சூரா 111: முட்கள் (அல்-மஸத்)

[111:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[111:1] அபீலஹபின் காரியங்கள் உபயோகமற்ற தென ஒதுக்கப்பட்டுவிட்டன, மேலும் அவன் தண்டனை அளிக்கப்பட்டவனாக இருக் கின்றான்.*

அடிகுறிப்பு:
*111:1 அபீலஹப் முஹம்மதின் பெரிய தந்தையாகவும் மேலும் எதிரணியினரின் தலைவனாகவும் இருந்தான்.அவனுடைய மனைவி, முஹம்மது மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒரு வன்கொடுமைப் பிரச்சாரத்தை நடத்தினாள். சுவனம் மற்றும் நரகத்தின் அனைத்து வர்ணனைகளையும் போலவே, முட்களாலான கயிறு என்பது ஓர் உவமானமேயாகும்.
[111:2] அவனுடைய பணம் மற்றும் அவன் சேர்த்தது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது.
[111:3] கொழுந்து விட்டெரிகின்ற நரகத்திற்கு அவன் உள்ளாகி விட்டான்.
[111:4] அத்துடன் வன்கொடுமைக்கு தலைமை தாங்கிய, அவனுடைய மனைவியும்.
[111:5] அவளுடைய கழுத்தைச் சுற்றிலும் முட்களாலான ஒரு கயிற்றுடன் அவள் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுபவளாக) இருப்பாள்.