சூரா 13: இடியோசை (அல்-ரஃத்)

[13:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[13:1] அ.ல.ம.ர.* (எழுத்துக்களான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும். உமது இரட்சகரிட மிருந்து உமக்கு என்ன இறக்கப்பட்டுள்ளதோ அதுவே சத்தியமாகும், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

அடிகுறிப்பு:
*13:1 இந்த தலைப்பு எழுத்துக்கள், கடவுள்தான் இதன் ஆசிரியர் என்பதற்கு குர்ஆனின் உள்ளே கட்டமைக்கப்பட்டுள்ள சான்றான அந்த அற்புதக் குறியீட்டின் ஒரு முக்கிய அங்கமாக அமைகின்றன. பின் இணைப்பு 1 ஐ பார்க்கவும்.
[13:2] கடவுள் தான் நீங்கள் காணக்கூடிய வானங் களை தூண்கள் எதுவுமின்றி உயர்த்தியவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு (அவற்றின் வட்ட வரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்து கின்றார், மேலும் உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டை அடையும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார்.
[13:3] அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனி வர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடி களாக-ஆணினம் மற்றும் பெண்ணினம் என ஆக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.
[13:4] பூமியின் மீது திராட்சைப் பழத்தோட்டங் களையும், பயிர்களையும், பேரீத்த மரங்களை யும்-கொட்டைகள் கொண்டவை மற்றும் கொட்டைகள் இல்லாதவைகளை- விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு அவற்றில் சிலவற்றை நாம் மற்றவைகளை விட மேலாக தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.
மீட்சியடைய மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்வது அவசியமாகும்
[13:5] எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்கள்: “நாம் தூசி யாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?” என்று கூறுவதுதான். இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்ப மறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.
[13:6] நன்னெறியாளர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடு கின்றனர்! கடந்த காலங்களில் போதுமான முன்னு தாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில், உம்முடைய இரட்சகர் மனிதர்களுடைய வரம்பு மீறல்கள் இருந்த போதிலும், அவர்கள் பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உமது இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதிலும் கண்டிப்பானவர்.
[13:7] நம்ப மறுத்தோர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (அப்போது நாங்கள் நம்பிகை கொள் வோம்)” என்று கூறுகின்றார்கள். நீர் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே-ஒவ்வொரு சமூகமும் வழிகாட்டும் ஓர் ஆசிரியரைப் பெற்றுக் கொள்கின்றது.
[13:8] ஒவ்வொரு பெண்ணும் எதைச் சுமப்பாள் என்பதையும், மேலும் ஒவ்வொரு கருப்பையும் எதை வெளியேற்றும், அல்லது பெறும் என்பதை யும் கடவுள் அறிகின்றார். அவர் செய்யும் ஒவ்வொன்றும் மிகச்சரியாக அளவிடப் பட்டுள்ளது.
[13:9] அனைத்து இரகசியங்கள் மற்றும் அறிவிப்பு களை அறிந்தவர்; மேலான அதிகாரம் கொண்டவர், மிகவும் உயர்வானவர்.
[13:10] உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மறைத்துக்கொண்டாலும், அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும், அல்லது இரவின் இருளில் மறைந்திருந்தாலும், அல்லது பகலின் வெளிச்சத்தில் செயல்பட்டாலும் அது ஒரே மாதிரியே ஆகும்.
[13:11] உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கும் (வானவர்களின்) அணிகள், மாறி மாறி முறைகள் எடுத்துக் கொள்கின்றனர்-அவர் கள் உங்களுக்கு முன்புறமும் உங்களுக்குப் பின்புறமும் உள்ளனர். அவர்கள் உங்களுடன் இருக்கின்றனர், மேலும் கடவுள்-ன் கட்டளைகளுக்கிணங்க உங்களைப் பாதுகாக்கின்றனர். இவ்விதமாக, எந்தச் சமூகத்தின் நிலையையும் மாற்றிக்கொள்ளும் முடிவை அவர்களே செய்தால் அன்றி, கடவுள் மாற்றுவதில்லை. எந்தச் சமூகத்திற்கும் ஏதேனும் கஷ்டத்தைக் கடவுள் நாடிவிட்டால், எந்தச் சக்தியும் அதனைத் தடுத்து விட முடியாது. ஏனெனில் அவரை அன்றி அவர்களுக்கு இரட்சகராகவோ எஜமானராகவோ எவரும் இல்லை.
[13:12] அவர்தான் அச்சத்திற்கும், அதே சமயம் எதிர்ப்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை உங்களுக்குக் காட்டுபவர், மேலும் கனத்த மேகங்களையும் அவர் துவக்குகின்றார்.
[13:13] இடியோசை அவருடைய மகிமையைப் புகழ் கின்றது, மேலும் அவர் மீதுள்ள பயபக்தியால், வானவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப தாக்குகின்ற மின்னல் அம்புகளை அவர் அனுப்புகின்றார். இருப்பினும், அவருடைய சக்தி அச்சுறுத்தக் கூடியதாக இருந்த போதிலும் அவர்கள் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.
[13:14] அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பது மட்டுமே முறையான பிரார்த்தனையாகும், அதே சமயம் அவரை அன்றி அவர்கள் இறைஞ்சும் இணைத் தெய்வங்கள், எப்போதும் பதிலளிக்க இயலாது. இவ்விதமாக, அவர்கள் தண்ணீரை நோக்கித் தங்கள் கைகளை நீட்டிக் கொள்பவர்களைப் போன்றவர்கள், ஆனால் அவர்களுடைய வாய்களை எதுவும் அடைவதில்லை. நம்ப மறுப்பவர்களின் பிரார்த்தனைகள் வீணாகிப் போனவையே ஆகும்.
எல்லாப் படைப்பும் கடவுளுக்கு அடிபணிந்து விட்டது
[13:15] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், விரும்பியோ அல்லது விரும் பாமலோ கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன, மேலும் அவர்களுடைய நிழல்களும், காலை களிலும், மாலைகளிலும் அவ்வாறே செய் கின்றன.*

அடிகுறிப்பு:
*13:15 நம்ப மறுப்பவர்கள் கூட சிரம் பணிகின்றனர்; உதாரணத்திற்கு, அவர்களால் தங்களுடைய இதயத்துடிப்பையோ, தங்களுடைய நுரையீரலையோ, அல்லது குடல்களின் இயக்கத்தையோ கட்டுப்படுத்த இயலாது. சூரியன் மற்றும் சந்திரனின் சுற்றுப்பாதை, மேலும் நான்கு பருவகாலங்களுக்குக் காரணமாக அமையும் பூமிக்கிரகத்தின் விசேஷ வடிவம் ஆகியவற்றைக் கடவுள் வடிவமைத்த விதத்தால் நிழல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளன. சூரியக் கடிகாரங்களும், அவற்றின் நிழல்களும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பூமி/சூரிய உறவின் பரிபூரணமான நுட்பம் நுட்பம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
[13:16] “வானங்கள் மற்றும் பூமிக்கு இரட்சகராக இருப்பது யார்?” என்று கூறுவீராக, “கடவுள்” என்று கூறுவீராக, “பின்னர் ஏன் நீங்கள் அவரைத் தவிர தங்களுக்கே நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்ற வர்களை எஜமானர்களாக அமைத்துக் கொள் கின்றீர்கள்?” என்று கூறுவீராக. “குருடரும் பார்வையுடையவரும் சமமாவார்களா? இருளும் ஒளியும் சமமாகுமா?” என்று கூறுவீராக. கடவுள்-உடன் அவருடைய படைப்புகளுக்கு ஒப்பான படைப்புக்களை, அந்த இரு படைப்புகளுக்கும் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு, படைத்திருக்கும் இணைத் தெய்வங்களை அவர்கள் கண்டு விட்டனரா? “கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் ஒருவர்தான், மேலான அதிகாரம் கொண்டவர்” என்று கூறுவீராக.
சத்தியமும், அசத்தியமும் எதிரி நிலையில்
[13:17] அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார், அதன்மூலம் பள்ளத்தாக்குகள் நிரம்பி வழிகின்றன, பின்னர் அந்த நீர்வீழ்ச்சி அபரிமிதமான நுரையை உருவாக்குகின்றது. அதுபோலவே, அவர்களுடைய ஆபரணங் களுக்காகவோ அல்லது சாதனங்களுக் காகவோ உலோகங்களைச் சுத்தம் செய்ய அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் போதும், நுரை உருவாகின்றது. கடவுள் இவ்விதமாக சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமானங் களை எடுத்துரைக்கின்றார். அந்த நுரையைப் பொறுத்தவரை, அது வீணாகிப் போகின்றது, அதே சமயம் மனிதர்களுக்குப் பயன் தருவதோ மண்ணிற்கு நெருக்கமாகத் தங்கி விடுகின்றது. கடவுள் இவ்விதமாக உவமானங்களை எடுத்துரைக்கின்றார்.
[13:18] தங்கள் இரட்சகருக்கு மறுமொழி அளிப்பவர்கள் நல்ல வெகுமதிகளுக்குத் தகுதியுடையவர் களாகின்றனர். அவருக்கு மறுமொழி அளிக்கத் தவறி விட்டவர்களைப் பொறுத்தவரை, பூமியில் உள்ள அனைத்தையும் அவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும் - அதுபோல் இருமடங் கானாலும்-அவர்கள் உடனடியாக அதனை ஈட்டுத் தொகையாகத் தந்து விடுவார்கள். அவர்கள் மோசமான கேள்விக் கணக்கிற்கு உள்ளாகி விட்டனர், மேலும் அவர்களுடைய இறுதித் தங்குமிடம் நரகமாகும்; எத்தகையதொரு துக்ககரமான விதி.
நம்பிக்கையாளர்களும், நம்பிக்கையற்றவர்களும் எதிரி நிலையில் (1) நம்பிக்கையாளர்கள்
[13:19] உமக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய இரட்சகரின் வெளிப்பாடுகளைச் சத்தியம் என அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், குருடராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அறிவுடையோர் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[13:20] அவர்கள் கடவுள்-இடம் செய்த தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள், மேலும் உடன்படிக்கைகளை மீறாதவர்கள்.
[13:21] சேர்த்து வைக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை அவர்கள் சேர்த்து வைக்கின்றார்கள், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியுடன் இருக்கின்றார்கள், மேலும் அச்சுறுத்தும் கேள்விக்கணக்கை அஞ்சு கின்றார்கள்.
[13:22] அவர்கள் தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்கின்றார்கள், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கின்றார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.
[13:23] தங்கள் பெற்றோர்களிலும், தங்கள் துணை களிலும், மற்றும் தங்கள் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் ஏதேன் தோட்டங்களில் நுழைவார்கள். ஒவ்வொரு வாயிலின் வழியாகவும் வானவர்கள் அவர்களிடம் வருவார்கள்.
[13:24] “நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருந்த காரணத்தால், உங்கள் மீது அமைதி நிலவுவதாக. எத்தகையதொரு ஆனந்தமான விதி.”
(2) நம்ப மறுப்பவர்கள்
[13:25] கடவுள்-ன் உடன்படிக்கையைக் காப்பதாக வாக்குறுதி செய்து விட்டுப் பின்னர் அதனை மீறுபவர்கள், மேலும் கடவுள் சேர்த்து வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவற்றைத் துண்டிப்பவர்கள், மேலும் தீமையைச் செய்பவர்கள், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகிவிட்டார்கள்.
வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கடவுள் கட்டுப்படுத்துகின்றார்
[13:26] கடவுள் தான், அவர் நாடுகின்றோருக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவோ அல்லது அதனை நிறுத்தி வைத்துக் கொள்ளவோ செய்கின்றார். இந்த வாழ்வில் மூழ்கியவர் களாக அவர்கள் ஆகிவிட்டனர், மேலும் இந்த வாழ்வு, மறுவுலகுடன் ஒப்பிடப்படும்போது, ஒன்றுமேயில்லை.
[13:27] நம்ப மறுப்போர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)” என்று கூறுவார்கள். “கடவுள், தான் நாடுவோரை வழிகேட்டில் அனுப்பி விடுகின் றார், மேலும் கீழ்ப்படிவோருக்கு மட்டுமே அவர் தன்பால் வழிகாட்டுகின்றார்” என்று கூறுவீராக.
[13:28] அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்வதில் ஆனந்தம் அடைகின்ற இதயங்கள் கொண்டவர்கள். நிச்சயமாக, கடவுள்-ஐ நினைவு கூர்வதன் மூலமே, இதயங்கள் ஆனந்தமடைகின்றன.
[13:29] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோர் மகிழ்ச்சிக்கும் மேலும் ஆனந்தமானதோர் விதிக்கும் தகுதியாகி விட்டனர்.
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*
[13:30] (ரஷாதே)* கடந்தகாலத்தில் மற்றச் சமூகங் களுக்கு நாம் செய்ததைப் போலவே, இந்தச் சமூகத்திற்கு உம்மை நாம் அனுப்பி உள்ளோம். நாம் உமக்கு வெளிப்படுத்துபவற்றை நீர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும், ஏனெ னில் அவர்கள் மிக்க அருளாளரை நம்ப மறுத்து விட்டனர். “அவரே என் இரட்சகர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. நான் அவரிடம் மட்டுமே என் பொறுப்பை ஒப்படைக்கின்றேன்; என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.

அடிகுறிப்பு:
*13:30 “ரஷாத்”தின் எழுத்தெண் மதிப்பையும் (505), “கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (725), சூரா எண்ணையும் (13), வசன எண்ணையும் (30), நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 505+725+13+30=1273=19ஒ67. கடவுள் இவ்விதமாகத் தனது தூதரின் பெயரைக் குறிப்பிடுகின்றார் (விபரங்களுக்குப் பின் இணைப்பு 2 ஐ பார்க்கவும்).
குர்ஆனின் கணித அற்புதம்
[13:31] ஒரு குர்ஆன் கொண்டு மலைகளை நகரச் செய்தாலும், அல்லது பூமியைத் துண்டுகளாகப் பிளந்தாலும், அல்லது இறந்தவர்களைப் பேசச் செய்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்). கடவுள் அனைத்து விஷயங் களையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள் நாடியிருந்தால் எல்லா மக்களையும் அவர் நேர்வழியில் நடத்தியிருக்க இயலும் என்பதை உணர்ந்து நம்பிக்கையாளர்கள் விலகிக் கொண்டு விட வேண்டிய நேரம் இதுவல்லவா? நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், அவர் களுடைய சொந்தச் செயல்களின் விளை வாகக் கடவுள்-ன் வாக்குறுதி நிறைவேறும் வரை, தொடர்ந்து பேரழிவுகளை அனுபவிப்பார் கள், அல்லது அவர்களுக்கு அருகில் பேரழிவு கள் தாக்கக் காண்பார்கள். முன்னரே தீர்மானி க்கப்பட்ட விதியைக் கடவுள் ஒருபோதும் மாற்றுவதில்லை.
தூதர்கள் அனைவரும் கேலி செய்யப்படுவார்கள்
[13:32] உமக்கு முன்னிருந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டனர்; நம்ப மறுத்தவர்களை நான் இதைச் செய்ய அனுமதித்தேன், பின்னர் அவர் களை நான் தண்டித்தேன். என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[13:33] ஒவ்வொரு தனி ஆன்மாவையும் கட்டுப் படுத்தும் அந்த ஒருவருக்கு நிகராக எவரேனும் உள்ளாரா? ஆயினும், அவர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். “அவற்றின் பெயர்களைக் கூறுங்கள். பூமியின் மீது அவர் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? அல்லது வெற்று வாசகங்களை இட்டுக்கட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக. உண்மையில், நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகள் அவர்களுடைய கண் களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அவர்கள் நேரான பாதையிலிருந்து திருப்பப் பட்டு விடுகின்றனர். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களால் வழிகாட்டும் ஓர் ஆசிரியரை ஒருபோதும் காணமுடியாது.
[13:34] இந்த வாழ்வில் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும். கடவுள்-க்கு எதிராக எந்த ஒன்றும் அவர் களைக் காப்பாற்றி விட முடியாது.
சுவனம் உருவகமாக விவரிக்கப்பட்டுள்ளது
[13:35] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும், சுவனத்தின் உருவகமாவது, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகள், தீர்ந்து போகாத வாழ்வாதாரங்கள், மற்றும் குளிர்ந்த நிழல். நன்னெறியைக் கடைப்பிடிப்போருக்கு உரிய விதி இத்தகையதேயாகும், அதே சமயம் நம்ப மறுப்போருக்குரிய விதியோ நரகமாகும்.
[13:36] வேதத்தைப் பெற்றவர்கள் உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றில் ஆனந்தம்அடைகின்றனர்; மற்ற சிலர் இதன் பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடும். “நான் கடவுள்-ஐ வழிபட வேண்டும் என்றும், மேலும் அவருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் கூடச்சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன், அவ்வளவுதான், மேலும் என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.
குர்ஆனின் கணிதக் குறியீட்டிற்கு தெய்வீக அங்கீகாரம்*
[13:37] இந்தச் சட்டங்களை நாம் அரபி மொழியில் வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அறிவு உமக்கு வந்து விட்ட பின்னர், அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் எப்போதாவது உடன்படு வீராயின், கடவுள்-க்கெதிராக, உமக்கு நண்பரோ, அல்லது பாதுகாவலரோ இருக்க மாட்டார்.

அடிகுறிப்பு:
*13:37-38 இவ்வசனத்தின் எண்(38)=19ஒ2. 13:37-38க்கு முன்“ரஷாத்” தின் எழுத்தெண் மதிப்பையும் (505) “கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (725) வைக்கும்போது 505725133738 என்ற எண் கிடைக்கப் பெறுகின்றது. 505725133738=19ஒ 26617112302 (பின் இணைப்பு 2).
[13:38] (ரஷாதே), உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பி இருக்கின்றோம், மேலும் மனைவி யரும் பிள்ளைகளும் கொண்ட கணவர்களாக அவர்களை ஆக்கினோம். கடவுள்-ன் அங்கீ காரம் இன்றியும், மேலும் குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நேரத்திற்கு ஏற்பவே அன்றியும் எந்தத் தூதரும் ஓர் அற்புதத்தைக் கொண்டு வர இயலாது.

அடிகுறிப்பு:
*13:37-38 இவ்வசனத்தின் எண்(38)=19ஒ2. 13:37-38க்கு முன்“ரஷாத்” தின் எழுத்தெண் மதிப்பையும் (505) “கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பையும் (725) வைக்கும்போது 505725133738 என்ற எண் கிடைக்கப் பெறுகின்றது. 505725133738=19ஒ 26617112302 (பின் இணைப்பு 2).
[13:39] தான் நாடுகின்ற எதையும் கடவுள் துடைத்து எடுத்து விடுகின்றார், மேலும் நிலைப்படுத்து கின்றார். அசலான மூலப்பிரதி அவரிடமே உள்ளது.
[13:40] அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்கு நாம் காட்டினாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் உம் வாழ்வை முடித்து விட்டாலும் சரி, உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பது மட்டுமே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம் தான்.
[13:41] பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதையும், மேலும் மாற்றிவிட முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கைத் தவணையைக் கடவுள் தீர்மானிக்கின்றார் என்பதையும், அவர்கள் காணவில்லையா? அவர்தான் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.
[13:42] அவர்களுக்கு முன்னர் இருந்த மற்றவர்களும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் முடிவானத் திட்ட மிடுதல் கடவுள்-க்குரியது. ஒவ்வொருவர் செய்வதையும் அவர் அறிகின்றார். இறுதி வெற்றியாளர்கள் யார் என்பதை நம்ப மறுப்பவர்கள் கண்டு கொள்வார்கள்.
[13:43] நம்ப மறுத்தவர்கள், “நீர் ஒரு தூதரல்ல!” என்று கூறுவார்கள். “எனக்கும், உங்களுக்கும் மேலும் வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர் களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர்” என்று கூறுவீராக.