சூரா 113: வைகறை (அல்-ஃபலக்)

[113:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[113:1] கூறுவீராக, “வைகறையின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
[113:2] “அவருடைய படைப்புகளுக்கிடையில் உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.
[113:3] “இருளின் தீங்குகளிலிருந்து, அது விழும் பொழுது.
[113:4] “இடையூறு செய்பவர்களின் தீங்குகளி லிருந்து.
[113:5] “பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து, அவர்கள் பொறாமைப்படும் பொழுது.”