, அங்கே ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்கு உண்டு. கடவுள் இவ்விதமாக நன்னெறியாளர்களுக்கு வெகு மதியளிக்கின்றார்.

அடிகுறிப்பு:
*16: 30-32 நம் அனைவராலும் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டுவிட்ட முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் சுவைக்கின்றனர் (44:56ஐ பார்க்கவும்) இவ்வுலகில் அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்தவுடன் மரணிக்கச் செய்யும் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அந்தச் சுவனத்தை நோக்கி வருமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர், அவ்வளவுதான் ( 2:154, 3:169, 8:24, 22:58, 36:27).
அவர்கள் நேரடியாகச் சுவனம் செல்கின்றனர்
[16:32] வானவர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக. உங்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக* (இப்போது) சுவனத்தில் நுழையுங்கள்” என்று கூறியவாறு, நன்னெறி யோடிருக்கும் ஒரு நிலையில் அவர்களுடைய வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருவார்கள்.

அடிகுறிப்பு:
*16: 30-32 நம் அனைவராலும் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டுவிட்ட முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் சுவைக்கின்றனர் (44:56ஐ பார்க்கவும்) இவ்வுலகில் அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்தவுடன் மரணிக்கச் செய்யும் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அந்தச் சுவனத்தை நோக்கி வருமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர், அவ்வளவுதான் ( 2:154, 3:169, 8:24, 22:58, 36:27).
நம்ப மறுப்பவர்கள்
[16:33] வானவர்கள் அவர்களிடம் வருவதற்காகவோ அல்லது உமது இரட்சகரின் தீர்ப்பு நிகழ்ந்தேறும் வரையோ அவர்கள் காத்துக் கொண்டிருக் கின்றனரா? அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இதையே தான் செய்தார்கள். கடவுள் அவர்களுக்கு அநீதமிழைக்கவில்லை; அவர்கள்தான் தங்கள் சொந்த ஆன்மாக் களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[16:34] அவர்களுடைய பாவமான காரியங்களின் பின்விளைவுகளுக்கு அவர்கள் உள்ளானார் கள், மேலும் அவர்கள் பரிகசித்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் அவதிக்குள்ளாக்கியது.
பிரசித்தி பெற்ற சாக்குப்போக்கு
[16:35] இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள், “கடவுள் நாடியிருந்தால், நாங்களோ அல்லது எங்கள் பெற்றோர்களோ,அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் வழிபட்டிருக்க மாட்டோம், அன்றி அவர் தடுத்தவற்றை தவிர வேறெதையும் தடுத்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றனர். அவர்களுக்கு முன்னிருந்தவர் களும் இதனையே செய்தனர். முழுமையான தூதுச் செய்தியை ஒப்படைப்பதைத் தவிர தூதர்கள் வேறெதையும் செய்ய முடியுமா?
[16:36] “ நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும், மேலும் இணைத்தெய்வவழிபாட்டைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,” எனக் கூறியவராக, ஒரு தூதரை ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் அனுப்பினோம். அதனைத் தொடர்ந்து, சிலர் கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டனர், அதே சமயம்,மற்றவர்கள் வழிதவறும்படிச் செய்யப் பட்டனர். பூமியில் சுற்றித் திரிந்து, ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்.
[16:37] அவர்களை வழிநடத்துவதற்காக நீர் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் ஒரு பொருட்டல்ல, கடவுள்-ஆல் வழிதவறும்படிச் செய்யப்பட்டவர்களை அவர் வழிநடத்த மாட்டார். இவ்விதமாக, எவராலும் அவர் களுக்கு உதவி செய்ய இயலாது.
அவர்களுடைய மனங்களின் அடி ஆழத்தில்
[16:38] “மரணித்தவர்களைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பமாட்டார்” என்று அவர்கள் கடவுள் மீது முறைப்படிச் சத்தியம் செய்தனர். நிச்சயமாக, மீறமுடியாத அவருடைய வாக்குறுதி இவ்வாறானதே, ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அறியமாட்டார்கள்.
[16:39] பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்ட எல்லா விஷயங்களையும் ஒவ்வொருவருக்கும் அவர் சுட்டிக் காட்டுவார், மேலும் அவர்கள் பொய்யர் களாக இருந்தனர் என்று நம்பமறுத்தவர்களை அறிந்து கொள்ளச்செய்வார்.
மரணித்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்ப
[16:40] எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, அதனை நோக்கி நாம், “ஆகு” என்று கூறுவோம், அவ்வளவுதான், அது ஆகிவிடும்.
[16:41] அடிக்கடி துன்புறுத்துதலுக்கு அவர்கள் உள்ளான காரணத்தால், கடவுள்-க்காக ஊரைத் துறந்து வெளியேறியவர்களுக்கு, நாம் நிச்சயமாக இவ்வுலகில் தாராளமாக நஷ்ட ஈடு செய்வோம், மேலும் அவர்கள் மட்டும் அறிந் திருந்தால். மறுவுலகின் பிரதிபலன் இன்னும் மிகப் பெரியதாகும்.
[16:42] இது ஏனெனில் அவர்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள், மேலும் அவர்கள், தங்களுடைய இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்கள்.
[16:43] உமக்கு முன்னர் நம்மால் உள்ளுணர்வூட்டப் பட்டவர்களாக ஆண்களை அன்றி நாம் அனுப்பவில்லை. உங்களுக்குத் தெரிய வில்லை என்றால், வேதத்தை அறிந்தவர் களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
[16:44] சான்றுகளையும் மற்றும் வேதங்களையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் மக்களுக்கு இறக்கியனுப்பப்பட்ட ஒவ்வொன் றையும், அவர்களுக்கு நீர் பிரகடனம் செய்வதற்காக இத்தூதுச் செய்தியை உமக்கு நாம் இறக்கி அனுப்பினோம், ஒரு வேளை அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடும்.
[16:45] தீய சூழ்ச்சிகளைத் திட்டமிடுபவர்கள், அவர்களை பூமி விழுங்கும்படிக் கடவுள் செய்ய மாட்டார் என்றோ அல்லது அவர்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது தண்டனை அவர் களிடம் வந்துவிடாதென்றோ உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?
[16:46] அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும்; அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது.
[16:47] அல்லது அவர்கள் அச்சத்துடன் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அது அவர்களைத் தாக்கக் கூடும். உமது இரட்சகர் இரக்கம் மிக்கவர், மிக்க கருணையாளர்.
[16:48] கடவுள்-ஆல் படைக்கப்பட்ட எல்லா பொருட் களையும் அவர்கள் பார்க்கவில்லையா? விருப்பத்துடனும், மேலும் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்தும், அவற்றின் நிழல்கள் வலப்புறமும், இடப்புறமும் அவைகளைச் சூழ்ந்துள்ளன.
[16:49] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன - ஒவ்வொரு உயிரினமும்- மேலும் வானவர்களும்; சிறிதளவும் ஆணவமின்றி அவ்வாறே செய்கின்றனர்.*

அடிகுறிப்பு:
*16:49 மனித உடல், அது ஒரு நம்பிக்கையாளருக்கோ அல்லது நம்பமறுப்பவருக்கோ உரியதாக இருந்த போதிலும், கடவுளுக்கு அடிபணி கின்றது; இதயத் துடிப்பு, நுரையீரல்களின் இயக்கம் மற்றும் வயிறுகளின் இயக்கம், இந்த அடிபணிதலைத் தெளிவாக விளக்கிக்காட்டுகின்றது.
[16:50] அவர்களுக்கு மேலே உயர்வாக உள்ள, தங்கள் இரட்சகரிடம் அவர்கள் பயபக்தியோடு உள்ளனர், மேலும் அவர்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டதோ அதனை அவர்கள் செய்கின்றனர்.
[16:51] கடவுள்:“இரண்டு தெய்வங்களை வழிபடா தீர்கள்; இருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. நீங்கள் என்னிடம் மட்டுமே பயபக்தியோடு இருக்க வேண்டும்” என்று பிரகடனம் செய்துள்ளார்.
[16:52] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது, ஆகையால், மார்க்கம் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். கடவுள்-ஐத் தவிர மற்றொன்றை வழிபடுவீர்களா?
[16:53] நீங்கள் அனுபவிக்கும் எந்த அருட்கொடையும் கடவுள் இடமிருந்து வந்ததே. இருப்பினும், ஏதேனும் கஷ்டத்திற்கு நீங்கள் உள்ளாகும் போதெல்லாம் நீங்கள் உடனடியாக அவரிடம் புகார் கூறுகின்றீர்கள்.
[16:54] ஆயினும், உங்கள் துன்பத்தை அவர் நிவர்த்தி செய்த உடனே, உங்களில் சிலர் இணைத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பி விடு கின்றீர்கள்.
[16:55] அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கட்டும். தற்காலிக மாகச் சுகமனுபவிக்கச் செல்லுங்கள்; நீங்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வீர்கள்.
[16:56] அவர்களுக்கு நாம் வழங்குகின்ற வாழ்வாதா ரங்களின் ஒரு பங்கை, அறியாமையினால் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங் களுக்காக, அவர்கள் நிர்ணயம் செய்கின்றனர். கடவுள் மீது ஆணையாக, உங்களுடைய புதுமைகளுக்கு விளக்கம் தருமாறு நீங்கள் பிடிக்கப்படுவீர்கள்.
பெண்குழந்தைகளுக்கு எதிரான மூட நம்பிக்கையான பாரபட்சம்
[16:57] அவர்கள் கடவுள்-க்கு மகள்களையும் நியமிக் கின்றார்கள், அவர் துதிப்பிற்குரியவர், அதே சமயம் அவர்களுக்குப் பிரியமான வற்றையே அவர்கள் தங்களுக்கென விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.
[16:58] அவர்களில் ஒருவன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், அவன் முகம் துக்கத்தில் மூழ்கிக் கறுத்து விடுகின்றது.
[16:59] அவனுக்குக் கொடுக்கப்பட்ட கெட்ட செய்தியால் வெட்கப்பட்டவனாக, மக்களிட மிருந்து அவன் ஒளிந்து கொள்கின்றான். அக்குழந்தையை அவன் மனமில்லாமல் வைத்துக் கொள்வதா, அல்லது புழுதியில் அவளைப் புதைத்து விடுவதா, என்று கூட அவன் யோசிக்கின்றான். அவர்களுடைய கருத்து உண்மையில் துக்ககரமானது.
[16:60] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மிக மோசமான உதாரணங்களை அமைக் கின்றனர்,அதே சமயம் மிக மேலான உதார ணங்கள் கடவுள்-க்கு உரியவை. அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
அசலான பாவம்
[16:61] மனிதர்களை, அவர்களுடைய வரம்பு மீறல்களுக்காகக் கடவுள் தண்டிப்பாரே யானால், பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் அவர் அழித்திருப்பார். ஆனால் குறிப்பிட்டதொரு, முன்னரே தீர் மானிக்கப்பட்ட நேரத்திற்கென அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக்கின்றார். அவர்களுடைய தவணை முடிந்து விட்டால், அதனை ஒரு மணிநேரம் கூட தாமதப்படுத்தவோ அன்றி முற்படுத்தவோ அவர்களால் இயலாது.
[16:62] தங்களுக்கே பிடிக்காதவற்றை அவர்கள் கடவுள் மீது சாட்டுகின்றனர், பின்னர் தாங்கள் நன்னெறியாளர்கள் என்று தங்கள் சொந்த நாவுகளாலேயே பொய் கூறுகின்றனர்! எவ்வித சந்தேகமுமின்றி, அவர்கள் நரகிற்கு உள்ளாகி விட்டனர், ஏனெனில் அவர்கள் கலகம் செய்தனர்.
[16:63] கடவுள் மீது ஆணையாக, உமக்கு முன்னி ருந்த சமூகங்களுக்கு நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம், ஆனால் சாத்தான் அவர்களுடைய கண்களுக்கு அவர்களுடைய காரியங்களை அழகாக்கி விட்டான். அதன் விளைவாக, அவன்தான் இப்போது அவர் களுடைய எஜமானன், மேலும் அவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[16:64] அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காகவும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அருளை வழங்குவதற் காகவும், இவ்வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.
கடவுளிடமிருந்து கூடுதல் சான்றுகள்
[16:65] கடவுள் நிலத்தை, அது இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். செவி யேற்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.
[16:66] மேலும் கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது: அவற்றின் வயிறுகளி லிருந்து ஒரு பானத்தை உங்களுக்கு நாம் வழங்குகின்றோம். ஜீரணித்துவிட்ட உணவிற் கும் இரத்தத்திற்கும் நடுவிலிருந்து, அருந்து வோருக்குச் சுவை மிகுந்த, தூய்மையான பால் உங்களுக்குக் கிடைக்கின்றது.
[16:67] மேலும் பேரீத்த மரங்களின் பழங்கள் மற்றும் திராட்சைகளிலிருந்து மது வகைகளையும், அதே போல் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் தயாரிக்கின்றீர்கள். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.
தேனீ
[16:68] இன்னும், உமது இரட்சகர் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மேலும் அவர்கள் உனக்காகக் கட்டுகின்ற (செயற்கை தேன் கூடுகள் போன்ற) வற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொள் என்று உள்ளுணர்வூட்டினார்.
[16:69] பின்னர், மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்துக் கனிகளில் இருந்தும் உண்டு கொள். அவற்றின் வயிறுகளில் இருந்து பல்வேறு நிறங்களை உடைய ஒரு பானம் வெளிவருகின்றது, அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்*.

அடிகுறிப்பு:
*16:69 தேன், அதனுடைய அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச் சத்து மதிப்புக்களுடன், கூடுதலாக குறிப்பிட்ட ஒவ்வாமைகளுக்கும் மற்ற வியாதிகளுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு மருந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
[16:70] கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் அவர் உங்கள் வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருகின்றார். தங்களால் அடைய இயலும் அறிவிற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைக் காண்பதற்காகவே, உங்களில் சிலரை, மிக முதிர்ந்த வயது வரை உயிர்வாழ அவர் அனுமதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்த வர், சர்வ சக்தியுடையவர்.
கடவுளுடன் பங்குதாரர்கள் இல்லை
[16:71] கடவுள் உங்களில் சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக வழங்கியிருக்கின்றார். அதிக மாகக் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அவர்களைப் பங்குதாரர்களாக்கிக் கொள்ளும் அளவிற்குத் தங்கள் உடமைகளை ஒருபோதும் கொடுத்து விடமாட்டார்கள். கடவுள்-ன் அருட் கொடைகளை அவர்கள் விட்டுக்கொடுத்து விடுவார்களா?*

அடிகுறிப்பு:
*16:71 மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தை அந்த அளவிற்கு விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள் எனும்போது, கடவுள் இதனைச் செய்ய வேண்டுமென்றும், மேலும் தனக்கே பங்குதாரர்களைப் படைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏன் எதிர்பார்க்கின்றனர்?
[16:72] மேலும் கடவுள் உங்களிலிருந்தே உங்களுடைய வாழ்க்கைத் துணைகளை ஆக்கினார், மேலும் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளிலிருந்து உங்களுக்குப் பிள்ளை களையும், பேரப்பிள்ளைகளையும் உண்டாக்கி னார், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு உங்களுக்கு வழங்கினார். பொய்மையில் நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டவர்களாக அவர்கள் மாறலாமா?
இணைத்தெய்வ வழிபாடு: உண்மையில் புத்திசாலித்தனம் அற்றது
[16:73] இருப்பினும், வானங்களிலோ, அன்றி பூமியிலோ அவர்களுக்காக எந்த வாழ்வாதாரத் தையும் கொண்டிராத, அன்றியும் அவர்களுக்கு எந்த ஒன்றையும் கொண்டு வழங்க முடியா தவற்றைக் கடவுள்-உடன் அவர்கள் வழிபடு கின்றனர்.
[16:74] ஆகையால், கடவுள்-க்கு உதாரணங்களை எடுத்துரைக்காதீர்கள்; கடவுள் அறிவார் அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
செல்வந்தரான ஒரு நம்பிக்கையாளர் ஏழையான ஒரு நம்பிக்கையாளரை விட சிறப்பானவர்
[16:75] ஒருவருக்கு உரிமையாகிவிட்ட, மேலும் முற்றிலும் ஆற்றலற்ற ஒரு அடிமையை, நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு நாம் அருள்பாலித்து, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தர்மம் செய்கின்ற ஒருவரோடு ஒப்பிட்டு கடவுள் உதாரணமாக எடுத்துரைக் கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[16:76] மேலும் கடவுள் இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துரைக்கின்றார்: ஒருவன் ஊமை, எந்த விஷயத்தையும் செய்யும் திறனற்றவன், தனது எஜமானரை முற்றிலும் சார்ந்திருப்பவன் - எவ்விதமான வழியில் அவர் அவனைச் செலுத்தினாலும், நன்மையான எந்த ஒன்றையும் அவனால் கொண்டு வர முடியாது. நீதத்துடன் ஆட்சி செய்பவரும், மேலும் நேரான பாதையில் வழிநடத்தப்பட்டவருமாகிய ஒருவருக்கு அவன் சமமானவனா?
இந்த வாழ்வு மிகவும் குறுகியது
[16:77] வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலம் கடவுள்-க்குரியது. அவரைப் பொறுத்த வரை, உலகின் முடிவு (அந்நேரம்) ஒரு கண் சிமிட்டலுக்கு அப்பால், அல்லது அதனை விடவும் மிக அருகில் உள்ளதைப் போன்ற தாகும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[16:78] எதையும் அறியாதவர்களாக உங்களை உங்கள் தாயார்களின் வயிறுகளில் இருந்து கடவுள் வெளியில் கொண்டு வந்தார், மேலும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப் புலனையும், மற்றும் மூளைகளையும், நீங்கள் நன்றியுடையோராக இருக்கக் கூடும் என்பதற்காக அவர் வழங்கினார்.
[16:79] வானத்தின் காற்றுவெளியில் பறக்கும்படிச் செய்யப்பட்ட பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? மேலே காற்றில் அவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பவர் கடவுள்-ஐ அன்றி எவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்.
[16:80] மேலும் நீங்கள் வசிக்கக் கூடிய அசையா வீடுகளை உங்களுக்காகக் கடவுள் வழங்கினார். மேலும் பயணத்தின்போதும், இருப்பிடத்தில் தங்கியிருக்கும் போதும் அவற்றை நீங்கள் பயன்படுத்தும் வண்ணம் கால் நடைகளின் தோல்களினால் செய்யப்பட்ட எளிதில் தூக்கிச் செல்லத்தக்க வீடுகளை உங்களுக்கு அவர் வழங்கினார். மேலும் அவற்றின் கம்பளிகள், மிருதுவான உரோமங்கள், மற்றும் முடியிலிருந்து, நீங்கள் சிறிது காலத்திற்காக தட்டு முட்டுச் சாமான்களையும் மேலும் சொகுசுச் சாதனங்களையும் செய்து கொள்கின்றீர்கள்.
[16:81] மேலும் அவர் படைத்திருக்கும் பொருட்கள் மூலமாக, கடவுள் உங்களுக்காக நிழலை வழங்கினார், மேலும் மலைகளில் உங்களுக் காக புகலிடங்களையும் வழங்கினார், மேலும் வெப்பத்தில் இருந்து உங்களைக் காக்கும் ஆடைகளையும், போர்களில் நீங்கள் சண்டையிடும்போது உங்களைக் காக்கும் ஆடைகளையும் வழங்கினார். நீங்கள் அடிபணியக்கூடும் என்பதற்காக, உங்கள் மீதான அவருடைய அருட்கொடைகளை இவ்விதமாக அவர் பூர்த்தி செய்கின்றார்.
[16:82] அப்படியிருந்தும் அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாயின், பின்னர் உமது ஒரே பணி (தூதுச்செய்தியைத்) தெளிவாக ஒப்படைப்பதே.
நம்பமறுப்பவர்கள் நன்றிகெட்டவர்கள்
[16:83] அவர்கள் கடவுள்-ன் அருட்கொடைகளை முழுவதும் அடையாளம் கண்டு கொண்ட பின்னர், அவற்றை மறுத்து விடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர் களாக உள்ளனர்.
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று
[16:84] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் அந்நாள் வரும், அப்போது நம்ப மறுத்தவர்கள் (பேசுவதற்கு) அனுமதிக்கப் படமாட்டார்கள், அன்றி பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[16:85] வரம்பு மீறியவர்கள் தண்டனையைக் காணும் தருவாயில், அது மிகவும் தாமதம் ஆகி இருக்கும்; அது அவர்களுக்குக் குறைக்கப் படவும் மாட்டாது, அன்றி அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
இணைத்தெய்வங்கள் தங்களை வழிபட்டவர்களைக் கைவிட்டு விடுகின்றன
[16:86] மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களைக் காணும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உம்முடன் நாங்கள் வழிபட்ட இணைத் தெய்வங் கள் இவர்கள் தான்” என்று கூறுவார்கள். பின்னர் அவர்களை எதிர்கொண்டு அந்த இணைத்தெய்வங்கள், “நீங்கள் பொய்யர் களாக இருக்கின்றீர்கள்” என்று கூறும்.
[16:87] அந்நாளில் அவர்கள் கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிவார்கள், மேலும் அவர்கள் கண்டு பிடித்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
[16:88] நம்பிக்கை கொள்ள மறுத்து, கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுபவர்களுக்கு, அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணத்தால், தண்டனையைக் கூட்டுவதன் மூலம் அவர்களுடைய தண்டனையை நாம் மேலும் அதிகரிப்போம்.
[16:89] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை அவர்களிலிருந்தே நாம் எழுப்பும் அந்நாள் வரும், மேலும் இந்த மக்களுக்குச் சாட்சியாக உம்மைக் கொண்டு வருவோம். எல்லா விஷயங் களுக்கும் விளக்கங்களை வழங்கவும் மேலும் வழிகாட்டலாகவும், கருணையாகவும், மேலும் அடிபணிந்தோருக்கு நற்செய்தியாகவும், இந்தப் புத்தகத்தை உமக்கு நாம் வெளிப்படுத்தி உள்ளோம்.
[16:90] கடவுள், நீதியையும், தர்மத்தையும், உறவினர்களை மதிப்பதையும் பரிந்துரைக் கின்றார். மேலும் அவர் தீமையையும், ஒழுக்கக் கேட்டையும், மேலும் வரம்பு மீறுதலையும் தடுக்கின்றார். நீங்கள் கவனத்தில் எடுக்கக் கூடும் என்பதற்காக, அவர் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
உங்கள் வார்த்தைகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும்
[16:91] கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை அப்படியொரு உடன்படிக்கையை நீங்கள் செய்து கொள்ளும் போது அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதாக (கடவுள் மீது) சத்தியம் செய்த பின்னர் உங்களுடைய உறுதி மொழிகளை நீங்கள் மீற வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு உத்தரவாதமளிப்பவராகக் கடவுள்-ஐ நீங்கள் ஆக்கி இருக்கின்றீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் கடவுள்-க்குத் தெரியும்.
[16:92] தான் உறுதிபட நெய்ததை, பலமற்ற நூல் குவியலாக, அவிழ்த்து விட்ட நெசவாளி ஒருத்தியைப் போல இருக்காதீர்கள். ஒருவரை விட ஒருவர் மேன்மையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை நீங்கள் துஷ்பிரயோகம் செய்வீர்களாயின், இதுவே உங்களுக்குரிய உதாரணமாகும். ஒரு பிரிவு மற்றொன்றைவிடப் பெரியதாக இருந்த போதிலும், கடவுள் இவ்விதமாக உங்களைச் சோதனைக் குள்ளாக்குகின்றார். நீங்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர் நிச்சயமாக உங்களுக்குக் காட்டுவார்.
[16:93] கடவுள் நாடியிருந்தால், அவரால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருக்க இயலும். ஆனால் அவர் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோரைத் தவறான வழியில் அனுப்பி விடுகின்றார், மேலும் வழி நடத்தப்பட வேண்டும் என விரும்புவோரை அவர் வழி நடத்துகின்றார்*. நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

அடிகுறிப்பு:
*16:93 நம்மிடையே உள்ள மீட்கப்படத் தகுதியான உண்மையான நம்பிக்கையாளர்களைக் கடவுள் அறிந்திருக்கின்றார். அதற்கேற்பவே, அவர்களை அவர் வழிநடத்துகின்றார், அதே சமயம் நம்ப மறுப்பதைத் தேர்ந்தெடுத்தோரை அவர் தடுத்து விடுகின்றார்.
உங்கள் உறுதி மொழியை மீறுதல்: ஓர் ஆபத்தான குற்றம்
[16:94] உறுதியானதோர் பிடிமானத்தைப் பாதங்கள் அடைந்து விட்ட பின்னர் நீங்கள் மீண்டும் சறுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக் கிடையில் உறுதிமொழிகளைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் பின்னர் நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகி விடுவீர்கள். (மோசமானதொரு உதாரணத்தை அமைப்பதன் மூலம்) கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுவதன் விளைவு இத்தகையதே; பயங்கரமானதோர் தண்டனை க்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்.
[16:95] கடவுள்-க்கு முன்னால் உங்களுடைய உறுதி மொழிகளை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், கடவுள் வசம் உள்ளவை உங்களுக்கு மிகவும் மேலானதாகும்.
[16:96] உங்கள் வசம் உள்ள எதுவும் தீர்ந்து போகும், ஆனால் கடவுள் வசம் உள்ளவை என்றென்றும் நிலைத்திருக்கும். உறுதியாய் விடாமுயற்சியோ டிருப்பவர்களுக்கு நிச்சயமாக நாம் வெகு மதியளிப்போம்; அவர்களுடைய நன்னெறியான செயல்களுக்குரிய பிரதிபலனை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் இப்பொழுதும், எப்பொழுதும்
[16:97] ஆணோ அல்லது பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில், எவரொருவர் நன்னெறியான செயல்களைச் செய்கின்றாரோ, அவர்களுக்கு நிச்சயமாக இவ்வுலகில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை நாம் வழங்குவோம், மேலும் (தீர்ப்பு நாள் அன்று) அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக நிச்சயமாக அவர்களுக்குரிய முழுமையான பிரதிபலனை நாம் கொடுப்போம்.
ஒரு முக்கிய கட்டளை *
[16:98] குர்ஆனை நீங்கள் படிக்கும் பொழுது, விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து நீங்கள் கடவுள்-இடம் அடைக்கலம் தேடிக் கொள்ள வேண்டும்.

அடிகுறிப்பு:
*16:98 நம்முடைய மீட்சியானது நமக்குரிய கடவுளின் தூதுச் செய்தியாக குர்ஆனை அறிந்து கொள்வதன் மூலமே அடையக் கூடியதாக உள்ளது, மேலும் நாம் மீட்சியடைவதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் சாத்தான் செய்வான், எனவேதான் இக்கட்டளை.
[16:99] நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
[16:100] தங்களுடைய எஜமானனாக அவனைத் தேர்ந்தெடுத்தோர்; தங்களுடைய தெய்வமாக அவனைத் தேர்ந்தெடுத்தோர் வரை மட்டிலுமே அவனது அதிகாரம் உள்ளது.
[16:101] ஒரு வெளிப்பாட்டை மற்றொன்றின் இடத்தில் நாம் மாற்றியமைக்கும் போதும் மேலும், கடவுள் அவர் வெளிப்படுத்துபவற்றை முற்றிலும் அறிந்தே இருக்கும் போதும், அவர்கள், “நீரே இதனை உருவாக்கிக் கொண்டீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[16:102] “நம்பிக்கை கொண்டோரை மறுவுறுதிப்படுத்து வதற்காகவும், மேலும் அடிபணிந்தோருக்கு ஒரு வழிகாட்டியையும் மேலும் நற்செய்தியையும் வழங்குவதற்காகவும், உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், பரிசுத்த ஆவி இதனைக் கீழே கொண்டு வந்தார்” என்று கூறுவீராக.
குர்ஆன் பைபிளிலிருந்து பார்த்தெழுதப்பட்டதல்ல
[16:103] “ஒரு மனிதர் தான் அவருக்குக் கற்றுக் கொடுக் கின்றார்!” என்று அவர்கள் கூறுகின்றதை நாம் முற்றிலும் அறிவோம். அவர்கள் மறைமுகமாக குறிப்பிடும் மூலாதாரத்தின் மொழி அரபி அல்ல, மேலும் இது குறைபாடற்ற ஓர் அரபி மொழியாகும்.
[16:104] நிச்சயமாக, கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்களான அவர்களைக் கடவுள் வழி நடத்த மாட்டார். வலிமிகுந்த தொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[16:105] பொய்யான கோட்பாடுகளை இட்டுக் கட்டு பவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் மட்டுமே; அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள்.
உதட்டளவுப்பேச்சு கணக்கில் கொள்ளப்படாது
[16:106] விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர், கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், மேலும் நம்ப மறுப்பதில் முற்றிலும் திருப்தி அடைந்து விட்டவர்கள், கடவுள்-ன் கடுங் கோபத்திற்கு உள்ளாகி விட்டனர். தங்களுடைய இதயங்கள் விசுவாசத்தால் நிரம்பி இருக்கும் நிலையில், நம்பமறுத்தலை வெளிப்படையாக சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மட்டுமே பிழை பொறுக்கப்படுவார்கள்*.

அடிகுறிப்பு:
*16:106 ஒரு துப்பாக்கியை உங்கள் தலையில் வைத்து கடவுள் மீது நீங்கள் நம்பிக்கையற்றவர் என்று கூற வேண்டுமென யாரேனும் உங்களுக்கு உத்தரவிட்டால் அவருடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்று கடவுளின் ஞானம் விதிக்கின்றது. இதயத்தில் உள்ளது என்னவோ அது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இந்த வாழ்க்கையில் மூழ்கி விடுவது கடவுளிடமிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழி நடத்துகின்றது
[16:107] இது ஏனெனில், அவர்கள் மறுவுலகத்தை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டனர், மேலும் கடவுள் இத்தகைய நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.
[16:108] அவர்களுடைய இதயங்களிலும், செவிப் புலன்களிலும், பார்வைகளிலும் கடவுள்-ஆல் முத்திரையிடப்பட்டவர்கள் அவர்கள் தான். அதன் விளைவாக, அவர்கள் அறியாதவர் களாகவே இருக்கின்றனர்.
[16:109] எந்த சந்தேகமுமின்றி, மறுவுலகில் நஷ்ட மடைந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
[16:110] அடக்குமுறை செய்யப்பட்ட காரணத்தால் ஊரைத்துறந்து வெளியேறி, பின்னர் தொடர்ந்து பாடுபட்டு, மேலும் உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களைப் பொறுத்தவரை, உமது இரட்சகர், இவை அனைத்தின் காரணமாக மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.
[16:111] ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கே வாதாடு பவராகப் பணிபுரியும் அந்நாள் வரும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது செய்த வற்றிற்கெல்லாம் சிறிதளவும் அநீதமின்றி, முழுமையாகக் கொடுக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட உணவுகளைத் தடைசெய்து கொள்வது இழப்பைக்கொண்டுவருகின்றது
[16:112] ஒவ்வொரு புறத்திலிருந்தும் அதற்கு வாழ்வாதாரங்கள் வந்த வண்ணம், பாதுகாப் புடனும், வளத்துடனும் இருந்து வந்த ஒரு சமூகத்தின் உதாரணத்தைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். ஆனால் பின்னர், கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதாக அது மாறியது. அதன் விளைவாக, பட்டினி மற்றும் பாதுகாப்பின்மையின் கஷ்டங் களை அவர்கள் சுவைக்கும்படிக் கடவுள் செய்தார். அவர்கள் செய்ததற்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்.
[16:113] அவர்களில் இருந்தே ஒரு தூதர் அவர்களிடம் சென்றார், ஆனால் அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர் களுடைய வரம்புமீறலுக்காக தண்டனை அவர்களைத் தாக்கியது.
[16:114] ஆகையால், நீங்கள் கடவுள்-ஐ மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால், அனுமதிக்கப் பட்டதும் நல்லதுமான அவருடைய வாழ்வா தாரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் உண்ணவும், கடவுள்-ன்அருட்கொடை களுக்கு நன்றியோடிருக்கவும் வேண்டும்.
நான்கு உணவுகள் மட்டுமே தடைசெய்யப்பட்டவை
[16:115] செத்த பிராணிகள், இரத்தம், பன்றியின் இறைச்சி* மற்றும் கடவுள்-ஐ விடுத்து மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மட்டுமே அவர் உங்களுக்குத் தடை செய்கின்றார். வேண்டுமென்றோ அல்லது தீய எண்ணமோ இல்லாதிருந்து (இவற்றை உண்ணும்படி) ஒருவர் நிர்ப் பந்திக்கப்பட்டால், அப்போது கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அடிகுறிப்பு:
* 16:115&118 மிகப்பெரும் நாசத்தை விளைவிக்கும் ட்ரிக்கிநெல்லா ஸ்பைரலிஸ் என்ற ட்ரிக்கினாஸிஸ் ஒட்டுண்ணி (அத்துடன் பன்றியின் நாடாப்புழு டேனியா சோலியம் ) பன்றியின் இறைச்சியில் தான் உயிர் வாழுமே அன்றிக் கொழுப்பில் அல்ல. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் இக்கிருமிகளின் தொற்றுக்களினால் அவதிப்படுகின்றனர். 6:145, 146 மற்றும் பின் இணைப்பு 16ஐ பார்க்கவும்.
[16:116] பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுவதற்காக: “இது அனுமதிக்கப்பட்டது, மேலும் இது அனுமதிக்கப்படாதது,” எனக் கூறியவாறு உங்களுடைய சொந்த நாவுகளால் நீங்கள் பொய்களைச் சொல்ல வேண்டாம். நிச்சயமாக, பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மீது சாட்டுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[16:117] குறுகிய காலம் அவர்கள் சுகமனுபவிக் கின்றனர், பின்னர் வலிமிகுந்ததொரு தண்டனையை அனுபவிப்பார்கள்.
[16:118] *இதற்கு முன்னர் உமக்கு நாம் விவரித்த வற்றை, யூதர்களுக்கு நாம் தடை செய்திருந் தோம். அவர்களுக்கு அநீதமிழைத்தவர்கள் நாம் அல்ல; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

அடிகுறிப்பு:
* 16:115&118 மிகப்பெரும் நாசத்தை விளைவிக்கும் ட்ரிக்கிநெல்லா ஸ்பைரலிஸ் என்ற ட்ரிக்கினாஸிஸ் ஒட்டுண்ணி (அத்துடன் பன்றியின் நாடாப்புழு டேனியா சோலியம் ) பன்றியின் இறைச்சியில் தான் உயிர் வாழுமே அன்றிக் கொழுப்பில் அல்ல. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் இக்கிருமிகளின் தொற்றுக்களினால் அவதிப்படுகின்றனர். 6:145, 146 மற்றும் பின் இணைப்பு 16ஐ பார்க்கவும்.
[16:119] இருப்பினும், அறியாமையினால் பாவத்தில் வீழ்ந்து விட்டு அதன்பின்னர் அதற்காக வருந்தித் திருந்தி மேலும் சீர்திருத்திக்கொள்வோரைக் குறித்து, உமது இரட்சகர், இவ்வாறு செய்யப் பட்டுவிட்ட பின்னரும், மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.
ஆப்ரஹாம்
[16:120] ஆப்ரஹாம் உண்மையில் கடவுள்-க்கான தனது அடிபணிதலில் பின்பற்றத்தக்கதொரு முன்னோடியாக, ஒரு போதும் இணைத் தெய்வங்களை வழிபடாத ஓர் ஏகத்துவவாதியாக இருந்தார்.
[16:121] அவருடைய இரட்சகரின் அருட்கொடை களுக்கு அவர் நன்றியுடையவராக இருந்த காரணத்தால், அவரை அவர் தேர்ந் தெடுத்துக்கொண்டார், மேலும் நேரான தொரு பாதையில் அவரை வழிநடத்தினார்.
[16:122] இந்த வாழ்வில் நாம் அவருக்கு மகிழ்ச்சியை வழங்கினோம், மேலும் மறுவுலகில் அவர் நன்னெறியாளர்களுடன் இருப்பார்.
முஹம்மது: ஆப்ரஹாமைப் பின்பற்றிய ஒருவர்*
[16:123] பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின்* மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை.

அடிகுறிப்பு:
*16:123 ஆப்ரஹாம் மூலம் நம்மை வந்தடைந்த எல்லா வழிபாட்டு நடைமுறைகளும், முஹம்மதின் காலத்தில் முழுமையாக இருந்தன என்பதை இது நமக்கு அறிவிக்கின்றது (22:78 மற்றும் பின் இணைப்பு 9 ஐ பார்க்கவும்).
ஸப்பத் ரத்து செய்யப்பட்டது
[16:124] ஸப்பத்தைக்குறித்துத் தர்க்கித்துக் கொண்ட வர்களாக முடிந்து போனவர்களுக்கு (யூத, கிறிஸ்தவர்களுக்கு) மட்டுமே அது விதிக்கப் பட்டது. அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்கப் போகின்றவர் உமது இரட்சகர் தான்.
கடவுளின் தூதுச் செய்தியை எப்படி பரப்புவது
[16:125] ஞானத்துடனும், கனிவான உபதேசத்துடனும் உமது இரட்சகரின் பாதையை நோக்கி நீங்கள் அழைக்க வேண்டும், மேலும் இயன்றவரை மிகச்சிறந்த முறையில் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள். உமது இரட்சகர் அவருடைய வழியிலிருந்து தவறியவர் யார் என்பதை நன்கறிவார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர் நன்கறிவார்.
[16:126] மேலும் நீங்கள் தண்டித்தால், ஒரு சமமான அளவு தண்டனையைக் கொண்டே தண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் (பழி தீர்ப்பதற்குப் பதிலாக) பொறுமையைக் கடைப்பிடித்தால், பொறுமையோடிருப்பவர்களுக்கு அதுவே மேலானதாக இருக்கும்.
[16:127] நீங்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் - மேலும் உங்களுடைய பொறுமை கடவுள்-ன் உதவியைக் கொண்டு மட்டுமே நிறைவு அடையக்கூடியதாக உள்ளது. அவர்களுக் காகக் கவலைப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் வருத்தமும்படாதீர்.
[16:128] நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருடனும், மேலும் தர்மவான்களுடனும் கடவுள் இருக்கின்றார்.