சூரா 114: மனிதர்கள் (அல்-நாஸ்)

[114:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[114:1] கூறுவீராக, “ மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.

அடிகுறிப்பு:
* இவ்விதமாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த “கடவுள்” (அல்லாஹ்) எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கை 2698, 19ஒ142 ஆகும். வாசகர் இந்த மொத்த எண்ணிக்கையின் நுணுக்கத்தை இந்தப் புத்தகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தின் கீழே “கடவுள்” எனும் வார்த்தையின் எண்ணிக்கையை அவர்கள் விரும்புகின்ற பக்கத்தில் சரிபார்த்துக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக, “கடவுள்” என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்களின் எண்களையெல்லாம், ஒருவர் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை 118123 என வருகின்றது, இதுவும் 19ன் ஒரு பெருக்குத் தொகையேயாகும் (118123 = 19ஒ6217). குர்ஆனின் தனித்தன்மை வாய்ந்த கணிதக்கட்டமைப்பின் விபரங்கள் பின் இணைப்புக்கள் 1, 2, 24, 25, 26 மற்றும் 29ல் கொடுக்கப்பட்டுள்ளன.
[114:2] “மனிதர்களின் அரசர்.
[114:3] “மனிதர்களின் தெய்வம்.
[114:4] “நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின் தீங்கு களிலிருந்து.
[114:5] “மனிதர்களின் நெஞ்சங்களுக்குள் கிசுகிசுப் பவர்கள்.
[114:6] “அவர்கள் ஜின்களிலோ அல்லது மனிதர் களிலோ இருந்த போதிலும்.”